Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

99. அன்னை தரிசனத்தில் பகவான் ஸ்ரீ அரவிந்தராக மாறுகிறார்.

  • பகவான் அன்னையின் ஜீவனில், ஆத்மாவில் உறைகிறார். அன்பர் பார்வை ஊடுருவி பகவானைக் காண்கிறது.
  • பார்வைக்குச் சூட்சுமமிருந்தால் பார்த்ததை ஊடுருவும் திறனுண்டு.
  • சப்தத்திற்கும் சூட்சுமமுண்டு. பேரம் பேசும்பொழுது வாங்குபவர் எதைச் சொன்னாலும், அவர் குரல் அவர் மனதிலிருப்பதைக் கூறும். கேட்பவருக்குச் சூட்சுமமிருந்தால் அது தெரியும்.
  • மூக்குக்கும் சூட்சுமம் உண்டு. எந்தப் பொருளும் அதன் இரகஸ்யத்தை வாசனையால் கூறி விடும்.
  • நாக்குக்கும் சூட்சுமமுண்டு. சாப்பிடும் பொருள் அதன் இரகஸ்யத்தை வெளியிடும்.
  • உடலுக்கும் சூட்சுமமுண்டு. உடலை விட்டு சூட்சும உடல் வெளிவரக் கூடியது.
  • ஒரு பணக்கார நண்பர் அன்பருக்கு பட்சணம் அனுப்பினார்.
    யார் அனுப்பியது என அறியாமல் நண்பர் சாப்பிட ஆரம்பித்தார். துர்நாற்றம் வீசியது. அது பட்சணம் செய்த குடும்ப வாசனை.
  • அல்வா செய்வதில் பிரபலமான சமையல்காரனை அழைத்து அன்பர் அல்வா செய்யச் சொன்னார். அது Gas வந்த புதிது. அவர் எனக்கு Gas அடுப்பு சரி வராது. செங்கல் அடுக்கி, விறகு எரித்தால்தான் பதம் வரும் என்றார். செய்து முடித்தபின் அன்பர் வீட்டில் அனைவரும் சாப்பிட ஆரம்பித்த பொழுது அதிலிருந்து கோதுமை, நெய், அல்வா வாசனை வரவில்லை, அழுகிய வாடை வந்தது.
    உலகம் போற்றும் ருசி அன்பருக்கு அழுகிய பண்டம்.
  • பிரான்சிலிருந்து உலகப் பிரசித்தி பெற்ற போட்டோகிராபர் இந்தியா வந்து எல்லா ஊர்கட்கும் போய் போட்டோ எடுத்து Life என்ற பிரசித்தி பெற்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். பகவானை போட்டோ பிடிக்க விரும்பினார். அன்னை சம்மதப்பட்டபொழுது, போட்டோ எடுப்பவரால் பகவான் முன் நிற்க முடியவில்லை. உடல் பதட்டமாக கை நடுங்குகிறது. அப்படமே இப்பொழுது பகவான் படமாக வழங்குகிறது. படத்தைப் பார்த்த அன்னை ஆசிரம போட்டோ கிராபர்களைவிடச் சிறந்ததாக இருக்கும் என நினைத்தேன். அதுபோலும் இல்லை என்றார். டிசம்பர் 5, 1950-இல் அன்னை ஆசிரம போட்டோக்காரர்களையே படம் எடுக்கச் சொன்னார்.
    அன்னை ஜீவியம் இவ்வுலகத்தைக் கடந்தது.
    எந்த ஆபீசிலும் அன்பரிருந்தால் அவரே சிறப்பானவராக இருப்பார்.
    Accountant General ஆபீசில் கிளார்க்காக வருபவர் சீனியர் கிளார்க்காகி ரிடையர் ஆவது குறைவு.
    சூப்பிரிண்டெண்ட்டாக பெரும்பாலும் ஓய்வு பெறுவார்.
    திறமை, அறிவுள்ளவர், அக்கௌண்ட்ஸ் ஆபீசர்வரை உயர்வதுண்டு.
    அதற்கு மேல் Deputy Accountant General, Assistant Accountant General என உயர்வு பெற இரு பதவிகள் உண்டு.
    அன்பர் B.Sc.,யில் II Class Deputy Accountant General ஆக ரிடையரானார்.
    தங்க நகை, தங்கமானது, தங்க முலாம் பூசுவதுண்டு.
    கவரிங் செய்வதுண்டு. உலகம் முலாம், கவரிங்காலானது.
    அன்பர் கட்டித் தங்கம்.
    அதை அன்பரே அறிவதில்லை.
    அறிந்தால் நம்புவதில்லை.
    இந்த அம்சம் யோக அம்சம் என்றால் நம்ப முடியுமா?

**********



book | by Dr. Radut