Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/16. எதிரானது திருவுருமாற்றத்திற்குக் குறையாகும்.

  • எதிரானது விலக்கப்பட வேண்டியது, அழிக்கப்பட வேண்டியது.
  • குப்பை சுத்தத்திற்கு எதிரானது, அதை அகற்ற வேண்டும்.
  • இருள், ஒளிக்கு எதிரானது. அழிக்கப்பட வேண்டியதா, விலக்கப்பட வேண்டியதா? அழிக்க முடியுமா, விலக்க முடியுமா?
  • இருள் ஒளியை நிழலாகத் தொடரும்பொழுது எப்படி விலக்க முடியும்?
  • முழுவதும் ஒளியானால் பொருள் தெரியாது, கண் கூசும்.
  • இருளுக்கு ஒளி எதிரானது எனக் கொண்டு முழுவதும் இருளானால், பொருள் புலப்படாது.
  • இவை ஜட உணர்வுகள்.
  • நல்லது, கெட்டது, மன உணர்வுகள்.
  • கோபம் எதிரானது. அதை முழுவதும் விலக்கினால் பரமஹம்சரின் பாம்பு நிலை வரும்.
  • கோபத்தை அழிக்கும்பொழுது தெம்பாகவும் அழிக்கலாம், தெம்பில்லாமலும் அழிக்கலாம்.
  • தெம்பில்லாதவன் கோபப்படாவிட்டால் அழிக்கப்படுவான்.
  • அழிவு அந்நிலையில் அர்த்தமுள்ளது எனத் தத்துவம் கூறுகிறது.
  • அறிவில்லாத அதிகாரி அர்த்தமில்லாமல் பேசும்பொழுது கோபம் வருகிறது.
  • கோபம் பயன்படாது, ஊறு செய்யும்.
  • கோபத்தை அடக்கினால், அதிகாரியின் செயல் பொறுக்க முடியாததாகும்.
  • அதிகாரியின் கோபம் தவறு, அது என் பிரச்சினையில்லை.
    ஏன் அதிகாரி என்மீது கோபப்படுகிறார்?
    அது என் கேள்வி.
    என்மீது கடுகளவு ஒரு குறையிருக்கிறது என்பது உண்மை-தான்.
    அதற்காக இந்த மலை போன்ற புயல் எப்படிச் சரியாகும் என நினைப்பதைவிட அக்கடுகான குறையை விலக்க முயன்றால்,
    அதிகாரிக்கு ஆவேசத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான அறிவும், பொறுமையும், இச்சிறு குறையை விலக்க எனக்குத் தேவை, சில சமயம் போதாது எனப் புரியும்.
  • 28-ஆம் பக்கத்தைப் ஃபைலில் காட்ட, 38-ஆம் பக்கம் வருவது தவறு. மிகச் சிறிய குறை. அது ஒரு முறையும் இனி வரக்கூடாது என நினைத்தால் எரிச்சல் வரும்.
  • செய்ய முடிவு செய்தால், கை தன்னை அறியாமல், 38-ஆம் பக்கத்தை எடுக்கும்.
    அது ஆழ்மனம் (subconscious) மேல்மன முடிவை எதிர்ப்பதாகும்.
    “உள்ளன்புடன், முழு மனதுடன் செய்தேன்”
    என்பது இக்குறையற்ற நிலை.
    மேல்மனம் அறிவால் ஏற்றதை உணர்வு ஏற்காத பொழுது ஆழ்மனம் அடம் பிடிக்கும். இதையறியாமல் அதிகாரியின் மீதுள்ள கோபம் நம் மீதே திரும்பும்.
    அதுவும் கோபமே.
  • கோபம் என்பது குறை. அறிவிலும் உணர்விலும், மேலும் கீழும் குறையிருக்கக் கூடாது என்பதை மனம் ஏற்றால்,
    அலையலையாக சாந்தி எழும்.
  • இது திருவுருமாற்றப் பாதை.
  • இது ஆரம்பம். அடுத்த உயர்ந்த கட்டங்கள் உண்டு.
  • கோபம் வருவதால் அதிகாரி அல்பமானவர் எனில் கோபம் வரக் காரணமாக நானிருப்பது அல்பமாகாதா என்பது நல்ல கேள்வி.
  • ஏன் எனக்கு இந்த நிலை என சிந்தனை செய்தால், இது நெடுநாளைய குடும்பப் பழக்கம் எனத் தெரியும்.
  • என் பழக்கத்தை அழிப்பது சிரமம். குடும்பப் பழக்கத்தை அழிப்பது எப்படி?
    எந்தப் பழக்கம் வெட்கப்பட வைக்கிறதோ அது அழியும்.
  • வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாதது, வெட்கப்பட வேண்டிய மனநிலை என்பது விளங்கும். விளங்குவதை நெஞ்சு ஏற்று புரட்சி செய்யாவிட்டால் கோபம் அடங்கும்.
  • அந்நிலை மனத்திலும், நெஞ்சிலும் நிலையாக வந்தபின் அது போன்ற பழக்கமுடையவர்களைக் கண்டால், அவர் யார், என்ன பேசுகிறார், ஏன் பேசுகிறார், நாமும் இது போலிருப்பது சரியில்லை என்று தெரியும்.
  • இத்தனையும் அக்குவேர், ஆணிவேரோடு களையப்பட்டால் மனம் ஏற்றதை பலருக்கும் கூறியபின் நம் மனம் உள்ளே மாறாமலிருப்பது தெரியும்.
  • பிறர் கோபப்படும்பொழுது, நம்மீது அநியாயமாகக் கோபப்படும்பொழுது, நமக்கு எரிச்சல் வருவதற்குப் பதிலாக சந்தோஷம் வந்தால்,
    ஜீவன் திருவுருமாறுகிறது எனப் பொருள்.
  • அந்நிலை நமக்கு உள்ளே உதவும். பிறர் கோபம் தணியும்.
  • அதன்பின் வாழ்நாள் முழுவதும் ஒரு முறையும் எவரும் நம்மிடம் கோபப்படவில்லை எனக் காணலாம்.
  • இம்மனநிலை உளநிலையாகி, உளநிலை உடலுணர்வாகி, ஜீவநிலையானால் திருவுருமாற்றம் அனுபவமாக விளங்கும்.

********

ஜீவிய மணி

முடிவான பலனை முன்கூட்டித் தரும் அன்னை அடுத்த பிறவிப் பயனை இப்பிறவியிலேயே பூர்த்தி செய்கிறார்.

*******



book | by Dr. Radut