Skip to Content

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

628.தெய்வீக அன்பாலும், சரணாகதியாலும் பெறக்கூடியது நாம் தேடும் நிறைவு.

***********

தந்திர சாஸ்திரம், தந்திர யோகத்தை விளக்குவது. இந்திய யோகப் பரம்பரையில் வழங்கிய யோகங்களில் ஞானயோகம், ஹடயோகம், கர்மயோகம், பக்தியோகம், மந்திரயோகம், நாதயோகம் எனப் பல உண்டு. மந்திரம் பெரும் இடம் பெற்றது. கர்மயோகம் கீதைக்கு முன்பிருந்து இருந்து வருவது. ஞானயோகம் உபநிஷத காலத்திலிருந்து சிறப்புப் பெற்று சங்கரரால் பிரபலப்படுத்தப்பட்டது. ராஜயோகம் இவற்றுள் தலையானதாகக் கருதப்பட்டுப் போற்றப்படுவது. தந்திரம் இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு முறையைக் கண்டது. தந்திர யோக இலட்சியத்தை, வேத இரகஸ்யத்தால் மிக சுருக்கமான முறையில் அடைய முயல்வது பூரணயோகம். தந்திரம் குந்தளினியை எழுப்பி, உடலை யோக சக்தியால் நிரப்பி, ஒவ்வொரு சக்கரமாகத் திறந்து முடிவில் சகஸ்ரதளத்தைத் திறந்து மோட்சமடைகிறது. இது கீழிருந்து மேலே போகும் முறை. பூரணயோகம் மேலிருந்து கீழே வருகிறது. முதலில் சகஸ்ரதளத்தைத் திறந்து அதன் மூலம் ஜீவனைத் தெய்வ சக்தியால் நிரப்பி, மேலும் ஒவ்வொரு சக்கரமாகத் திறந்து, முடிவில் குந்தளினியைத் திறக்கிறது. அதாவது, பூரணயோகம் மேலிருந்து கீழே வருகிறது. இறைவனை உலகுக்கு கொண்டு வரும் யோகம் என்பதால் மேலிருந்து கீழே வருகிறது. இக்காரணங்களால் பூரணயோகம் மனிதனை மனதிலுள்ள ஆன்மாவாகக் கருதி மனதில் ஆரம்பிக்கின்றது. பூரண யோகம் தேடுவது நிறைவு. இறைவன் தேடும் நிறைவைப் பூரணயோகம் தேடுகிறது. 

இறைவன் பரம்பொருள். சிருஷ்டி இரு பகுதிகளாலானது. பிரபஞ்சத்திற்குக் கீழே இருள் நிறைந்த பூவுலகமும், மேலே இருளற்ற ஒளி நிறைந்த சச்சிதானந்தமும் உடையது சிருஷ்டி. பூவுலகம் இருளால் நிறைந்ததால், அதற்குப் பூரணமில்லை. சச்சிதானந்தம் ஒளியால் நிறைந்ததால் அதற்கு ஒளியின் பூரணமுண்டு. இவற்றோடு திருப்தியடையாத இறைவன் இருளை, ஒளியாக மாற்றி, சச்சிதானந்தத்தின் பூரணத்தை பூவுலகிற்குக் கொண்டுவர முனைகிறான். அது இன்று சிருஷ்டியிலில்லாத பூரணம். பரம்பொருள் நாடுவது அப்பெரும் பூரணத்தையேயாகும். அரசியலில் இன்று அனைவருக்கும் மன்னரைத் தேடும் உரிமை வந்தது சுதந்திரம் அளித்த பேறு. எல்லோரும் இந்நாட்டு மன்னராவது உலகில் இல்லாதது, கற்பனைக் கெட்டாதது.

ஸ்ரீ அரவிந்தருடன் வாழ்ந்த பாரதியார் ஸ்ரீ அரவிந்தர் கருத்துக்களைத் தன் பாடல்களில் எழுதியுள்ளார். பாரதியின் பாடல்களும், வசன கவிதையும் சொல்லும் கருத்துக்குள் ஸ்ரீ அரவிந்தர் முதன் முறையாக உலகுக்குக் கொண்டு வந்தவை. அவை நம் மரபில் இது வரையிலில்லாதவையல்ல. இருந்தாலும் பாராட்டப்படாதவை. மரபுக்கு முரணானவை.

யோகமே வாழ்வு, வாழ்வே யோகம்.

என்ற கருத்து ஒரு பாடலில் வருகிறது. கண்ணன் என் சீடன் என்ற பாடலில் மனித குருவின் பரம்பரை அந்தஸ்து அகந்தைக்குரியது, இறைவனே சீடனாக வந்தால், சீடனிலுள்ள இறைவன் வெளிப்பட்டால், மனித குரு விலக்கப்படுவார். மனித குருவின் அகந்தை அழியும் என்ற கருத்தை விளக்குகிறார். இதுவும் பூரண யோக தத்துவம். ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைய விழைகிறான். சக்திக்கு ஈஸ்வரன் சரணடைந்தபொழுது அவனுள் உள்ள பெரும் திறன் வெளிவருகிறது என்பதை சாவித்திரியிலும், பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். நம் மரபுக்கு இது புதியது. முற்றிலும் மாறானது, எதிரானதும்கூட, இதே கருத்தைப் பாரதி, 

தானத்து ஸ்ரீதேவி அவள் தாளிணை

கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்

என்று எழுதுகிறார். எல்லா மனிதரும் தெய்வ நிலையைத் தாண்டி, இறைவனாக வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தர் முதலில் கூறியது. பாரதி நாட்டுக்கு இக்கருத்தை எழுதும்பொழுது இதுவரை உலகில் எவரும் நினைக்காதபடி

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

என்றெழுதுகிறார். மனதில் நம்பிக்கையாகவும், உணர்வில் வழிபாடாகவும், உடலில் பணிவாகவும், இதயத்தில் பக்தியாகவும், அர்ப்பணமாகவும், ஆனந்தமாகவும் எழுந்த பூரணயோக சக்தி, ஆன்மாவில் தெய்வீக அன்பாகி, பூரிப்படைந்து, சரணாகதி மூலம் பூர்த்தியடைகிறது. அதுவே பூரணயோக நிறைவு. பகவான் அந்த 9 நிலைகளைக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

நம்பிக்கை, வழிபாடு, பணிவு பக்தி, அர்ப்பணம், ஆனந்தம் அன்பு, பூரிப்பு, சரணாகதி - இவை பூர்த்தியடைந்து நிறைவு எழுகிறது.

**********

629.ஜபம் வாயால் உச்சரிக்கப்படுகிறது. ஜபத்தை மேற்கொள்பவர்கள் உடலின் நிலையிலேயே இருக்கவேண்டும். மந்திரசக்தி உணர்ச்சியைத் தொட்டால் அது ஆர்வமாகும். மந்திரத்தின் உட்பொருளை மனம் அறிந்தால், உலகை ஆளும் ஜடசக்தியை மனம் எட்டும். அதனால் சொல்லால் சொல்லப்பட்டது உடனே நிகழும். ஜடத்தின் பிடியிலிருந்து மனத்தை விடுவிக்கும் முறையிது.(மனமும், உணர்வும் திருவுருமாற்றமடைந்தபின், உடலை மாற்ற அன்னை மந்திரத்தை மேற்கொண்டார்)  

உட்பொருளை மனம் உணர்ந்தால் உலகை ஆளும் ஜடசக்தியை மனம் எட்டும்.

யோகப்பயிற்சி பல நிலைகளில் உள்ளது. ஆசனம், பிராணாயாமம், ஜபம், தியானம், தபஸ், நிஷ்காம்ய கர்மம், விரதம், பக்தி, பஜனை என அவை வேறுபடும். தவமும், தியானமும் மனத்திற்குரியவை, விசாரம் - தத்துவவிசாரம் - மனத்தில் சிந்தனைக்குரிய முறை. பக்தி உணர்வுக்குரியது. நிஷ்காம்ய கர்மம் மனத்தின் செயல்திறனுக்குரியது(will). ஆசனம் உடலுக்குரிய முறை. பிராணாயாமம், பிராணனுக்குரிய முறை. ஜபம் உடலுக்குரிய முறையாகும். மந்திரம் மனத்திற்குரியது.

ஜபத்தால் ஒரு மந்திரத்தை இலட்சம் முறை, கோடி முறை உச்சரித்தால் அதற்குரிய பெரும் பலன் உண்டு. தவறாதும் உண்டு. அதே இலட்சியத்தைத் தியானத்தால் அடைய முயன்றால், மனத்தால் பலன் பெற முயல்வதாகும். பலன் எளிதிலும், முழுமையாகவும், சீக்கிரத்திலும் கிடைக்கும்.உடலைவிட மனம் உயர்ந்த கருவியாதலால் பலன் அதிகம், சீக்கிரம் வருகிறது.

மந்திரத்தை வாயால் சொல்லும்பொழுது அது ஜடத்தின் (உடலின்) முறையாகிறது. மந்திர சக்தி உணர்ச்சியைத் தொட்டால் ஆர்வம் எழுந்து அது பிராணனுக்குள்ள முறையாகும். மந்திரத்தின் உட்பொருளை அறிந்து சொன்னால், அது மனத்திற்குரிய முறையாகிறது. அதனால் மனம் ஜடத்தை ஆள முயலும் முறையாகிறது.

பூரணயோகத்திற்கு பகவான் உடலுக்குரிய முறைகளை விலக்கினார். மனத்திற்குரிய முறைகளை மட்டும் சேர்த்துக் கொண்டார். அவருடைய முறை சமர்ப்பணம். சமர்ப்பணத்திற்கும் உடலுக்கும் சம்பந்தமில்லை. முழுவதும் மனத்தால் செய்யக்கூடியது இம் முறை.

தந்திர மார்க்கம் மனிதனை உடலிலுள்ள ஆன்மாவாகக் கருதி, அதற்குரிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது. பூரண யோகம் மனிதனை மனத்திலுள்ள ஆன்மாவாகக் கருதுவதால், பகவான் மனத்தின் முறைகளை மட்டுமே கருதுகிறார். அதனால்தான் பூஜையை (உடலுக்குரிய முறை) பகவான் ஒரு முறையாகச் சேர்க்கவில்லை. மந்திரத்தையே அவர் முக்கியமாகக் கருதவில்லை. தியானத்தையும் அவர் ஒரு முறையாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறவில்லை.

யோகம் இதுவரை ஆன்மாவுக்குரியதாக இருந்தது. ஆன்மாவுக்கு விடுதலையளிக்க மனத்தையோ (ஞான யோகம்), உடலையோ (ஹதயோகம்) கருவியாகப் பயன்படுத்தினர். பகவான் ஆன்மாவுக்கு மட்டும் உரிய யோகத்தை மனத்திற்கும், உணர்வுக்கும், முடிவாக உடலுக்கும் கொண்டு வந்தார்.1947வரை ஓட்டுரிமை சொத்துள்ளவர்க்கும், படிப்பறிவுள்ள ஆண்களுக்கும் மட்டுமிருந்தது. 1950இல் 21 வயதான ஆண், பெண் அனைவருக்கும் உரியதாயிற்று. உலக சரித்திரத்திலேயே முதன் முதலாக யோகத்தை ஆன்மாவுக்குச் கீழுள்ள மனத்திற்குக் கொண்டுவந்தது பகவான். மனத்திற்கும், உணர்வுக்கும் விடுதலையளித்தார்; திருவுருமாற்றத்தையும் செய்தார். மேலும், அத்திருவுருமாற்றம் உடலுக்கும் உரியதென்றார். அன்னை அதையும் முயன்றபொழுது உடல் அசைய மறுத்தது, அப்பொழுது அது மந்திர ஜபத்திற்கு அசைவதைக் கண்டு, அன்னை மந்திரத்தை மேற்கொண்டார். தன் அன்றாடச் செலவைச் சமாளிக்க முடியாமல் பிரேசில் போன்ற நாட்டில் சர்க்கார் கடன் வாங்கினார்கள். இந்திய சர்க்காருக்கு அந்தப் பிரச்சினையில்லை. மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் திட்டத்தில் மூலதனமிட இந்தியா கடன் வாங்கியது போன்றது அன்னை மந்திரத்தை மேற்கொண்டது.

************

630.பராமுகமாக இருக்கும் தன்மையை வாழ்வு இழக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார் அன்னை. சிறு நல்ல காரியம் பெரும் பலனையும், சிறு தவறுகள் பெரும் ஆபத்தையும் உற்பத்தி செய்கின்றன. முன்னே செல்லாவிட்டால் உள்ளதையும் இழக்க நேரிடும் என நாம் அறிவோம். ஒரு நிலையின் (plane) ஆரம்ப கட்டத்தில் நல்லது, கெட்டது, இடைப்பட்டது என மூன்று பிரிவுகள் இருக்க முடியும். டைசிக் கட்டத்தில் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பதில்லை. திருமணம் செய்து குடும்பத்தை நடத்திச் சமூகத்தின் பகுதியாக இருக்க வேண்டும். அல்லது ஒதுக்கப்பட வேண்டும். இடைப்பட்ட நிலையில்லை.

  • சிறு நல்லது பெரும் பலன் தரும்.
  • இனிமேலும் வாழ்வு பார்த்துக் கொண்டிருக்காது.
  • கடவுளுக்குக் கண்ணில்லையா என்பது இனியில்லை.

நாட்டில் பல கட்சிகள் பல அபிப்பிராயங்களைச் சொல்லலாம். அதை எவரும் ஏற்கலாம், ஏற்காமலிருக்கலாம். அன்னியன் படையெடுத்துவிட்டான் என்றால், அங்கு ஒரே ஒரு அபிப்பிராயம் தானிருக்கலாம். நாட்டைக் காக்கவேண்டும். எதிராகப் பேசுபவனை நாடு அழிக்கும். இடைப்பட்ட நிலை என்பது இல்லை.

ஊர் ஏதாவது ஒரு விஷயத்தில் சூடாகிவிட்டால், இருப்பவர் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வார்கள். எதிலும் சேராமலிருந்தால் ஆபத்து. ஒரு பக்கமாக இருந்தால் அந்த கட்சியின் பலமிருக்கும். எதிலும் சேராதவனை இரண்டு கட்சியினரும் தொந்தரவு கொடுப்பார்கள். இந்த நிலை வருகிறது எனில் ஊர் விழிப்பாக இருக்கிறது என்று பொருள். அதைப்போல் Life, வாழ்வு என்று நாம் அறிவது வளர்ச்சியில்லாமல் இதுவரை இருந்தது. அதனால் எதையும் வாழ்வு கவனிப்பதில்லை. யார் எது செய்தாலும் அதன் பலனை அவர் அனுபவிப்பார். வாழ்வு குறுக்கிடாது. குறுக்கிடும் திறன் அதற்கில்லை. ஊரில் மனிதர்கள் இருப்பதாக நாம் அறிவோம். வாழ்வு என்று ஒன்றுள்ளது என அறியோம்.

ஒருவன் மயக்கமுற்று விழுந்தால் பலர் வந்து உதவும் ஊரில் நல்ல மனிதர்களிருக்கிறார்கள் என்போம். எவரும் உதவாவிட்டால் நல்லவர்களில்லை என்போம். ஆனால் காட்டுவழியே தனியே போகும் ஒருவரைத் தாக்க ஒருவன் நினைத்த நேரம், நான்கு பேர் வந்து அவன் எண்ணத்தை முறியடித்தால், வாழ்வு அவருக்கு உதவியதாக நாம் நினைக்கின்றோம்.

தென்னாப்பிரிக்காவில் ரயில்வே புதியதாகப் போடும்பொழுது காடுகள் வழியாகப் போகவேண்டியதாயிற்று. இன்ஜினீயரும், அவர் மகனும் வேலை செய்து கொண்டிருந்தவர்களை ஆதி மனிதர்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டனர். பாஷை தெரியாது. தரையில் சிலுவையை வரைந்து, அதை இன்ஜினீயரை மிதிக்கச் சொன்னார்கள். அவருக்கு பயம் வரவில்லை. சிரிப்பு வந்தது. தகப்பனாரும், மகனும் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். இன்னும் சற்று நேரத்தில் ஆதிமனிதர்கள் அவர்களைக் கொலை செய்யப்போகின்றனர். அந்நேரம் பட்டாளமாக இன்ஜினீயரைத் தேடி வண்டியில் அவர் ஆட்கள் வந்து காப்பாற்றினர். இதைத் தெய்வம் காப்பாற்றியது என்கிறோம். அது சரி. அவர்கள் தைரியம் காப்பாற்றியது என்கிறோம். அதுவும் சரி.எப்படி நடந்தது? வாழ்வு என ஒரு சக்தியுண்டு. அது தைரியத்திற்குப் பணிகிறது. அது சூட்சுமமானது. அவர்களுடைய தைரியத்தை வாழ்வு மதித்துத் தன் சக்தியால் அவர்கட்குத் தேவையான உதவியைக் கொண்டு வந்தது என்பது சூட்சும உண்மை. நல்லதங்காளுக்கும், அரிச்சந்திரனுக்கும், துரௌபதிக்கும் வாழ்வு உதவவில்லை. திரௌபதிக்கு உதவியது வாழ்வில்லை, கண்ணன். நல்லதங்காளுடைய வறுமையை வாழ்வு காலில்போட்டு மிதித்தது. அரிச்சந்திரன் சத்தியத்தைப் பாராட்டினான். வாழ்வு சத்தியத்தை ஆதரிப்பதில்லை. பொய்யை ஆதரிக்கும். ஆனால் வலிமை எங்கிருந்தாலும் வாழ்வு பணியும். இன்ஜினீயருடைய தைரியம் வலுவானது. அதனால் பணிந்து ஆதரித்தது.

சத்தியமும், கற்பும் மனத்திற்கு உயர்ந்தவை. வாழ்வுக்கு வலிமையும், பொய்யும் உயர்ந்தவை. மனத்திற்கு வலிமையில்லை. அதனால் செயல்பட முடியாது. நம் சொந்த வாழ்வில் எளியவரைக் கொடுமைப்படுத்துபவரைக் கண்டுள்ளோம். ஏமாற்றுவதைக் காண்கிறோம். இன்ஜினீயருக்கு உதவி அளித்ததுபோல் வாழ்வு எளியவருக்கு உதவுவதில்லை. உதவினால் கொடுமைப்படுத்து பவனுக்கு உதவும்.‘ என்செய்வது, நல்லதற்குக் காலமில்லை என்கிறோம். அது உண்மை. 1950இல் சத்திய ஜீவியம் உலகுக்கு வந்தது. அத்துடன் சிறிதளவு நல்லதற்குக் காலம் வந்துள்ளது. சத்திய ஜீவியம் பூமியின் சூழலில் வலுப்பட, வலுப்பட எளியவன், வறியவன், ஏமாந்தவன், மெய் சொல்பவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுமை குறைந்துவிடுகிறது என்பதை நாம் அறிவோம். வாழ்வு, நல்லது, கெட்டது, இடைப்பட்டநிலை என்ற பகுதிகளைக் கொண்ட ஆரம்பநிலையிலிருந்து, இடைப்பட்ட நிலையை விலக்கும் முடிவான நிலைக்கு வந்துவிட்டது.

முடிவான நிலையில் வாழ்வு முதிர்ச்சியடைந்துள்ளதால், சிறிய நல்லதற்குப் பெரிய பலனும், சிறிய தவறுக்குப் பெரிய தண்டனையுமளிக்கிறது என்கிறார் அன்னை. ஆபீஸில் எல்லாம் நடக்கும். சட்டமேயில்லாததுபோல் நடக்கும். தாமதமாக வருவார்கள். கண்டிப்பார்கள், தண்டிப்பதில்லை. அவரவர் இஷ்டப்படி ஓரளவு நடப்பார்கள். இன்ஸ்பெக்ஷன் வருகிறது. தினமும் லேட்டாக வந்தவனைத் தண்டித்ததில்லை. இன்ஸ்பெக்ஷனன்று லேட்டாக வந்தால் சஸ்பெண்ட் செய்வார்கள். சூழல் சூடாக இருப்பதால் சிறு தவறுக்குப் பெரிய தண்டனை கிடைக்கிறது. உள்ளூர் முனிசிபாலிட்டியில் வேலை செய்தவர், ஆபீசர் பைல் கேட்டால் இரண்டு நாள் கழித்துக் கொடுப்பார். ஆபீசர் முணுமுணுப்பார். அத்தோடு சரி. அவரே சென்னையில் லோகல் பண்ட் கமிஷனர் ஆபீசுக்கு மாற்றலாகி, அதே மாதிரி நடந்தால், பெரிய தண்டனை கிடைக்கும். நிலை உயர்ந்தாலும், இருக்குமிடத்திலேயே சூழல் உயர்ந்தாலும், பொருட்படுத்தாத சிறிய தவறுக்குப் பெரிய தண்டனையுண்டு.

உள்ளூர் கல்லூரி ஆசிரியர் illiteracy எழுத்தறிவின்மை, வறுமைக் கோட்டைத் தாண்டுவது போன்றவற்றைப்பற்றி உயர்ந்த கருத்தைத் தெரிவித்தால், மாணவர்கள் போற்றுவார்கள். நல்ல பெயர் கிடைக்கும். அதுவே கல்லூரி தரமாக இருந்தால்தான் கிடைக்கும். அவரே சென்னையில் World Bank Seminar உலகபாங்க் செமினாரில் அதே கருத்தைத் தெரிவித்தால், அதை அவர்கள் ரிப்போர்ட்டில்  எடுத்துக் கொள்வார்கள். பாங்க் project திட்டத்தில் ஆபீசர் வேலை வரும். கல்லூரி ஆபீசர் சம்பளம்போல் பல மடங்கு வரும்.விஷயம் சிறியதானாலும், இடம் பெரியதானதால், பெரும் பலன் வருகிறது.

Life Plane வாழ்வு என நாம் அறிவது அதைப்போல் சத்தியஜீவியம் வந்ததால் அளவுகடந்து உயர்ந்துவிட்டது. சிறு தவறுக்கு பெரிய தண்டனையும், சிறு நல்ல முயற்சிக்கு பெரும் பரிசையும் அளிக்கிறது என்கிறார்.

*********

631.இறைவனே கதி என்பவர்கள் சில நிமிஷம் அழைத்தாலும் பெரும் பலன் உண்டு. அந்நிலையை அடையத் தன்னுள் உள்ள இறைவனையடைய வேண்டும். மேலெழுந்த நிலையில் அதுபோன்ற அழைப்பு எழாது. இறைவனே கதி எனவும் தோன்றாது.

கலந்த உணர்வானவர் குரலுக்கு பதில் தவறாது.

சீட்டாட்டமே கதி என்பவரிடம் தாயார் இறந்துவிட்டார் என்றபொழுது, பிணம் இந்த வழியாகத்தானே போகும் பார்த்துவிடுவேன் என்றார். வேசி வீட்டுக் கதவைப் புயலில் தட்டித்திறக்க முடியாதவர் கயிறு என நினைத்து தோட்டத்து மதிலில் தொங்கும் பாம்பைப் பிடித்து ஏறி உள்ளே சென்றார். ஒரு விஷயமே கதி என்பவர் இப்படித்தானிருப்பார்கள். குருஷேவ் பிரான்சுக்குப் போனபொழுது எந்தக் கூட்டத்தில் - கலை, விளையாட்டு, வியாபாரம், அரசியல், கல்வி - பேசச் சொன்னாலும் கம்யூனிசத்தின் பெருமையை சலியாது பேசியது எல்லோருக்கும் சலிப்பை அளித்தது. கடைசி நாள் நிருபர் ஒருவர் நீங்கள் என்ன செய்ய பிரியப்படுவீர்கள் என்று கேட்டபொழுது, கம்யூனிசத்தின் பெருமையை பிரசாரம் செய்ய எனக்கு நேரமில்லை என்றார். கூட்டம் பெருத்த பலத்த சிரிப்பால் எதிரொலித்தது. இறைவனே கதி என்பவர் ஆண்டாள், மீரா, கண்ணப்பநாயனார், போன்ற மனநிலையை உடையவராக இருக்கவேண்டும். குடும்பத்திலிருந்தாலும் நம் நாட்டில் அம்மனநிலையுடையவர் ஏராளம். அவர்கள் அன்னையை சில நிமிஷம் அழைத்தாலும் அன்னை வந்துவிடுவார். அவர்கள் நாடுவது பலனில்லை, அன்னையே அவர்கள் நாடுவது.

மேல் மனத்திற்கு அதுபோன்ற ஈடுபாடு முடியாது. அதன்  அமைப்பில் அது இல்லை. நம்பிக்கை மனத்தைச் சேர்ந்தது. பக்தி இதயத்திற்குரியது. ஜீவன் முழுவதும் இறைவனை ஏற்றால்தான் இறைவனே கதி எனத் தோன்றும். இதயத்தின் பக்தியும், மனத்தின் நம்பிக்கையும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் வந்தபின்னரே இறைவனே கதி எனத் தோன்றும்.

பிள்ளையைக் கறி சமைத்தவர், தன்னைக் கொன்றவரைக் காப்பாற்றியவர், விஷத்தைக் குடித்துச் சாகாமலிருந்தவர், கண்ணைப் பிடுங்கிக் கொடுத்தவர், தான் சூடிய மாலையைக் கொடுத்தவர், காசியில் ஒளியைப் பார்த்து அதைத் தொடர்ந்து திருநெல்வேலி வந்தவர், நாட்டை நான்கு முறை சுற்றி வந்தவர், தன்னைக் கொலைசெய்ய முன்வந்த குருவை மனம் மாறியபின் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டவர், தொழுநோய்க்காரனில் இறைவனைக் கண்டு தழுவிக் கொண்டவர், சிவனடியார் கேட்டார் என்பதால் மனைவியையும் கொடுத்தவர், இறைவனே கதி என இருந்தவர்கள். அவர்கள் எல்லாம் ஜோதிமயமானவர்கள். அவர்கள் உடலைத் தாங்கி உலவியதால்தான், இந்தியனுடைய உடல் ஒளியைத் தாங்கி வருகிறது. என்கிறார் அன்னை.

‘கதி மோட்சம்' என்பது சொல். கதி என நாம் ஏற்பது மோட்சத்தில் முடிவது என்பது மரபு. இறைவனே கதி எனில் மனம் மோட்சத்தையும் நாடாமல், இறைவனையே நாடுகிறது என்று பொருள்.

மனம் முழுமையாக ஈடுபட்டாலும், இராமகிருஷ்ணபரமஹம்சரின் கடைசி நேரத்தில் விவேகாநந்தருக்கு சந்தேகம் தோன்றியதுபோல் தோன்றும். அது மனத்தின் இயல்பு. பக்தி மேலீட்டால் தன்னையே  தியாகம் செய்தவரும், பக்தி குறைந்த நிலையில் எளியமனிதன்போல் நடப்பார். உடலால் ஊழியம் செய்தவருக்கு அதிருப்தி ஏற்படும் நேரமுண்டு.ஜீவன் முழுவதும் ஏற்கவேண்டும். ஆன்ம விழிப்புள்ள வருக்கும் நிஷ்டையில்லாத சமயம் விழிப்பிருக்காது. ஜீவன் முழுவதும் இறைவனை நோக்கி அதுவே கதி என நினைக்கச் சைத்தியம் விழித்தெழ வேண்டும். சைத்தியம் தளராது. அதற்குத் தளரத் தெரியாது. இறைவனைத் தவிர வேறெதையும் கருத முடியாத நிலையிலுள்ளது அது.

**********

632.ஜடப்பொருளைவிடப் பொருள் (substance) திண்மை வாய்ந்தது, வாழ்வு பராமுகமாக இருக்க முடிவதில்லை, ஆகியவை சத்தியஜீவியம் செயல்படுவதன் அறிகுறிகள். சாந்தி பொன்னிறம் பெற்றதும், நிர்வாணம் தனித்தன்மை பெற்றதும் அது போன்றதேயாகும்.

சத்திய ஜீவியத்தால் ஜடமும் வாழ்வும், சாந்தியும் மாறின.

சத்தியஜீவியம் இன்று உலகில் இல்லாதது. சத்தியஜீவன் (Supramental being) பிறந்தால் ஓரளவு மனிதனைப்போல் அவனிருந்தாலும், அவன் தாய் வயிற்றில் கருவுற்று மனிதன் பிறப்பதைப்போல் பிறக்கமாட்டான். அவனுடலில் உணவை ஜீரணம் செய்யும் உறுப்புகளிருக்கா. ஏனெனில் அவனுடைய சக்தி பிரபஞ்சத்திலிருந்து நேராக, அவனுடலில் பாயும். உணவை அவன் உட்கொள்ளும் தேவையிருக்காது. நம்மைப்போல் அவன் வாயால் பேசிக் கருத்தைத் தெரிவிக்கும் அவசியமிருக்காது. அவன் எண்ணம் தானே அடுத்தவரைப் போய்ச் சேரும். தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். அவனுக்கு நடந்து போகும் தேவையிருக்காது. நினைத்த இடத்திற்கு உடனே மாறுவான் என்பன போன்றவற்றை அன்னை கூறியிருக்கிறார். அவன் ஜீவனாக இருப்பானே தவிர ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கமாட்டான். 

மனத்தின் எண்ணம் சூட்சுமமானது. உணர்வு ஓரளவு சூட்சும மானது. உடல் ஜடமானது. அதனால் செறிவும், திண்மையும் வாய்ந்தது. சத்தியஜீவியம் எப்பொருளால் ஆனது? ஜடத்தைவிடச் செறிவும், திண்மையும் அதிகமான பொருளாலானது என்கிறார் அன்னை. திடப்பொருளல்ல, ஆனால் திடப்பொருளைவிடக் கனமானது என்கிறார்.

பகவானுடனிருந்த சாதகர்கள் அவருக்கு எலும்பு முறிந்த பின்னர் அவரைத் தூக்கிவிட வேண்டியிருந்தபொழுது, அவருடல், கை, கால்கள் சாதாரண மனித உடலைவிட மிகவும் கனக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவருக்குச் சத்திய ஜீவியம் பலித்ததால், அவருடலில் சத்திய ஜீவியமிருந்ததால் உடலின் செறிவு, திண்மை, கனம் அதிகரித்தது.

மௌனம் என்பதை யோகத்தை மேற்கொண்டவர் அறிவார்கள். அன்னை பக்தர்கள் பலரும் அறிவார்கள். மௌனம் எல்லா நிலைகளுக்கும் உண்டு. பொதுவாக மௌனம் மனத்திலுள்ளது. உணர்விலும், உடலிலும் மௌனம் வந்து குடிகொள்ளும். அவற்றின் தன்மை மனத்தின் மௌனத்தைப் போலிருக்காது. ‘தலைவர் என்றால் முனிசிபாலிட்டித் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர், குடும்பத் தலைவர், பார்லிமெண்ட் தலைவர், போட்டி பந்தயத் தலைவர் என பலர் உண்டு. தலைவர் என்பது நிலைக்கேற்ப மாறும். அதே போல் மௌனம் சச்சிதானந்தத்திலிருந்து ஜடம்வரை எல்லா நிலைக்கும் உண்டு. சத்தியஜீவிய மௌனம் ரீங்காரம் செய்யும். சத்தியஜீவிய மௌனம் மனத்தைத் தொட்டால் ரீங்காரம் எழும். சாந்தியைப் பக்தர்கள் அனைவரும் அறிவார்கள். சாந்தியும் எல்லா நிலைக்கும் உண்டு. சத்தியஜீவிய சாந்தி பொன் நிறமானது என்கிறார் அன்னை. ஒளியை(ஜோதி) நாம் அறிவோம். முனிவருடைய ஒளி வெளிரிய நீல நிறமானது. தெய்வலோக ஒளி நீலம். சைத்திய ஒளி(pink) ரோஸ் நிறமானது. உணர்வின் ஒளி வயலட். உடலின் ஒளி சிவப்பு. மனத்தின் ஒளி மஞ்சள். சத்தியஜீவிய ஒளி பொன்னொளியாகும். 

Personality, individuality ஆகியவற்றைத் தமிழில் சரியாக மொழிபெயர்ப்பது சிரமம். சுபாவச்சிறப்பு, தனித்தன்மை என்று கூறலாம். சத்தியஜீவியம் வருவதற்கு அடையாளமாக அன்னை கூறியவற்றுள் தனித்தன்மை (nothingness) ஒன்றுமில்லை, (நிர்வாணம்) என்ற நிலையை அடைந்துள்ளது என்கிறார். அவர் கூறும் அடையாளங்கள்

பொருள் ஜடத்தைவிடச் செறிவாக இருப்பது வாழ்வு. தன் பராமுகத்தை இழந்தது. சாந்தி பொன்னிறம் பெற்றது. தனித்தன்மை ஒன்றுமில்லை என்றானது.

************

633.கட்டுக்கடங்காதது கட்டுப்பட்டால் நிறைவேற்படும். சிறிய ஆசைகளை நாடிச் செல்வதை விட்டொழித்தால் நிறைவு தேடி வரும். அடியிலுள்ள துவாரத்தை அடைத்தால், நம் நிலை நிறைகிறது.நிறைவுக்குப் பின் செறிவும், வேகமும் ஏற்படுகின்றன.

சிறியதை விட்டால், பெரியது தேடி வந்து நிறைவு தரும்.

கட்டுக்கடங்காத ஆர்வம் ஏற்பட்டால் சக்தி எழுந்து செயல் பூர்த்தியாகும். அந்நிலையைத் தாண்டி அடுத்த நிலையை எய்த கட்டுக்கடங்காதது கட்டுப்படவேண்டும். சிறுகுழந்தையின் சக்தி கட்டுக்கடங்காதது. சக்தி பொங்கி வழிவதால், குழந்தை விளையாடுகிறது, ஆடுகிறது, ஓடுகிறது. அதனால் அதன் உடல் வளருகிறது. குழந்தைப்பருவம் மாறி, பள்ளியில் சேர்ந்தால் கட்டுக்கடங்காமல் ஆடிய நிலை மாறி, கட்டுப்பட்டு வகுப்பில் உட்கார்ந்து பாடம் படிக்க வேண்டும். கட்டுப்படாவிட்டால் பள்ளியும், பாடமும் இல்லை. 

சம்பாதிக்கக் கட்டுக்கடங்காத ஆர்வம் தேவை. சம்பாதித்ததை நிர்வாகம் செய்ய, அனுபவிக்க அதே ஆர்வம் கட்டுப்பட்டு நிதானமாக இருக்கவேண்டும். ஒரு நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு வர வேண்டுமானால், முதல் நிலையால் ஏற்பட்ட ஒழுக்கு நிற்கவேண்டும். அது நின்றால் சக்தியும், தெம்பும் சேரும். சேர்ந்தால் செறிவு ஏற்பட்டு, அடுத்த நிலைக்குரிய வேகம் வரும். விளையாட்டு வீரனாக இருந்தவர், தன் கட்டுக்கடங்காத ஆர்வத்தால் பரிசு பெற்று, அதனால் பெரிய உத்தியோகம் பெற்று, அதற்குரிய நிலையில் திருமணம் செய்து குடும்பம் ஆரம்பித்தபின், அடங்காத விளையாட்டு ஆர்வம் அடங்கி நிதானமான பொறுப்புள்ள திறமையாக வேண்டும். அந்தத் திறமை வேலையில் முன்னேற்றத்தையும், குடும்பத்தில் உயர்வையும் அளிக்கும். மீண்டும் விளையாட்டு ஆர்வம் பழைய நிலையில் தலை தூக்கினால் அது உத்தியோகத்தையும், குடும்பத்தையும் பாதிக்கும். முன்நிலை ஆர்வம் இந்நிலைக்குத் துவாரம் போன்ற ஒழுக்கு. துவாரம் அடைந்து, ஒழுக்கு நிற்கும்வரை அடுத்தநிலை உருவம் பெறாது. உருவம் பெற்ற பின்னரே செறிவு வரும். செறிவு நிறைந்து வேகம் எழும்.

மாணவன், பட்டம் பெற்று, ஆசிரியராகி, பண்டிதனாகி, ஆராய்ச்சியை மேற்கொண்டு, எழுத்தாளனாகி, புதிய கருத்தைத் தன்னுள் எழுப்பும்பொழுதும், ஒவ்வொரு நிலையைத் தாண்டும் பொழுதும், மேற்சொன்ன சட்டம் செயல்படும்.

வாழ்வில் எல்லா நிலைக்கும் பொதுவான சட்டம் இது. வக்கீல், ஜட்ஜ், உயர்மன்ற நீதிபதி, நீதியை நிலை நிறுத்தும் சிந்தனையாளர் என்ற நிலைகளைக் கடப்பவரும் இச்சட்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் காண்பார்.

உடல் உழைப்புத்திறம் பெற்று, உணர்வு செறிந்து வளமாகி, அறிவு நிறைந்து, சிந்தனை சிறந்து, ஆன்மா நிதானத்தால் பக்குவமடைந்து இனிமையாவதும் பல கட்டங்களைத் தாண்டி வருவதாகும். ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டும்பொழுதும் சட்டம் செயல்படும்.

நெப்போலியன்போல் உயர்ந்து சரிந்தவர், சரிவு எழுமுன் சில்லரைச் செயல், ஆசை, குறை துவாரமாகத் தலை எடுப்பதைக் காணலாம். சாக்ரடீஸ் பழுத்த பழமானபின் அர்த்தமற்ற வேகம் ஒன்று அவரைப்பற்றி உலுக்கியது. ஊரில் உள்ள (Wisemen of Athens) விவேகி எனப் பட்டம் பெற்றவர்களைச் சந்தித்து அவர்களுடைய விவேகம் என்ன என்று கேட்டு, "அப்படியானால், உங்களைவிட நான் அதிக விவேகம் பெற்றவன்'' என்றதால் அத்தனை பேரும் சேர்ந்து அவருக்கு மரணதண்டனை அளித்தார்கள். விவேகத்தின் சிகரம் சாக்ரடீஸ். உயர்வின் உச்சியை எட்டியபின், இதுபோன்ற எண்ணம் - துவாரம், ஒழுக்கு, சில்லரைக் குணம், ஆசை - எழுவதுண்டு. எழுந்தால் பெரும்பாலும் அதுவே முடிவு. இரண்டாம் யுத்தத்தை உலகத்திற்காக வென்ற வீரர் சர்ச்சில். யுத்தம் முடிந்தபின், இந்திய சுதந்திரத்தை இனித் தள்ளிப்போட முடியாது என வெள்ளிடை மலையாக உலகம் உணர்ந்தபொழுது பிரதமரான சர்ச்சில், "சாம்ராஜ்யத்தைக் கரைக்க நான் பிரதமராக இல்லை'' என்றார். சரித்திரத்தின் போக்கை எதிர்க்கும் சிறுபிள்ளைத்தனம் இது. எலக்க்ஷனில் தோற்றார்.

ரவீந்திரநாத டாகுரைச் சந்தித்து ஐன்ஸ்டீன் கடவுளைப்பற்றி பேசியபொழுது தாகூர் மனிதனைப்பற்றிப் பேசினார். "மனிதனே உங்களுக்கு முக்கியமானால், உங்களை விட எனக்குப் பக்தி அதிகம்" என்றார். கடைசிக் காலத்தில் விவேகாநந்தர் பரமஹம்சருக்கு தெய்வாம்சம் இருப்பது உண்மையா எனச் சந்தேகப்பட்டார். உலக மேதைகட்கும் உச்சகட்டத்தில் பழைய நிலையின் குறைகள் ஏதாவது ஒரு வகையாக எழும். அதுவே முடிவு, அது எழுந்தால் அடுத்த கட்டமில்லை. இவை போன பின்னரே அடுத்த கட்டம் எழும்.

634.புலன் வழிச் செல்லும் சக்தியைச் சுத்தம் செய்து ஞானயோகமும், ராஜயோகமும் செயல்படுகின்றன. அப்படிக் குவியும் ஏராளமான சக்தி தூய மனத்தைத், தூய ஆன்மாவை நாடச் செய்கிறது.

பூரணமான தியானநிலை, முழுமையான விழிப்பு, அகந்தை அழிதல், ஆகியவை பூரணயோகத்தின் அடிப்படை. இவையனைத்திற்கும் பூரணம் உண்டு.

நமக்கு முன்னுள்ள நிலையில் செயல்படாவிட்டால், விரயம் தவிர்க்கப்படும். இதனால் நாம் உள்ள நிலையில் நிறைவு சேரும். அதுபோல் சேர்ந்த சக்தியைத் தூய்மைப்படுத்தினால் நிறைவு வளம் பெறும். அதற்குச் சமர்ப்பணமும், சரணாகதியும் உதவும். நிறைவு செறிந்து வளம் பெற்றால் அடுத்த நிலையை எய்த (evolve) உதவும்.எனவே நிறைவு, வளம், தீவிர ஆர்வம் ஆகியவை பூரணயோகத்தின் பகுதிகள்.

நிறைவு, வளம், தீவிர ஆர்வம் ஆகியவை பூரணயோகத்தின் பகுதிகள்.

பூரணயோகத்தைச் செய்ய பகவான் எந்த முறைகளையும் வகுக்கவில்லை. எல்லா யோகத்திற்கும் உரிய சட்டங்கள், வழிமுறைகள், நிபந்தனைகள் உண்டு. சரணாகதியே மார்க்கம் என்று சொல்லியதைத் தவிர முறை என எதையும் நிர்ணயிக்கவில்லை. சுதந்திரமே முடிவான சட்டம். அதுவே முடிவின் பூர்த்தி என்கிறார். சுதந்திரம் என்பதே சட்டமானால், முறைகளுக்கு இடமில்லை. மேல் மனத்திலிருந்து, உள்மனம் செல்வது ஒரு பிறவி முழுவதும் தவம் செய்து பெற வேண்டியது. இதை முதற்படியாக எல்லா யோகங்களும் கொள்வதுபோல், பூரணயோகமும் கொள்கிறது. அதற்கும் ஒரு சட்டம் விதிக்கவில்லை. நெறியான செயலை மேற்கொண்டால் உள்மனத்திற்கு எவரும் போகலாம் என்கிறார்.

யோகம் பூரணமானதால், பூரணமான ஜீவனுக்கே இது உரியது. கெட்டது என்பதை வாழ்விலிருந்து விலக்கி, நல்லதை அடைவதும், அதிலிருந்து உயர்ந்து கெட்டதற்கு எதிரான நல்லது என்பதிலிருந்து, கெட்டதேயற்ற நல்லதை அடைவதும், அதற்குரிய நெறியுமே ஜீவனைப் பூரணமாக்கும்.

ஞானயோகமும், ராஜயோகமும், அறிவையும், மனத்தையும் புலன்களிலிருந்து பிரித்துத் தூய்மையான மனத்தை எட்டுகின்றன. தூய்மையான மனம், தூய்மையான ஆன்மாவின் எல்லையிலிருப்பதால், எல்லையைத் தாண்டி அவை இலக்கை எட்டுகின்றன. ஜீவனின் 4 பகுதிகளில் உயர்ந்ததான ஒரு பகுதி ஆன்மா விடுதலையடைந்து மீதி (மனம், உணர்வு, உடல்) இருந்த நிலையிலேயே இருப்பதால், இது பூரண யோகத்திற்கு உதவாது.

பூரணத்தைக் குலைத்த அகந்தையை அழித்து, பிரிந்து நின்ற ஜீவனைப் பிரபஞ்சத்துடன் இணைத்து, ஜீவனின் 4 பகுதிகளும் இருளிலிருந்து விழித்து ஒளியைக் கண்டு, ஜீவனின் எல்லாப் பகுதிகளும் தியானத்தை மேற்கொண்டு உச்சியைத் தொட்டால், ஜீவன் பூரணமடைகிறது. பூரண ஜீவன், பூரண விழிப்பால் பூரண தியானத்தை மேற்கொண்டால், பிரபஞ்சத்தின் ஆத்மாவும், பரமாத்மாவும் தரிசனம் தருகிறார்கள். முயன்றுயர்ந்து பெற்ற தரிசனம் நிலைக்க, நிலைத்த ஜீவாத்மா பரமாத்மாவாக, தியானநிலை சற்றும் குறையாமலிருக்க வேண்டும். மனம் சிந்தித்தால், பிராணன் ஆசைப்பட்டால், உடல் தன் பழைய பழக்கங்களை மேற்கொண்டால், பழைய நிலை வரும்.சேகரம் செய்த சக்தி விரயமாகும். இதுபோல் சக்தியை விரயமாக்காவிட்டால், சக்தி உச்சகட்டப் பூரண தியான நிலையில் சேர ஆரம்பிக்கும். சக்தி சேர்ந்தாலும் அது தூய்மையாக இருப்பதில்லை. முயன்று அதைத் தூய்மைப்படுத்தினால், செறிவு ஏற்படும். செறிவு நிறைவை அடுத்த கட்டத்தில் தரும்.

பெட்டிக்கடையில் வியாபாரம் அதிகமாவது முதல் நிலை வளர்ச்சி (growth). பெட்டிக்கடை பெரிய கடையாவது அடுத்த நிலை வளர்ச்சி (development). கடை பெரியதானதால் ஊரில் அவர் பெரிய மனிதராவது (evolution) அவர் புதிய உயர்ந்த நிலையை எட்டுகிறார் எனப் பொருள். செறிவு ஜீவனில் நிறைவானால் மனிதஜீவன் கடைசிநிலை வளர்ச்சியை(evolve) அடைந்து, சத்திய ஜீவனாகப் பரிணாமவளர்ச்சி பெறுகிறது.

***********

635.இதுவே மனிதனின் பங்கு.அதை அவன் செய்வதில்லை. செய்ய முன்வந்தால் திணறுகிறான். அன்னை இங்கும் உதவுகிறார். அன்னையை அழைத்தால், அழைப்பில் நிறைவு, வளம், தீவிரம் கலந்துள்ளது. அழைப்பு யோகத்தைத் தன்னுள் அடக்கியது. இது மேலெழுந்து மனத்தில் எழுவது. அகந்தையை மீறி எழ வேண்டியிருப்பதால் முயற்சி தேவைப்படுகிறது. அழைப்பு கனிந்து, உள்ளே ஆழத்திற்குச் சென்று, அங்கிருந்து தானே மெதுவாக எழும். அது முழுமையான அழைப்பு, உயர்ந்த சமர்ப்பணம். அதன் தீவிரத்தால் அது சத்திய ஜீவியமாகிறது. தீவிரம் அதிகமாகும்பொழுது, உள் மனம், சூட்சும மனம், அடி மனம், ஆழ்ந்த மனம் ஆகியவற்றை அது எட்டுகிறது.

வேறு வகையாகச் சொன்னால், மேலிருந்து, உள்ளே சைத்திய புருஷனை நாடிச்சென்று, அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனநிலைகளை எட்டுகிறது.

அதையே மனம், உணர்வு, உடல் எனவும் சொல்லலாம். ஒவ்வொரு நிலைக்குரிய ஜீவியம், பொருள் உண்டு. எனவே உடலின் பொருள் (substance) கடைசி நிலையாகும்.

ஒவ்வொரு நிலையிலும் முதலில் சிரமம் சற்று அதிகமாகும். அஜெண்டாவில் அன்னை உடலின் ஜீவியத்திலிருந்து உடலின் பொருளைத் தான் அடைந்ததை விவரிக்கின்றார்.

அழைப்பு கனிந்து ஆழம் நாடுவது முழுமையான அழைப்பு. 

மனிதன் சத்திய ஜீவியத்தை அடையும் மார்க்கம் இது. அவன் இதைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில் தனக்கு அவசியமானதை அல்லது ஆர்வமானதை அல்லது ஆசைப்பட்டதையே அடைய முயல்கிறான். மனிதனுக்குச் சத்தியஜீவியம் அவசியமோ, ஆர்வமோ, ஆசையோ தரவில்லை. பிறகு, ஏன் மனிதன் இதைச் செய்ய வேண்டும்?

ஆனால் சத்திய ஜீவியத்தை அடைவதையே தங்கள் ஒரே குறிக்கோளாகக் கொண்டவர்களும், இதைச் செய்வதில்லை.1956இல் சத்திய ஜீவியம் பூமிக்கு வந்தபொழுது அதை அன்னை மட்டுமே அறிந்தார். அது தவிர மூன்று பேர் அதைக் கண்டு கொண்டதாகச் சொல்கிறார். வந்த பிறகும் அதை அடையாளம் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்? இன்று ஒருவர் சத்தியஜீவியத்தை நாடினால் அவருக்கு ஏற்கனவே நடந்தவை, இன்று பிறர் செய்வது பொருட்டல்ல. அவர் செய்யக்கூடியதை இங்கு சொல்கிறார் பகவான். மனிதன் இதைச் செய்ய முன் வருவதில்லை. ஒருவர் முன் வந்தால் அவருக்கு அது பலிக்கும்.

மூளையின் செயல் மனம்.மனம் சூட்சுமமானது, மூளை ஜடமானது. மனம் ஜீவியம், மூளை பொருள் (substance).பிராணன், உணர்வு என்பதிலும் ஜீவியம், பொருள் என இரு பகுதியுண்டு. ஆசை, பிரியம், கோபம் போன்ற உணர்வுகள் ஜீவியத்தைச் சேர்ந்தவை. இதற்கு அஸ்திவாரமான (substance) உடலின் ஜீவியம், அதற்கஸ்திவாரமான உடலின் பொருள் என இரண்டுண்டு. திருவுருமாற்றத்தில் உடலின் ஜீவியத்தை அன்னை மாற்றியபின், உடலின் பொருளை மாற்ற முயன்றபொழுது சிரமம் பல நூறு மடங்கு அதிகமாயிற்று, வேதனை பொறுக்கமுடியவில்லை, வாய்விட்டு ஒயாமல் அலறவேண்டும் போலிருந்தது என்கிறார். அது அவருக்குப் பின் வெளியான அவர் நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

தொடரும்.

Comments

635. - 8th heading - FROM

635. - 8th heading - FROM  இதுவே மனிதனின் etc etc. TO ஆகியவற்றை அது எட்டுகிறது. - 1st set of sentences 

FROM வேறு வகையாகச் சொன்னால், etc. etc. TO   மனநிலைகளை எட்டுகிறது.  - 2nd set

FROM அதையே மனம், etc. etc. TO கடைசி நிலையாகும்   - 3rd set

FROM ஒவ்வொரு நிலையிலும் etc. etc. TO அடைந்ததை விவரிக்கின்றார்.  - 4th set

அழைப்பு கனிந்து ஆழம் நாடுவது முழுமையான அழைப்பு. - separate line.

after the heading extra space is there.

 

634 - 7th heading - after the

634 - 7th heading - after the 2nd line extra space is there.

from பூரணமான தியானநிலை etc. etc. TO இவையனைத்திற்கும்  பூரணம் உண்டு. - separate set of two sentences leaving two line spaces before and after the sentences.

from நமக்கு முன்னுள்ள etc. etc. TO   பூரணயோகத்தின் பகுதிகள். - separate set of sentences leaving two line spaces before and after the sentences.

from நிறைவு, வளம், etc TO பூரணயோகத்தின் பகுதிகள். - a separate sentence - leaving two line spaces before and after the sentence.

para no.2 - after  line no.3 - extra space.

para no.3, line no.3 - எல்லையி ருப்பதால் - எல்லையிலிருப்பதால்

para no.5 - after line no.5 - extra space.

 

 

 

632.- 5th heading சத்திய

632.- 5th heading

 சத்திய ஜீவியத்தால் ஜடமும் வாழ்வும், சாந்தியும் மாறின. - separate line after the heading.

para no.1, line no.4 - அவனுடளில் - அவனுடலில்

after para no.1 - extra space is there.

para no.3, line no.4 - பத்ததால்,  - பலித்ததால் 

after para no.4 - extra space is there.

633.- 6th heading

சிறியதை விட்டால் etc. separate line after the heading

para no.1, line no.4 - விளையாடு கிறது, - விளையாடுகிறது,

after para no.1 - extra space is there.

para no.2, line no.11 - அüக்கும். - அளிக்கும்.

after para no.5 - extra space is there.

630 - 3rd headingpara no.3 -

630 - 3rd heading

para no.3 - after 3rd line extra space.

para no.5 - after line no.6 extra space is there.

para no.6, line no.9 - முனிசி பாலிட்டியில் - முனிசிபாலிட்டியில்

para no.7 - after line no.6 extra space is there

para no.7, line no .7 - ல்ழ்ர்த்ங்ஸ்ரீற் - project

para no.8, line no. 1- Life,Plan - Life Plane

631 - 4th heading

para no.1, line no. 4 - மதில் - மதிலில்

para no.1 - after line nos.5, 12 and 13 extra space is there

para no.1,  line no.12 - எதிரொத்தது.- எதிரொலித்தது.

para no. 3, line no. 4 - ஒüயைப் - ஒளியைப்

para no.3, line no.4 - திருநெல்வே- - திருநெல்வேலி

para no.3, line no.11 - ஒüயைத் - ஒளியைத்

para no.5, after 3rd line extra space is there.

 

 

 

யோக வாழ்க்கை விளக்கம் IVThere

யோக வாழ்க்கை விளக்கம் IV

There is no space after the full stops.

628. 1st heading

After 1st para extra space.

para no.2, line no.6 - சச்சிதானந் தத்தின் - சச்சிதானந்தத்தின்

para no.2, line no.7 -சிருஷ்டியில்லாத - சிருஷ்டியிலில்லாத

para no.2, line no.8 - extra space at the end.

para no.3,line no.5-வரையில்லாதவையல்ல.- வரையிலில்லாதவையல்ல.

After para no.4 extra space is there.

629. 2nd heading- after the heading extra space is there.

para no.5. - After line no.4 - extra space is there.

para no.6 - After 6th line one sentence is missing

630. - 3rd heading - after line no.6 - extra space is there.

 

 

 

 

 



book | by Dr. Radut