Skip to Content

“ஸ்ரீ அரவிந்தம்” - லைப் டிவைன்

“ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்

கர்மயோகி

IX.The Pure Existent
9. சத் புருஷன்
Something is clear at once.
உடனே ஒரு விஷயம் புலப்படுகிறது.
This Energy is infinite.
இச்சக்தி அளவற்றது.
If there is an Existence, it must also be infinite.
சத் என ஒன்றிருந்தால், அது அளவற்றதாக இருக்க வேண்டும்.
We have experience.
நமக்கு அனுபவம் உண்டு.
We can imagine.
நாம் ஞானத்தை அறிவோம்.
None speak of a terminus.
கற்பனை செய்யமுடியும்.
Not even its possibility.
எதுவும் முடிவு என்பதைக் காட்டவில்லை.
Neither of them bears witness to that.
அப்படி ஒன்றிருப்பதாகவும் தெரியவில்லை.
What do we mean by end?
முடிவு எனில் என்ன?
What does the beginning show?
ஆரம்பம் எதைக் காட்டுகிறது?
Both show something beyond them.
முடிவுக்குப் பின்னும், ஆரம்பத்திற்கு முன்னும் உள்ளதைக் கூறுகின்றன.
Is there an absolute end?
முடிவான முடிவுண்டா?
Or an absolute beginning?
ஆதியான ஆரம்பம் உண்டா?
It is a contradiction in terms.
சொல்லே முரண்படுகிறது.
The essence is contradicted.
அர்த்தமும் முரணாக இருக்கிறது.
It is a violence, a fiction.
இது புனையப்பட்டது, புண்படுத்துவது.
Infinity imposes itself on the finite.
கண்டம், அகண்டத்தின் ஆட்சிக்குட்படுகிறது.
It does so by its self-existence.
தன் சொந்த உரிமையால் அதைச் செய்கிறது.
This is infinity.
அது அகண்டம்.
But infinity with regard to Time and Space.
அகண்டம் என்றாலும், காலம், இடத்தைப் பற்றிய அகண்டம்.
Time is an eternal duration.
முடிவற்ற வளர்ச்சி காலம்.
Space is an interminable extension.
முடிவற்ற நீட்சி இடம்.
The Pure Reason goes farther.
பகுத்தறிவு இவற்றைக் கடந்து செல்கிறது.
It looks in its own light.
தனக்கேயுரிய ஜோதியைக் காண்கிறது.
It is a colourless, austere light.
நிறமற்ற ஒளி அது.
Reason finds two categories of consciousness.
ஜீவியம் இருவகைப்பட்டது எனப் பகுத்தறிவு காண்கிறது.
Consciousness is a condition of perception.
பகுத்துணரும் தன்மை ஜீவியமாகும்.
We arrange our perception of phenomenon.
பொருள்களை உணருவதை நாம் ஜீவியம் என்கிறோம்.
We call it consciousness.
அதுவே ஜீவியம்.
Take a look at existence itself.
சத் புருஷனைக் கூர்ந்து கவனிப்போம்.
Time and Space disappear.
காலமும், இடமும் மறைகின்றன.
There is an extension.
ஒரு நீட்சியுண்டு.
It is not a spatial extension.
இடத்தால் ஏற்பட்ட நீட்சியல்ல இது.
It is a psychological extension.
மனத்தால் ஏற்பட்டது.
There is duration.
சலனம் உண்டு.
It is not a temporal duration.
காலத்தால் ஏற்பட்ட சலனமல்ல இது.
It is a psychological duration.
இதுவும் மனத்தால் ஏற்பட்டதே.
This extension is a symbol.
நீட்சி ஒரு சின்னம்.
This duration too is a symbol.
சலனம் மற்றொரு சின்னம்.
Both represent eternity to the mind.
காலத்தைக் கடந்த நிலையை அவை மனத்திற்குச் சொல்லும் முறை இது.
Eternity does not lend itself to translation.
காலத்தைக் கடந்த நிலை சொல்லுக்கு அகப்படாது.
Intellect needs such a translation.
காலம் கடந்த நிலை ஒரு க்ஷணம்.
Eternity is a new moment, ever-new.
அது புதுமையானது.
It is all-containing.
அனைத்தையும் தன்னுட் கொண்டது.
It is an all prevading point.
அனைத்தையும் ஊடுருவும் தன்மை படைத்தது.
It has no magnitude.
அதற்கு அளவு என்று ஒன்றில்லை.
Now, it is easy to see these truths.
காலம், இடம் என்பதை எளிதில் இப்படி அறிகிறோம்.
These are conflicting terms.
சொற்கள் முரணானவை.
The conflict is violent.
முரண்பாடு கடுமையானது.
Still, it accurately expresses the truth.
எனினும் துல்லியமாக விளக்கவல்லது.
We perceive that truth.
உண்மை விளங்குகிறது.
It means we have gone beyond mind and speech.
நாம் மனத்தையும், சொல்லையும் கடந்துவிட்டோம் எனத் தெரிகிறது.
Their natural limits are crossed.
அவற்றின் எல்லையைக் கடந்துவிட்டோம்.
They express a Reality.
அவை எடுத்துக் கூறுவது சத்தியம்.
These conventions disappear.
சட்டங்கள் மறைகின்றன.
Their necessary oppositions disappear.
முரண்பாடுகளும் மறைகின்றன.
Both disappear into an identity..
அவை மறைந்து ஐக்கியமாகின்றன.
Is this a true record?
இது சரியான கணக்காகுமா?
Could there be another truth?
வேறு விளக்கம் இருக்கலாமல்லவா?
Why do Time and Space disappear?
காலமும், இடமும் மறைவதன் காரணமென்ன?
If so, is existence a fiction?
அப்படியானால் சத் என்பது நம் கற்பனையா?
Would it be a fiction of the intellect?
அறிவின் ஆற்றல் புனைந்ததாகுமா?
Or, is it a fantastic Nihil?
அல்லது சூன்யமா?
Are we trying to create reality out of nothing?
சூன்யத்திலிருந்து சத்தியத்தைக் காண முயலும் செயலாகுமா?
All these may be created by speech.
அத்தனையும் வாய்ப்பந்தலாக இருக்கலாம்.
And the reality may be conceptual reality.
நாம் சத்தியம் என்பது கருத்தில் உருவான கருவாகுமா?
Let us go back to Existence-in-itself.
சத்தியத்தை மீண்டும் காண்போம்.
Not through any medium.
கருவியின்றி, நேரடியாகக் காண்போம்.
We find Existence is not a fiction.
சத் என்பது கற்பனையோ, புனைந்ததோ இல்லை.
Behind the phenomenon there is something.
நிகழ்ச்சிகளின் பின்னால் ஒன்றுளது.
It is infinite and also indefinable.
அது அளவற்றது, சொல்லைக் கடந்தது.
No phenomenon absolutely is.
நிகழ்ச்சிக்கு உண்மையில்லை. எந்த நிகழ்ச்சிக்கும் அதில்லை.
We cannot say that.
இருப்பதாக நாம் கூற முடியாது.
No totality of phenomenon is.
எல்லா நிகழ்ச்சிகளின் திறனுக்கும் அச்சத்தியமில்லை.
Reduce all phenomenon to one.
நிகழ்ச்சிகளைத் திரட்டிச் சாரத்தைக் காணமுடியும்.
It can be fundamental and universal.
பொதுவானதாகவும், அடிப்படையானதாகவும் அச் சாரமிருக்கலாம்.
It may be energy or its movement.
அது சக்தியாகவோ, சலனமாகவோ இருக்கும்.
We don't get anything tangible.
தட்டுப்படும் விஷயமாக அது இருக்காது.
The result is indefinable phenomenon.
விளக்கமுடியாத நிகழ்ச்சியாக வேண்டுமானாலிருக்கலாம்.
Movement has a potential.
சலனத்திற்கு ஆதாரமுண்டு.
It is repose.
அது அமைதி.
Repose is activity of some existence.
அமைதியும் சத்தின் செயலன்றோ?
Energy in action is an idea.
செயல்படும் சக்தி ஒரு கருத்து.
Then energy is absence of actions arises.
செயல்படாத சக்தியும் ஒரு கருத்தன்றோ?
Then what is it?
அப்படியானால், அது எது?
Is it absolute energy?
அது ஆதிசக்தியா?
Absolute energy not in action is existence.
செயலற்ற ஆதிசக்தி சத் எனப்படும்.
It is pure and simple absolute existence.
அது தெளிவான, எளிமையான ஆதிக்குரிய சத்.
We have only two alternatives.
அது இரண்டில் ஒன்றாகும்.
Indefinable pure existence is one.
விவரிக்கவொண்ணாத தூய சத் என்பது ஒன்று.
Indefinable energy in action is another.
விவரிக்கவொண்ணாத செயலில் வெளிப்படும் சக்தி என்பது இரண்டு.
If the latter alone is true, energy is a result.
இரண்டாவது உண்மையானால், சக்தியே முடிவு.
It would be a phenomenon generated by action.
செயலால் வெளிப்படும் நிகழ்ச்சியாகும்.
There would be no stable base or cause.
அடிப்படையோ, காரணமோ இருக்காது.
It would be a movement.
அது சலனமாகும்.
Movement alone would be true.
சலனம் மட்டுமே உண்மை என்றாகும்.
Then, there will be no Existence.
அப்படியானால் சத் இருக்காது.
We have the Nihil of the Buddhists.
புத்தர் கூறும் சூன்யமே உண்மையாகும்.
Then existence will be an attribute of action.
சத் செயலைப் பற்றியதாய்விடும்.
Karma will be an eternal phenomenon.
செயல் நிலையானது என்று முடியும்.
Pure reason has its own answer to it.
பகுத்தறிவு இதற்குப் பதில் கூறுகிறது.
Its perceptions are unsatisfied.
தனக்கு, தன் அனுபவத்திற்கு, இது திருப்தியில்லை எனக் கூறுகிறது.
It contradicts its fundamental seeing.
அடிப்படையில் அதன் உள்ளுணர்வுக்கு இது முரணானது.
Therefore, reason says, it cannot be.
அதனால் இது சரியில்லை எனப் பகுத்தறிவு முடிக்கிறது.
It brings us to a last abruptly ceasing stair.
முடிவான கட்டத்தில் அடிப்படை இல்லை.
It leaves the whole staircase without support.
படிக்கட்டு அந்தரத்தில் தொங்குகிறது.
It is suspended in the Void.
சூன்யத்தில் சூத்திரம் நிற்கிறது.
Contd…
தொடரும்…

*******



book | by Dr. Radut