Skip to Content

சிறு குறிப்புகள்

கைக்குழந்தை

சுமார் 400 மைல் தூரத்திலிருந்து புதுவை வரும் அன்பர் குடும்பம் பெற்ற அன்னை அனுபவங்கள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன். சூட்சுமப் பார்வையுள்ள அன்பர்கள் பெற்ற அனுபவங்களிலும் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இந்தச் சட்டங்கள் அன்பர்கள் அறிந்தவையே.

  1. நாமே ஏற்றுக் கொள்ளாதவை அன்னை அருளால் ஆச்சரியமாகப் பலிக்கும்.
  2. டெலிபோனில் பேசினால் வியாதி தொத்திவிடும்.
  3. மனம் ஈடுபட்டிருப்பதால் அருள் அன்பர் வழியாக ஈடுபட்ட இடத்திற்குப் போவதுபோல மனம் ஈடுபட்டதால் அவர் பிரச்சினை நமக்கும் வரும்.
  4. எந்தச் சிறு பிரச்சினையும் முன்னெச்சரிக்கை செய்யாமல் எழுவதில்லை.
  5. செயல்கள் திரும்பத் திரும்ப வாழ்வில் ஒரே ரூபத்தில் எழும்.

திருமணமான புதிது. குழந்தை பிறந்தது. கணவன் வெளியூரில் குடியிருந்து வேலை செய்கிறான். பெரிய பட்டம் பெற்ற பெண். ராங்க் வாங்கியவள், கணவன் கடுமையானவனில்லை. ஆனால் அவளுக்குக் கணவனே சொல்லாததைத் தானே செய்யவோ, கேட்கவோ தைரியமில்லாதவள். எல்லா இடத்திலும் அன்னையை அழைக்கிறாள். அழைப்பு அன்னை காதில் விழுந்து ஒலிக்கிறது. மனைவியைக் குழந்தையுடன் தன்னூருக்கு வரச்சொல்லிக் கணவன் தேதி குறித்திருந்தான். பஸ்ஸில் கைக்குழந்தையுடன் போகவேண்டும். சம்மதித்தாள். பெண்ணின் அத்தை 5 நாள் கழித்து அதே ஊருக்குக் காரில் போகிறாள். பெண்ணைத் தன்னுடன் வரும்படிக் கேட்டாள். 

பெண்ணுக்குச் சம்மதம். கணவனைக் கேட்க அச்சம். "மதர்கிட்டே சொல்கிறேன்" என்றாள். எல்லோரும் கொல் என்று சிரித்தனர். "இந்தக் காலத்தில் இப்படி பயந்து சாகும் பெண் உண்டா?" என்றனர். மறுநாள் காலையில் கணவன் போனில் கூப்பிட்டான். பெண் அவனிடம் எதையும் கூறவில்லை. அவனே பெண்ணின் அத்தையைப் பற்றி விசாரித்தான். விபரம் கூறினாள். "ஏன் நீ அத்தையுடன் வரக்கூடாதா?" என்றார். அன்னைக்கு குரல் கேட்டுவிட்டது.

மே மாதம் வெய்யில் 1040 F. அண்ணனிடம் போனில் பேசினாள். அவன் அவள் கேட்பதை எல்லாம் விட்டுவிட்டு வெய்யில் கொளுத்துகிறது என்று மட்டும் பேசினான். "மதர்கிட்டே சொல்றேன்" என்றாள். கேலியாகச் சிரித்தான். அடுத்த 10 நாளைக்கு வெய்யிலைக் காணோம். குளிர்ந்த காற்று வீசுகிறது. இதுவே அன்னை செயல்படும்வகை. கைக்குழந்தை அழாமலிருக்காது, அன்னையிடம் சொன்னாள். மாதக்கணக்காக அழவில்லை. புதுக் குடித்தனம் வைத்தாள். துணைக்கு யாருமில்லை. குழந்தையைப் பார்க்கவே சரியாக இருக்கிறது. பேப்பர் படிக்க, போன் பேசவும் முடிவதில்லை. தூங்க முடிவதில்லை. பொறுத்துக்கொண்டாள். வீட்டுக்கு வேறு ஒரு அன்பர் வந்த சமயம் நேரமில்லை என்றாள். "குழந்தை இப்படித்தானிருக்கும் என ஏற்காமல் சமர்ப்பணம் செய்யவேண்டும்" என்றார். சமர்ப்பணம் செய்தாள். அன்றிலிருந்து எல்லா வேலையும் தடையின்றி நடக்கும்படி குழந்தையின் தூக்கமும், விளையாட்டும் மாறின.

நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது. நாள் குறிப்பிட்டனர். கணவனுடைய கார் பழைய கார். ரிப்பேராகிவிட்டது. Oil leak. அதனால் அடுத்த வாரம் போனார்கள். நண்பர் அனுபவம் வேறு. அவருக்கு U.S. Embassy இல் வரச் சொல்லியிருந்தனர். கார் ரிப்பேராகிவிட்டது போகும்வழியில். "என் கார் கடந்த 10 ஆண்டுகளாக வழியில் ரிப்பேரானதில்லை. oil leak ஆகிறது. அளவுகடந்து ஆகிறது." ஒரு டெலிபோன் பூத்திற்குப் போய் US Embassyக்கு நடந்ததைக் கூறி அடுத்த நாளைக் குறிப்பிட்டார். 

  • கார் ரிப்பேரும் ‘தொத்து வியாதி'.
  • Oil leak ஆவது எங்கிருந்து வியாதி வந்தது எனக் காட்டுகிறது.
  • கைக்குழந்தை அழாமலிருப்பதும், வேலை செய்ய அனுமதிப்பதும் நாம் அன்னையை ஏற்பதைப் பொருத்தது.
  • இதெல்லாம் அன்னையிடம் எப்படிச் சொல்வது, அன்னையால் முடியுமா என நாம் நினைப்பது சரியில்லை. எதையும் அன்னையிடம் சொல்லலாம் என்பதே நம்பிக்கை.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

தான் எதுவாகவும் ஆகலாம் என மனம் அறிந்தால், அது நம்பிக்கை ஊட்டும். அதன் அடிப்படையில் ஆர்வத்தை எழுப்பலாம். இன்று மனம் சாதித்ததை நாளை ஜீவன் சாதிக்கும்.

Comments

சிறு குறிப்புகள்para no.1,

சிறு குறிப்புகள்

para no.1, line no.4 - குறிப்பிட் டுள்ளேன் - குறிப்பிட்டுள்ளேன்

para no.2, - after line no.10 - extra space is there.

para no.3, line no.6 - அழாமருக்காது - அழாமலிருக்காது

ஸ்ரீ அரவிந்த சுடர்

 இன்று மனம் சாதித்ததை நாளை ஜீவன் சாதிக்கும். - separate line after two line spaces from the first two lines.

அஜெண்டா

இயற்கையின் சோதனையைக் கடக்கப் பயமின்மையும்,                  கலகலப்பான குணமும் தேவை.

ஆன்மீக சோதனையில் வெற்றிபெறத் தேவையானவை ஆர்வம், நம்பிக்கை, இலட்சியம், உற்சாகம், உதாரகுணம், அர்ப்பணமாகும்.

தீயசக்திகளினின்று தப்பத் தேவையானவை, உஷார், உண்மை, அடக்கம்.

எந்த முன்னேற்றத்திலும் ஒரு சோதனையுண்டு. சில   சமயங்களில் நாம் பரீட்சிக்கப்படுகிறோம், சில சமயம் நாம் பரீட்சை வைக்கிறோம்.

para no.1, line no.1- எப்படியிருக் கின்றோமோ - எப்படியிருக்கின்றோமோ

para no.1, - after line no.13 - extra space is there.

 



book | by Dr. Radut