Skip to Content

13.எலிசபெத்தும், டார்சியும்

எலிசபெத்தும், டார்சியும்

       பிரெஞ்சுப் புரட்சியில் தலைகள் உருண்ட பின், அது போன்ற புரட்சி இங்கிலாந்தில் வரக்கூடாது என குறுநில மன்னர்கள் தம் நிலையினின்று இறங்கி வந்து பல்வேறு வகைகளிலும் தாழ்ந்த மக்களுடன் உறவு கொள்ளும் காலம், கீழுள்ளவர்க்குப் பொற்காலம். அக்காலத்துக் கதை Pride and Prejudice. பெருநிலச்சுவான்தார் டார்சி சிறு நிலச் சுவான்தாரின் மகளான எலிசபெத்தை அழகற்றவள் என்பதையும் மீறி காதலிக்கிறான். இது காலம் அவளுக்குத் தந்த பெரும் பரிசு. அவள் மனம் தறுதலையான அழகனில் தன்னை இழந்து, டார்சியைக் கர்வி எனக் கூறுகிறது. டார்சி, எலிசபெத்தை நோக்கி, “தாழ்ந்தவளானாலும், என்னுள் தணியாத காதலை எழுப்பினாய்” என்றபொழுது எலிசபெத் எரிமலையாக வெடிக்கிறாள். இது உலகம் அறியும் பாதை.

- டார்சியின் விபரமான கடிதம் கண்டு, எலிசபெத், “நான் காதலிக்கவில்லை. வீண் பெருமைக்கு ஆசைப்பட்டேன். என் குடும்பம் தாழ்ந்தது. அவர்கள் செய்கைகளை நினைக்க மானம் போகிறது. நான் அறிவிலியாய் நடக்கிறேன்” என்று மனம் வெதும்பினாள்.

- எலிசபெத் டார்சியைக் கர்வி எனத் திட்டியபொழுது டார்சி வீட்டிற்கு வந்து, “நான் சுயநலமி, திமிர் பிடித்தவன். இவளே என்னைத் திட்டியிராவிட்டால் என் நிலையை எனக்கு எவரும் சொல்லப்போவதில்லை”, என்று மனம் மாறி அவளிடம் வந்து “உன்னால்தான் நான் மனிதனானேன்” என்று அவள் திட்டியதற்கு நன்றி கூறுகிறான்

        தன் குறையை அறிவது தன்னையறிவது, அதை ஏற்று மனம் மாறுவது திருவுருமாற்றம். மனத்தை நாம் முயன்று மாற்றலாம். செய்ய முன் வருபவரில்லை. மனத்தின் அடியில் உள்ள ஜீவியத்தை நாம் மாற்றமுடியாது. அழைத்தால் அன்னை மாற்றுவார். £ 50 வருமானமுள்ள எலிசபெத்தை £ 10,000 வருமானமுள்ள டார்சி மணக்கிறான். அவள் தமக்கை  £ 5000 வருமானமுள்ள பிங்லியை மணக்கவும், ஓடிப் போன தங்கை லிடியாவைக் கண்டு அவளுடன் ஓடியவனை மணக்கச் செய்யவும் டார்சி உதவுகிறான்.

தன்னையறியும் மனம் அன்னைக்குத் தகுந்த மனம்.

- தானே முன்வந்து மாறும் மனம் அன்பரின் அமுத உள்ளம்.

****



book | by Dr. Radut