Skip to Content

02.லைப் டிவைன்

 “ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்                                                                                                                                                       கர்மயோகி

X.Conscious Force – Page No.84, Para No.11

10. சித் -சக்தி

We can suppose Existence is conscious.

சத் என்பது ஜீவனுள்ளது எனலாம்.

We can think it to be a Conscious Being.

சத் என்பது ஜீவனுள்ள ஜீவன் எனலாம்.

Then the problem arises.

அப்படி எனில் பிரச்சினை எழும்.

We can suppose otherwise.

நாம் வேறு வகையாகவும் கூறலாம்.

It may be a Conscious Being.

அதை தன்னயறியும் ஜீவன் எனலாம்.

WE may say it is subject to its nature of Force.

தன் இயல்பான சக்திக்குட்பட்டது அது எனவும் கூறலாம்.

It is compelled by the Force.

அதன் சக்தியால் அது கட்டாயப்படுத்தப்படுகிறது.

The Being, we can say, has no option.

சத் புருஷனுக்கு வேறு வழியில்லை.

It has no choice to decide its course.

என்ன செய்யலாம் என்ற சுதந்திரம் அதற்கில்லை.

Its manifestation or otherwise is decided by the Force.

சிருஷ்டிப்பதா இல்லையா என சக்தி நிர்ணயிக்கும்.

Of course, the Tantrics have such a God.

இது தந்திர யோகத்தின் தெய்வம்.

The Mayavadins too do so.

மாயாவாதிகளும் அதையே செய்கிறார்கள்.

They subject the Purusha to Shakti or Maya.

புருஷனை சக்திக்கும், மாயைக்கும் உட்படுத்தினர்.

It is a Purusha involved or controlled by Maya.

மாயைக்குட்பட்ட புருஷன் அது.

Obviously such god is not supreme.

இது முழு முதற் கடவுளில்லை.

It is not the supreme infinite Existence.

உச்சகட்ட அனந்தமான சத்புருஷன் இது இல்லை.

We did start with that.

நாம் அதையே ஆரம்பமாகக் கொண்டோம்.

This only a formulation of Brahman.

இதுவும் பிரம்மத்தாலானதே.

It is the Brahman in the cosmos.

பிரபஞ்சத்தின் பிரம்மம் இது.

This is logically anterior to Shakti or Maya.

சக்திக்கும், மாயைக்கும் முன்னுள்ள பிரம்மம் இது.

This takes her back from her works.

அவளுடைய செயலைவிட்டு அகற்றுகின்றனர்.

It takes back into its transcendental being.

அகற்றியவளை, ஆத்மாவின் நிலைக்கு அழைத்துச் செல்கிறாள்.

We started with a conscious existence.

நாம் தன்னையறிந்த சத் புருஷனில் ஆரம்பித்தோம்.

It is absolute.

அது தனித் தன்மையுடையது.

It is independent of formations.

தன் ரூபங்களைக் கடந்தது அது.

It is not determined by its works.

தன் செயலால் கட்டுப்படாதது.

It has an inherent freedom to manifest or not to manifest.

சிருஷ்டிப்பதா இல்லையா என முடிவு செய்யும் சுதந்திரம் உடையது.

It manifests its potentiality of movement.

தன் (பீஜமான) வித்தான சக்தியை வெளிப்படுத்தவல்லது.

A Brahman may be compelled by Prakriti.

பிரம்மத்தை பிரகிருதி கட்டாயப்படுத்தலாம்.

In that case, it is not Brahman.

அது உண்மையானால், அது பிரம்மமில்லை.

But it is an inert Infinite.

அது ஜடமான அனந்தம்.

It has an active content in it.

தன்னுள் ஜீவனுள்ளது அந்த ஜடம்.

It is more powerful than its continent.

பாத்திரத்தை விட அது சக்தி வாய்ந்தது.

It is a conscious holder of Force.

சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது.

But his Force is his master.

ஆனால் சக்தியே பெரியது.

We may say, it is compelled by itself as Force.

பிரம்மம் அதன் சக்தியால் ஆளப்படுகிறது எனலாம்.

It is done so by its own nature.

தன் சுபாவத்தால் அப்படிச் செயல்படுகிறது.

Even then, we do not get rid of its contradictions.

அப்படியும் பிணக்குகள் அழியவில்லை.

Our first postulate is evaded thus.

நம் ஆரம்பத் தத்துவத்தை நாம் கை விடுவதாகும்.

This takes us back to an Existence.

நாம் மீண்டும் சத் புருஷனிடம் வருகிறோம்.

It is really nothing but Force,

அது சக்தியன்றி வேறன்று.

It is Force at rest.

சலனமற்ற சக்தியது.

It may be Force in movement.

சலனத்திலுள்ள சக்தியாகவுமிருக்கலாம்.

Perhaps it is absolute Force.

தூய்மையான சக்தியாக இருக்கலாம்.

But it is not absolute Being.

தூய்மையான புருஷனாக இருக்கலாம்.

Page No.84, Para No.12

Next is the relationship between Force and Consciousness

சக்திக்கும் ஜீவியத்திற்கும் என்ன தொடர்பு?

What is consciousness?

ஜீவியம் எனில் என்ன?

Mental waking consciousness is consciousness for us.

விழிப்பில் நாம் நம்மை அறிவது ஜீவியம்.

Man possesses it in his bodily existence.

உடலின் வாழ்வில் நாம் அதை அறிவோம்.

It is during the major part of his life.

நம் வாழ்வில் பெரும் பகுதி அது.

His methods of sensation are superficial.

உணர்வு பெறுவது மேலெழுந்தவாரியானது.

Sleep deprives him of this sensation.

தூக்கத்தில் உணர்விருக்காது.

It can also be deprived otherwise.

வேறு வகையாகவும் உணர்வை இழக்கலாம்.

Even when stunned, man loses it.

திகைப்பிலும் உணர்வு மாறும்.

This is a narrow sense.

இது குறுகிய பார்வை.

Thus consciousness is an exception, not the rule.

எனவே ஜீவியம் என நாம் கூறுவது விலக்கு, சட்டமில்லை.

This is the order of the material universe.

இதுவே ஜட உலகின் சட்டம்.

We do not always possess it.

எந்நேரமும் ஜீவியமிருக்காது.

This is a vulgar shallow idea.

இது மூட நம்பிக்கை.

Thus we understand the nature of consciousness.

ஜீவியத்தை இந்த விதமாக நாம் அறிகிறோம்.

This colours our thought.

நம் எண்ணம் இப்படி மாசுபடுகிறது.

Our associations are governed by it.

நம் எண்ணங்களும், உணர்வுகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

Now we think philosophically.

தத்துவத்திற்கு வருவோம்.

This vulgar idea must go away from here.

மூட நம்பிக்கை விலக வேண்டும்.

Sleeping is an unconscious state.

தூக்கம் உணர்வற்ற நிலை.

At least it is apparently so.

பார்வைக்கு அப்படித் தோன்றும்.

When drugged, we are equally so.

மருந்தால் மயக்கமுற்றாலும் அப்படியே தோன்றும்.

In a swoon, we have no consciousness.

மயக்கமடைந்தாலும் உணர்விருக்காது.

While stunned, we lose consciousness.

திகைத்தால் உணர்வு மறுத்துப் போகும்.

At all these time, there is something in us.

இந்நிலைகளிலெல்லாம் நாமிருக்கிறோம்.

It is conscious when we are 'unconscious'.

நாம் உணர்வற்ற நிலையிலும் உயிரோடிக்கிறோம்.

These are the unconsciuous states of our being.

நாம் உணர்வை இழந்த நிலைகள் இவை.

It is the physical being.

அது உடல்.

We call our waking stare conscious.

நாம் விழிப்பாக உள்ளபொழுது உணர்வோடிருப்பதாக நினைக்கிறோம்.

It is only a small selection from the whole.

பெரிய முழுமையிலிருந்து எடுத்த சிறு பகுதி இது.

The whole is the entire conscious being.

முழுமை என்பது ஜீவனுள்ள முழு ஜீவன்.

That is what the old thinkers said.

அதையே தத்துவ ஞானிகள் கூறினர்.

We are now sure of it.

இன்று அது உண்மை எனத் தெரிகிறது.

This is not even our whole mentality.

இது நம் முழு மனமில்லை.

It is only the surface.

இது மேல் மனம்.

There is the subliminal.

அடி மனம் உண்டு.

It is behind it.

அது பின்னாலுள்ளது.

It is much vaster.

அது பரந்தது.

It is also subsconscient.

அது ஆழ்மனம்.

Both are the greater parts of ourselves.

இரண்டும் நம் பெரும் பகுதிகள்.

They contain height.

நம் உயர்வுள்ள இடங்கள் அவை.

Profundities too are in it.

நம் பெருமைகள் உள்ளதும் இங்கேதான்.

No man has yet fathomed it or measured it.

எவரும் இதைக் கண்டதில்லை, அளந்ததில்லை.

                                                                                ...contd

...தொடரும்

****

****

 



book | by Dr. Radut