Skip to Content

04.சாவித்ரி

 “சாவித்ரி”

P. 21. And burst the bounds of consciousness and Time

         ஜீவியத்தின் எல்லையை உடைத்தெறிந்தது; காலத்தைக் கடந்தது

       மரணம் வாழ்வின் உரிமை. மரணத்தால் வாழும் வாழ்வை சுற்றியுள்ள கதவுகளை ஆட்சி செய்வது விதி. அக்கதவைத் திறக்கும் உரிமையை இழந்தவன் மனிதன். அதை ஒருவன் செய்ய வேண்டுமெனில் அவன் வீரன். அவன் காலத்திற்குட்பட்டவனாக இருந்தால் அவன் வீரம் பலன் தாராது.

வீரம் உயர்ந்து காலத்தைக் கடந்த சிகரத்தினின்று எழும்பும் வீரன் அக்கதவை எட்டலாம், தட்டலாம், திறக்கலாம், உடைக்கலாம்.

வீரம் காலத்தைத் தடுத்து நிறுத்தும்.

சிருஷ்டியே அறியா வண்ணம் காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழலச் செய்யும்.

ஜீவன் நடந்து வந்தால், சந்தர்ப்பம் என்ற உலகில் தன்னைக் காண்கிறது.

அவனுள் உள்ள லோகமாதா - சாவித்ரி - எழுவதால், காலமும், மரணமும் அவனுக்குக் கட்டுப்படுகின்றன.

காலத்தைக் கடந்து மட்டுமன்று,

காலத்தை உற்பத்தி செய்த ஜீவியத்தையும் கடக்கின்றது.

மரணத்திற்கு மரண அடி.

மூடிய கதவைத் திறக்கும் உரிமை.

காலத்தைக் கடந்த சிகரத்தின் கனவெனும் வீரன்.

விதியின் கதியைக் கூவி நிறுத்தியது.

காலச் சக்கரம் கருத்தின்றி சுழல்வதைத் தடுத்து நிறுத்திப் பின்நோக்கச் செய்தது.

ஜீவனின் சுவடு சந்தர்ப்பத்தைச் சந்தித்தது.

விதியின் இரும்புப் பிடியிலிருந்து ஜீவன் எழுந்து தன்னை அறிவித்தது.

லோகமாதா அவனுள்ளிருந்து எழுந்தாள்.

தெய்வத்தின் திருமுகம் மறைவினின்று வெளிவந்தது.

இறைவன் மனிதனில் மேலும் ஓர் வெற்றியைப் பெற்றான்.

சத்தியம் வீறுகொண்டு தழலென எழுந்தது.

மிருகமான யந்திரத்தின் பின் உள்ள பிரம்மமான இறைவன்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அநேகமாக, பிரார்த்தனை என்பது இறைவனை அவனுடைய கடமையிலிருந்து திருப்பும் முயற்சியாக இருப்பதுண்டு. இறைவனின் செயலிலிருந்து மனிதன் மாறுபட்ட விருப்பத்தை நாடுவதாலும், அந்த விருப்பம் பூர்த்தியாகாதபோது, இறைவனைப் பூர்த்தி செய்யும்படி கேட்பதாலும், பிரார்த்தனைக்கு இக்குணம் ஏற்படுகிறது.

இறைவன் என் சேவகன் என்பது பிரார்த்தனையின் கொள்கை.

 

 



book | by Dr. Radut