Skip to Content

08.Agenda

 Agenda

தீமையைக் குணப்படுத்துவது

 

தீமையால் பாதிக்கப்படாதபடி நகர்ந்து உயர எட்டி நிற்பது முதற் கட்டம்.

இறைவனின் நன்மை இத்தீமையால் திரையாக மறைக்கப்படுவதைக் காண்பது அடுத்தது.

தீமை உன்னைத் தொடாது. அது உன்னிடம் இல்லை என்பதால் தொட முடியாது. அதைப் பற்றிப் பேசினால் தீமை வளரும்.

       இவை போன்ற கருத்துகளை நாம் சரித்திர நிகழ்ச்சிகள் மூலமாக, தத்துவார்த்தமாக அறியலாம். அருகிலுள்ள நிகழ்ச்சிகளை இப்படி ஏற்க மனம் ஒத்துக் கொள்ளாது. சொந்த வாழ்வை இக்கருத்து தொடவும் மனம் சம்மதிக்காது.

எந்த அளவில் மனம் இடம் தருமோ அந்த அளவில் இக்கருத்தை மனத்தாலும், உணர்வாலும் ஏற்பது அன்னையை ஏற்பதாகும்.

நாணயமான மனிதனை ஒருவன் திருடன், ஊழல் எனப் பலரிடமும் பேசுவது நாணயஸ்தன் காதிற்கு வந்தவுடன் மனம் கொந்தளிக்கும், அப்படிப் பேசியவனிடம் நேரில் போய் சண்டை போடத் தோன்றும், எதிரிலுள்ளவரிடம் அவனைத் திட்டித் தீர்த்துவிடுவார். அவற்றையெல்லாம் செய்யாமலிருக்க வேண்டும் என்று தோன்றாது. யாராவது சொன்னால் கோபம் அதிகமாக வரும்.

அதற்கு மாறாக, நாணயஸ்தன் இது தீமை, இதனிடம் நான் மாட்டிக் கொள்ளக் கூடாது, நகர்ந்து போக வேண்டும், உயர்ந்து நிற்க வேண்டும் என்று நினைக்க முடிவது சிரமம். அதை அவர் செய்தால் கடல்போன்ற அமைதி நெஞ்சில் கனப்பது தெரியும். அது இறைவனின் ஸ்பர்சம். நமக்கு இறைவனின் ஸ்பர்சம் இதமாக இருந்தாலும் அது கண்ணில் படாது, கருத்தையும் தொடாது. வாழ்க்கை நிகழ்ச்சிகள் புரியும்.

அமைதியான மனத்துடன் வீட்டிற்குப் போனால் “நீங்கள் இத்தொகுதிக்கு M.Pயாக நிற்க வேண்டும்” எனப் பலர் வந்து காத்திருப்பார்கள்.

இந்த நல்ல செய்தி இறைவனின் ஸ்பர்சத்தின் ஒரு துளி என்பதும், ஸ்பர்சத்தை நாம் கவனிக்கவில்லை என்பதும், இதைத்தான் அவதூறு திரையாக மறைத்தது என்பதும் நாமறியாதவை.

வாழ்க்கைப் பரிசை ஏற்பதும், அது ஸ்பர்சத்தின் பகுதி என்பதும், அவதூறு பரிசின் “பவித்திரமான” பார்வை என்பதையும் காண்பது அன்னையை நெருங்கும் ஞானம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உன்னுடைய சந்தோஷம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உரியவர்களே உன் உலகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சொல்லப் போனால், இது போன்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒருவரே முக்கியமாக இருப்பார்கள். அந்த நான்கு, ஐந்து பேரே “என் உலகம்” என நீ பேசுவதாகும்.

உலகம் சுருங்கி ஒருவராவதும் உண்டு.

 



book | by Dr. Radut