Skip to Content

02.சாவித்ரி

"சாவித்ரி"

P.51 And conscious of the high things not yet won.

எதிர்கால வெற்றியை அறிந்த மனம்.

. நித்திரையை நிரந்தரமாக இழந்த நெஞ்சின் அரவணைப்பு.

. நிம்மதியையும் அமைதியையும் பறித்துப்போன அகவுணர்வு.

. வெல்லமுடியாத அறியாமையின் விரக்தி.

. ஆத்மாவின் போர்மூலம் அவள் நாடும் வேதனை.

. சிதைந்த சுபாவத்தின் தூய்மையான சிறப்பு.

. கல்லிலும், சகதியிலும் தவழும் கடவுளின் மூச்சு.

. தோல்வியை அறியாத நம்பிக்கை.

. அழிவில்லாத அன்பின் அசைக்க முடியாத நம்பிக்கை.

. நிலையான சத்தியத்தின் ஜோதி.

. உள்ளொளி பெருகி எழும் குரல்.

. தன்னையும், தம் செயலையும் அவள் அறிவாள்.

. தேடிப்போகும் சத்தியம் ஓடி ஒளிகிறது.

. தானே சின்னமான தகுதியும் நிலையும்.

. ஒலிக்காத குரல் ஓட்டுவிக்கும் நடை.

. வேகத்தை அறிந்தவள் விஷயத்தை உணரவில்லை.

. அரிதான அறிகுறிகள் வந்து காட்டும் வழி.

. அகண்ட ஜோதி அறிவைப் பிளக்கிறது.

. கனவிலும், கற்பனையிலும் எழும் அலையோசை.

. தவறிய சத்தியம் எட்டிப்பார்க்கிறது.

. தொலைதூரக் காட்சி தோன்றும் ஆத்மா.

. எட்டப்போகும் கிட்டவரும் குரல்.

. மனித நம்பிக்கைக்கு மலைப்பான குறிக்கோள்.

. சொர்க்கத்தின் சக்திகள் காட்சியாய் எழுந்தன.

. இழந்த உறவின் இதயமென ஈர்க்கும்.

. விலகிய ஜோதி விரைந்து வருவதுபோல்,

. இல்லாத அத்தனையும் ஈர்க்கும் பாங்கு.

. உரிமையற்றதைக் கை நீட்டிப் பறிக்க முயலுதல்.

. குருட்டு சூன்யத்தை எட்டித் தொடுகிறாள்.

. அரூபமான கடவுள்களை ஆர்வமாக அழைக்கிறாள்.

. ஊமை விதியும் உழலும் காலமும்.

. அதிகமாகத் தேவைப்படுவது ஆர்வமாக விலகுகின்றது.

. மாயையற்ற மனம்.

. ஆத்ம தேவதையின் ஆர்வமான உறுதி.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் அழிந்துவிட்டது. பழைய பழக்கம் வந்தால் மனம் மீண்டும் வருகிறது என்கிறார் அன்னை. நாம் செய்வது நாமுள்ள நிலையை நிர்ணயிக்கும். சிந்தித்தால் மனத்தால் செயல்படுகிறோம். உணர்ந்தால் பிராணன் நமது மையம். சிந்தனை நின்றால் நாம் மனத்தைத் தாண்டுகிறோம். எல்லா வகையான எண்ணங்களும் அழியவேண்டும். திருஷ்டி உள்பட அழிதல் அவசியம்.

திருஷ்டி உள்பட எல்லா எண்ணங்களும் அழியவேண்டும்.


 


 



book | by Dr. Radut