Skip to Content

05.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....)                      கர்மயோகி


 

XIII. The Divine Maya

Page No.114, Para No.6

13. தெய்வீக மாயை

We have found that all is Sachchidananda.

உலகம் சச்சிதானந்தம் எனக் கண்டோம்.

That does not explain all.

அதனால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.

We know the Reality of the world.

உலகச் சத்தியத்தை நாமறிவோம்.

That Reality has turned into this phenomenon.

சத்தியம் தோற்றமான உலகமாயிற்று.

We do not know that process

எப்படிஎன நாமறியோம்.

We have the key of the riddle.

புதிருக்கு விடையை நாமறிவோம்.

This key must turn in its lock.

சாவிக்குரிய பூட்டு தேவை.

We are still to find that lock.

பூட்டை நாம் இன்னும் காணவில்லை.

Sachchidananda is Existence -

Consciousness - Delight.

சத், சித், ஆனந்தம் என்பது சச்சிதானந்தம்.

It does not work directly.

அது நேரடியாகச் செயல்படுவதில்லை.

A magician appears almost irresponsible.

மந்திரவாதி செய்வது நமக்கு விளங்காது.

He is sovereignly irresponsible.

ஏதோ செய்வதுபோல் தோன்றும்.

Sachchidananda builds up the worlds.

சச்சிதானந்தம் உலகை சிருஷ்டிக்கிறது.

It builds up the universe.

அது பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.

It does not act like a magician.

அது மந்திரவாதியன்று.

It follows a process.

அதற்கு ஒரு முறையுண்டு.

It is a Law.

அது ஒரு சட்டம்.

Page No.114, Para No.7


 

We can analyse the Law.

நாம் சட்டத்தை ஆராயலாம்.

The Law is an equilibrium.

சட்டம் என்பது அமைதியான நிலை.

It is a play of forces.

அது லீலை.

It determines the play into fixed lines.

சட்டம் லீலையை ஒரு வழியில் செலுத்தும்.

It occurs by development.

அது அபிவிருத்தி.

It appears as an accident.

அது தானே நடப்பதாகத் தோன்றுகிறது.

In the past energy is released.

கடந்த செயல் சக்திவாய்ந்தது.

It forms into a habit.

அது பழக்கமாகும்.

The energy released realises itself.

வெளிப்பட்ட சக்தி செயல்படும்.

This is apparent.

அது தெளிவு.

It is a secondary truth.

இது இரண்டாம்பட்சம்.

To us it is final.

அதுவே நமக்கு முடிவு.

It is final for the Force.

அது சக்திக்கும் முடிவு.

Force itself is not final.

சக்தி முடிவானதில்லை.

Force is an expression of Self-Existence.

சக்தி என்பது சத் வெளிப்படுவது.

The Force has taken this line.

சக்தி இவ்வழிச் செல்கிறது.

That line corresponds to some self-truth.

இவ்வழி சத்துடைய சத்தியத்திற்குரியது.

It is the self-truth of that Existence.

இந்த சத்தியம் சத்துடையது.

The Existence governs the Force.

சத் சக்தியை ஆளும்.

It determines its destination and curve.

சத் சக்தியின் போக்கையும் முடிவையும் நிர்ணயிக்கிறது.

Consciousness is the nature of the original Existence.

ஜீவியம் சத்தின் வெளிப்பாடு.

Consciousness is the essence of its Force.

ஜீவியம் சக்தியின் சாரம்.

This truth must be a self-perception in Conscious Being.

இந்த சத்தியம் சத்புருஷனுடைய சுயநினைவு.

The Force has taken the line of this determination.

சக்தி இப்போக்கை ஏற்றுள்ளது.

That knowledge is inherent in the Being.

அது ஞானத்தின் வழிப்படிச் செயல்படுகிறது.

That knowledge is inherent in the Being.

ஞானம் சத்தில் உள்ளது.

It guides its own Force.

அது தன் சக்தியை வழிநடத்துகிறது.

It is the logical inevitability.

இது தவிர்க்க முடியாதது.

It is the original self-perception.

இதுவே ஆதியின் அர்த்தம்.

Here lies the truth of cosmic manifestation.

இது பிரபஞ்ச சிருஷ்டியின் சத்தியம்.

A force of creation presides over that manifestation.

சிருஷ்டியை நடத்துவது ஒரு சக்தி.

That is force of a Truth perceived by the existence.

சத் சத்தியத்தின் சக்தியைக் காண்கிறது.

It is an infinite existence.

அது அனந்தமான சத்தியம்.

It is a self-aware existence.

அது தன்னையறியும்.

It lies in the uiversal consciousness.

அது பிரபஞ்ச ஜீவியத்திலுள்ளது.

It is a self-determing power.

அது தன்னைத் தானே நிர்ணயிக்கவல்லது.

Contd.....

தொடரும்.....

******

******
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மா தன்னை உணர்ந்து பரமாத்மாவை நோக்கிச் செல்லும் பாதைக்கு 'யோகம்' எனப் பெயர். அன்னை மீதுள்ள நம்பிக்கையை, நாம் கண்மூடித்தனமாகவும் வைக்கலாம். கண்மூடித்தனமான நம்பிக்கையை, தன்னையறிந்த நம்பிக்கையாக மாற்றுவது நல்லது.

தெளிவற்ற நம்பிக்கையை தெளிவுள்ளதாக மாற்றவேண்டும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பகவானுடைய யுகத்திற்குரிய சின்னங்கள் சைத்தியம், அகந்தையழிதல், ரஸா, அன்பு, மௌனத்தின் சக்தி, உரிமையில்லாதது, கடமையில்லாதது, சட்டமில்லாதது, அந்தஸ்தில்லாததாகும்.

அடக்கம் ஸ்ரீ அரவிந்த சின்னம்.


ஸ்ரீ அரவிந்த சுடர்

சாதனைக்குரியவை முறையாக (1) வலிமை

(2) அமைப்பான முறை (3) செயல்திறன் (skills).

வலிமையும் திறமையும் சாதிக்கும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரம்பொருளும், ஜடமும் முழுமையுடையவை. தங்கள் சக்திகளைத் திரும்பிப் பெற விழிப்பான நேரத்திலேயே அவற்றால் முடியும் (திரும்பப் பெறும் அவசியமும் அவற்றிற்கு இல்லை). மனமுடைய மனிதன் செலவழிந்த சக்தியைப் பெற தூங்கவேண்டியது அவசியம். முழுமையில்லாத காரணத்தால் மனிதனுக்குத் தூக்கம் தேவை.

                            மனத்திற்கு ஏற்றம் இறக்கமுண்டு.

பரம்பொருளுக்கும் ஜடத்திற்கும் அவையில்லை.


 


 


 



book | by Dr. Radut