Skip to Content

06..அஜெண்டா

"Agenda"

It is a moral weakness not to eat well.

போதுமான அளவுக்குச் சாப்பிடாதது ஒரு குறை.

. குழந்தைகளுக்குக் கோபம் வந்தால் சாப்பிட மறுக்கும்.

. கோபம் என்ற உணர்வு, சாப்பிடும் உணர்வுக்கு எதிரானது. கோபமாக இருக்கும்பொழுது சாப்பாடு செல்லாது. இது குழந்தைக்கு அதிகம்; அதனால் குழந்தைக்கு அதிகமாக உரியது.

. பெரிய துக்கமானாலும் சாப்பாடு செல்லாது.

. கோபமானாலும், வருத்தமானாலும் சாப்பிடவோ, சரளமாக மற்ற காரியங்களைச் செய்யவோ முடியாது என்பது vital weakness உணர்வுக்குள்ள குறை.

. விரதம் என்பதே மனவளர்ச்சியில்லாத ஆன்மாவுக்குரியது என அன்னை கூறுகிறார்.

. நமது பரம்பரையில் வசதியைக் குறைப்பது உயர்வு, ஆன்மீகம் என்ற கருத்துண்டு.

. சாப்பாடு அதிகமானால் உடல் மந்தமாகவும், குறைந்தால் உணர்வு லேசாகவுமிருப்பதை உண்ணாவிரதமிருந்தவர் அறிவர். அது இசை தரும் இன்பம் போன்றது. ஆன்மீகத்துடன் தொடர்பில்லாதது.

. கல்லூரி மாணவன் பேச்சுப் போட்டியில் பரிசு பெறுவது விரும்பத்தக்கது என்றாலும், அது பரீட்சையுடன் சம்பந்தப்படாதது.

. நல்ல டிரஸ் நல்லது. அதற்கும் அறிவுக்கும், குணத்திற்கும் சம்பந்தமில்லை. அதுபோல் விரதம் ஆன்மீகத்துடன் சம்பந்தப்படாதது.

. புது டிரஸ் போட்டால், பரீட்சை நன்றாக எழுதலாம்என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை.

. மரபில் உடலைக் கவனிக்கக்கூடாது, புறக்கணிக்கவேண்டும் என்பது மக்களிடையே சாப்பிடாமலிருப்பது, குறைவாகச் சாப்பிடுவது உயர்வு என்ற எண்ணமுண்டு.

. சமையல் செய்பவர், 20, 30 பேருக்குச் சமையல் செய்பவர் வேலைக்குமுன் சாப்பிடமாட்டார். சாப்பாடு அப்புறம், வேலை முதலில்; வேலையை முடித்து, குளித்துச் சாப்பிடுவது நம் பழக்கம். இது தவறன்று. ஆனால் ஆன்மீகத்துடன் சேராதது. இதனுடைய ஆரம்பம் நமக்குச் சாப்பாடு போதுமான அளவில் கிடைக்காதது. அதுபோன்ற சமயம் வேலைக்குமுன் சாப்பிடுவது தவறு. வசதியான நாடுகளில் இந்த எண்ணமோ, பழக்கமோ குறைவு.

. சாப்பாடு உணர்வுக்குரியது; அறிவு மனத்திற்குரியது. அறிவுக்கு உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது. ஆன்மாவைக் கட்டுப்படுத்தக் கூடாது. அது சிறுபிள்ளைத்தனம். Moral weakness..

 

******
 

எங்கள் குடும்பம்


 

(பாகம் I)


 

by


 

கர்மயோகி


 

விலை : ரூ.200/- தபால் செலவு : ரூ.20/-


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut