Skip to Content

08.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Complete emergence of the soul means direct contact on the surface with the Spiritual Reality

ஆத்மா வெளிப்படுகிறது என்றால் நம்முள் உள்ள ஆத்மாவின் உண்மை மேல்மனத்தில் வந்து செயல்படவேண்டும்.

. மேல்மனம் என்பது மனிதன். ஆத்மா என்பது உள்மனம், அடிமனத்துள் உள்ளது.

. உள்மனத்திலுள்ளது சாட்சிப்புருஷன்.

. அடிமனத்திலுள்ளது சைத்தியப்புருஷன்.

. மேல்மனத்திலுள்ள அகந்தை, அகங்காரம் என்பதை நாம் ஆத்மா எனக் கருதுகிறோம்.

. ஆத்ம வெளிப்பாடு என்றால் என்ன?

. ஒரு மகான் பெயரில் நடக்கும் பள்ளிக்கு நாம் போனால் அங்கு பிரின்சிபால் சிகரெட் பிடித்துக்கொண்டு ஆபீசிலிருந்தால், "இதுவா அம்மகான் கூறியது?" என நினைக்கிறோம்.

. அப்பள்ளி மாணவன் ரோட்டில் போகும்பொழுது நாம் இடறிவிழுவதைக் கண்டு ஓடிவந்து உதவிசெய்து, தன் பையிலிருந்து பிளாஸ்திரியை எடுத்து, நம் காயத்தில் போட்டு, வீடுவரை வந்து விட்டுவிட்டுப் போனால், "மகான் பெயரில் நடக்கும் பள்ளி என்பதால் பையன் மகான் இலட்சியத்தை வெளிப்படுத்துகிறானே" என ஆச்சரியப்படுகிறோம்.

. ஒரு ஸ்தாபனத்தின் ஆதி இலட்சியம் அதன் உறுப்பினர்கள் செயலில் வெளிப்படுவது, அந்த ஸ்தாபனத்தின் ஆத்மா வெளிப்படுவதற்கொப்பாகும்.

.நமக்கு நண்பர்கள், உறவினர்கள் உண்டு. அவர்கள் நம் வீட்டிற்கு வரும்பொழுது கவனிக்காவிட்டால், மீண்டும் வரமாட்டார்கள். அவர்கள் குழந்தைகளை நாம் கவனிப்பது அவர்கட்குத் திருப்தி தரும். அவர்கள் வீட்டு வேலைக்காரர்கட்கு நாம் செலுத்தும் கவனம் அவர்கட்கு மேலும் திருப்தி தரும். இதை அந்தஸ்திற்காக அனைவரும் செய்கிறார்கள்.

அந்தஸ்திற்காகச் செய்வதை ஆத்மாவுக்காகச் செய்வது ஆத்மா வெளிப்படுவதாகும்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உயர்வு, தாழ்வு இல்லை. வைஷ்ணவன் என்றால் அவன் உயர்ந்தவன். அவர்கள் நடக்க துண்டை எடுத்துப் போடுவார்கள். வைஷ்ணவன் எவனாயிருந்தாலும் ஆலிங்கனம் செய்துகொள்வார்கள். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார்கள். அது சமூக அந்தஸ்தைக் கருதாமல், வைஷ்ணவ மதத்தைக் கருதுவதாகும்.

.வாடிக்கைக்காரர்களைக் கம்பெனி உயர்ந்தவர்களாக இன்று நடத்துகிறது. வாடிக்கைக்காரரில் கம்பெனி காண்பது "பிரம்மமாகும்".

. இந்த நோக்கில் எதிரி நண்பன்.

.விரயம் செய்பவன் அஸ்திவாரத்தில் சேவை செய்பவன்.

. சம்பாதிக்காதவன், நாட்டில் சம்பாதிக்க முடியாதவர்களின் பிரதிநிதி. அவன் சம்பாதிக்காமலிருப்பது, சம்பாதிப்பவன் செய்யும் சேவையைவிடப் பெரிய சேவை.

. அழிப்பவன் அவனைவிட உயர்ந்த சேவை செய்கிறான்.

விரயம், அழிவு, சோம்பேறித்தனம் ஆகியவையும் வாழ்வு. அந்த நிலையில் அன்னைக்குச் சேவை செய்வதாக இவர்களைக் கருதுவது வாழ்வில் யோகத்தை ஏற்பதாகும்.

*******


 



book | by Dr. Radut