Skip to Content

12.குறை என்பது தடையில்லை

குறை என்பது தடையில்லை

குறை என இருந்தால், அது எப்படியும் ஏதாவது ஓர் அளவில் பாதிக்கும்.

குறை குறைதானே.

٭அன்னையை நாம் சரிவரப் புரிந்து கொள்வதில்லை என்றால் என்ன எனப் புரியவில்லை.

*குறை என்பதில் அன்னை எப்படிச் செயல்படுவார்? நாம் அவரை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?

٭நம் குறை அன்னைக்குத் தடையில்லை. அதைமீறி அன்னை செயல்படுவார் என நாம் அறியவேண்டும்.

٭தாழ்ந்து பிறந்தவனுக்குப் பிறப்புத் தடை. அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனால், சர்க்கார் அதிகாரம் அவன் குறையை மீறிச் செயல்படும். அன்னை அதுபோல் செயல்படுவார்.

٭ஊனமுற்றது குறை, மார்க் குறைவு குறை, தாழ்ந்த சாதி குறை, ஏழ்மை குறை, இல்லை என்பது குறை. இன்று நிலைமை மாறிய நேரம். நேரம் இக்குறைகளை மீறி ஊனமுற்றவனுக்கு வேலை தருகிறது. குறைந்த மார்க்குக்கு quota உண்டு, தாழ்ந்த ஜாதியை, ஏழ்மையைமீறி வேலை, படிப்பு, கடன் வசதி வருகிறது. அது காலம் மாறியதால் ஏற்படுவது.

அன்னையை ஏற்றால் அனைத்தும் மாறும் எனப் புரியவேண்டும்.

மாறிய காலம் செய்வதை அன்னை செய்வார்.

குறை தடையில்லை. ஆனால், குறையை வலியுறுத்தக்கூடாது.

காலம் மாறும், சட்டம் மாறும், ஆட்சி மாறும், பருவம் மாறும், மனநிலை மாறும் என மாறுபவை பல. அன்னையை ஏற்றால் அனைத்தும் மாறும் என அறிவது அவரைப் புரிந்துகொள்வது.

****


 



book | by Dr. Radut