Skip to Content

03.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

The ideal of the infinite Soul and a perfect oneness is unattainable.

அனந்த குணம் உடைய ஆத்மா வாழ்வுடன் ஒன்றி இணைவது நடைபெறாது.

. அஞ்ஞானம் ஏழுவகைப்பட்டது.

. இதுவரை The Life Divine ஜடமும், ஆத்மாவும் ஒன்று எனக் கூறியது.

. உலகம் அஞ்ஞானஇருளில் சிருஷ்டிக்கப்பட்டது.

. The Life Divine ஏழுவகை அஞ்ஞானத்தை விளக்கும்பொழுது, சிருஷ்டியின் ஏழு தத்துவங்களைக் கூறுகிறது.

. இருளில்லாத உலகம் சாத்தியமா, அஞ்ஞானமற்ற வாழ்வு நடக்குமா என்பது கேள்வி.

. வேதம் அது முடியும் எனக் கருதியது.

. தன்னையறியும் ஆத்மா, தன்னுடன் ஒன்றிய உலகத்தை சிருஷ்டிப்பதே இலட்சியம்.

. ஆனால் சிருஷ்டி அஞ்ஞானத்தால் ஏற்பட்டது.

. நம் பார்வைக்கு இருள் ஆரம்பம், இருளே முடிவு.

. வாழ்வின் இருண்ட பார்வைக்கு ஆத்மா அன்னியமாகத் தோன்றுகிறது.

. அதனால் ஆன்மீகவாழ்வு - இருளற்ற ஒளிமயமான வாழ்வு - முடியாது என முன்னோர்கள் கருதினர்.

. நமக்கு வாழ்வு நடைமுறை. யதார்த்தம் என நாம் அதைக் கூறுகிறோம்.

. நடைமுறைக்கு இலட்சியம் பயன்படாது என நாம் நெடுநாளாக அறிவோம்.

. அரிச்சந்திரன் கதை பொய் சொல்லாதவன் பட்ட பாட்டைக் கூறுகிறது.

. கர்மத்திலிருந்து எவரும் தப்பமுடியாது என நளமகாராஜன் கதை விளக்குகிறது.

. வெளியில் போய், உள்ளே வந்து கால்களை அலம்பும் பொழுது நீர் படாத இடமிருந்தால், அதன் வழி சனியன் உள்ளே வருவான் என நாம் வாழ்வை நடத்துகிறோம்.

. கீதை பெரிய தத்துவம்.

. பாரதம் கீதையின் விளக்கம். அது நடைமுறை.

. தர்மம் நியாயமாக ஜெயிக்கவில்லை. போரிட்டுப் பெறவேண்டியது ஆயிற்று.

. பாரதப் பிரசங்கத்திற்கு ஊரே திரண்டுவருகிறது. கீதைப் பிரசங்கத்திற்கு ஒருவர் வந்தார்.

. இலட்சியம் நடைமுறைக்கு உதவாது என்பது உலக அனுபவம்.

. இந்த யதார்த்தமான உலகில் வேதமும் முடியாது எனக் கைவிட்ட இலட்சியத்தை - நியாயமான பூலோக சுவர்க்கத்தை - ஸ்ரீ அரவிந்தம் முடியும் எனக் கூறி நடத்திக்கொண்டிருக்கிறது. மனிதன் காதில் அக்குரல் விழவில்லை. எங்கெல்லாம் மனிதன் குறுக்கிடமுடியாதோ, அங்கெல்லாம் இந்த Force அவனுக்கு வர இருக்கும் ஆபத்துகளை - சீனப் படையெடுப்பு போன்றவற்றை - அவனை அறியாமல் விலக்குகிறது.

. நாம் பிரார்த்தனையால் இந்த Forceஐ அழைத்தால், அழைத்த காரியத்தைச் செய்து கொடுக்கிறது.

. உலகம் ஏற்பட்ட இருண்ட அமைப்பில், எந்த இலட்சியவாதியும் வெல்லமுடியாது.

. ஸ்ரீ அரவிந்தம் அவ்விருளை மீறி, விலக்கி, நாம் நாடும் காரியத்தை முடிக்கிறது.

. நாம் அனுதினமும் பார்க்கிறோம். ஆனால், திரையே நிதர்சனமாக இருக்கிறது. திரையின் பின்னணியில் செயல்படும் Force நம் மனத்தைத் தொடுவதில்லை.

. தொடும்வரை Force பொறுமையாகக் காத்திருக்கிறது.

. "ஞானமும், அஞ்ஞானமும்"என்ற Life Divine அத்தியாயத்தில் பகவான், "ஏன் இது இதுவரை முடியவில்லை, இனி எப்படி முடியும்"என விளக்குகிறார்.

***
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஓர் இலட்சியத்தைப் புரிந்துகொள்ளுதல், அதன் சிறப்பை உணர்தல், அதன்மீது ஆசைப்படுதல், அதற்கென ஆர்வம் கொள்ளுதல், ஆகியவை நாம் உள்ள நிலையில்தான் (plane) முடியும். நமக்கு மேற்பட்ட அல்லது கீழ்ப்பட்ட நிலையில் உள்ளவற்றின் மீது அதுபோன்ற ஆர்வம் ஏற்படாது. உணர்ச்சி வசப்பட்ட காரியங்களை மனம் நம்புவதில்லை. அவற்றை அர்த்தமற்றதாக அறிவு கருதும். பகவான் சொல்லும் யோக முயற்சி, வளரும் ஆன்மாவுக்குரியது. நாம் மனத்திலிருந்து செயல்படுகிறோம். இடையில் 9 அல்லது 10 நிலைகள் இருப்பதால் யோகத்தை மனம் முழுஆர்வத்துடன் புரிந்துகொள்ள முடிவதில்லை.

இலட்சியச் சிறப்பை ஆர்வமாகப் பூர்த்திசெய்ய

நம்மளவில்தான் முடியும்.


 


 


 



book | by Dr. Radut