Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.59 Abandoned to a task beyond your force.

சக்திக்குமீறிய கடமையை ஏற்றவர் நிலை.

. விதி எனும் சிக்கல் ஊடே செல்லுதல்வேண்டும்.

. மரணத்தின் மூலமும், தோல்வியின் மூலமும் கசந்த பயணம்.

. நம் வாழ்வை அரவணைக்கும் ஆதரவு.

. எண்ணிலடங்கா உடல்களும், பிறப்புகளும் அருகிலிருந்து தரும் ஆதரவு.

. உடும்புப்பிடியாக உதவும் உருவம்.

. தவிர்க்கமுடியாத சிகரமான பலன்.

. எந்த விதியும் மாற்றமுடியாத, எந்தக் கையும் அகற்றமுடியாத அன்பு.

. அமரத்துவம் எனும் தன்னையறியும் மகுடம்.

. உழலும் உயிர்கட்கு உறுதியளிக்கப்பட்ட தெய்வம்.

. மனிதன் மரணத்தை ஏற்று வாழ்வை நாடிய ஆரம்பம்.

. உலகைப் படைத்து ஆளும் ஆண்டவன்.

. நம் குறைகள் அவன் யாத்திரையின் அடிச்சுவடுகள்.

. நம் வாழ்வின் ஏற்றத்தாழ்வின் கடுமை அவன் செயல்படும் அரங்கம்.

. நம் வேதனையும் கண்ணீரும் பாவமும் அவன் வகுத்த பாதை.

. நம் இருளைக்கடக்கும் அவன் ஞானம்.

. நம் தோற்றம் எதுவானாலும், நம் தலைவிதியின் கடினநோய் கடிந்தாலும், நம்மைக் காணாமல் கரைபுரளும் கலக்கமானாலும், மகத்தான ஒளி நம்மை வழிநடத்திச் செல்கிறது.

. பரந்த நம் உலகம் நம் சேவையை ஏற்றபின், இறைவனின் ஆனந்தமும் ஒருமையும் நம் பிறப்புரிமை.

. அறிவுக்கெட்டாதவனின் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நாள்.

. பவித்திரம் பிறந்த ஆண்டு நிறைவு.

. கடுநடையின் காரணம் கர்த்தா அறிவான்.

. இல்லை என்பதும், எட்ட இருப்பதும் அருகே வரும்.

. சாந்தமான பெருவலிமை முடிவாகச் செயல்படும்.

. விதிக்கப்பட்ட பாதையை விருப்பமாக ஏற்பார்.

. ஞானப்பெட்டகமான கருணை ஜோதி.

. ஜனிக்கும் குரலுக்காக காத்திருக்கும் ஆத்மா.

. அறியாமையின் பாதாளத்தை இணைக்கும் பாலம்.

. வாழ்வின் பிளவுகள் பிணைக்கப்படவேண்டும்.

. பிரபஞ்சம்என்ற மடுவை நிரப்பவேண்டும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மா செயல்பட மனம் மௌனமாக இருக்கவேண்டும்என்பது தெளிவு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நல்லது, கெட்டதைத் தாண்டிவந்தால் சைத்திய உலகை அடைகிறான். இது மனிதனுக்குச் சிரமமான காரியம். சமூகத்தின் கடந்தகாலக் கொடுமையை இன்று விலக்கி நல்லதைப் பின்பற்றுகிறான். அதனால் நல்லது எது, கெட்டது எது என்ற பாகுபாடு போய்விடுகிறது. சமூகம் ஏற்பதையே நல்லதென நினைக்கமுடிகிறது.

உலகத்திற்கு நல்லதைத் தனக்கு நல்லதாக மனிதன் கொள்கிறான்.


 


 



book | by Dr. Radut