Skip to Content

06.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                        (சென்ற இதழின் தொடர்ச்சி....)               கர்மயோகி

865) உள்ளெழுந்துவரும் ஆர்வத்தாலோ, புறச்சந்தர்ப்பத்தின் நிர்ப்பந்தத்தாலோ மனிதன் கடவுளை நாடுகிறான். ஏதோ ஒரு சமயம் தெய்வம் மனிதனை நேராகவோ, மறைமுகமாகவோ தன்னை நாடும்படி வற்புறுத்துகிறது.

ஆர்வத்தால் ஆண்டவனை நாடும் மனிதனை ஆண்டவனும் தன்னை நாடும்படி வற்புறுத்துகிறான்.

. சிருஷ்டி என நாம் கூறுவது ஆண்டவன் ஒளிவது.

. பரிணாமம் என்பது ஆண்டவன் ஒளிவதிலிருந்து எழுவது.

. ஆன்மாவின் 12 அம்சங்களிலும் இதை நாம் காணலாம்.

. அனந்தம், காலத்தைக் கடந்தது, ஐக்கியம், சத்தியம், நல்லது, ஞானம், திறமை, அழகு, அன்பு, ஆனந்தம், மௌனம், சக்தி, ஆகியவை அந்த 12 அம்சங்கள்.

. ஒளிவதும், கண்டுபிடிப்பதுமில்லாத வாழ்வின் அம்சமேயில்லை.

. அகம், புறம், ஆகியவை சிருஷ்டியின் பகுதிகள்.

. புறத்தைத் தன்னுட்கொண்ட அகமும் உண்டு.

. புறச்சந்தர்ப்பம் மனிதனை ஆண்டவனை நோக்கிச் செலுத்துவது நிர்ப்பந்தம்.

. அகம் ஆண்டவனை நாடுவது பக்தி.

. ஆண்டவனே மனிதனை நாடுவது அருள்.

. ஒரு பாக்டரியில் ஸ்டிரைக் செய்து சம்பள உயர்வு கேட்கிறார்கள், பெறுகிறார்கள்.

. அதிக இலாபம் வருவதால் நிர்வாகம் போனஸ் தருகிறது.

. சட்டம் ஏற்பட்டு சம்பளம் உயர்கிறது.

. மார்க்கட் வளர்வதால், ஆள் கிடைக்காமல் சம்பளத்தை உயர்த்து கிறார்கள்.

. அத்தனையும் உயரும் வழிகள்.

. நிலவரம் எதிரானால் இத்தனை முறைகளால் சம்பளம் குறையும்.

. கல்வி, மருத்துவம், நிர்வாகம், தொழில், விளையாட்டு, போர் ஆகிய அத்தனைத் துறைகளிலும் இத்தனை முறைகள் உண்டு.

. ஞானம் வளர்வதற்கும் இத்தனை வழிகள் உள.

. புதிய லோகங்களைக் கண்டுபிடித்து பூகோளம் எழுதுவதற்கும் பல வழிகள் உள்ளன.

. விஞ்ஞானம் புதியன காணவும் இதுவே சட்டம்.

. உலகில் உள்ளது ஒரு சட்டம், பல துறைகள். அத்தனைத் துறைகளும் ஒரே சட்டத்தைப் பலவிதமாகப் பின்பற்றுகின்றன.

. உரையாடலுக்கும் இந்தச் சட்டத்தைக் கருதினால் அங்கும் இது செல்லும் என அறியலாம்.

. காதலிலக்கியம் உலகின் கவனத்தைக் கவர்ந்தது.

. உயர்ந்த காதல் எழுவது, சிறப்பது, பலன் தருவதும் பல்வகைகள்.

. அவை பின்பற்றுவதும் இதே சட்டம்.

. ஆண்டவனும், மனிதனும் பிரம்மத்தின் இரு முனைகள் என்பதால் செயல் எங்கிருந்தும் எழும்.

****

866) முதலில் சொல்லியது உணர்வு; அடுத்தது உயர்ந்த உணர்வு அல்லது சைத்தியப்புருஷன். அவதாரப்புருஷனை மட்டுமே ஆண்டவன் நிர்ப்பந்திக்கிறான்.

அவதாரப்புருஷனைமட்டுமே ஆண்டவன் நிர்ப்பந்திக்கிறான்.

. நிர்ப்பந்தம் நாகரீகம் வளர்ந்த நிலையைக் காட்டும்.

. மக்கள் கல்வியை நாடுவது அவர்களைப்பொருத்தது.

. மேல்நாடுகளில் பையன் 16 வயதுவரை பள்ளிக்கு வாராவிட்டால், பெற்றோர் ஜெயிலுக்குப் போகவேண்டும்.

. பொதுமக்கள் கல்வி பெறவேண்டும்என்று சமூகம் கட்டாயப்படுத்த சமூகம் வளர்ந்து, கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும்.

. இன்ஷுரன்ஸ் மக்கள் வசதிக்காக ஏற்பட்டது.

. கார் வாங்க கடன் கேட்டால், பாங்க் காரை இன்ஷுர் செய்யச்சொல்வது சமூகம் மறைமுகமாக மக்களைக் கட்டாயப் படுத்துவதாகும்.

. காலரா, அம்மை தடுப்புஊசிபோட சர்க்கார் நிர்ப்பந்தம் செய்வதும் உண்டு, செய்யாமலிருப்பதும் உண்டு.

. சமூகம் வளரும்முன் கட்டாயம் குறைவு.

. வளர்ந்தபின் கட்டாயம் அதிகம்.

. சமூகம் ஏற்படுமுன் (physical compulsion) எதிரியின் தாக்குதலை எதிர்க்க சமூகம் ஒவ்வொருவரையும் நிர்ப்பந்தம் செய்தது.

. திருமணம் செய்வது சட்டப்படி அவசியமில்லை.

. சமூகம் ஆயிரம் வகைகளாகக் கட்டாயப்படுத்துவதால் திருமணம் செய்து கொள்ள அபிப்பிராயமில்லாதவரும் செய்துகொள்கிறார்கள்.

. பிரம்மச்சாரிக்கு வாடகைவீடு கிடைக்காது.

. வயதான பிரம்மச்சாரிக்கு வேலை கொடுக்க எவரும் தயங்குவர்.

. பாங்க், சர்க்கார் ஆபீஸ், மற்ற எந்த இடத்திலும் பிரம்மச்சாரியை நம்பமாட்டார்கள்.

. எலக்ஷனில் நிற்பதற்கும் அது ஒரு பிரச்சினையாகும்.

. ஒரு ஸ்தாபனத்தில் தலைமைப்பதவிக்கு பிரம்மச்சாரியை விலக்குவார்கள்.

. ஆண்டவன் தற்சமயம் நம்மையெல்லாம் கட்டாயப்படுத்தாத இடங்களில் அவதாரப்புருஷனைக் கட்டாயப்படுத்துகிறான்.

. எந்த விஷயத்தில் யார் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்பது அந்தச் சமுதாயத்தின் நாகரீகம் வளர்ந்த நிலையைக் காட்டும்.

. மேல்நாடுகளில் பைத்தியம்பிடித்தவர்களை வீட்டில் வைத்திருக்கச் சட்டம் அனுமதிக்காது.

. சுத்தம் தேவைப்பட்டால் சர்க்கார் மக்களை சுத்தமாக இருக்கும்படிக் கட்டாயப்படுத்தும்.

. சிங்கப்பூரில் உள்ள சுத்தம் நம் நாட்டிலில்லை.

. SARS என்ற புது வியாதி வந்தவுடன் சிங்கப்பூரில் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாதுஎனச் சட்டம் வந்துவிட்டது.

தொடரும்.....

****

 


 

ஜீவிய மணி

ஒரு மணி அரிசி தங்கமணியாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மற்றவர் சொல்வதின் உண்மையை அறிவது பெருந்தன்மை. ஆனால், அது மனத்தைக்கடந்து செல்ல உதவாது. அடுத்தவர் சொல்வதின் உண்மையையும், தவற்றையும் கண்டு, அவை எதன் பாகங்களென அறிந்து, அந்த முழுமையைக் காண முனைந்தால், மனத்தைக்கடந்து செல்லமுடியும்.

மற்றவர் முழுமையை அறிந்தால் மனத்தைக் கடக்கலாம்.


 


 


 


 



book | by Dr. Radut