Skip to Content

10.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)        கர்மயோகி

886) பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதால், அருளின் செயலை மனிதன் பிடிவாதமாக எதிர்க்கிறான். அருள் அவன் பகுத்தறிவுக்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. தனக்குப் பாதகமானது (அம்பாள் வெற்றிலைப் பாக்கு எச்சில்) என்பதில் அருளைக் காண்பதே விவேகம்.

வெற்றிலைப் பாக்கு எச்சில்

அருளைக் காண்பதே அதிர்ஷ்டம்.

அருள் முழுமையானது, அதனால் ஜீவனுக்குரியது. மனம் ஜீவனின் பகுதி.அறிவு மனத்தின் பகுதி. அதனால்,

பகுத்தறிவு அருளைத் தாங்கி வர முடியாது.

.பல்லைப் பிடுங்கும் பொழுது வலி உயிர் போகும் (மயக்க மருந்து வருமுன் கொரடாவால் பிடுங்குவார்கள்). பல் வலி நிரந்தரமாகப் போக பல்லைப் பிடுங்க வேண்டும். பெருவலி போக சிறுவலியை ஏற்கிறோம்.

.பீகாரில் கொலைகாரன், கொள்ளைக்காரன் அரசியல் தலைவனாக இருக்கிறான். அனைவரும் அவன் காலில் விழுகின்றனர்.  தேர்தலில் அமோகமாக ஜெயிக்கிறான்.  மக்கள் அவனை விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள்கொடுமைக்காரன் அருளைத் தாங்கி வருவதை மக்கள் அவர்கள் பாணியில் அறிந்துள்ளனர்.

.பகுத்தறிவு சம்பளம் தரும், பலன் தரும்; இலாபம் தாராது; அதிர்ஷ்டம் தாராது. பகுத்தறிவால் ஓர் ஏக்கர் பயிரிட்டு 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம், 20 ஆயிரமும் சம்பாதிக்கலாம்ஓர் ஏக்கரை 50,000 ரூபாய்க்கு அல்லது ஓரிரு இலட்சத்திற்கு விற்கலாம்ஓர் ஏக்கரை 10 கோடிக்கு விற்கும் பகுத்தறிவு உலகிலில்லை. அதை real estate செய்யும். விளைநிலம் வீட்டு மனையாவது விவசாயத்திற்கோ, அதற்குரிய அறிவுக்கோ இல்லை. அருள் மழையாகப் பொழிந்து, அனைவரும் அருள் மையமான நகரத்தை நாடினால் விளைநிலம் வீட்டு மனையாகி, வியாபார ஸ்தலமாகி, ஆயிரம் ரூபாய் கோடிகளாக மாறும். பகுத்தறிவால் தினக்கூலியை 1 ரூபாயிலிருந்து ரூ.200க்கு உயர்த்த முடியாதுஅதைச் செய்வது சமூக மாற்றம்சமூகம் மனம் மாறுவது அருள்சமூகம் மனம் மாறி கூலிக்காரனை மனிதன்என ஏற்றால், அவனுக்கு மனிதனுக்குரிய மரியாதையும், வசதியும் தர முடிவு செய்தால், 1 ரூபாய் கூலி ரூ.200 ஆகும்அறிவோ, பகுத்தறிவோ இதைச் செய்ய முடியாதுசமூகம் மனிதனை மதித்ததால் 1 ரூபாய் 200 ரூபாய் ஆயிற்றுமனிதன் தன்னை மரியாதைக்குரியவனாக உணர்ந்து ஏற்றால் 200 ரூபாய் 200 டாலராகும். அதுவும் இன்று அமெரிக்காவில் நடந்து விட்டதுவெற்றிலைப் பாக்கு எச்சில் அம்பாள் தரும் அருட்பிரசாதம் என அறிவது மனமில்லை, ஆத்மா; அறிவில்லை, சூட்சும ஞானம். சூட்சும ஞானம் மேல் மனத்தில் சிந்தனையில்லை. அடிமனத்தில் மௌனத்தில் அது உறைகிறது.

பகுத்தறிவு அருளாக மாறச் சிந்தனை மௌனமாக வேண்டும்.

தொடரும்.....

****

 

ஜீவிய மணி

மனிதன் விஸ்வமானவா

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாமுள்ள நிலையில் அருளின் வருகை நமக்குத் தெரிவதில்லை.சரணாகதி பூர்த்தியானால் அருள் கண்ணுக்குத் தெரியும்.

சரணாகதி கண் திறந்து அருளைக் காட்டும்.


 



book | by Dr. Radut