Skip to Content

11.லைப் டிவைன் - கருத்து

"The Life Divine" - கருத்து

உலகம் அற்புதமானது; தீமையற்றது; இரட்டைகளற்றது. இனி உலகம் இப்படி மாற வேண்டும் என்பதில்லை. எப்பொழுதுமே அப்படியே உலகம் இருந்து வருகிறது.

.உலகம் விஞ்ஞானமயமாக மாறி வருகிறது;

.ஆதிமனிதன் விலங்காக வாழ்ந்தான்;

.நாம் நாகரீக மனிதனாக வாழ்கிறோம்;

."இனி வரப்போகும் மனிதன் தெய்வமாக இருப்பான்" என்பது நம் கருத்து.

.ஸ்ரீ அரவிந்தம் கூறுவது வேறு; மாறுபட்டது.

.உலகம் ஏற்பட்டதிலிருந்து அற்புதமாக இருந்து வருகிறது.

தீமை, மரணம், நோய், பொய், வலி இறைவனால் படைக்கப்படவில்லை. மனிதன் அகந்தையுள் வாழ்கிறான்.

அகந்தைமூலம் உலகைக் காணும்பொழுது நல்லது, கெட்டது,         மரணம், நோய் தெரிகிறது.

அகந்தை அழிந்தால் அவை என்றும் உலகிலில்லை. உலகம் அற்புதமாகப் பிறந்து, ஆச்சரியமாக வளர்ந்து, அதிசயமாகத் திகழ்கிறதுஎன அறிய முடியும்.

.நாம் அகந்தைஎனும் கறுப்புக்கண்ணாடிமூலம் உலகைக் காண்பதால் கறுப்பு தெரிகிறதுஎனவே இன்று கறுப்பான உலகம் மாறி, நாளை வெண்மையாக வேண்டும்எனக் கருதுகிறோம். நாம் செய்ய வேண்டியது கண்ணாடியைக் கழற்ற வேண்டும்.

.இது உலகம் இதுவரையறியாத புதுக் கருத்து.

.அளவுகடந்து காற்றோட்டமுள்ள உலகில் நான்கு சுவர்களுக்குள் நாம் வாழ்கிறோம்சுவரைக் கட்டி, காற்று உள்ளே வர ஜன்னல் வைக்கிறோம். காற்றோட்டமற்ற நேரம் அளவுகடந்து புழுங்குகிறது.

காற்றுக்குப் பஞ்சமில்லை.

நாம் காற்று உள்ளே வர முடியாதபடி செய்துவிட்டு, fan போட்டுக்  கொள்கிறோம்இது மனிதச் சுபாவம்மனம் செயல்படும் வகை.

.செட்டிநாட்டில் அந்த நாளில், செல்வர் வீட்டுக் குழந்தைகளை வியாபாரத்தில் பயிற்றுவிக்க வேறு வீட்டில் வேலைக்கு ஆளாக அனுப்பி, 1/8 ஆள், 1/4 ஆள், 1/2 ஆள், 3/4 ஆள், முழு ஆள் என்ற பட்டங்களைப் பெற்றபின் தம் வீட்டிற்கு வந்து, உள்ள பெருஞ் செல்வத்தை நிர்வாகம் செய்யச் சொல்வார்கள். அப்படிச் சென்ற பையன் தான் பெருஞ் சொத்துடையவன் என்பதை மறந்து, வேலையாள் எனத் தன்னைக் கருதி, முழு ஆளானபின்னும் அதே வீட்டில் சம்பளத்திற்கு வேலை செய்வது துர்ப்பாக்கியம்மனிதன் அது போன்ற நிலையில்,ஆத்மாவைப் பொருத்தவரை உள்ளான்.

.இந்த உண்மையை உலகுக்கு அறிவிக்க வந்தது ஸ்ரீ அரவிந்த அவதாரம். அதைச் செயல்படுத்த முனைந்தது ஸ்ரீ அன்னை.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மாவை வாழ்வில் அறிந்தாலும், வாழ்வை உள்ளே கண்டாலும் அது பரம்பொருள் வெளிப்படும் தருணம். அதுவே ஆன்மீக நிறைவு.

வாழ்வில் காணும் பிரம்மனும், உள்ளே தெரியும் வாழ்வும் பரமனே


 



book | by Dr. Radut