Skip to Content

12.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.... ) கர்மயோகி

11.   நீ ஜபிக்கும் மந்திரங்களின் மறைபொருளை அறிவது நல்லது.

பக்தர்கள் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பல மந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்அதற்குப் பலன் உண்டுபுரியாத விஷயத்தை "இது என்ன மந்திரமாக இருக்கிறது?' என்போம். மந்திரம் என்றால் புரியாதது. அதனால் அதை "மறை' என்றனர்இந்த மந்திரங்களுக்கெல்லாம் உரிய அர்த்தம் விளக்கமாக அன்னை எழுதியவற்றுள் உள்ளன.  மந்திரத்தின் உட்பொருளை அறிந்து, உணர்ந்து, ஜபித்தால், மந்திரத்தை எழுதியவர் பெற்ற பலன் பெறலாம்இவை பகவான், அன்னை எழுதியவை.

ஞானம் சித்தியாகி தானே சொல்லாக வெளிவருவது மந்திரம்.

மந்திரம் சக்திவாய்ந்த சொல்.

அதன் அர்த்தம் அச்சக்தியைப் பெற்றுத்தரும்.

12. அன்னையே உன் சரணாகதியை ஏற்றபின், அடுத்தது இல்லை.

இந்த யோகம் மனிதனுக்கில்லைஅவன் பங்கு சரணாகதியோகம் இறைவனுக்கு என்றார் பகவான்சரணாகதி கீதை கூறுவதுஅது ஆத்மா சரணடைவது. மோட்சம் கிட்டும்பகவான் கூறும் சரணாகதி வளரும் ஆன்மாவையும், நம் சுபாவத்தையும் சரணடைவது.

குடும்பத்தைத் துறந்து மேற்கொள்வது சன்னியாசம்அது பெரியது.

தன் சொத்து முழுவதையும் கொடுத்து, குடும்பத்தையும் துறந்து ஏற்பது யோகம்.

ஆத்மாவைச் சரணடைவதற்கும், சொத்தையும் ஆத்மாவையும் சரணடைவதற்கும் இந்த வித்தியாசம் உண்டு.

இதற்கும் அடுத்த கட்டம் சுபாவத்தைச் சரணம் செய்வது.

சரணாகதி என்ற சொல் நம் பரம்பரையாக வந்தது என்பதால் நாம் பகவான் கூறும் சரணாகதியை அப்படி எடுத்துக் கொள்கிறோம். அது இல்லை.

ஆத்மாவை அறிந்தவன் ஜீவன் முக்தன்.

அதைப் பரம்பரையாக ஜீவாத்மா என்கிறோம்.

வளரும் ஆன்மாஎன்பது மனத்திலும், உணர்விலும், உடலிலும் வெளிப்படும் ஆன்மா.

மனம் அமைதியானால் வெளிப்படுவது ஆன்மா.

மனத்தில் சொல்லெழுந்தால் அமைதி கலையும், ஆன்மா மறையும்.

சொல் சிறப்பாக எழும் பொழுது ஆன்மா சொல்லைத் தாங்கி வருகிறது.

கவிகட்கும், மேதைகட்கும் அது வெளிப்படும்.

சொல்லை மனம் சொல்வதற்குப் பதிலாக மனத்தின் ஆன்மா சொல்வது

மேதையின் சொல்லாகும்.

மேதையின் சொல்லைச் சொல்வது மனத்தில் வளரும் ஆன்மா.

மாவீரனின் செயலைச் செய்வது உயிரில் வளரும் ஆன்மா.

செயலையும், சொல்லையும், உணர்வையும் இறைவனின் ஸ்பர்சமாக உடல்  

ஏற்றுப் புல்லரிப்பது உடல் வெளிப்படும் வளரும் ஆன்மா.

சுபாவம் சரணடையாவிட்டால் சுபாவம் வெளிப்படும்.

மனத்தில் சுபாவம் வெளிப்பட்டால் மௌனம் கலையும்; சொல் எழும்.

உணர்வில் சுபாவம் வெளிப்பட்டால் கோபம், பயம் எழும்.

உடலில் சுபாவம் வெளிப்பட்டால் உடல் ஜடமாக இருக்கும்; புல்லரிக்காது.

நம் சரணாகதியை அன்னை ஏற்பது எனில் மனத்திலும், உணர்விலும், உடலிலும் சைத்தியப்புருஷன் எனும் வளரும்ஆன்மா செயல்பட வேண்டும்.

அதைக் கடந்த மனிதநிலை வாழ்வில் இல்லை.

சரணாகதியை அன்னை ஏற்றபின் உனக்கு வேறென்ன வேண்டும் என்று பகவான் கேட்கிறார்.

சரணாகதி சமர்ப்பணம் பூர்த்தியாகும் நிலை.

பிரச்சினை தீர அன்னையிடம் கூறுவது சமர்ப்பணம்.

கூறினால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

யோகம் செய்ய அந்தச் சமர்ப்பணம் போதாது.

ஜீவனையும், சுபாவத்தையும் சரணம் செய்ய வேண்டும்.

சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அடையாளம் மனம் மௌனத்தால் சிறந்து, உணர்வு ஆனந்தமடைந்து, உடல் புல்லரிப்பதாகும்.

பக்குவமான பக்தருக்கு இதுவும் பலிக்கும்.

இது யோக முறை, சிறந்த முறை.

13. அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்வது.

மனிதன் என்பவன் அகந்தை. நாம் டெல்லியில் குடியிருந்தாலோ, அமெரிக்காவிருப்பதாலோ, தமிழ் மறந்து போவதில்லைஇங்கிலீஷில் பேசினாலும் சிந்தனை தமிழில்தானிருக்கும்.  12 x 8 = 96 என்பதை மனம் தமிழில் தான் சொல்லும்தமிழ் பிறந்த பிறகு கற்றதுஅகந்தை ஏற்பட்டதால்தான் பிறந்தோம்அகந்தை இல்லாவிட்டால், பிறப்பில்லை. நான் சமர்ப்பணம் செய்வதால், சரணம் செய்வதால் பெரியவன் என நினைப்பது அகந்தைஅது அடுத்தவர்க்குச் சரணம் செய்ய அனுமதிக்காது. அன்னையிடம் உள்ள பணிவு அன்பரிடம் கர்வமாக மாறும்எல்லா ஜீவாத்மாக்களும் என்னுள் இருக்கின்றன, நான் அவர்கள் அனைவர் உள்ளும் இருக்கிறேன் என்பது உபநிஷதம்அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்தால், அந்த தத்துவத்தை ஏற்பதாகும்அது ரிஷிகள் நிலை. சிவபெருமான் சண்டாளனாக வந்தபொழுது சங்கரர் சண்டாளனைக் கண்டார். நம்மால் அன்பரில் அன்னையைக் காண முடியுமா?

பல சமயங்களில் புதிதாக ஓர் அன்பரைக் கண்டால், அன்னையைக் கண்டது போல் மனம் நெகிழ்கிறது. அது அப்படிப்பட்ட தருணம்.

.எவர் சொல்வதும் அன்னை பேசுவதாகும்

    என்பது பலிப்பதைக் காண்கிறோம்.

. எவருக்குத் தவறு செய்தாலும் அன்னைக்குத் தவறு செய்ததாகும்                      

      என்பது மனிதருள் அன்னையைக் காண்பதாகும்காண்பது பல நிலைகளில் 

      உள்ளது:

.மனம் காண்பது உருவம்.

உணர்வு காண்பது குணம்.

உடல் அறிவது செயல்.

ஆத்மா விழிப்பற்ற நிலையிலிருப்பதால் காண்பதில்லை.

அது விழிப்புற்றுக் கண்டால் ஜோதியைக் காணும்.

அன்னை பக்தி அன்பரில் அன்னையைக் காணும்.

நமக்கு அன்பர் அன்னையாகத் தெரியவில்லை, அன்பராகவே தெரிகிறார் என்றால், அவர் கூறுவதை அன்னை கூறுவதாக ஏற்று செயல்பட்டால், அவர் சொல் அன்னை சொல் போல் பலிப்பதைக் காணலாம்.

.அன்பரில் அன்னையைக் கண்டால்

அடுத்த கட்டத்தில் அனைத்திலும் அன்னையைக் காணலாம்.

அது அலிப்பூரில் பகவான் பெற்ற தரிசனம் தரும்.

அவர் பெற்றது நாராயண தரிசனம்.

நாம் பெறுவது ஸ்ரீ அரவிந்த தரிசனம்.

அன்பர் நெஞ்சில் அன்னை தெரிவது சூட்சும தரிசனம்.

அது தெரிந்த பிறகு நமது திட்டங்கள் மறந்து போகும்.

மறந்து போனவை கேட்காமல், நினைக்காமல் பலிக்கும்.

பலித்தபின் திட்டம் பலித்த உணர்விருக்காது.

அன்னை பலித்த நெகிழ்வு இருக்கும்.

அன்னையைக் கண்டபின் அடுத்தது நினைவு வாராது.

அது பெரிய நிலை.

அந்நிலையில் அனைத்தும் அழகாகத் தெரியும்; விகாரமும், கோரமும் வினோதமான அழகு; அவை அழகின் சிறந்த அம்சம்எனத் தெரியும்.

14. எதைச் செய்தாலும் எவரும் அதை மேலும் உயர்த்த முடியாத அளவு செய்ய வேண்டும்.

கேட்க மேலே ஒருவர் இல்லையெனில், நாம் வேலை செய்ய சோம்பேறித் தனப்படுவோம்முடிந்தவரை வேலையைத் தட்டிக்கழிப்போம்இது சுபாவம்.

.என்னால் முடிந்தவரை செய்தேன்.

.இதைவிட என்ன செய்வது?

.இதற்குமேல் யார் செய்ய முடியும்?

யாராவது இதற்குமேல் செய்ததுண்டா?

.இதற்குமேல் என்னைச் செய்யச் சொல்வற்புறுத்தாதே,

என்று நாம் கேள்விப்படுகிறோம்இவர்கள் எவரும் 20%க்குமேல் வேலை செய்வதில்லைதினமும் 4, 5 கடிதம் வந்தால், அதற்கு 4,5 நாட்கள் பதில் எழுதாமலிருப்பது தவறு; 30 நாட்கள் தாமதம் மன்னிக்க முடியாது.  3 மாதங்கள் தாமதம் செய்பவர் தம்மை முதல் தரமான ஊழியர்என வர்ணிக்கிறார். இவர்கள் என் கணக்கில் வரமாட்டார்கள்.

.மேற்பார்வையின்றி தானே தன் வேலையை செய்பவனே ஊழியன். 100 பேர் உள்ள ஸ்தாபனத்தில் அப்படிப்பட்டவர் 3, 4 பேரே இருப்பார்கள். அவர்கள் வேலையை 70, 80% செய்வார்கள். 100%செய்பவரிருக்க மாட்டார்கள். 100% வேலையைச் செய்பவர் வேலையும் தரத்தால் 50 அல்லது 60%தானிருக்கும்.

.மேற்பார்வைக்குட்பட்டுச் செய்யும் வேலைக்கு அன்னை பலன் வாராது; சம்பளம் வரும்.

செய்யும் வேலை IAS ஆபீசர் வேலையாகவோ, சமையல் வேலையாகவோ, எந்த வேலையாகவுமிருக்கலாம். அது,

.அளவிலும்,

.தரத்திலும் முழுமையாக இருக்க வேண்டும்.

.முழுமையிலும் இரு வகைகளுண்டு.

.இதற்கு மேல் செய்ய உடலில்  தெம்போ, மனத்தில் அறிவோ இல்லை

என்பது நம் திறன் செலவாகிவிட்டது எனப் பொருள்.

மனிதன் முடியுமிடத்தில் அன்னை செயல்படுவார்.

பாஸ் பண்ண முடியாதுஎன்று வந்த பையன் அதுபோல் வேலை செய்து முதல் மார்க் வாங்கினான்.

அது குறைந்தபட்சம்.

.அதிகபட்சம் ஒன்றுண்டு.

முனைந்தால் முடியாததில்லை என்பது அதற்குரிய சட்டம்.

எதை எதைச் செய்ய முடியுமோ, அவற்றுள் எது நமக்கு இப்பொழுது தெரியாதோ, அதைக் கற்க முயன்று, கற்று, வெற்றிகரமாகச் செய்தால், (No one can improve it) இதை யாரும் மேலும் உயர்த்த முடியாது என்பதுபோல் முடியும்.

அவர்கட்குப் பலன் அவர்கள் தொழிலில் வாராது.

அவர்கள் எந்தத் தொழிலில் முன்னேற முடியுமோ, அத்தொழிலுக்கு அவர்கள் வந்து, தொடர்ந்த முன்னேற்றம் பெறுவர்.

செய்வன திருந்தச் செய் என்பதை இது விளக்கும்.

.நமக்கு அதிகபட்சம், வேலைக்குக் குறைந்தபட்சம்.

வேலைக்கு அதிகபட்சம், வாழ்வுக்குக் குறைந்தபட்சம்.

வாழ்வுக்கு அதிகபட்சம், அன்னைக்குக் குறைந்தபட்சம்.

அன்னையின் அதிகபட்சம் இரு வகைகள்:

(1) நாம் பெறக்கூடிய அதிகபட்சம்.

(2) அன்னை கொடுக்கக்கூடிய அதிகபட்சம்.

தொடரும்...

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எவ்வளவு பெரிய அம்சமும், திறமையும் சிறு செயலுள்ள பொருத்தமில்லாத நோக்கத்தை மீறி அருளைச் செயல்பட அனுமதிக்காது.

சிறு குறையும் பெரிய அம்சத்தைத் தோற்கடிக்கும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுப்பாடாகச் சாதித்து, சோம்பலில் ஓய்வெடுத்துக் கொள்வது மனிதச் செயல். இல்லையேல் மனநிம்மதிபெற அழிச்சாட்டியத்தை நாடுவான்.


 



book | by Dr. Radut