Skip to Content

13.ருசிக்கும் அறியாமை - Taste of Ignorance

ருசிக்கும் அறியாமை - Taste of Ignorance

     புதியதாகக் காமிரா வந்தால் ஏராளமாகப் படம் பிடிக்கத் தோன்றும்.காமிரா வந்து 30 வருஷமானாலும், ஒரு நேரம் வந்தால் படம் எடுக்கத் தோன்றும். தோன்றியபின் அதைக் கட்டுப்படுத்த முடியாதுஅதை மறந்து வேறு எந்த வேலை செய்யப் போனாலும் தும்மல் வரும்தும்மல் நமக்கு அபசகுனம். அதனால் எல்லா வேலைகளையும் மறந்து, படம் எடுக்க நம் சுபாவம் வற்புறுத்தும்படம் எடுத்தால் நன்றாக வரும். கற்ற வித்தை கலையாக வாழ்வில் வெளிவந்து தன் அனுபவத்தைத் தானே முடித்துக் கொள்ளும்வரை, மனிதன் அதை விலக்க முடியாது. மேடைப் பேச்சாளருக்கு எதிரியை மடக்கும் பதில் தோன்றினால், அதைச் சொல்லாமலிருக்க முடியாது. அடுத்த பேச்சு வரும்வரை ஆயிரம் முறை அப்பதில் மனதில் அலையலையாக எழும்.  20 ஆண்டிற்கு முன் பலர் முன்னிலையில் நம் அதிகாரி நம்மைப் பாராட்டிப் பேசிய சொல் பல முறை மனதில் வரும்.  அதுவும் அதுவே கடைசி பாராட்டு எனில், எளிதில் மனத்தைவிட்டு அது அகலாது

தம்பி சிறு வயதில் நாலுபேர்முன் "என் அண்ணனுக்கு எதுவும் தெரியாது' என்றால், "எனக்குத் தெரியும்' எனக் கூறும் பதில்கள் மனதில் எழுந்தபடி இருக்கும்; கனவில் வரும்; ஜன்னி வந்தால் வாயால் சொல்லாக எழும். பாராட்டும், உறுத்தலும் மனத்தில் நிற்பது போல் மற்றவை நிற்பதில்லை.

- மனிதன் அவற்றைக் கடந்து வாராமல் முன்னேற முடியாது.

- மனத்தால் கடக்க தெளிவும், செயலால் கடக்க சாதனையும் தேவை.

- கடக்க முடியாதவை கடலலையென கருத்தில் நிலைக்கும்.

- கடப்பது ஞானம்; ஞானம் வந்தால் அவை மறந்து போகும்.

- கடக்க முடியாதது அஞ்ஞானம், அறியாமை.

-அவ்வறியாமையை நாமே நாடி, அவற்றுள் திளைப்பது சுபாவம். பகவான் அதை ருசிக்கும் அறியாமையென்கிறார்.

- அறியாமை ருசிக்காவிட்டால், ஆண்டவன் பலிக்கும்.

 

****


 



book | by Dr. Radut