Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

    ஸ்ரீ அன்னையை எங்களுக்கு அறிமுகப்படுத்திய குருநாதருக்கும், என் சகோதரிக்கும் மற்றும் அனைத்து அன்னை சேவை அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இக்கட்டுரையைத் தொடங்குகிறேன். 1986இல் நான் என் மகன் மற்றும் மகளுடன் தர்மபுரிக்கு வந்தேன்.  குடும்பத்தின் சூழ்நிலை மிகமிக மோசமானதாக இருந்ததுநான் ஒரு தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன்.என்னுடைய அக்காவும் தர்மபுரியில் வசித்து வந்தார். 1992இல் அக்கா ஸ்ரீ அன்னையின் திருவுருவப்படம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, என்னை pray செய்யச் சொல்லியும், என் துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்றும், தியான மையத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் பல முறை என்னிடம் சொன்னார். ஆனால் நான் அவர்களின் பேச்சை லட்சியம் செய்யவில்லைஒவ்வொரு Sunday prayerக்கும் என்னை அழைப்பார்.நான் போகமாட்டேன்கடைசியாகச் சென்றுதான் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். 1993 நவம்பர் 13ஆம் தேதி எப்பவும்போல் அக்கா வந்து, "ஒரு தடவை prayerஇல் கலந்துகொள், பிடித்தால் தொடர்ந்து செல்லலாம், இல்லையேல் விட்டுவிடுஎனக்கு அங்குச் சென்றால் உன் கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று சொல்லி என்னையும், என் குழந்தைகளையும் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் என் மகன், "எங்குச் செல்கிறோம்'' என்று என் அக்காவிடம் கேட்டான். அதற்கு அவர்கள், "ஸ்ரீ அன்னை தியான மையத்திற்குச் செல்கிறோம்நீ அன்னையிடம் எது கேட்டாலும் அவர் தவறாமல் வழங்குவார்'' என்று சொன்னார்உடனே என் மகன், "T.V.கூட தருவார்களா?'' என்று கேட்டான். என் அக்காவும், "நிச்சயம் தருவார்கள்'' எனக் கூறினார்அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று தியானத்தில் கலந்துகொண்டு வெளியே வரும்பொழுது, "இவ்வளவு வருட வாழ்க்கையை வீணடித்துவிட்டோமே' என்று தோன்றியது.

     அவ்வருட தீபாவளிக்காக என்னுடைய அண்ணன் ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார்எனவே, அன்றிரவு கடைக்குச் சென்று ஒரு நல்ல டேப் ரிக்கார்டர் வாங்குவதாக இருந்தது. ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமிருந்த எனக்கு சஷ்டி கவசம் மற்றும் தெய்வபக்தி பாடல்கள் கேட்க மிகுந்த ஆசைஎன் சகோதரியும், நாங்கள் மூவரும் அன்று பிலிப்ஸ் கம்பெனிக்குச் சென்றோம். கடையில் சென்று விசாரித்ததில் டேப் ரிக்கார்டரின் விலை 2200 என்று கடைக்காரர் கூறினார்என்ன செய்வதென்று புரியாமல், தவணை முறையில் தருமாறு கேட்டோம்.  முதலில் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், 3 மாதத்தில் 400 ரூபாய் வீதம் தருவதாகவும் கூறினோம்அதற்கு கடைக்காரர் முடியாது என்று சொல்லிவிட்டார்நாங்களும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டோம்கடையிலிருந்து வெளியே வரவர கடைக்காரர், "வாங்கம்மா, குழந்தைகளுடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்.  T.V. வேண்டும் என்றால் தவணை முறையில் தருகிறோம்'' என்று சொல்லிவிட்டுஎங்களின் பதிலை எதிர்பார்க்காமல், ரூ.2500/-மதிப்புள்ள portablebalac and white T.V.ஐ எடுத்து வைத்துவிட்டார். எங்களுக்குக் கனவா, நனவா என்று புரியவில்லை. குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. T.V.ஐ எடுத்துச் செல்ல ஆட்டோ வரச் சொல்லி, 900 ரூபாய்க்கு பில் போட்டுநானூறு ரூபாயை நான்கு மாதங்கள் கட்டுமாறு கூறினார்காலை 9.30 மணிக்குத் தியான மையத்திற்குப் போகும் வழியில் என் பையன் கேட்டதும், அக்கா பதில் சொன்னதும், அன்று இரவு சரியாக 8 மணிக்கு T.V.வந்துவிட்டதும், ஸ்ரீ அன்னை நாம் கேட்டதை எல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையை எங்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்தது.

    அப்பொழுது நாங்கள் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் நூற்று முப்பது ரூபாயில் குடியிருந்தோம்திடீரென்று வீட்டுக்காரர் எங்களை வீடு காலி செய்யச் சொன்னார்அன்னையின் அருளால் 1994 ஏப்ரல் மாதம் 400 ரூபாய் வாடகையில் வேறு வீடு சென்றோம்நல்ல வசதியான வீடு கிடைத்தது. அந்த வீட்டிற்குச் சென்ற பிறகு, T.V.due. மார்ச் மாதம் முடிவடைந்தது. ஏப்ரல் மாதம் அதே கடையில் மிக்ஸி வாங்கினோம். எங்கள் மீது பெரு நம்பிக்கை வைத்திருந்த கடைக்காரர், நாங்கள் பணம் கட்ட வந்தால்தான் அவருக்கு 14ஆம் தேதிஎன்று நினைவு வருகிறதுஎன்றும், எந்தப் பொருள் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்என்றும் கூறியதால், மிக்ஸி வாங்கினோம்நாங்கள் எது வாங்கினாலும் மதர் என்ற பெயரில் பில் போட்டுவிடுவோம்.

     என்னுடைய மகள் மிகநன்றாகப் படிப்பாள். ஆகையால், அவளைத் தர்மபுரியிலேயே சிறந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன்அன்னையின் அருளால் அக்கா தனக்குத் தெரிந்தவர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்அவர் அந்த பள்ளி தாளாளருடன் நெருங்கிய தொடர்புடையவர்அவரிடம் என் மகளைப் பற்றிக் கூறியதும், அவர் entrance exam எழுதுமாறும், செலக்ட் ஆனால் நல்லது என்றும் கூறினார்என் மகள் entrance exam pass செய்தாள். அவரே எங்களைப் பள்ளித் தாளாளரிடம் அழைத்துச் சென்றார்நானும், என் பெண்ணும் கல்விக்குச் சிறிது concession கொடுக்குமாறு கேட்டோம். அவரும் ரூ.2000/-த்திலிருந்து ரூ.1000/- உடனே கட்டுமாறு கூறினார்உடனே கட்டவில்லையென்றால் சீட் வேறு யாருக்காவது கொடுத்து விடுவோமென்றும் கூறினார்நான் என் மகளை வெளியே வராண்டாவில் நிற்க வைத்துவிட்டு, நான் வேலை செய்யும் இடத்தில் முன்பணம் வாங்கி வரலாமென்று ஸ்கூலிலிருந்து வெளியே வரும் வழியில் தாளாளரின் நண்பரைச் சந்தித்தேன்அவர் என்னைப் பார்த்து, "எங்கு செல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்விவரம் கூறியவுடன், அதற்கு உடனே அவர் பாக்கெட்டிலிருந்து ரூ.1000/- கொடுத்து பீஸ் கட்டி யூனிஃபார்ம், புக்ஸ் எல்லாம் வாங்கிச் செல்லுமாறு கூறினார்நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன்பிறகு +2 வரை என் மகள் அதே ஸ்கூல் படித்தாள்பள்ளியின் தாளாளரும் என் மகளின் நல்ல மதிப்பெண்களைக் கருத்தில்கொண்டு மிகக் குறைந்த பீஸ் எங்களிடம் பெற்றுக்கொண்டார்அத்தகைய சிறந்த பள்ளியில் படிப்பது கனவு போன்ற விஷயம்எங்களின் கனவை நிஜமாக்கியது ஸ்ரீ அன்னையின் அருளே.  1997இல் தர்மபுரியில் ஸ்ரீ அன்னை தியான மையத்தில் சேவை அன்பர்களில் ஒருவராக ஸ்ரீ அன்னை என்னைச் சேர்த்துகொண்டார்.  1998 முதல் 2000க்குள் வீட்டில் cot, dining table, chairs, gas stove முதலிய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஸ்ரீ அன்னை வாங்கிக் கொடுத்தார்கள்.  2000இல் என் மகள் +2 முடித்துவிட்டாள்என் மகனும் 10வது முடித்தான்நான் என் குழந்தைகள் இருவரையும் மதர்க்குச் சமர்ப்பணம் செய்துவிட்டேன். எனக்கு எதுவும் தெரியாதுஇனி இவர்கள் அன்னையின் குழந்தைகள்.அவர்களை வேலைக்கு அனுப்புவதோ, படிக்க வைப்பதோ ஸ்ரீ அன்னையின் முடிவுஎன்று என் கவலையையும், பொறுப்பையும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தேன்தெரிந்தவர்கள் மூலம், அவர்களும் அன்னையின் அன்பர்களே, கோயம்புத்தூர் PSG College பற்றித் தெரியவந்ததுநானும், என் மகளும் கோவைக்கு அப்ளிகேஷன் வாங்கச் சென்றோம்ஸ்ரீ அன்னையின் அருளால் கடைசி நாள் அன்று அப்ளிகேஷன் வாங்கி பூர்த்தி செய்துகொடுத்துவிட்டு வந்தோம்.  பையனை +1 கவர்ன்மெண்ட் ஸ்கூலில் சேர்த்தோம்அப்ளிகேஷன் லேட்டாக வாங்கியதால் வெயிட்டிங் லிஸ்ட்டில் என் மகளின் பெயர் வந்திருந்ததுஸ்ரீ அன்னையும், ஸ்ரீ அரவிந்தரையும் நினைத்துக் கொண்டு கோவை காலேஜுக்குச் சென்றோம்அங்குச் சென்று பார்த்ததில் திகைத்துவிட்டோம். அங்கு சுமார் 2000ஆம் பேர் எங்களைப் போல் அட்மிஷனுக்காகக் காத்திருந்தனர். மேலும் விசாரித்ததில் வி..பி.கோட்டா, எம்.எல்.. கோட்டா, தலைவர்கள் மற்றும் தியாகிகள் கோட்டா, டொனேஷன் கொடுப்பவர்கள் எனப் பல பேர் இருந்தனர்நாங்கள் அன்னையை மட்டும் நினைத்துக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்அவர்கள் ஒவ்வொரு பெயராய் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தது.நாங்கள் கவலையைக் குறைத்துகொண்டு, அன்னையை அழைத்துக் கொண்டு காத்திருந்தோம்என் மகளின் பெயரைக் கடைசியாகக் கூப்பிட்டவுடன், நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், அன்னைக்கு நாங்கள் செலுத்திய நன்றிக்கும் அளவேயில்லை. அதே காலேஜில் M.Sc வரை நல்லபடியாக கோல்டு மெடலிஸ்டாக வெளியே வந்ததும், ஒரு U.S.companyஇல் நல்ல வேலையில் அன்னையே சேர்த்தும் விட்டார்கள். என் மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலைதேட ஆரம்பித்ததும், நாங்களே எதிர்பார்க்காத அளவு, ஸ்ரீ அன்னையின் அருளால் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் வேலை கிடைத்தது.  ஸ்ரீ அன்னையின் அருளால் ஒருவாறு நாங்கள் இப்போது நல்ல நிலைமையில் உள்ளோம். என் பிள்ளைகளின் வாழ்க்கையை ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்துவிட்டேன். அன்னையை மட்டுமே நம்பி வணங்கி வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றமும், அனைத்து நலன்களும் வந்து சேரும் என்பதற்கு நாங்களே உதாரணம். ஒவ்வொரு நிமிடமும் அன்னையும், பகவானும் எங்களுடன் வாழ்ந்து வருவதை உணர்ந்து கொண்டிருக்கிறோம்எங்களின் இனிய அனுபவங்கள் பலவெனினும் ஒரு சிலவற்றை இங்கு பகிர்ந்து கொண்டு ஸ்ரீ அன்னையின் பெருமையை எடுத்துக்கூறுவதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைகிறோம்.

     1994இல் ஹிந்தி சர்டிபிகேட் வாங்க சென்னைக்குச் சென்றோம். ஆனால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான ஹால் டிக்கெட் எங்களுக்கு வரவில்லைஎன் மகள் அப்போது 7வது படித்துக் கொண்டிருந்தாள்.  அவ்வாறான பட்டமளிப்பு விழாவில் என் மகள் கலந்து கொண்டு பட்டம் பெற வேண்டுமென்ற ஆவலில் ஸ்ரீ அன்னையை மனமார வேண்டிக்கொண்டேன். விழாவில் கலந்து கொள்ள 4 மாநிலங்களிலிருந்து கூட்டம் வந்திருந்தது. அங்குச் சென்று ஆபீஸில், "எங்களிடம் ஹால் டிக்கெட் இல்லை. ஆனால் எக்ஸாம் பாஸ் செய்ததற்கான சான்று உள்ளது'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், "சேர்மன் மீட்டிங்கில் இருப்பதாகவும், எப்போது மீட்டிங் முடியும் என்று தெரியாதென்றும்'' சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் convocation நாங்கள் வராண்டாவில் வெயிட் பண்ணுவதாக சொல்லிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தோம்மீட்டிங் முடிந்து சேர்மன் வந்து கொண்டிருப்பதாக ஓர் அலுவலர் கிளார்க்கிடம் கூறினார். சேர்மனைப் பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்ஏனெனில், அவர் பகவானைப் போலவே இருந்தார்நீண்ட தாடியுடன், குர்தா அணிந்து, வயதில் பெரியவராக,அப்படியே ஸ்ரீ அரவிந்தரைப்போல் காட்சியளித்தார். அந்த கிளார்க் எங்களைப் பற்றிய விவரங்களை அவரிடம் தெரிவித்தார்மேலும் எங்களது formஇல் attest செய்ய எங்களைத் தெரிந்தவர்கள் இல்லாததால், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது கடினம் என்றும், மினிஸ்டர் வரவிருப்பதால் ஹால் டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். உடனே அந்தப் பெரியவர் எங்களை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, "இவர்களை எனக்கு நன்றாகத் தெரியும்'' என்று கூறி, மடமடவென்று formஐ attest  செய்து கொடுத்துவிட்டார். அந்த நிமிடம் எங்களின் நிலைமையை வார்த்தையால் சொல்ல முடியாது.

அன்னையின் அருள்மழையால் அடுத்த நாள் convocationஇல் கலந்து,என் மகள் பட்டம் பெற்றாள்.

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பக்தர்களில் சூழல் சூட்சுமமாக இருப்பதால், சிறு தவறும் பெரிய நஷ்டத்தை உடன் தருகிறது. நல்ல காரியமும் அதே தீவிரம் இருந்தால் உடன் பெரும்பலன் தரும்.

சிறியதனின் பெரிய பலன்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஓர் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளுதல், அதன் சிறப்பை உணர்தல், அதன் மீது ஆசைப்படுதல், அதற்கென ஆர்வம் கொள்ளுதல் ஆகியவை நாம் உள்ள நிலையில்தான் (plane)முடியும். நமக்கு மேற்பட்ட அல்லது கீழ்ப்பட்ட நிலையிலுள்ளவற்றின் மீது அது போன்ற ஆர்வம் ஏற்படாது. உணர்ச்சி வசப்பட்ட காரியங்களை மனம் நம்புவதில்லை. அவற்றை அர்த்தமற்றதாக அறிவு கருதும். பகவான் சொல்லும் யோக முயற்சி வளரும் ஆன்மாவுக்குரியது. நாம் மனத்திலிருந்து செயல்படுகிறோம். இடையில் 9 அல்லது 10 நிலைகளிருப்பதால் யோகத்தை மனம் முழு ஆர்வத்துடன் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இலட்சியச் சிறப்பை ஆர்வமாகப் பூர்த்தி செய்ய நம்மளவில்தான் முடியும்.

****


 


 book | by Dr. Radut