Skip to Content

07.உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

 உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி

மனிதனான பிரபஞ்சம்

      பிரபஞ்சம் மனிதனுள் ள்ளது. மனிதன் பிரபஞ்சத்துள் ள்ளான். பிரம்மம் இரண்டையும் கடந்தது, இரண்டையும் உட்கொண்டது.

மரணமான அமரவாழ்வு

      மரணமற்றது அமரவாழ்வு. மரணம் உடலையழித்துப் புது உடல் பிறக்க வழி செய்கிறது. மரணத்தால் உடல் அழிவதால் ஆத்மா மீண்டும் புது உடலில் பிறக்கிறது. உடல் அழிந்தாலும், அழிவது குறிப்பிட்ட ஓர் உடல். 'உடல்' என்பதை நிலைநிறுத்துவது , பிறப்புமரணம் வாழ்விற்கு நித்தியமளிக்கிறது என்பது பகவான் வாக்கு.

புருஷனான பிரகிருதி

     புருஷனும் பிரகிருதியும் எதிரானவைபிரகிருதியுள் புருஷன் உண்டுஅப் புருஷன் பரிணாம வளர்ச்சி பெறுகிறான்அது சைத்தியப்புருஷன்அவனுள் புருஷனும் பிரகிருதியும் அடங்கியவை.

     பகுதி, முழுமை, இரண்டையும் உட்கொண்ட பூரண முழுமை என்ற தத்துவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு அடிக்கல். அது தெளிவாகப் புரிந்தால், பெருந்தடை விலகும். இதுபோன்ற மற்ற கருத்துகளையும் எடுத்து ஆராய்ந்து விளக்கினால் மற்ற தடைகள் விலகும்.

பகுதி, முழுமை என்பதிலுள் அடுத்த அம்சம்

     முழுமை பகுதியாகப் பிரிகிறதுபகுதிகளைச் சேர்த்தால் மீண்டும் முழுமை வரும் என்பது அறிவு ஏற்கும் கருத்துஅது சில சமயங்களில் சரிசரியில்லாத சமயங்கள் உண்டுஒரு கடிகாரம் முழுமைஅதன் பாகங்களைப் பிரிக்கிறோம். மீண்டும் அவற்றை ஒரு கூடையில் ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டால், அது கடிகாரமாகாதுஅது கடிகாரத்தின் பகுதிகளேயாகும்கடிகாரம் என்ற முழுமைக்கும்அதன் பகுதிகள் சேர்ந்த தொகுப்பிற்கும் இடையே ஒரு வெளியுண்டுஅது சூட்சுமமானதுபகுதிகள் எப்படிச் சேர வேண்டும் என்பது பகுதிகளில் இல்லைஅது நம் மனத்திலுள்ளதுசூட்சும ஞானம்அதன்படி பகுதிகள் சேர்ந்தால் பகுதிகள் கடிகாரமாகும்எனவே முழுமை பகுதிகளின் தொகுப்பை விடப் பெரியது என்ற கருத்து நூலின் பல இடங்களில் வருகிறது. அதன் சூட்சுமம் புரிய வேண்டும்.

REVERSAL, தலைகீழான மாற்றம் 

-- நண்பர்கள் எதிரிகளாவது, எதிரிகள் நண்பர்களாவது தலைகீழ் மாற்றம்.

-- ஜனத்தொகை பெருகுவது நாம் பெற்ற சாபம் என்று 50 வருஷமாகப் பேசியவர்       ஜனத்தொகை பெருக்கம் நமக்குச் சாதகமானது என்கிறார்.

       மேல் மனம், ள் மனம், அடி மனம், சைத்தியப்புருஷன் என்பவை படிப்படியாக உள்ள நிலைகள் .

1) மேல் மனம்

       நாமறிந்தது, நாம் வாழ்வது மேல் மனத்தில்மனிதனுடைய மனம் சுருங்கி, குறுகி, காலத்திற்குக் கட்டுப்பட்டு, அகந்தையும் செயல்படச் சம்மதித்து, சிறியதாக (finite) ஆவது மேல் மனத்தில்.

     இதன் குணங்கள் :-

     நம் மனம் தலைகீழாகச் செயல்படும் இடம்ஆனந்தம் வலியாக மாறித் தோன்றும். Infinite இங்கு finite ஆகத் தோன்றும். Eternityகாலத்தைக் கடந்த நிலை . Time காலமாகத் தலைகீழே மாறும். ஜீவாத்மா சுருங்கி, அஞ்ஞானத்திற்குட்பட்டு அகந்தையாக இங்குக் காட்சியளிக்கும். தெய்வீக மனம், divine mind இங்கு மனித மனமாகிறது creature mindதெய்வீக மனம் சத்தியஜீவியத்திலிருந்து உற்பத்தியாகிறது. சத்தியஜீவியம் முழுப்பார்வையுடையது. அதன் ஒரு பார்வையில் உலகம் முழுவதும் தெரியும். தெய்வீக மனம் சிறியது. சிறியதானாலும் அந்த அளவில் முழுமையுடையது. அதற்கு சத்தியஜீவியம்போல் முழுப்பார்வையில்லை. ஒரு புறம் மட்டும் பார்க்க வல்லது. ஆனால் இருபுறமும் மாறி மாறிப் பார்க்க கூடியது. தெய்வீக மனம் இருபுறமும் பார்க்க மறுத்து ஒரு புறம் மட்டும் பார்க்க ஆரம்பிப்பது,

· தெய்வீக மனம் மனித மனமாவது.

·அது சத்தியஜீவியத்தை மனம்மறப்பது.

·அறியாமை ஆரம்பிக்கும் இடம் இது.

.அறியாமை ஆரம்பிக்கும் இடம் இது.

·திறமையை, கடமையை மறந்து பயன்படுத்த மறுப்பது அறியாமை.

· இப்படி மறப்பதன் ஏழு கட்டங்கள் ஏழு அஞ்ஞானமாகும்.

--பிரம்மத்தை மறப்பது ஆதியின் அஞ்ஞானம்.

--பிரபஞ்சப் பிரம்மத்தை மறப்பது பிரபஞ்ச அஞ்ஞானம்.

--உலகை மறந்து அகந்தையை ஏற்பது அகந்தையின் அஞ்ஞானம்.

--காலத்தின் உயர்ந்த நிலைகளை மறப்பது காலத்தின் அஞ்ஞானம்.

--ஜீவனின் பெருநிலைகளை மறப்பது மனத்தின் அஞ்ஞானம்.

--ஒரு பகுதி மற்ற பகுதிகளை மறப்பது அமைப்பின் அஞ்ஞானம்.

-- செய்வதறியாத நிலை நடைமுறை அஞ்ஞானம்.

·மேல் மனம் அடிமனம் தலைகீழே மாறுவதால் உற்பத்தியானது.

·அறியாமையை உற்பத்தி செய்த ஆண்டவன் அது பூரணம் பெற (perfectt) மேல் மனத்தை ஏற்படுத்தி அங்கு அதைப் பூரணமாக்கினான். அதற்காக அதைத் தலைகீழே மாற்றினான். படிப்பு முடியும்வரை பையன் உலகை மறக்க உலகைத் ‘துறப்பது’ அவன் வாழ்வைத் தலைகீழே மாற்றுவதாகக் கொள்ளலாம்.

2) ள் மனம் INNER MIND

இது மேல் மனத்தின் ஆழ்ந்த பகுதி.

இங்கு காலம் காலத்தைக் கடந்த நிலையாகத் தலைகீழாக மாறுகிறது.

அகந்தை மனோமயப்புருஷனாகிறது.

புலன்களால் அறியும் மனம் சூட்சுமமாக அறியும் மனமாக விரிவடைகிறது.

மேல்மனத்திற்கில்லாத சூட்சுமம் பெறுகிறதுசூட்சுமம் ஆன்மீகமில்லை.

Finite கண்டம் infinite அதற்கெதிரான அகண்டமாகிறது.

வலியாக மேல்மனம் ஆனந்தத்தை உணரும். ள்மனத்திற்கு வலியைக் கடக்கும் திறனுண்டு. . வலியை ஆனந்தமாக மாற்றும் திருவுருமாற்றும் திறனில்லை.

இங்குள் ஒரு நிலை நிர்வாணத்தையடைய உதவும்.

அடுத்த நிலை சைத்தியப்புருஷனைத் தேடிச் செல்லும் வாயிலாக அமையும்.

விரும்பினால் உலகையறியும் திறனுடையது.

ள்ளே போக அனுமதியளித்த உள்மனம் உயர்ந்து (தலை கீழே மாறி) மேலே போக உதவும் லோகமாகும்.

3) அடி மனம் SUBLIMINAL MIND

பாதாளமும் பரமாத்மாவும் சேருமிடம் இது.

இது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது.

இதில் மறைந்துள்ள குகையில் சைத்தியப்புருஷன் உறைகிறது.

பூரணயோகத்தை மேற்கொள்ளும் லோகம் இது.

வலியை ஆனந்தமாக்கும் திறனுடையது.

இதுவரை செய்த யோகங்கள்ள்மனத்துடன் முடிந்து விடுகின்றன.

அங்கு அதிகபட்சம் தெரிவது அக்ஷரப்பிரம்மம்.

அடிமனம் அக்ஷரப்பிரம்மம், க்ஷரப்பிரம்மம் சேர்ந்த முழுபிரம்மத்தையறிய வல்லது.

மேல்மனம் தலைகீழே மாறிய லோகம் அடிமனம்.

மேல்மனம், ள்மனம், அடிமனம், சைத்தியப்புருஷன் என்ற நான்கு நிலைகளும் இரண்டாகப் பிரிகின்றன. மேலேயுள்ளது ஜீவியம், அடியிலுள்ளது பொருள். எனவே 8 நிலைகள் ள்ளன.

ஒவ்வொரு நிலையும் விஷயத்தைத் தலைகீழே மாற்றித் தோற்றமாக்குகின்றன.

இந்த 8 தலைகீழ் மாற்றத்திற்கும் உதாரணம் தெரிவது நல்லது.

எந்த ஒரு செயலிலும் இந்த 8 தலைகீழ் மாற்றமும் உண்டு.அவை ஒரே செயலில் தெரிவது விவேகம் பெறும் தகுதி தரும். அவற்றுள் சில:

I)

முரண்பாடு உடன்பாடு.                                               தடை முன்னேற்றக் கருவி.

மேல்மனம் - ஜீவியம்

II)

தோல்வி வெற்றிக்குரிய பாதை. நஷ்டமடையாதவன் செல்வம் பெற முடியாது. டைபாய்டு வந்து பிழைத்தவர் உடலில் உள்ள ஊனம் ஒன்று மாறுவதுண்டு.

மேல்மனம் -பொருள்

III)

ஜடமான புலனறிவு சூட்சுமமாகிறது.         மனிதன் பேசுவதும் நினைப்பதும் எதிரானவை.

ள்மனம் - ஜீவியம்

IV)

அகந்தை மனோமயப்புருஷனாகிறான். சிந்தனை அழிந்து மௌனமாகி நிர்வாணம் எழுகிறது.                                                                       காலம் மாறிக் காலத்தைக் கடந்ததாகிறது.

ள்மனம் - பொருள்

V)

பூவுலகம் பிரபஞ்சமாகிறது.                                    காலம் மாறி மூன்றாம் நிலையை எய்துகிறது.

அடிமனம் - ஜீவியம்

VI)

வலி ஆனந்தமாகிறது.                                           பாதாளம் பரமாத்மாவாகிறது

அடிமனம் - பொருள்

VII)

ஆனந்தம் பிரம்மானந்தமாகிறது.               அகந்தையும், மனோமயப்புருஷனும் சைத்தியப்புருஷனாகின்றனர்.

சைத்தியப்புருஷன் - ஜீவியம்

VIII)

வேதனையான உலகம் அற்புதமாகிறது. உலகினின்று தீமையழிகிறது.                     பாதாளமும், பரமாத்மாவும்                          மனத்தில் சந்திக்கின்றன.

சைத்தியப்புருஷன்- பொருள்

இந்நிலைகள் மாற உதவுவன

I) அறிவு II) விவேகம் III) நிஷ்டை IV) நிஷ்டைபலித்த தவம் V) சமர்ப்பணம் VI)சரணாகதி VII) உடலுணர்வின் சமர்ப்பணம் VIII) பூரணச் சரணாகதி.

      நம் வாழ்வை விமர்சனம் செய்து இந்த எட்டு நிலைகட்குரிய நிகழ்ச்சிகளைக் காண்பது விவேகம், ஆன்மீகப் பொறுமை, நிதானம் தரும். ஒரே நிகழ்ச்சியில் இவ்வெட்டு நிலைகளைக் காணச் சமர்ப்பணம் உயர்ந்து சரணாகதியாகி பூரணம் பெற வேண்டும். அது யோக வாழ்வுக்குரிய ஞானம். இந்த எட்டு நிலைகட்கும் நமக்குத் தெரிந்த உதாரணங்களை ஓரளவு கூறலாம்.

I)

முரண்பாடு,                       உடன்பாடு.

கணவன் மனைவி பிணக்கு.                     அன்பின் அடையாளம்.

II)

தோல்வி வெற்றிக்குரிய பாதை.

லிங்கன், சாக்ரடீஸ் மனைவிகளின் அன்பு வெளிப்படுதல். ஒருவர் துடைப்பத்தால் லிங்கனை அடித்து விரட்டினார். அடுத்தவர் மலம் நிறைந்த பானையை தலையில் போட்டு உடைத்தார்.

III)

நினைவும் செயலும் எதிரானவை.

அகல்யா இந்திரனை அனுபவித்துக் கல்லானது.

IV)

காலம் மாறி காலத்தைக் கடந்தது.

நளாயினி சூரியனை நிறுத்தியது.

V)

பூவுலகம் பிரபஞ்சமாகிறது.      காலம் மூன்றாம் நிலைக் காலமாகிறது.

அனுசூயா திருமூர்த்திகளைக் குழந்தையாக மாற்றியது.

VI)

வலி ஆனந்தமாகிறது

பீஷ்மர் அம்புப் படுக்கையில் உள்ள பொழுது கிருஷ்ணன் வலியை எடுத்தது.

VII)

ஆனந்தம் பிரம்மானந்தமாகிறது.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணலீலை.

VIII)

வேதனையான உலகம் அற்புதமாவது.

கொல்ல வந்த புலி தன்னைத் தன்னைத் தின்ன வேண்டும்என உடல் விழைந்தது.

     நம் வாழ்வில் இந்த எட்டு நிகழ்ச்சிகளும் ஒரே செயலில் மனத்திற்கு விளக்குவது ஞானம்அதை ஏற்பது ஞான சித்தி. அதைச் செயல்படுத்துவது சத்தியஜீவிய சித்தி. மேற்சொன்ன 8 உதாரணங்கள் not precisely exact மிகவும் பொருத்தமானவை இல்லை.They indicate. அவை சுட்டிக்காட்ட உதவும். சொந்த அனுபவம் சொர்க்கம். சொந்த அனுபவம் சுட்டிக் காட்டுபவற்றை ஐயம் திரிபு அறத் தெளிவுபடுத்தும். இவற்றை ஒருவர் பின்பற்றிப் பலனடைய வேண்டுமானால்

I) பிணக்கு எழுந்தபொழுது அதை வளர்க்காமல், அதில் அன்பு வெளிப்பட வழியிருக்கிறதாஎன ஆராய்வது,

II) கடந்த காலத் தோல்விகள் பிறகு நமக்கு வெற்றிக்கு வழி செய்தவற்றை யோசனை செய்து அறிவது,

III) தவற்றை ரசித்து அனுபவித்த நிகழ்ச்சி பின்னால் வேதனை தந்ததையும், வேதனை முடிந்தபின் அதுவே பண்பானதையும் நம் வாழ்வில் இருந்ததை அல்லது பிறர் வாழ்வில் காண முயல்வது,

IV) நெறி பிறழாத நேரம் வாழ்வில் காலம் கட்டுப்படுவதை நம் வாழ்வில் சோதனையாகச் செய்து அறியலாம்,

V) எதிரி மட்டமாக நம்மை அவமானப்படுத்த முயலும் பொழுது பொறுமையும், அன்னை மீது நம்பிக்கையும் அவர்களே அவமானப்படுவதைக் காட்டும்,

VI) பொறுக்க முடியாத வேதனைக்குக் காரணம் புரிந்து விளங்கியவுடன் வலி அகலும்,

VII) பக்தியும், நம்பிக்கையும் மனிதகட்டத்தைத் தாண்டும் பொழுது தவறான செய்கை ஆனந்தம் தருவதைக் காணலாம்,

VIII) கொல்ல வருபவனை - நம்மை அழிக்க வருபவனை - இறைவனாகக் கருதிய நேரம் வேதனை பூரிப்பான இன்பமாகும்.

PROCESS OF CREATION

சிருஷ்டியின் சூட்சுமம் இரகஸ்யமானது

--ஸ்ரீ அரவிந்தர் முழுப் பிரம்மத்தைக் கண்டார். அவரே முழுப் பிரம்மமானார்.

அது இறைவன் வரும் தருணம்.

நெடுநாள் பாடுபடும் பொழுது பலன் தெரியாது. பாடு தெரியும். பலன் தெரியும் பொழுது ஆயிரமாண்டில் நடப்பது அரை க்ஷணத்தில் நடக்கும்.

அந்த நேரம் வந்தபொழுது பகவான் உலகில் அவதரித்தார்.

(அதன்பின் 7ஆம் வயதில் டார்ஜிலிங் பள்ளியில் சேர்ந்த பொழுது காரிருள் அவருள் நுழைந்ததுஅவர் பிறந்தவுடன் தாயார் சித்த ஸ்வாதீனமிழந்தார்.

7ஆம் ஆண்டு முதல் 21ஆம் ஆண்டுவரை பணமில்லாமல், சாப்பாடின்றி, குளிரில், கோட்டில்லாமல் சித்ரவதைப்பட்டார்.

உடன் பிறந்தவருடன் இந்தியா திரும்பும் பொழுது தவறான செய்தி தகப்பனார் உயிரை எடுத்ததுபகவான் புறப்பட்ட கப்பல் பெயரைத் தந்தி மூலம் தகப்பனார் அறிந்தார்பகவான் வேறொரு கப்பலுக்கு மாறியது தகப்பனாருக்கு அறிவிக்கப்படவில்லை.   பேப்பரில் தகப்பனார் முதல் கப்பல் மூழ்கியதாகப் பார்த்து மாரடைத்து இறந்தார். 1910இல் பகவான் தம்பி பரீன் தூக்குத் தண்டனை பெற்றார்பிறகு அது ஆயுள் தண்டனையாக மாறி விடுதலை பெற்று 1959 வரை உயிரோடிருந்தார்இது அவர் வாழ்வு).

--முழுப் பிரம்மத்தில் அசைவற்ற அக்ஷரப் பிரம்மம் பகுதி.                                   (ரிஷிகளும் கீதையும் அதுவரை சாதித்தனர்.) முழுபிரம்மம் சத்தாகி - சச்சிதானந்தமாகி - சத்தியஜீவியமாகி, மனம், உயிர், உடலாகி சிருஷ்டி முடிந்து, பரிணாமம் ஆரம்பித்து ஜடம் வாழ்வாக மலர்ந்து மனமாகப் பூரித்து மனிதனாக நாமிருக்கிறோம். இத்தனை மாறுதல்களும் மேல் மனத்தில். நாமிருக்கிறோம். ள்ளே முழுப் பிரம்மம், பிரம்மமாகவேயுள்ளது. அதில் எந்த மாற்றமுமில்லை. மாற்றம் தோற்றத்திள்லுது. அது நம் மேல் மனத்திற்குரியது.

---பூரணப் பிரம்மம் சிருஷ்டியின் முதற் கட்டமாக சத் ஆயிற்று. அதை நாம் சச்சிதானந்தம் என்கிறோம். பிரம்மம் (Self-Conception) தன் இச்சையால் ஆனந்தத்தைத் தேடி சத் ஆனவுடன், பிரம்ம ஜீவியம் (the consciousness of the Absolute) வெளிப்படுகிறது. அதை தெய்வீக மாயை வெளிப்படுகிறது. அதை தெய்வீக மாயை என்கிறோம். அது சத்தை மூன்று பாகமாகப் பிரித்து சத்தை மூன்று பாகமாகப் பிரித்து --பிரிக்காமல் பிரித்து சச்சிதானந்தமாக்கியது.

--சிருஷ்டியின் சூட்சும இரகஸ்யம் அகம் புறமாவது (objectifying) என்கிறார் பகவான். அகமான பிரம்மம் இரண்டாகப் புறமான சிருஷ்டியாகிறது.

சச்சிதானந்தம் புறமானால் அது சத்தியஜீவியமாகும்.

(சத், அகம், புறம் எனப் பிரிந்தால் அகம் ஆத்மாவாகவும், புறம் சத்தியமாகவுமாகிறது. ஜீவியம் அகம், புறமாகப் பிரிவது அகத்தில் காலமாகவும், புறத்தில் இடமாகவுமாகிறது. சத்தியஜீவியம் அகமான இறைவனாகவும் புறமான பிரபஞ்சமாகவுமாயிற்று.)

--சத்தியஜீவியம் அகம் சிருஷ்டி புறம் எனப் பிரியும் பொழுது அகத்திற்கும், புறத்திற்குமிடையில் காலம் உற்பத்தியாகி மனமாக மாறுகிறது. மனம் கருவி காலம் அதன் செயல். காலம் அதன் செயல்.

அது தெய்வீக மனமாக ஆரம்பித்து மனித மனமாக மாறி,மாறி,அது தெய்வீக மனமாக ஆரம்பித்து மனித மனமாக மாறி, வாழ்வையும், ஜடத்தையும் சிருஷ்டிக்கிறது.

--மனம் இரு பகுதிகள் கொண்டது. ஒன்று ஞானம். அடுத்தது செயலாற்றும் மனோ உறுதி. இதைச் செயல் எனவோ, ஆற்றலெனவோ, உறுதியெனவோ கூறலாம். ஞானத்திற்குத் திறனில்லை. உறுதிக்கு ஞானமில்லை. ஞானம் உறுதியை வழி நடத்தினால் (acts on will) சக்தி உற்பத்தியாகிறது. சக்திக்குச் சலனமுண்டு. அச்சலனம் வாழ்வெனப்படும். It is the plane of life.வாழ்வுக்கு ஞானமில்லை. ஆனால் ஓட்டம் உண்டு. உருவமில்லை. ஓட்டம் ஞானத்தைக் கிரகித்துக் கொள்ளும். ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் உறுதி சக்தி பெறும். ஞானம் சுருங்கும். சுருங்கும் ஞானம் ரூபம் பெறும்.

ஞானம் முழுவதும் உறுதியில் மறைந்து ரூபத்தில் அழிந்தால் ஜடம் ஏற்படும்.

பாதாளமும், பரமாத்மாவும்

சிருஷ்டியைச் செய்வது மாயை. அதற்கு மூன்று திறமைகளுண்டு Self-conception, Self-limitation, Self-absorption. தன்னிச்சையான சிந்தனை, தன்னை அளவுக்குட்படுத்துவது, தன்னையே தன்னுள் கிரகித்துக் கொள்வது.

--முதல் திறமை சச்சிதானந்தத்தை சிருஷ்டித்தது. அதை சத் என சிருஷ்டித்தது.

--இரண்டாம் திறனால் சத் என்பதை சத் எனவும், சித் எனவும், ஆனந்தமெனவும் வரையறுத்துக் கொண்டது.

--மூன்றாம் திறமையால் சித் தன்னைத் தன்னுள்கிரகித்துக் கொண்டதால் அது காரிருளாக மாறியது. அதற்கெதிரானது பரமாத்மா.(Consciousness by self-absorption has become Superconscient and Inconscient is its opposite.)அவற்றைப் பரமாத்மா* எனவும், பாதாளம் எனவும் குருப்பிடுகிறேன்

--அது பரமாத்மாவாக இருந்தாலும், பாதாளமாக இருந்தாலும் அது பிரம்மமே.

--Superconscient  பரமாத்மா எனில் ஜீவியத்திற்கு எட்டாத உயரத்திலுள்ளது எனப் பொருள். இந்த இடைவெளியான உயரம் ஜீவியம் தன்னைக் கிரகித்துக் கொண்டதால் வந்தது. நாம் ஒரு வேலையில் நெடுநாள் ஈடுபட்டால் நாம் அந்த வேலையாகவே மாறி விடுகிறோம். நாம் ஏற்கனவே இருந்த நிலை நமக்குத் தற்சமயம் புரியாதது போலிருக்கிறது. பார்லிமெண்டில் மெம்பரானவர் அத்துடன் லயித்துவிட்டால், பழைய நிலைக்கும், புது நிலைக்கும் இடைவெளியேற்படும். புது நிலை புரியாத அளவுக்கு உயர்ந்துவிடும்.Superconscient என்பது ஜீவியம் உயர்ந்து மனித மனம் அறிய முடியாதபடி உயர்வது. இந்நிலையுள் ரிஷி, முனிவர், யோகி, தெய்வம், அக்ஷரப்பிரம்மம், புருஷோத்தமன் ஆகியவை பல கட்டங்களாக இருக்கின்றன.

--பாதாளம் என்பது இருள். இதற்கும் கீழே Inconscience ஜட இருள் உண்டு. ஜட இருள் பரிணாம வளர்ச்சியால் பாதாளமாகிறது. பாதாளமும்,பரமாத்மாவும் அடிமனத்தில் சந்திக்கின்றன. அல்லது அவையிரண்டும் சந்திக்குமிடத்தில் அடிமனம் உற்பத்தியாகிறது. இப்பாதாளத்துள் பரமாத்மா புதைந்துள்ளது. பரிணாமத்தால் அப்பரமாத்மா வெளிவரும். அப்படி வந்த நிலைகள் 1) ஜடம் 2) வாழ்வு 3) மனம் - மனிதன்.

     பாதாளத்துள் பரமாத்மா புதைந்திருப்பதாலும், பரிணாமத்தால் பாதாளம் முடிவில் பரமாத்மாவாகும் என்பதாலும், பாதாளமும், பரமாத்மாவும் ஒன்று.

YOGA OF SELF -PERFECTION

பூரணமான சிறப்பை, பிரம்மம் எய்தும் யோகம்

··யோகம் என்பது இணைவது, மனிதனும் இறைவனும் இணைவது யோகம். அது சமாதி. சமாதி நிலையில் மேலே புற்று எழும், உடலில் சூடு போட்டால் தெரியாது. இதை சமாதி எனவும், அதன் உச்சகட்டத்தை நிர்விகல்ப சமாதி என்றும் கூறுவர். இறைவனுக்கும் நமக்கும் இடையேயுள் விகல்பத்தை விலக்குவது நிர்விகல்ப சமாதி. இதன் நிலைகள் மூன்று. ஹடயோகம் உடலாலும், கர்மயோகம் பிராணனாலும், ஞானயோகம் எண்ணத்தாலும், ராஜயோகம் மனத்தாலும், தந்திரயோகம் அனைத்தாலும் மோட்சம் பெறுகின்றன.

      ஜீவாத்மா என்பது நமது ஜீவன் முழுவதற்கும் உள்ள ஆத்மா. இதன் பகுதிகள் மனம், உயிர், உடலாகும். ஒவ்வொரு பகுதிக்கும், அப்பகுதிக்குள்ள ஆத்மாவுண்டு. உடல் என்பதை சமஸ்கிருதத்தில் அன்னம் என்பர். இதற்குரிய ஆத்மாவுக்கு அன்னமயப் புருஷன் எனப் பெயர். உயிருக்குப் பிராணன் எனப் பெயர். இதன் ஆத்மாவுக்குப் பிராணமயப்புருஷன் எனவும் மனத்தின் ஆத்மாவுக்கு மனோமயப்புருஷன் எனவும் பெயர். இவை ஜீவாத்மாவின் பகுதிகள். உடல், உயிர், மனத்திற்கு ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் உண்டு. உடலுக்கு உயிருண்டு. மனம் உண்டு. உயிருக்கு உடலும், மனமும் உண்டு. மனத்திற்கு உடலும், உயிரும் உண்டு. அனைத்திற்கும் ஆத்மாவுண்டு. உடல் உடலாகச் செயல்பட்டால் மனிதன் மண்ணாங்கட்டியாவான். உடலுக்குள் உயிரெழுந்தால் அவன் சுறுசுறுப்பாக இருப்பான். உடலுக்குரிய உயிரில் மனம் வெளிப்பட்டால் அவன் செய்யும் காரியங்களில் - உடலால் செய்யும் காரியங்களில் - அறிவு வெளிப்படும். அவனை crafts manஎன்கிறோம். தச்சன், கருமான், பத்தன் இதைச் சேர்ந்தவன். மனம் அறிவாக வெளிப்படுவதைப் போல் உடலில் ஆத்மா வெளிப்பட்டால், அது அன்னமயப் புருஷனாக இருக்காது. அது சைத்தியப் புருஷனாக இருக்கும். அது உடலுக்குரிய சைத்தியப்புருஷன் (Physical Psychic being). அன்னமயப்புருஷன் மூலாதாரத்தில் உள்ளது. அது வளராத ஆத்மா. சைத்தியப்புருஷன் வளரும் ஆத்மா.

··வளராத ஆத்மா மோட்சத்தை நாடும்.

··வளரும் ஆத்மா திருவுருமாற்றத்தைத் தேடும்.

      ஆத்மா வளரக் கூடியதுஎன்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் முதலில் கூறியது. அதனால் பூரண யோகத்தை அவர் ஆன்மீகப் பரிணாம யோகம் என்றார். மனம் வளராவிட்டால் உடலுக்கு ஆயுள் குறைவு. உயிர் வளராத காலத்தில் மனிதனுடைய சராசரி ஆயுள் குறைவு. உயிர் வளராத காலத்தில் மனிதனுடைய சராசரி ஆயுள் 10 வருஷம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். மனம் வளராத காலத்தில் அது 30 ஆண்டாக இருந்தது. மனம் வளரும் இக்காலத்தில் அது 70 ஆண்டைத் தொடுகிறது. இது உடலின் மனம். மனத்தின் மனமில்லை. உடலின் ஆன்மா வளர ஆரம்பித்தால் உடலுக்கு மரணமில்லை. வளராத ஆத்மாவுக்கு மோட்சம் உடல் மூலம் அல்லது உயிர் மூலம் அல்லது மனம் மூலம் பெறலாம். உடல் மூலம் பெற ஹடயோகமும், உயிர் மூலம் பெற கர்மயோகமும், உணர்ச்சி மூலம் பெற பக்தியோகமும், மனம் மூலம் பெற ஞான யோகமும் உதவும். இவையனைத்தும் ஒரு கரணம் மூலம் செய்யும் யோகம். தந்திரயோகம் ஓரளவு அனைத்து யோகங்களையும் இணைத்தது. அது பூரணயோகச் சாயல் உடையது. பூரண யோகத்தை ஒரு கரணத்தால் செய்ய முடியாது. எல்லாக் கரணங்கள் மூலமும், அதாவது ஜீவன் மூலம் மட்டும், செய்ய முடியும். தந்திரயோகம் ஹடயோக ஆசனங்களையும், பிராணாமத்தையும் கூடப் பயன்படுத்துகிறது. பூரணயோகம் இது போன்ற முறைகளை அறவே விலக்குகிறது. ஹடயோகம் மனிதனை உடலில் உள்ள ஆத்மாவாகக் கருதுவதால் அதை உடலில் ஆரம்பிக்கிறது. ரயிலும், விமானமும் வந்தபின் காசியாத்திரையைக் கால்நடையாக மேற்கொள் வேண்டிய அவசியமில்லை. பிரம்மத்தின் பகுதியைப் பிரம்மமாக அறிந்த மனமே முடிவான கருவியான காலத்திற்கு அது உரியது. முழுப் பிரம்மத்தைக் கண்டபின், மனத்தைக் கடந்த சத்தியஜீவியம் கருவியாகும். அதனால் யோகத்தை அடியிலிருந்து - உடலிலிருந்து - ஆரம்பிக்காமல், உச்சகட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மனத்திலிருந்து, மனத்தின் ஆத்மாவிலிருந்து -வளரும் ஆத்மா - ஆரம்பிக்கலாம்அது மனோமயப்புருஷனில்லைசைத்தியப்புருஷன்சைத்தியப்புருஷன் சத்தியஜீவியப் பிரதிநிதி என்பதால் அங்கு ஆரம்பிக்கலாம். இம்மாற்றம் 30,000 ஆண்டுகளை ஆண்டுகளை 30 ஆண்டாக மாற்றும். இதன் கருவி சரணாகதி.          

      பூரணயோகம் சிறிய பாதை மூலம் பெரிய பலனையடைய வல்லது.

·· பாதை சிறியதானால் பலன் பெரியது.

·· தந்திரயோகத்தின் முடிவான பலனை முதலில் பெறக்கூடியது.

·· மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்தை இறைவனின் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்திற்கு முழுவதும் அர்ப்பணிப்பது சரணாகதி.

·· சரணாகதியால் அகந்தை கரைந்து ஆத்மாவாகிறது.

·· அது பிரபஞ்ச ஆத்மாவாகும்.

·· அவ்வாத்மா, பிரபஞ்ச வாழ்வை அனுபவிப்பது பூரணயோகம்.

·· மேலும் அப்பிரபஞ்ச ஆத்மா பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்ம ஆத்மாவாகும்.

·· அதைப் பெற நாம் ஆத்மாவைச் சரணம் செய்ததைப் போல் நம் சுபாவத்தையும் தெய்வீக சுபாவத்திற்குச் சரணம் செய்ய வேண்டும்.

        The Synthesis of Yoga நான்கு பகுதிகளைக் கொண்டது. கர்மயோகம் முதற் பகுதி. ஞானயோகம் இரண்டாம் பகுதிபக்தியோகம் அடுத்ததுபூரணயோகம் முடிவானதுஇதில் 25 அத்தியாயங்கள்ள்ளனமேலே எழுதியது முதல் அத்தியாயம் பூரணயோகத் தத்துவத்தை” விளக்குவது.

··இரண்டாம் அத்தியாயம் ஞானம் - பூரணயோக ஞானம்.

··நாம் எதை ஆர்வமாக ஏற்கின்றோமோ நாம் அதுவாக மாறுவோம்என்பது அடுத்த அத்தியாயம்.

··அடுத்த பகுதிகள் மனமும், சுபாவமும் தூய்மைப்பட வேண்டும், அப்படித் தூய்மையடைந்தால் Perfection சிறப்படையலாம்.

··Perfection பெற்றால் சமத்துவம் எழும்.

··சிறப்பையெய்திய ஆத்மா சமத்துவம் பெறுவது faith நம்பிக்கையெழுவது.

··நான்கு கரணங்கள் கலந்து சுமுகம் பெறுவது அவசியம்.

         பூரணயோகத் தத்துவத்தை அறிந்து, ஞானத்தால் இறைவனாக ஆஸ்ரயித்து, மனமும் சுபாவமும் தூய்மையானால் -அகந்தையழிந்து, இரட்டையொழிந்து - Perfection சிறப்படையும் ஆத்மா சமத்துவம் பெற்று நம்பிக்கையால் செயல்பட்டால், சக்தியை நம்மில் செயல்பட அனுமதித்தால்மனம் சத்தியஜீவிய மனமாக உயரும் என்பது இந்த 25 அத்தியாயங்களின் சுருக்கம்.

      சத்தியஜீவியத்தைப் பற்றிய அத்தியாயங்கள் ஏழு.

··ஓர் அத்தியாயம் சத்தியஜீவியச் சுபாவத்தையும் அடுத்தது அதன் நிலைகளையும் கூறுகின்றது.

··அடுத்தது யோகியின் மனம்.

·· சத்தியஜீவிய எண்ணம்எண்ணம் செயல்படும் வகை, சத்தியஜீவிய உணர்வு ஆகிய அத்தியாயங்கள் திரிகால திருஷ்டியில் முடிகின்றதுஅதை சத்தியஜீவிய கால திருஷ்டி எனத் தலைப்பிட்டுள்ளார்.

      இதன் சுருக்கத்தில் மனத்தின் மூன்று நிலைகளைக் கூறுகிறார்முதல் நிலை இன்று நாமுள்ள நிலைஜாக்கிரதா என்பதுஇரண்டாம் நிலை நாம் மறந்துள்ள மனம்அதாவது “உலகத்து ஞானம் உள்ளே” என்பது. அறிய வேண்டியது அனைத்தும் அகத்துள் என்ற நிலைள்ளே போனால் உலகம் இருக்கிறது என்ற நிலைதிரிகால திருஷ்டி என்பது அதைக் கடந்ததுயோக முதிர்ச்சியில் முடிவாகக் கருதப்படுவதுஇதுவரை திரிகால திருஷ்டி எனப்படும்பகவான் கூறும் திருஷ்டி இதுவரை உலகிலில்லாத மூன்றாம் நிலைக் காலத்திற்குரிய திருஷ்டிஇது அற்புதம்உலகம் திருவுருமாறி, தீமையழிந்த நிலையில் உள்ள திருஷ்டி. நாமறிந்த திரிகாலம் கடந்த காலத்தைப் போன்றது.   அது முதல்நிலை காலத்திற்குரியதுமுதல் நிலை காலத்தில் நாம் வாழ்கிறோம்இங்கு, காலம் கட்டம் கட்டமாக நகர்கிறது (successive movements)காலத்தைக் கடந்த நிலை -ரிஷியின் நிலை - அதி வேகமானது. ஆனால் முதல்நிலை காலத்தைப் போன்றது. ரிஷி நட்ட விதை உடனே மரமாவது போன்றது. அது Supremental Time Visionசத்தியஜீவிய திருஷ்டியாகாது.

··நாம் வாழும் காலம் முதல்நிலை காலம்நாம் ஓர் ஆபீசில் வேலை செய்வதை உதாரணமாகக் கூறலாம்இந்த வேலையில் பிரமோஷன் சீனியாரிட்டியால் வரும்கிளார்க், ஆபீசர், பெரிய ஆபீசர்என சர்வீஸ் பேரால் வரும். ஆபீசர்,

··காலத்தைக் கடந்த நிலை பெரிய ஆபீசராக நேரடியாக வேலையில் சேர்ந்து இலாக்காத் தலைவராவதுஅது பெரியது என்றாலும் ஆபீசர் வாழ்வாகும்அரசியல் அதிகாரம் பெற்றதாகாது.

··பகவான் கூறுவது (next plane) அடுத்த உயர்ந்த சத்தியஜீவியப் பரிணாமக் கட்டம். அது அரசியல். தொண்டன் தலைவனாகும் லோகம். இதுவரை ரிஷிகள் கண்டறியாத லோகம்.

      1947 க்கு முன் நம்மவர் முனிசிபல் சேர்மனாக இருந்தனர்.  MLA யாக இருந்தனர். டெல்லி சட்ட சபையில் மெம்பராக இருந்தனர்மாநிலத்தில் மந்திரியாக, முதன் மந்திரியாகவும் டெல்லி சர்க்காரில் மத்திய மந்திரியாகவுமிருந்தனர்அவை வைஸ்ராய் தயவால் கிடைத்த பதவிகள். எலக்க்ஷன்    மூலம் பெற்ற இடமானாலும், அடிமை நாட்டுத் தேர்தலில் அன்னியன் கொடுத்த சலுகை. இன்று அதே பதவிகள் சுதந்திரமான நாட்டில், நாம் நடத்தும் தேர்தலில், நாம் பெறும் பதவிகள். அதுவே பழைய மௌனம், ஞானம், திரிகால திருஷ்டிக்கும், ஸ்ரீ அரவிந்தர் தரும் மௌனம், ஞானம், திரிகால திருஷ்டிக்கும் உள்ள வித்தியாசம்உலகம் அறிந்த திரிகாலம் காலத்திற்குரியதுஸ்ரீ அரவிந்தர் கூறும் திரிகாலம் முழுப் பிரம்மத்திற்கும், மூன்றாம்நிலை காலத்திற்கும் உரியது. ஆயிரமாண்டுமுன் உலகம் சுற்றியவருண்டு. இன்றும் உலகம் சுற்றுபவருண்டு. அதே வித்தியாசம் வாழ்வுக்கும் ஸ்ரீ அரவிந்தத்திற்கும் எல்லா இடங்களிலும் உண்டு.

தொடரும்...

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மா, தன் கவலைகளை மறக்க வேண்டும். ஆன்மா, தன் சந்தோஷத்தை மறக்க வேண்டும். ஆன்மாவுக்குச் சந்தோஷமோ, கவலையோ இல்லையல்லவா? அவற்றை ஏற்பதே ஆன்மாவுக்குக் கவலையாக முடிகிறது. ஆன்மா சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், எதையும் ஏற்கக் கூடாது; சந்தோஷத்தையும் ஏற்கக் கூடாது.

கடந்த நிலை ஆனந்தத்தையும் கடந்தது.


 


 


 


 


 



book | by Dr. Radut