Skip to Content

12.வேலையில்லாத இளைஞர்கள்

வேலையில்லாத இளைஞர்கள்

இன்ஜினீயரிங் டிப்ளமா பெற்ற இரு இளைஞர்கள் திருச்சியிலிருந்து வேலை தேடி சென்னைக்கு, தியான மையத்திற்கு வந்தார்கள். வேலை கேட்டால், அன்னை வேலை தருவார்கள் என்பது மையம் கொடுத்த செய்தி. அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. தினமும் மையம் வந்து பிரார்த்தனை செய்தனர். மூன்றாம் நாள் ஒருவருக்கு மூன்று மாத வேலை கிடைத்தது. முதல் மாதம், சற்று சம்பளம் அதிகமாக வேறொரு கம்பனியில் கிடைத்தது. அடுத்த மாதம் நல்ல சம்பளத்தில் பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது. அடுத்தவருக்கு வேலை கிடைக்க 3 மாதங்களாயின. கிடைத்தவுடன் அவரை டென்மார்க்குக்கு, பயிற்சிக்காக அனுப்பச் சிபாரிசு செய்தனர்.

"புதியதாய் வந்த என்னை வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நான் பயிற்சி முடிந்து என் senior ரிடம் வந்து வேலை செய்ய வேண்டுமே'' என அவர் மனம் கலங்கியுள்ள நேரம், அவருடைய seniorஐ டென்மார்க்கிற்கே இவருக்கு மேலதிகாரியாகப் பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

-வேலையில்லை என்பது படித்த இளைஞர்கட்கு சிம்மசொப்பனம்.

-வாழ்வில் சிம்மசொப்பனம், சித்ரவதை வருவதுண்டு.

-அவை வரக்கூடாது, வந்தால் தப்பிப்பது அரிது.

-அன்னையை அறிந்தோர்க்கு சிம்மசொப்பனமில்லை; இருந்தால் அது வாய்ப்பாக மாறும்.

-உடனே வேலை கிடைப்பது பொது.

-நாள் தள்ளியும் கிடைக்கும்.

-எவ்வளவு தாமதமாகிறதோ, அவ்வளவு பெரியது வரும். தாமதிக்காது; தாமதித்தால் தகுதிக்கு மீறியது வருவதால் தாமதமாகிறது என்பது தத்துவம்.

*******


 



book | by Dr. Radut