Skip to Content

03.சாவித்ரி

"சாவித்ரி"

P.50 The earth is a brute mechanic accident.

பூவுலகம் முரட்டுத்தனத்தின் அசந்தர்ப்பம்.

  • வாழ்வு மரணமெனும் வலையில் நாம் தற்செயலாய் பெற்ற வரம்.
  • யாம் பெற்ற பெரிய ஞானம் சந்தேகத்தின் யூகம்.
  • முடிவான சாதனை மூலத்திற்கு வகுத்த வழி.
  • மூலத்தின் முடிவு ஊனக்கண்ணுக்கு எட்டாதது.
  • தவறி நடந்தது; தவிர்க்கக்கூடிய தலைவிதி.
  • அறியாமை மூலம் தெரியாததை நாடுகிறோம்.
  • காலத்தின் துளியைச் சூழ்ந்துள்ள சூழல்.
  • பதிலற்ற கேள்வியின் ஒளியற்ற நிழல்.
  • இருண்ட ஜடத்தின் சுவடற்ற புதிர்.
  • விதியின் கதிக்குப் பின்னால் நிற்கும் விவரமற்ற தெளிவு.
  • இருளின் கடுமையில் எழும் ஆர்வம்.
  • அழியும் உடலின்வித்து, அறியாமையின் அரைகுறை விளக்கம்.
  • விழித்தெழும் கனலின் தனித்துறையும் நாக்கு.
  • அழியாத ஜோதியை நாடும் தன்னையிழந்த எழுச்சி.
  • தன் குரலின் எதிரொலியே தான் பெற்ற பேறு.
  • மருண்ட இதயத்தின் மிரண்ட குரல்.
  • ஏனென அறியாத இதயத்தின் இருண்ட இனிமை.
  • காரணமற்ற கருமையின் கொடுமை.
  • வாழ்வின் புதிருக்கு ஆண்டவன் அளித்த உத்தரவு.
  • காலத்தில் பிறந்த அமரனின் புதிர்.
  • பாம்பென எழுந்த யுகங்களின் பாதை.
  • கறுத்து, சுருண்ட இருளின்பாதை.
  • காலத்தின் துளிகளில் உழலும் பூமாதேவி.
  • உள்ளுறை ஜீவனை உணரும் நம்பிக்கை.
  • செவிக்கெட்டாத சொல்லின் ஒலி.
  • கடுமைப்படுத்தும் விதியின்கையைக் காண முடியவில்லை.
  • சூன்யத்துள் செல்லும் மயங்கிய நெறி.
  • விளக்கமற்ற ஆழத்தைவிட்டு விரைந்தெழும் முயற்சி.
  • தடுமாறும் வாழ்வின் தத்தளிக்கும் இன்பம்.
  • சுட்டிக்காட்டும் எட்டாத அறிவு.
  • அசைந்தெழுந்து நெளியும் சிருஷ்டி.
  • ஒளியை மிஞ்சிய எண்ணத்தின் சொல்.
  • ஆனந்தத்தை நாடும் பதட்டமான சந்தோஷம்.
  • அழியும்அழகு, பணியும் பக்குவம்.
  • கவலையின் எச்சரிக்கை காலைப் பின்னுகிறது.

******* 

Comments

03.சாவித்ரி Point 25 -  

03.சாவித்ரி
 
Point 25 -   சொல்ன்ஒ.     -    சொல்லின்ஒலி



book | by Dr. Radut