Skip to Content

07.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Submission to the higher is the basis of the freedom of the lower.

சிறியது சுதந்திரம் பெற பெரியதற்குப் பணியவேண்டும்.

  • சுதந்திரம் என்பது தடைகளை விலக்குவது.
  • பூரணசுதந்திரம் என்றால் தடைகள், அளவுகள், எல்லை, பூரணமாக இல்லாமலிருப்பது - பூரணசுதந்திரம் ஆனந்தமாகும்.
    • தடையிருந்தால் அனுபவிக்கமுடியாது.
    • சமூகம் தடைசெய்யும்.
    • குடும்பம் தடைசெய்யும்.
    • மனச்சாட்சி தடைசெய்யும்.
    • தர்ம நியாயம் தடைசெய்யும்.
    • தடைஎன ஒன்றில்லாவிட்டால் அனுபவிக்கமுடிவில்லை. முடிவில்லாத அனுபவம் ஆனந்தம்.
    • அகமான ஆனந்தம் புறமான அனந்தம். அனந்தம் அந்தமில்லாதது, முடிவற்றது.
  • பெரியது என்பது பகுதி, சிறியது என்பதும் பகுதி.
    • இரண்டும் சேர்ந்தது முழுமை.
    • சிறியது முழுமைபெற பெரியதுடன் இணையவேண்டும்.
    • பணிவு, சிறியது பெரியதற்குப் பகுதியாவது.
    • பெரியது சிறியதற்குப் பகுதியாக, ஆட்சி செலுத்தவேண்டும்.
    • அதுவே, பெரியது சிறியதுடன் சேர்ந்து முழுமை பெறுவதாகும்.
    • சிறியதற்குப் பணிவும், பெரியதற்கு ஆட்சியும் (domination) முழுமைபெறும் வழிகளாகும்.
    • அடக்கம் அனைத்தையும் தன்னுட்கொள்ளும்.
  • மனிதன் இறைவனை நான்கு அம்சங்களாகத் தேடுகிறான்.
    • இறைவன், ஜோதி, சுதந்திரம், சாகாவரம் ஆகியவை அவ்வம்சங்கள்.
    • ஜீவனில் இறைவன், மனத்துள் ஜோதியாகவும், உணர்வில் சுதந்திரமாகவும், உடலில் அமரத்துவமாகவும் உள்ளான்.
    • ஞானயோகம் ஜோதியை நாடுகிறது.
    • பக்தியோகம் சுதந்திரமான ஆனந்தத்தை நாடுகிறது.
    • ஹடயோகம் உடல் காயகல்பம் பெற முயல்கிறது.
    • காயகல்பம் பெறும் வழிகள் ஆசனம், பிராணயாமம்.
    • ஆனந்தம் பெறும் வழி பணிவு.
    • ஜோதியை அடையத் தேவைப்படுவது தியானம்.
    • இறைவனையடைய வழிசெய்வது இரண்டறக்கலப்பது.
  • பூரணயோகம் இவற்றையே முழுமையாக நாடுகிறது.
    • பூதவுடல் நிலையாக வாழ்வது காயகல்பம். உடல் பொன்மயமாகி வாழ்வுக்கு அமரத்துவம் அளிப்பது பூரணயோக ஜோதி. அது பொன்னொளி.
    • முழுஆட்சி செலுத்த பூரணயோகம் முழுப்பணிவை நாடுகிறது.

*******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மாவில் சமத்துவம் கடைசி நிலை. எதற்கும்

நிலையிழக்காத, எரிச்சல்பட முடியாத நிலை அது.

***** 

Comments

07.லைப் டிவைன் -

07.லைப் டிவைன் - கருத்து

 Point 2 that is starting as பூரணசுதந்திரம் என்றால் தடைகள்

        Please indent all the sub points and remove the beginning quotes

 Point 3 that is starting as  பெரியது என்பது பகுதி

        Please indent all the sub points and remove the beginning quotes

 Point 4 that is starting as மனிதன் இறைவனை  

        Please indent all the sub points and remove the beginning quotes
 
 Point 5 that is starting as  பூரணயோகம் இவற்றையே 
        Please indent all the sub points and remove the beginning quotes



book | by Dr. Radut