Skip to Content

12.பிரம்ம ஜனனம்

பிரம்ம ஜனனம்

The Life Divineஇல் 10ஆவது அத்தியாயம் சித்-சக்தி. உலகிலுள்ள அனைத்திற்கும் ரூபம் உண்டு. ரூபம் என்பது சக்தி பெறும் உருவம் என்று இந்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது. சச்சிதானந்தம் என்பதை நாம் சச்சிதானந்த பிரம்மம்எனக் கூறுகிறோம். உலகில் சச்சிதானந்தம் ரூபம் பெற முயன்று (perfect form) சிறப்பான ரூபத்தை எய்த முயல்கிறது என பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.

நாம் பிரம்மம் என்பதை ஆங்கிலத்தில் Absolute என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் நாம் கடவுளை பிரம்மம் என்பதுபோல் கடவுளை Absolute எனக் குறிப்பிடுகிறார்கள். அறிவு அரைகுறையாக இருக்கலாம், முழுமையாக இருக்கலாம், சிறப்பாக இருக்கலாம், அறிவில் அறியாமைகலந்திருக்கலாம், அறியாமையின் கலப்பேயில்லாமலிருக்கலாம். அறிவு சிறந்து, முழுமை பெற்று, அறியாமை கலப்பில்லாமல் பூரணம் பெற்றால் அதை என்னவென்று கூறுவது? Absolute intelligence எனக் கூறினால் அதன் பகுதிகள் அனைத்தும் அறிவாகவே இருக்கும் என்று பொருள். அப்பொழுது அறிவு ஞானமாகி உயர்ந்து

பிரம்ம ஞானமாகிறது.

அழகு, இனிமை, சக்தி, ஆனந்தம், மௌனம், ரூபம், சுபாவம், சலனம்,சந்தர்ப்பம், காலம், இடம், உணர்வு, உற்சாகம், கற்பனை, தீர்மானம், விவேகம்,அனுபவம், உறவு, உள்ளுணர்வு, உயிர், மனம், காட்சி, தரிசனம் என சிருஷ்டியில் ஆயிரம் அம்சங்களுள்ளன. அவை தங்கள் சிறப்பான சிகரத்தைச் சீரிய முயற்சியால் எட்டும் நேரம் குறை கலப்பற்ற நிறைவை எய்துகின்றன. அந்த நிறைவைக் குறிக்கும் சொல் பிரம்மம். பிரம்மம் என்றால் எல்லாவற்றையும் தன்னுட்கொண்டு,எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும் திறமை பெற்று, எந்தக் குணமுமில்லாமல், எந்த ரூபமுமில்லாமலிருப்பது எனப் பொருள். சித்-சக்தி என்ற அத்தியாயம் முடியுமிடத்தில் பகவான் அதைக் கூறுகிறார். அதுவே சிருஷ்டியின் இலட்சியம் என்கிறார்.

உலகில் பிரம்மம் ரூபத்தில் ஜனிப்பது, பிரம்ம ஜனனம் எனப்படும்.

பிரம்ம ஜனனத்தில் நாம் காண்பவை பிரம்மானந்தம், பிரம்ம ரூபம், பிரம்ம மௌனம், பிரம்ம பூரணம், பிரம்ம சுபாவம், பிரம்ம சக்தி, பிரம்ம சலனம்,பிரம்மானுபவம், பிரம்ம விவேகம், பிரம்ம தரிசனம், பிரம்ம திருஷ்டி ஆகியவை ஆகும்.

****



book | by Dr. Radut