Skip to Content

09.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)          கர்மயோகி

XIV. The Supermind – As Creator Page No.130, Para No.16

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

Being, knowledge, will are there in Mind.

ஜீவன், ஞானம், சக்தி ஆகியவை மனத்திலுள்ளன.

They are all divided here.

அவையெல்லாம் இங்கு பகுக்கப்பட்டுள்ளன.

Their consciousness is divided.

அவற்றின் ஜீவியம் பகுக்கப்பட்டது.

In Supermind they are not so divided.

சத்தியஜீவியத்தில் அவை அப்படிப் பகுக்கப்படவில்லை.

There they are a trinity.

அங்கு அவை திருமூர்த்திகளாக உள்ளன.

They are one movement.

மூன்றும் அங்கு ஒன்றே.

They have three aspects.

அங்கு மூன்று அம்சங்களுள்ளன.

They are effective.

அவை சக்தி வாய்ந்தவை.

Each has its own effect.

ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய சக்தியுண்டு.

Being has the effect of substance.

ஜீவனுக்குப் பொருளின் பலன் உண்டு.

Consciousness has the effect of knowledge.

ஜீவியத்திற்கு ஞானத்தின் பலன் உண்டு.

It guides itself.

அது வழி நடத்தும்.

It shapes the idea.

அது எண்ணத்தை உருவாக்கும்.

It comprehends and apprehends.

அது அகமும், புறமுமாகும்.

Will gives the effect of self-fulfilling force.

சக்தி தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்ளக் கூடியது.

The idea is light.

எண்ணம் பிரகாசமானது.

It is the light of reality.

அது சத்தியப்பிரகாசம்.

It illuminates itself.

அது சுயம்பிரகாசம்.

It is not mental thought.

அது மனத்தின் எண்ணமன்று.

Nor is it imagination.

அது கற்பனையுமில்லை.

It is effective self-awareness.

தன்னையறியும் சக்தியது.

It is Real-Idea.

அது முழு எண்ணம்.

Page No.130, Para No.17


 

The Idea has knowledge and will.

எண்ணத்திற்கு ஞானமும் சக்தியும் உண்டு.

In Supermind they are one.

சத்தியஜீவியத்தில் இரண்டும் ஒன்றே.

They are not separated.

அவை பிரிந்தவையன்று.

They are one as being and substance are one.

ஜீவனும், பொருளும் இணைந்த ஒன்று அது.

The substance is one with the being.

பொருள் ஜீவனுடன் கலக்கிறது.

Being is luminous power of substance.

ஜீவன் பொருளின் பிரகாசம்.

The substance of fire burns.

பொருள் தழலாக எரிகிறது.

There is burning light.

அது பிரகாசமாக எரிகிறது.

They are not different.

அவை வேறன்று.

So the Idea is one with the Being.

எனவே எண்ணமும், ஜீவனும் ஒன்றே.

The power of the Idea is one with the substance of the Being.

எண்ணத்தின் சக்தி ஜீவனின் பொருளுடன் சேர்கிறது.

The substance works itself out in the Idea.

பொருள் எண்ணமாக வெளிவருகிறது.

That is development.

அது அபிவிருத்தியாகும்.

In our mentality all are different.

நம் மனத்தில் அவை வேறு.

We have an idea.

நமக்கு ஓர் எண்ணம் உண்டு.

We have a will according to the idea.

எண்ணத்திற்குரிய சக்தியுண்டு.

The will is the impulsion of the idea.

எண்ணம் உந்துவது சக்தி.

One detaches from the other.

ஒன்று அடுத்ததிலிருந்து பிரிகிறது.

We separate the idea from the will.

நாம் எண்ணத்தையும், சக்தியையும் பிரிக்கிறோம்.


We separate both from ourselves.

இரண்டையும் நம்மிலிருந்து பிரிக்கிறோம்.

I am.

நானிருக்கிறேன்.

It is an idea.

அது ஓர் எண்ணம்.

It is an abstraction.

அது தத்துவம்.

It mysteriously appears in me.

அது புதிராக எழுகிறது.

The will is another mystery.

சக்தி மற்றொரு புதிர்.

It is a force.

அது சலனமாகும் சக்தி.

It is nearer to concreteness.

அது ஜடத்திற்குச் சமமானது.

It is, of course, not concrete.

அதுவே ஜடமில்லை.

It is something not myself.

அது நானில்லை.

It is something I have got.

இது நான் பெற்றது.

It is something I am seized with.

நான் ஏற்றுப் போற்றுவது இது.

But I am not.

ஆனால் நானில்லை.

I make a gulf between my will and its effect.

என் சக்திக்கும், பலனுக்குமிடையே ஒரு வெளியை ஏற்படுத்துகிறேன்.

To me, there are concrete realities.

இவை எனக்கு ஜடசத்தியம்.

They are outside of me.

அவை எனக்குப் புறம்பானவை.

They are other than myself.

அவை என்னிலிருந்து

வேறுபட்டவை.

So none of them is self-effective.

எனவே அவை எதுவும் தானே பலன் தாரா.

The idea may fall from me.

எண்ணம் என்னிடமிருந்து விழலாம்.

The will may fail.

சக்தி தோற்கலாம்.

The means may be lacking.

ஜெயிக்கும் சாதனம் இல்லாமலிருக்கலாம்.

I myself may remain unfulfilled.

நானே பூர்த்தியாகாமலிருக்கலாம்.

It is by any of them.

எதனாலும் இது நடக்கலாம்.

Or it may be by all of them.

எல்லாவற்றாலும் நடக்கலாம்.

Contd.....

தொடரும்...

****

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தீர்க்க முடியாத சிக்கல்கள் வேலையின் அளவைப் பொருத்தது அன்று. வேலை பெரியதானாலும், சிறியதானாலும் மனத்தின் அந்தரங்கங்கள் வெளிப்படுவதால் நாம் காண்பதே அச்சிக்கல்கள். வேலையிருந்தாலும் இல்லாவிட்டாலும் மனத்தின் சிக்கல்கள் மனதிலிருக்கும்.

மனத்தின் சிக்கல் மனத்தைப் பொருத்ததே.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் திருவுருமாற்றம் பெற, தெளிவு தேவை. உணர்வு திருவுருமாற்றம் பெற, தெளிவு போதாது, நோக்கம் மாற வேண்டும். உடலுக்கு இந்த இரண்டும் போதாது. உடலுள்ள ஆன்மா வெளிப்பட்டுச் செயல்பட்டால்தான் உடல் திருவுரு மாற்றமடையும்.

ஆன்ம வெளிப்பாட்டால் மட்டும் உடல் திருவுருமாற்றம் பெறும்.


 


 


 



book | by Dr. Radut