Skip to Content

11.லைப் டிவைன் - கருத்து

"Life Divine" - கருத்து

ஆசை வாழும் உரிமையை வலியுறுத்துகிறது.

அதை அழிப்பது தவறு.

. துறவறத்தை மேற்கொள்ள அவசியமானவை பல. அவற்றுள் முக்கியமானது ஆசையை அழிப்பது.

துறவறம் என்பது ஆன்ம விடுதலையை நாடுவது.

ஜீவனின் அடிப்படை உடல்; அதற்கு சக்தியளிப்பது உயிர்; வழிநடத்துவது மனம்; அவற்றின் சிகரம் ஆன்மா.

ஆன்மா விடுதலை பெறுதல் எனில் உடல், உயிர், மனத்திலிருந்து விடுதலை பெறுவது.

உடலின் பிடிப்பு ஏராளம். அதனால் துறவி உடலை உதாசீனம் செய்கிறான்.

பெரும்பாலும் மனம் வளர்ந்த நிலையிலிருப்பதில்லை என்பதால் ஹடயோகி, பக்தன், கர்மயோகிக்கு மனம் தடையாக இருப்பதில்லை.

மனவளர்ச்சியுள்ளவர்க்குரியது ஞானயோகம்.

மௌனத்தால் மனத்தை வெல்லலாம்.

எந்த வகையான யோகத்திற்கும் ஆசையை அழிப்பது அவசியம்.

ஆசை ஆட்சி செய்வதுவரை தவம், யோகம் பலிக்காது.

ஆசையைக் கடக்கும் வழிகள் இரண்டு.

ஒன்று ஆசையைப் பூரணமாக அனுபவித்துக் கடப்பது.

அடுத்தது ஆசையை அடக்கி, அழித்து, வெல்வது.

இரண்டாம் முறையைப் பரவலாகப் பின்பற்றுவதால் பகவான் அதைப் பற்றிக் கூறுகிறார்.

அது தவறு என்கிறார்.

வாழும் உரிமையை வலியுறுத்தும் ஆசையை அழிப்பது தவறு.

ஆயிரக்கணக்கான வருஷமாகக் கையாண்ட முறை; இதுவரை அனைவருக்கும் பலன் தந்த முறை; தவறு எனில் எப்படி ஏற்பது?

மோட்சம் பகுதியான இலட்சியம் என்பதால் ஆசையை அழிப்பது பகுதியான முறை என்பதால், அது இவ்வளவு காலம் பலன் தந்தது.

தொடர்ந்த பலனிருப்பதால் ஒரு விஷயம் சரியாகாது என்பது பகவான் கூறும் சட்டம்.

சரி என்பது திருவுள்ளத்திற்குச் சரி என்பதாகும்.

அரசாட்சி என்பது 1000 ஆண்டு நடந்தது. அதனால் அது சரியாகாது.

அதை மாற்றி உலகம் மக்களாட்சியை ஏற்றது.

பூர்த்தியாகாத ஆசை மோட்சத்திற்குத் தடை என்பதால் சிவபெருமான் அடியார் ஆசையைப் பூர்த்திசெய்ய பரவை நாச்சியாரிடம் தூது சென்றார்.

பகவானுடைய யோகம் ஆசையை அழிக்க மறுத்து, ஆசையை ஆண்டவன் விருப்பமாக உயர்த்திப் பூர்த்திசெய்வது.

ஆசை என்பது வாழ்வை வலியுறுத்துவது.

அன்பு ஆத்மாவை வலியுறுத்துவது.

ஆசை அன்பாக மாறினால் உயிர் ஆன்மாவாகும்.

ஆன்மா வளரும் ஆன்மாவாவது பகவான் யோகம்.

****


 


 


 


 


 



book | by Dr. Radut