Skip to Content

12.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)     கர்மயோகி

897) அந்நிலையில் மனிதன் தன்னையறியும் தெய்வமாக மாறுகிறான்.

ஆன்மா ஜடத்தை ஆளும் நிலையில் மனிதன் தெய்வமாகிறான்.

. பூரணயோகம் மனிதன் தெய்வமாகும் இலட்சியமுள்ள யோகம்.

. அன்னையை வழிபடாமல், அன்னையாவது யோக இலட்சியம்.

. ஜடம் அசைந்தால் இது நடக்கும்.

. ஜடத்தை அசைக்க ஆன்மாவால்தான் முடியும்.

. படபடப்பு, பிரிவினை ஆன்மா வெளிப்படத் தடை.

. காணாமற்போன பேனாவைத் தேட பிரார்த்தனை செய்தால் பேனா கிடைப்பது, மனம் மறந்ததைப் பிரார்த்தனையால் மாற்றுவது. பிரார்த்தனை மனத்தை அசைக்கிறது.

பிரார்த்தனை மனத்தின் குரல். மனம், மனத்தை அசைப்பது இது.

. குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும்பொழுது பிரார்த்தனை பலிப்பது,உணர்வு உணர்வை அசைப்பதாகும். வலி உணர்ச்சி, குழந்தை அழும் பொழுது நம் வயிற்றைக் கலக்குவதால் பிரார்த்தனை வயிற்றின் உணர்ச்சியினின்று எழுகிறது.

. இதுபோல் பல வருஷமாகச் செய்த பிரார்த்தனை பலிக்காததுண்டு.

பிரச்சினை மனம், உணர்வு, உடலிலிருக்கலாம். பிரார்த்தனை மனம்,உணர்வு, உடலிலிருந்து எழலாம்.

காணாமற்போன பொருள் காணிக்கையால் கிடைப்பது, மனத்தின் மறதியை உடலின் உழைப்பு - காணிக்கை - அசைத்தது என்று கூறலாம்.

சோம்பேறி பிரார்த்தனையால் எழுந்து வேலை செய்யமாட்டான். செய்தால், மனம் உடலை அசைத்ததாகும்.

சோம்பேறி எழுந்து வேலை செய்ய நாம் சோம்பேறித்தனமாக இதுவரை செய்யாத வேலையைச் செய்ய முயன்றால், அவன் அசைவான்.

நம் உடலின் வேலை - பிரார்த்தனை - அவன் உடலை அசைத்தது.

ஜடம் என்பது உடல். ஜடம் அசைந்தால், அதுவும் மனத்தால் அசைந்தால், மனம் தன்னையறியும் பக்குவம் அடைகிறதுஎனப் பொருள்.

உடலில் ஊறிய பழக்கம் அசையாது. அது ஆத்மாவால் அசைவது பூரண யோக இலட்சியம்.

நாம் நம்மையறிவது நாமே தெய்வமாவது.

நாமுள்ள நிலைக்கும் அந்த இலட்சியத்திற்கும் ஆயிரம் இடைப்பட்ட கட்டங்கள் உள.

நாம் ஒரு படி உயர்வதே நம் தற்போதைய நோக்கம்.

எதிரி, போட்டி, பொறாமை ஒரு நிலை.

வேண்டியவர்க்கு உதவுவது, வேண்டாதவர்க்கு உதவ மறுப்பது வேறொரு நிலை.

புரிவது, புரியாதது இரு நிலைகள்.

நாம் எந்த நிலையிலிந்தாலும் அடுத்த நிலைக்குப் போனால் கை மீதுள்ள எல்லாப் பிரச்சினைகளும் கரையும். அவை விலகி வாய்ப்பு எழும். அவை வாய்ப்பாக மாறுவது திருவுருமாற்றம்.

****

898) இந்த ஞானம் ஏற்பட்டால் " Delight of the Individual" மனித இலட்சியமாக பகவான் வர்ணிப்பதை அறியமுடியும்.

பரிணாமம் இதன் வழி மனித இலட்சியம்.

தன்னையறிவது (self-awareness) முடிவான ஆத்மஞானம்.

பரிணாமம் யோகத்திற்கு, பிரார்த்தனை கிருகஸ்தனுக்கு என்று நான் எழுதுகிறேன்.

இந்த ஞானம் பரிணாமத்தையே மனித இலட்சியமாக்கும்.

சிறியதும் பெரியதும் வேறுபட்டவை, மாறுபட்டவை, எதிரானவை. ஆனால் சிறியது பெரியதின் பகுதியாகவுமிருக்கும்.

குடும்பமும், தவமும் எதிரானவை.

ஆனால் ரிஷிகள் குடும்பத்துடன் வாழ்ந்துள்ளனர்.

பெண்களை அனுப்பி இந்திரன் முனிவர்கள் தவத்தைக் கலைத்திருக்கிறான்.

ரிஷிபத்தினிக்கு ரிஷியின் ஆத்மபலனில் பாதியுண்டு.

ரிஷி தெரிந்து பெற்றதை பத்தினி தெரியாமல் பெறுகிறாள்.

She gains sub-consciously from him.

பத்தினியின் பக்குவத்தால் ரிஷி பவித்திரமடைவதும் சட்டம்.

தன்னையறிவது எவருக்கும் எந்த நிலையிலும் பொருந்தும்.

நாமுள்ள நிலையில் நாம் அதை ஏற்று, ஒரு படி உயர முயலலாம்.

சாவித்திரியின் ஆத்மாவின் பகுதிகள் அவளுக்கு ஆசைகாட்டின. "நீ எனது ஆத்மாயில்லை; என் ஆத்மாவின் பகுதி" எனப் பதிலளித்து அவள் மேலே சென்றாள். முடிவாக இறைவனும், "நீயும் சத்தியவானும் சொர்க்கத்திற்குப் போகலாம்" என்றார். சாவித்திரி, "என் ஆன்மா அதன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். எனக்கு மோட்சம் வேண்டாம்" எனக் கூறி அதையும் மறுக்கிறாள்.

பூலோகத்தை சுவர்க்கமாக்க முனைகிறாள்.

இறைவனையே மறுத்து அவள் மேலே போகிறாள்.

சாவித்திரி தன் ஆத்ம இலட்சியத்தை அறிந்த காரணத்தால் எமனை வென்றாள்; காலனை அழித்தாள்; தான் பெற்றது பிரபஞ்சம் பெற உலகில் உயிர் வாழ்ந்தாள்.

ஓர் அன்பர் வறுமை, நோய், பிரச்சினை, கவலை, பயம், சந்தேகம் ஆகியவற்றிலிருந்து மீண்டு செல்வம், நலம், வாய்ப்பு, சந்தோஷம், தைரியம், நம்பிக்கை பெற்று வாழ்ந்தால் அது ஊருக்கு அவர் செய்யும் சேவை. நாட்டில் பிரச்சினைக்குரியவர் ஒருவர் குறைவதால் அது தேச சேவை. அது பலருக்குப் பெரிய நிலை. 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் இலட்ச ரூபாய் சம்பாதித்தால் இது பெரும்பாலும் நிறைவேறும். அன்பர் அன்னையை அறிந்து, அவர் எண்ணப்படி நடப்பது இதைப்போல 100 மடங்கு பெரிய இலட்சியம்.

நம்மால் முடிந்தவரை நமக்கே நல்லது செய்வதும் நல்ல காரியமாகும். அதை நாம் பிறருக்கும், அன்னைக்கும் செய்வோம்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

'தாங்கமுடியாது' என்பது ஆன்மீக முயற்சிக்கு இல்லை. ஏனெனில் ஆன்மா அனைத்தையும் கட்டுப்படுத்துவது. 'தாங்க முடியாது, அடக்கமுடியாது' என்பதை அடங்காத ஆர்வமாக மாற்றுவதே திருவுருமாற்றமாகும். அடக்கமுடியாத நிலையில் சக்தி கண்மூடித்தனமாக இருக்கிறது. கட்டுப்பட்ட பின்னரே தன்னையறிந்ததாகும்.

அடக்கமுடியாத சக்தியை அடக்கமுடியாத ஆர்வமாக்குவதே திருவுருமாற்றம்.

ஜீவிய மணி

மனிதனுக்குரிய தர்மம் மற்ற எவருக்குமில்லை.


 


 



book | by Dr. Radut