Skip to Content

14.மனித சுபாவத்தின் இருநிலைகள்

மனித சுபாவத்தின் இருநிலைகள்

இந்த இரு நிலைகளையும் மேல் நிலை, ஆழம் எனலாம். தத்துவப்படி மேல் நிலையை ஜீவியம் (consciousness) எனவும் ஆழத்தை (substance) பொருள் எனவும் கூறுகிறோம். கடுமையான உள்ளம் படைத்தவர் பரிதாபப்பட்டு கடுமையை விலக்குவதுண்டுமனிதன் துடிப்பதைப் பார்த்தும் அசையாமல் கொடுமை செய்வதுண்டு. இந்தக் கடுமை ஆழத்திலுள்ளது. சமர்ப்பணம் பலிக்கும் நிலைகளை நாம் உயர்த்திக்கொண்டே போனால் பிரார்த்தனை நடக்காதவற்றை நடத்துவதைக் காணலாம். திருட்டுப்பட்டம் பெற்றவரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டுப் பிரார்த்தனை செய்தால், பிரார்த்தனை பலித்து எதுவும் திருடு போகாமலிருக்கும். திருடனின் பழக்கம் மேலேயுள்ளது; ஆழத்திலில்லை எனப் பொருள். எந்தச் சந்தர்ப்பத்திலும் திருடுவதைத் தவிர்க்கமாட்டான் எனில் அவன் பழக்கம் ஆழத்திலிருக்கும். நம் சமர்ப்பணம் அவனிடம் பலித்தால் நமது சமர்ப்பணம் மேல்நிலையிலிருந்து ஆழத்திற்குப் போய்விட்டது எனலாம். இது யோகம் பலிப்பதற்கு அறிகுறி. சமர்ப்பணம் இந்த நிலையில் பலிப்பது பெரியது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் மட்டும் கூறிய நிலையொன்றுண்டு: உதவி உபத்திரவத்தில் முடியும். அங்கு, சமர்ப்பணம் பலித்தால், அவர் யோகப் பாதையில் முன்னேற்றம் பெற்றவராவார்.

- உதவி செய்வதின் அம்சங்கள்:

- கேட்பவருக்கு உதவுவது - தொந்தரவு அதிகம் வாராது. நஷ்டம் வரலாம். அதுவும் சிறியதாக இருக்கும்.

-வலியப் போய் உதவுவது - தொந்தரவு தவறாது வரும். நஷ்டம் பெரியதாகும். மனிதச் சுபாவப்படி உதவி பெற்றவர் உதவி செய்தவரை மட்டும் பெரிய குறை சொல்லி, குற்றம் சாட்டாமலிருக்கமாட்டார். இங்கு சமர்ப்பணம் பலித்து தொந்தரவு வாராமலிருந்து குற்றம், குறை எழாமலிருந்தால் அவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அம்சம் பெறுவார்.

-சமர்ப்பணத்தின் சிகரம் மனித சுபாவத்தை அருளால் வெல்வது.

- வலியப் போய் வம்பில் மாட்டிக்கொண்டவர் சமர்ப்பணத்தின் பெருமையை உணர முனைந்தால் நஷ்டமில்லாமல் பிரச்சினை தீரும். குறை, குற்றத்திலிருந்து தப்ப முடியாது.

****


 



book | by Dr. Radut