Skip to Content

15.சியாங்-கே-ஷேக்

சியாங்-கே-ஷேக்

சன்யாட் சென் சைனப் புரட்சித்தலைவர். சியாங்-கே-ஷேக் அவர் வாரிசு. சைனாவின் ஜனாதிபதி. இராணுவம் புரட்சி செய்து சியாங்-கே-ஷேக்கைக் கைது செய்தது. சியாங் எதிரியான கம்யூனிஸ்ட்கள் கையில் அவர் உள்ளார். அவரைத் தூக்கிலிடும்படிப் பேச்சு நடக்கிறது. ஸ்டாலினுக்கு சியாங்-கே-ஷேக் மீது நம்பிக்கை உண்டு. கம்யூனிஸ்ட் தலைவர் சியாங்-கே-ஷேக்கைத் தூக்கிலிட நினைத்து அந்தக் கடமையை (Marshal) ஒரு தளபதியிடம் விட முடிவு செய்தார். இந்தத் தளபதி ஏற்கனவே சியாங்-கே-ஷேக்குக்கு எதிரானவர். ஸ்டாலினிடமிருந்து சியாங்-கே-ஷேக்கை விடுதலை செய்ய உத்தரவு வந்தது. இந்த நேரம் இத்தளபதிக்கு வினோதமான எண்ணம் எழுந்தது. எதிரி தம் பிடியில் வசமாக மாட்டியபொழுது, பெருந்தன்மையாக தம் கட்சி எதிரிக்கு விடுதலை தரும்பொழுது, தாம் முன்வந்து ஏற்கனவே இருந்த விரோதத்திற்கு மாறாக பெருந்தன்மையாக நடக்க முடிவு செய்தார்.

சியாங்-கே-ஷேக்குடன் விமானத்தில் அவருடைய கைதியாகப் பயணம் செய்ய முடிவு செய்தார்.

தம் தியாக மனப்பான்மையையும், பெருந்தன்மையையும் நினைத்துத் தன்னை வியந்தார்.

- பயணம் முடிந்தவுடன் சியாங்-கே-ஷேக் தளபதியைச் சிறையில் அடைத்தார். 50 ஆண்டு அவர் சிறையிலிருந்தார்.

-கயமை, பொறாமையுள்ளவரிடம் பெருந்தன்மை எதிரான பலன் தரும். இதுபோன்ற நிலையில் சமர்ப்பணம் பலிப்பது கடினம். பலித்தால் யோகம் பலிக்கும்.

****



book | by Dr. Radut