Skip to Content

02.உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

 உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

ஞானமும், அஞ்ஞானமும்

--அறியாமையற்ற பிரபஞ்சத்தை நம்மால் கருத முடியும். வேதம் அப்படி நினைத்தது.

--அனந்தமான ஆத்மாவின் இலட்சிய லோகமும், சிறப்பான ஒருமையும் சேர்ந்திருப்பது நடக்க முடியாதது.

--ஆழ்வார்கள் கற்பனை செய்த பூலோகச் சுவர்க்கம் இதினின்று  எழுந்தது.

--சிருஷ்டியின் இரகஸ்யம் பிடிபடாதது என நினைத்து புத்தர் அதை விலக்கினார்.

--நாமே அஞ்ஞானமாக இருப்பதால், அதன் ஆரம்பத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது.

--ஜீவனை ஜீவியம் மூலம் தான் காண முடியும்.

--ஜீவியத்தை ஊடுருவினால் ஜீவனும், ஜீவியமும் பிரம்மத்தில் இணைகின்றது.  இதை பகவான் Supreme discovery உச்சகட்ட சித்தி என்கிறார்.

--அஞ்ஞானம் ஞானத்துடன் மூவகைத் தொடர்புள்ளது.

1) முழுவதும் தழுவுவது

2) எதிர்ப்பு

3) இடைப்பட்ட நிலை.

ஒரு முனை ஞானம், அடுத்த முனை அஞ்ஞானம் என்ற தொடர் சங்கிலி சிருஷ்டி. ஆரம்பத்தில் முழு அஞ்ஞானமிருந்தது. அது முழுஞானத்தை முழுவதும் ஆட்கொண்டது. அஞ்ஞானம் குறைந்து ஞானம் வளரும் பொழுது ஞானத்திற்கு வலு ஏற்பட்டதால் ஞானம் அஞ்ஞானத்தை எதிர்க்கிறது. இரண்டுக்கும் சமமான நிலை (compromise) இடைப்பட்ட நிலை.

--அஞ்ஞானமும், ஞானமும் பிரம்மத்தையடையும் இரு பாதைகளில்லை. அஞ்ஞானம், ஞானத்தின் பகுதி.

நினைவு, சுய-ஜீவியம், அஞ்ஞானம்

--நினைவு என்பது செயல்படும் முறை. சத்தியம் அதைக் கடந்து ஜீவியத்திலும், ஜீவனிலும் உள்ளது.

கம்பனியில் கணக்கு என்பது நடைமுறை வரவு, செலவைப் புள்ளி விவரமாகக் குறிப்பது. கணக்கு முதலில்லை, கம்பனியில்லை. முதலும், இலாபமும் கணக்கைக் கடந்து உற்பத்தியிலும், விற்பனையிலும் உள்ளன.

--வேதம் இரு ஜீவியங்கள்ள்ளன எனக் கூறவில்லை. ஜீவியம் ஒன்றே அதன் அம்சங்கள் இரண்டு என்கிறது.

--தெய்வீக ஜீவியம் இருளிலோ, ஒளியிலோ மறைந்தில்லை. சலனமற்ற ஏகனையும், சலனத்தால் ஏற்பட்ட அநேகனையும் அனைத்தையும் தழுவும் சுய-ஞானத்துள் வைத்துள்ளது.

--நிகழ்காலம், கடந்த காலம் என்பவை மனம் விளையாடும் யுக்திகள்.

--பின்னணியிலுள்ள நிலையான ஜீவியம் காலத்தையும், காலத்தைக் கடந்ததையும் அறியும்.

--மேல்மனம், அதன் ஜீவன் என்பது ஆழ்ந்த பிரம்மம் காலம் என்ற அரங்கில் உயிரைத் திரணமாக மதித்து விளையாடும் ஆபத்தான விளையாட்டு.

The surface being is the adventure of Spirit in Time என்பது பகவான் வாக்கு.

Surface being என்பது மேல்மனத்தின் ஜீவன்.

இது காலம், மனம், அகந்தை, சிறியது என்பவையாலான அரங்கம்.

காலம் என்பது ஆன்மாவின் அகம், ஆன்மா தன் செயலைத் தானே பார்ப்பது காலம்என பகவான் விளக்கம் தருகிறார்.

ஆன்மா தான் ஏற்படுத்திய காலத்தின் ஆட்சிக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஒரு adventure ஆபத்தான விளையாட்டு.

தகப்பனார் தன் மகன் கையில் தான் ஈட்டிய பெரும்பொருளைக் கொடுத்து அவன் செய்யும் வியாபாரத்தைக் கண்டுகளிப்பது ஆபத்தான விளையாட்டு அல்லவா? அதேபோல் ஆத்மா மேல்மனத்தில் விளையாடுகிறது.

நினைவு, அகந்தை, சுய-அனுபவம்

--புலனுக்கும் அறிவுக்கும் இடையேயுள்ள கருவி ஞாபகம்.

--(புறம், செயல், விலகுதல், அகந்தை. கோபம் வந்தபின் கோபமாக மாறாமல், நினைத்துப் பார்ப்பது செயல், கோபம் புறம். நினைவால் விலகினால் நிதானம் வரும். போதுமான அளவு விலகினால் அகந்தை தெரியும். அகந்தை மனோமயப் புருஷன்.)

1) கோபம், பசி, ஆசை போன்றவை மனத்தில் எழும்.

2) எழுந்தபின் மனம் அதனினின்று விலகி நிற்க முடியும்.

3) விலகுதல் அதிகமானால், விலகியவன் அகந்தையென அறியலாம்.

4) Concentration ஆல் அகந்தை மனோமயப்புருஷனாகத் தெரியும். சமர்ப்பணத்தால் அதுவே சைத்தியப் புருஷனாகத் தெரியும்.

--மனம் செயலையறிய காலத்தால் ஜீவியம் பிரிக்கப்பட வேண்டும்.

--செயலோ, ஜீவியமோ முழுமையுடையவை, பகுதியானவை அல்ல.

நம் பார்வை - மனத்தின் பார்வை - முழுச் செயலைப் பகுதியாக்குகிறது.

--ஞானத்தின் உண்மையான அடிப்படையைக் காண நாம் நம் சுபாவத்தையும், ஆத்மாவையும் முழுமையாகக் காண வேண்டும். மேலே அல்லது உள்ளே காண்பது பகுதி. இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் காண்பது முழுமை.

இரண்டறக் கலந்த ஞானம், பிரிந்து நிற்கும் ஞானம் -

1)இரண்டறக் கலந்த ஞானம் - காலத்தைக் கடந்த பிரம்மம் நம்முள் தெரிவது.

2) நெருங்கிய நேரடியான தொடர்பின் ஞானம் - ள் மனம் (intuition - நேரடி ஞானம்

3) பிரிந்து நிற்கும் நேரடித் தொடர்பான ஞானம் - அடிமனம்.

4) பிரிந்து நிற்கும் மறைமுகத் தொடர்பின் ஞானம் - மேல்மனம்.

1) ஞானம் என்பது இறைவனை மனம் அறிவது. மனம் உயர்ந்து பரமாத்மாவையடைந்தால் அது இரண்டறக் கலந்துவிடும் - இது இரண்டறக் கலந்த ஞானம் எனப்படும். இது காலத்தைக் கடந்த பிரம்மம். இதை நாம் நம்முள் காண்கிறோம்.

2) பரமாத்மாவை விட்டகன்று நகர்ந்து செல்லும் பொழுது நேரடியான தொடர்பு விட்டுப்போகாத நிலை யோகியின் மனம் (intuition). இதையறிவது உள்மனம். இதை நேரடி ஞானம் என்கிறோம். இதுவும் காலத்தைக் கடந்தது.

3) அஞ்ஞானம் மேலிட்டால் பரமாத்மாவினின்று பிரிந்து விடுகிறோம். அந்நிலையில் நம் முழுமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும். இதுவும், பிரிந்தாலும் தொடர்பு நேரடியானது. அடிமனம் எனப்படும் - இது காலமும் கடந்ததும் சந்திக்குமிடம்.

4) முடிவான நிலை அஞ்ஞானம் அகந்தையும் நுழைந்து பரமாத்மாவினின்று பிரிந்த நிலையில் தொடர்பு மறைமுகமானது. இது மேல்மனம்.

அஞ்ஞானத்தின் எல்லை
 

1)

ஆதியின் அஞ்ஞானம்

பிரம்மத்தை மறப்பது.

2)

பிரபஞ்ச அஞ்ஞானம்

பிரபஞ்ச பிரம்மத்தை மறப்பது

3)

உலகைப் பற்றிய அஞ்ஞானம்

அகந்தை உலகை மறப்பது.

4)

காலத்தின் அஞ்ஞானம்

காலத்திற்குக் கட்டுப்படுவது.

5)

சூழலின் அஞ்ஞானம்

நம்மைச் சுற்றியுள் உலகங்களை அறியாதது.

6)

கரணங்களின் அஞ்ஞானம்

கரணங்கள் பிரிந்து நிற்பது.

7)

நடைமுறை அஞ்ஞானம்


 

செய்வது அறியாதது.

 

அஞ்ஞானத்தின் உற்பத்திஸ்தானம்

--ஜீவியத்தின் தீவிரச் செயலின் தோற்றம் அஞ்ஞானம்.

--சக்தி நிலையாக இருக்கும், சலனத்தாலும் சக்தி வெளிப்படும்.

சலனத்திலும், நிலையிலும் சக்தி பிரம்மம். ஒரே பிரம்மம்.

--எனவே பூரண பிரம்மமோ, பூரணமான சச்சிதானந்தமோ அஞ்ஞானத்தின் உற்பத்தி ஸ்தானமாக இருக்க முடியாது.

--ஒன்று பல ஆனதால் அஞ்ஞானம் உற்பத்தியாகியிருக்க முடியாது. ஏனெனில் பிரம்மம் நூறு வடிவம் பெறவல்லது.

--மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிந்த பொழுது அஞ்ஞானம் உற்பத்தியாயிற்று.

--சித்-சக்தி செயல்படும் பொழுது தன்னைத் தன்னுள்ளே கிரகித்துக் கொள்வதால் அஞ்ஞானம் உற்பத்தியாயிற்று.

சித்-சக்தியின் தீவிர செறிவும் அஞ்ஞானமும்

--அஞ்ஞானம் என்பது இயற்கை. பிரம்மத்தையும், அனைத்தையும் மறக்க முயன்றதால் ஏற்பட்டது.

--சாரமானது, பூரணமானது, பல முகங்களையுடையது, பிரிந்த ஜீவியம் பரமாத்மாவையும், ஜட இருளையும் பிரதிபலிக்கிறது. அதுவே சச்சிதானந்தம், சத்தியஜீவியம், தெய்வீகமனம், மனம் ஆகிய லோகங்களாகும்.

--குறிப்பிட்ட செறிவு மீதி ஜீவனைப் பின்னணியில் வைத்துள்ளது. ஆனால் அஞ்ஞானம் அவற்றிடையே எழுந்த தடையான சுவரால் ஏற்பட்டது.

நாம் ஒரு காரியம் செய்யும்பொழுது, நமக்கு அக்காரியம் தெரியும். அது மட்டும் தெரியும். காரியத்தைச் செய்வது நாம். எழுதும்பொழுது கை எழுதுகிறது. ஆனால் உடலின் மற்ற பகுதிகள், மனத்தின் இதர திறமைகள் எழுத்தில் வருவதில்லை. அவை அனைத்தும் ஒதுங்கி நின்று, கையை எழுத அனுமதிக்கின்றன. எழுதும்பொழுது, நம் முழுஜீவனின் இதர பகுதிகள் அனைத்தும் பின்னணியில் ஒதுங்கி நின்று எழுத்தை அனுமதிப்பதை நாம் அறிவோம். உலகம் முழுமையானது. ஒரு பஸ் ரோட்டில் போகும்பொழுது உலகம் அந்த பஸ்ஸை ஓட்டுகிறது (நம் கை எழுதுவதுபோல). உலகம் முழுவதும் ஒதுங்கி நின்று ஒரு செயலை நடத்துகின்றது.

--கடந்த காலத்தை மறந்து, நிகழ்காலத்தில் நம்மை இழப்பது அடுத்தகட்ட கிரகிப்பு.

--அஞ்ஞானமும், சுய-கண்டுபிடிப்புமில்லாமல் சிருஷ்டியில்லை.

--திரை, பொன்மூடி, சத்தியஜீவியத்திற்கும், தெய்வீக மனத்திற்கும் இடையே எழுந்தது. அது அஞ்ஞானத்தின் ஆரம்பம்.

பொய், தவறு, குறை, தீமை இவற்றின் ஆரம்பம்

--ஜீவியம் மறைவிலிருந்து வெளிவரும் பொழுது ஞானம் அதனினின்று வருவதால் தவறு ஏற்படுகிறது.

--அகந்தை வாழ்வில் தன்னை வலியுறுத்துவதால் வெளிப்படும் ஞானம் சிதறுகிறது. இது பரிணாம வளர்ச்சி.

--வாழ்விற்கு நல்லதும் கெட்டதும் வளரும் பாதைகள் .

--தவறான அகந்தையின் ஜீவியம் தீமை வளரப் பயன்படுகிறது.

--அகந்தை பிணக்கை உருவாக்குகிறது. பிரம்மத்தினின்று பிரிந்த ஜீவன் வளர பிணக்கு அவசியம்.

--மனம் மூலம் வாழ்வை தர்மம் கட்டுப்படுத்துவது ஜீவனுடைய பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

--சுபாவம் பிரிந்ததால் தீமை உண்டாயிற்று. அதனால் மீண்டும் அது சேர்ந்தால் பிரச்சினை தீரும்.

--ஆன்மீக வளர்ச்சி மூலம் தெய்வீகச்சுபாவத்தை எட்டினால் தீமை அழியும்.

ள்ளதும் பூரண ஞானமும்

--ஏகனோ, அநேகனோ முடிவல்ல. இரண்டையும் உட்கொண்ட 'அது' பிரம்மமே பரம்பொருள்

--மனம் உலகை சிருஷ்டிக்கவில்லை. ஜீவியம் சிருஷ்டித்தது.

--புறத்தின் ஞானம் முடிவானதன்று. ஏனெனில் அதையும் அகத்தால் அறிய வேண்டும்.

--அனுபவத்தைச் சோதிக்க அதைப் போன்ற அனுபவம் மூலம் சோதனை செய்ய வேண்டும்.

--ஆராய்ச்சியை முடிவுவரைத் தொடர வேண்டும்.

--எழுவகை அஞ்ஞானத்தில் எதையும் ஏற்கக் கூடாது.

--இது அனுபவத்தால் பெறும் ஞானம். அறிவு பயன்படாது.

பூரண ஞானமும், வாழ்வின் இலட்சியமும்

--பொருள்களின் இரகஸ்யம், ஆதரவு, ஆதி பிரம்மம் என்பது நம் அடிப்படை.

--ஆத்மா வளரும் பொழுது சுயஞானம் பெற்று அமரத்துவம் அடைகிறது. அது சத் புருஷனையறியும் பொழுது அமரத்துவம் கிடைக்கிறது. அப்பொழுது அதனால் பிரம்மத்தையும் அறிய முடியும். பிரம்மத்தின் சுபாவத்தை ஆத்மா பெறுவது நம் இலட்சியம்.

--பிரம்மத்தை விலக்கும் வாழ்வின் தத்துவம் எதையும் நாம் ஏற்க முடியாது.

--இரட்டைகளை ஏற்கும் தத்துவம் கடவுளை ஏற்கின்றன. ஆனால் கடவுள் ஆத்மாவுடன் இணைவதை மறுக்கின்றன.

--பிரம்ம வாழ்வு, பிரபஞ்ச வாழ்வு, புவி வாழ்வு, அனைத்தும் இணைந்த வாழ்வு என 4 வாழ்க்கைத் தத்துவங்கள் உள.

--வேதாந்தம் பிரகிருதியை, பிரம்மமென ஏற்கிறது. ஆனால் ஜீவாத்மாவின் அமரவாழ்வை ஏற்பதில்லை.

--வாழ்வும் ஆன்மாவும் இணைய மனிதனை மையமாகக் கொண்ட ஆன்மீகப் பரிணாமம் தேவை.

கடவுள் - மனிதன் - இயற்கை ஞானத்தை நோக்கிய முன்னேற்றம்

--வாழ்வில் ஜீவியம் தன்னை உருவகப்படுத்தியதில் முதற் கட்டம் அஞ்ஞானம் சூழலை ஆள்வது, ஜீவனில் முழுமை பெறுவது அவன் இலட்சியம். சச்சிதானந்தமாக மாறி இதைச் சாதிக்கலாம்.

--அகந்தையைக் கடப்பது வாழ்வு தன்னையறியாமல் முயல்வது. வேதம் கண்ட அமர வாழ்வே உண்மையான இலட்சியம்.

--கடவுள் , மனிதன், இயற்கையிடம் புருஷன் தன்னை வெளிப்படுத்துகிறது.

கடவுளை மனிதன் மூலம் அறியும் பொழுது மனிதன் தன்னை விவரிக்க முடியாத விசாலத்தில் இழந்து விடுகிறான்.

--மனிதன் முதலில் தேடுவது அதிகாரம். அடுத்தது ஞானம்.

--சுயஞானத்தைத் தேடும்பொழுது நாம் ‘அதை’க் கண்டோம். அது தெரிந்தால் அனைத்தும் தெரியும்.

--மனிதன் தன் ஜீவனை அறிகிறான். அது பிரபஞ்ச ஜீவனுடன் ஒன்றியது. இது ‘அதை’ப் பிரதிபலிக்கும்.

--கடவுள், மனிதன், இயற்கை ஆகிய மூன்றும் மனிதனில் விழிப்பாகச் சந்திப்பது அந்த ஞானம் தேடும் அடிப்படை.

பரிணாமம் - உயர்ந்து இணைவது

--ரூபத்தை உற்பத்தி செய்து, அடுக்கடுக்காக வைத்து, ள்ள நிலையைக் கடந்து, எல்லா நிலைகளையும் இணைப்பது பரிணாமம்.

--ஜடம், வாழ்வு, மனம் ஆகியவை பரிணாம சக்தியில்லை. சத்தியஜீவியம் அச்சக்தி.

--வடித்தெடுக்கப்பட்ட வழியோ, முன்கூட்டி அறியக்கூடியதோ இல்லை பரிணாமம். அது உருமாற்றத்தின் ஆச்சரியம்.

--தாழ்ந்தது உயர மனிதன் கீழ் நோக்கிப் பார்க்கிறான். உயர்வதும், இணைவதும் இலட்சியங்கள்.

--ள்மனம் தன் வாயில் திறந்து ஆன்மீக மனத்திற்கும் சூட்சும ஆன்மாவுக்கும் உயர்த்தும். இது இரட்டை வாயில். புதிய பரிணாமத்தின் இரகஸ்யம்.

--கீழிருந்து மேலும், வெளியிலிருந்து உள்ளும் மையம் மாறும்.

எழுவகை அஞ்ஞானம், எழுவகை ஞானம்

--அமைப்பின் அஞ்ஞானம் அனைத்தின் சிக்கலான முடிச்சு.

--விழிப்பான ஜீவன் சிறியது என்பதால் மனத்தின் அஞ்ஞானம் நமக்குப் பிடிபடாது. அது பிடிபட்டபின் அனைத்தும் பிடிபடும்.

--ள்ளே போய், அடிமனம் சேர்ந்து, அங்கிருந்து பரமாத்மாவை நோக்கி உயர எழுவது அவசியம்.

--அமைப்பின் அஞ்ஞானம், மனத்தின் அஞ்ஞானம் ஆகியவற்றின் பெரும்பகுதியை பரமாத்மாவையடையாமல் விலக்கலாம்.

--பூரணமாக, சிறப்பாக இணைய மேலும் உயர்வது அவசியம்.

--பிரம்மத்தைப் புருஷனில் அறிவது, பிறப்பைக் கடந்த நிலையில் அறிவது அமர வாழ்வாகும்.

--இம்மாற்றங்கள் நடைபெற நாம் உள்மனத்துள் ஜீவனின் உயர்ந்த லோகங்களை அகந்தையை அழித்து அடைய வேண்டும்.

--இப்பாதை பிரபஞ்ச அஞ்ஞானத்தையும் கரைக்கும்.

--இங்ஙனம் சுயஞானம் பூர்த்தியடைந்து நடைமுறை அஞ்ஞானம் கரைகிறது.

--இது ஆன்மீகப் பரிணாமத்தை அறிந்து ஏற்பதாகும்.

புனர்ஜன்ம தத்துவம்

--வாழ்வின் புதிர்கள் இரண்டு. பிறப்பு முதற் புதிர். இறப்பு அடுத்தது. பிறப்பின் முன்னும், இறப்பின் பின்னும் உள்ளவை அறிவுக்கும் நினைவுக்கும் எட்டா. அதனால் மறுபிறப்பு எப்பொழுதும் புரியாத புதிராக இருக்கிறது.

--பௌத்தனுக்கும், மாயாவாதிக்கும் புனர்ஜென்மம் தேவை இல்லை; வேதாந்தம் லீலை என்பதால் மறுபிறப்பு இன்றியமையாததில்லை.

--பகவானுடைய தத்துவம் ஆன்மா வளர்கிறது, பரிணாம வளர்ச்சியுறுகிறது என்பதால் புனர்ஜென்மம் அவசியமாகிறது.

--மனிதனுடைய ஜீவியம் வளர்கிறது. அதற்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. நம் மனத்திலுள்ள பிரம்மம் பிரபஞ்சத்தின் பிரம்மமானால் அல்லது அதைக் கடந்த ஆத்மாவானால், அவை பிரம்மத்தின் சக்தியானால் ஜீவாத்மா முக்கியம் பெறுகிறது.

--பகுதியான பிரிக்கும் மனம் ஐக்கியத்தை வெளிப்படுத்தி உடலளவில் வெளிப்பட்டால் இந்த லீலை முடிவடையும்.

--அதனால் புனர்ஜன்மம் இன்றியமையாதது.

மற்ற லோகங்கள்

--பரிணாமத்தின் வேகம் சிருஷ்டிக்கு சக்தியளிக்கிறது.

--உலகம் பல கட்டங்களாக அமைந்துள்ளது என்பதால் ஜீவாத்மாவும், அவனது இலட்சியமும் உலகம் சிருஷ்டிக்கப்படு முன் இருந்தன என்றாகிறது.

--ஜடத்தின் அறியாமை மனிதனின் அறியாமைக்கு முந்தையது.

--மனம், உயிர், ஜடலோகங்கள் இருக்க வேண்டும். ஜடலோகம் மட்டும் இருப்பது பொருந்தாது.

--நிரூபணம் கேட்பது அறிவுக்குப் பொருந்தாது. எதையும் அதற்குரிய சட்டப்படி ஆராய வேண்டும்.

--இந்த லோகங்கள் ஜடத்திலிருந்து எழுவதால் அவை நமக்குத் தட்டுப்படாமலிருக்காது.

--மனிதன் உள்ளே சென்றால் பரந்த வாழ்வும் ஜீவியமும் காத்துள்ளன.

கர்மம், ஆத்மா, அமரவாழ்வு

--புனர்ஜன்மமுண்டு என்றால் அடுத்த லோகங்கட்குப் போகும் பாதைகளை அறிய வேண்டும்.

--பரவலாக ஆயிரம் எண்ணங்கள் உள. அவை அறிவுக்குப் பொருந்தா.

--ஆத்மா பிறப்பால் தன்னை வெளிப்படுத்தி, சுய அனுபவம் பெறுகிறது.

--ஜடமான மனம் ஆத்மா வளராதுஎனக் கருதுகிறது. அதை ஏற்காவிடில் கர்மம் நம்மைக் கட்டுப்படுத்தாது.

மன்னராட்சியில் மக்கள் மன்னராகும் வாய்ப்பில்லை. மக்க-ளாட்சியில் உண்டு.

நாம் மனதால் ஏற்பவை நம் வாழ்வில் பலிக்கும்.

கர்மம் அது போன்றது.

நமக்குப் பலன் தருவதும், பாதிப்பதும் நாம் ஏற்றுக் கொண்டவையேயாகும்.

நாம் கர்மத்தை ஏற்கிறோம்.

அது நம்மைப் பாதிக்கிறது.

மேல்நாட்டார் கர்மத்தை ஏற்பதில்லை.

நம்மைப்போல் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை.

கர்மம் பிரகிருதிக்குட்பட்டது.

பிரகிருதியைக் கடந்து ஜீவன் உள்ளது.

பிரகிருதியிலுள்ளவரை கர்மம் பாதிக்கும்.

அதைக் கடந்து ஜீவனுக்குப் போனால் கர்மம் பாதிக்காது.

சர்க்கார் அதிகாரிக்கு பரிட்சைகள் உண்டு, இன்கிரிமெண்டு, பிரமோஷனுண்டு.

அவை சட்டம்.

எவரும் அதை ஏற்க வேண்டும்.

இது பிரகிருதியைப்போன்றது.

அரசியலை ஜீவனுக்கு ஒப்பிடலாம்.

அரசியலில் பரிட்சையில்லை, பிரமோஷனில்லை, இன்கிரிமெண்ட் இல்லை.

எத்தனை கட்டங்களும் எவரும், முடிந்தால், தாண்டிப் போகலாம்.

இது ஜடமான நம்பிக்கை.

சிந்திக்கும் மனம் ஆத்மா வளர்வதை அறிய முடியும்.

அதற்கு கர்மத்தை விட்டகலும் திறனுண்டு.

அது ஜீவனை எட்டலாம்.

கர்மம் அதற்கில்லை.

மனிதனும், பரிணாமமும்

--பிறப்பால் புறத்தில் ரூபமும், அகத்தில் ஜீவியமும் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன.

--மனிதக் குரங்கிற்குப் பரிணாம சக்தியிருந்ததுபோல் மனிதனுக்கு இல்லை.

--மனிதன் தன் நிலையைக் கடந்து உயரும் தலைமையுடையவன்.

--பரிணாமம் முந்நிலைக்குரிய ரூபத்தை நம்பியுள்ளது. அதை முழுவதும் வளர்க்கும் வாய்ப்பு பரிணாமம்.

--வளர்ந்த ஜீவியத்திற்குரிய வளர்ந்த உடல் தேவை என்பது வளர்ந்த ஜீவியம் உடலை வளரச் செய்யும் என மாறுகிறது. அதனால் பரிணாமம் இன்றியமையாததாகிறது.

ஆன்மீக மனிதனின் பரிணாம வளர்ச்சி

--தனியான ஆத்மாவைக் காணுதல் புருஷனைக் காண்பதாகும்.

--தாழ்ந்த பகுதிகள் - உடல், உயிர், மனம் - சிறப்படைந்தால் ஆத்மா வெளிவரும்.

--அஞ்ஞானம் ஞானமாகத் திருவுருமாற, ஆன்மீக அறிவு அவசியம்.

--ஆன்மீக ஜீவனைத் தன்னுள் கண்டு அதைப் பிறர் காண உதவுவது உண்மையான சேவை.

மூன்று திருவுருமாற்றம்

1) சைத்தியப்புருஷன் வெளிவருதல்

2) ஆன்மீகத் திருவுருமாற்றம்

3) சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.

--ஆன்மா முழுவதும் வெளிவருதல் எனில் நேரடியாக ஆன்மீக சத்தியத்தை அறிவது.

--மேற்கொண்டு திருவுருமாற, சத்தியஜீவியச் சட்டம் தாழ்ந்த பகுதிகளில் வெளிவர வேண்டும்.

சத்யாரோகணம்

--மேலிருந்து சக்தி கீழே வருவது அவசியம்.

ள்ளே விழிப்பது அவசியம்.

--சுதந்திரம் என்பது தாழ்ந்தது உயர்ந்ததற்கு அடங்க வேண்டும்.

--மனிதன் பிரபஞ்சத்தின் பொதுச்சட்டத்திற்கு உட்பட வேண்டும்.

--வேதம் கூறும் புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும்.

--மேலிருந்து வரும் சக்தி தாழ்ந்ததை உயர்ந்ததுடன் இணைக்கும்.

--முனிவர் மனம் முதற்படி.

--ரிஷி, யோகி, தெய்வமனம் அடுத்தவை.

--ஒளிமயமான அவசியம் ஜட இருளின் குருட்டு அவசியத்தை மீறிச் செயல்படும்.

சத்தியஜீவன்

--சத்தியஜீவியம் தெய்வீக மனத்தை வெளிப்படுத்தும்.

--அது அஞ்ஞானத்தின் சத்தியத்தை ஊடுருவியடையும்.

--புறம் அகமாகத் தலைகீழே மாறும்.

--மனம் இரண்டறக் கலக்க முயலும்.

--நித்தியத்துவத்திற்கு நிலையான வாழ்வுண்டு.

--ஜடம் ஆன்மாவை வெளிப்படுத்தும்.

--புறத்தை அகம் கட்டுப்படுத்தும் சக்தி. வலி அப்படி ஆனந்தம் ஆகும்.

--சத்தியஜீவியத்தின் இலட்சியம் "tobe" ‘இருப்பது’.

--ஆர்வம் பூரிப்பாகி, திருஷ்டியாகும். ஏக்கம், சக்தி, நிலையான ஆனந்தம்.

--பர்சனாலிட்டி புறச்செயலை அகத்தால் கட்டுப்படுத்தும்.

பர்சனாலிட்டிக்கு பொதுசக்தி ஆதரவாக எழும்.

- Manners, behaviour, character, personality நடத்தை, பழக்கம், சுபாவம் என்பவற்றைக் கடந்தது பர்சனாலிட்டி. சுபாவம் திறமையுடையது. ஒரு துறையின் திறமையை அடுத்த துறையில் பயன்படுத்தவல்லது. புதியதாக வருவனவற்றை ஏற்று பழைய திறமையால் புதியதை வெற்றிகரமாக்குவது பர்சனாலிட்டி. திறமையாக பஸ் நடத்தியவர் முனிசிபல் சேர்மனாக இருப்பது அவருடைய பர்சனாலிட்டியைக் காட்டும்.

பர்சனாலிட்டி என்பது அகத்திறமை. அதற்கு உலகம் ஒத்துவரும், அடங்கும், பணியும். Impersonal power, personal power என்பவை பொதுசக்தி, தனிப்பட்ட சக்தி என ஆகும். பொதுசக்தி என்பது சட்டம், உலகம், வழக்கு தரும் உரிமை. தனிப்பட்டது என்பது குறிப்பிட்டவரின் திறமை. ஓர் ஆபீசில் கிளார்க்காக இருப்பவர் திறமையால் ஆபீசர் வேலையைச் செய்தால், அவரிடம் வேலை பெற்றுக் கொள்வார்கள், பதவியைத் தரமாட்டார்கள். பதவியைக் கொடுத்தால் தயா விஷயமாகத் தருவார்கள். அப்படி ஒரு சட்டமிருந்தால் அவர் உரிமையுடன் அதைப் பெறுவார். சட்டம் impersonal பொதுசக்தி. I.A.S. ஆபீசர் மந்திரி வேலையைத் திறமையாகச் செய்வதற்கும், அத்திறமையால் அவர் மந்திரி பதவி வகிக்க சட்டம் வருவதற்கும் உள்ள வித்தியாசமிது.

--ஜீவன் புருஷனாக எழும்.

--இயற்கை இயல்பாகச் செயல்படுவது, தெய்வம் ஆணையிட்டு ள்வதாக மாறும்.

--ஞானமும், உறுதியும்; ஒழுங்கும், சுதந்திரமும் உடன் உறையும்.

--கண்டத்தினின்று அகண்டம் எழும்.

--பிரபஞ்சம் மனிதனை சிருஷ்டிக்கிறது.

--பிரம்மம் சத்தியத்தையுடையது; தேடாது.

--சுதந்திரம், சட்டமில்லை.

--அனைத்தையும் உட்கொண்ட பிரம்மம், சுயநலமில்லை.

--கருவியும் வளரும்.

--பிறப்பில் சுயஞானமுண்டு; உலகை நுணுக்கமாக அறியும்.

--சிருஷ்டியில் கட்டங்களுண்டு. திருவுருமாறாத மனிதகுலம் இருக்கும்.

--மேலும் பரிணாமம் சுமுகமாக ஞானத்தில் நடைபெறும்.

தெய்வீக வாழ்வு

1) அகத்தின் சத்தியத்தைக் கண்டு சித்திக்க வேண்டும்.

2) சத்தியஜீவியம் அந்த அகத்தின் சத்தியம். அகம் வளர்ந்து சிறப்பதால் இதையடையலாம்.

3) இயற்கை முழுமை, விழிப்பு, சக்தி, ஆனந்தம், பிரபஞ்ச வாழ்வு ஆகியவற்றைக் கண்ணுக்குத் தெரியாத வழியில் அடைய முயல்கிறது.

4) ஆன்மீக முறை அகத்திற்குரிய முறை. அது இறைவனாவது. இறைவனாகித் தானே சிருஷ்டிப்பது.

5) ஐக்கியம் சக்தி வாய்ந்து தெய்வீக வாழ்வை நிர்வகிக்கும்.

ஆன்மீக ஞானத்தாலும், உலக ஞானத்தாலும் அகத்தில் ஜீவன் பூரணமடைகிறது.

6) ஐக்கியம், பரஸ்பரம், சுமுகம் ஆகியவை மனத்தின் உயர்ந்த சக்திகளால் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆன்மீக ஞானத்தாலும், உலக ஞானத்தாலும் அகத்தில் ஜீவன் பூரணமடைகிறது.

7) மனம் வாழ்வைக் கடக்கிறது. ஆன்மா ஜடத்தை ஆள்கிறது.

8) சத்தியஜீவனைச் சுற்றி இயல்பான ஜீவனின் ஐக்கியம் எழும்.

9) ஞானம் சாதிக்கும், அறிவால் முடியாது.

10) மனிதன் மையமான இரகஸ்யம். ஆத்மசுதந்திரமும், சுபாவத்தின் சிறப்பும் நிபந்தனைகள் .

11) ஆன்மா முழுவதும் வெளிவந்து திருவுருமாறுவது தவிர்க்க முடியாதது.

12) உடலும், வாழ்வும் இனி கொடுமைப்படுத்த முடியாது.

13) பிரம்மம் சித்தித்த ஜீவன் ஆன்மீகப் பிரம்மம் கரணங்களை ஆட்சி செய்வது சத்தியஜீவனாகும்.

14) இரட்டை ஜடங்கள் இருளுக்குரியன. அது முடிந்தது. அஞ்-ஞானத்தின் ருசி இனியில்லை.

15) புதிய சிருஷ்டி சுயமான சிருஷ்டி. அனந்தனை அனந்தனின் ஞானரூபங்களாக சிருஷ்டிக்கிறது. முடிவற்ற ரஸா எழுகிறது. வாழ்வு அற்புதமாக மாறும். ஜீவனும் வாழ்வும் முழுமை அடைகின்றன. வாழ்வின் பரிணாமம் பிரம்மத்திற்குத் திரும்பி வருகிறது. அதன் முயற்சி முடிந்தது.

தொடரும்....


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

குறைவே குறைவைச் சந்திக்கும். பரிசுத்தம் குறைவைச் சந்திக்க இயலாது. ஒன்றை அடுத்தது தொடும் இடமில்லை.

குறைவே குறைவைச் சந்திக்கும்.


 


 



book | by Dr. Radut