Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)       கர்மயோகி

XV. The Supreme Truth-Consciousness Page No.139, Para 15

15. உயர்ந்த சத்தியஜீவியம்

Our universe is of triple terms.

பிரபஞ்சம் மூன்று அம்சங்களாலானது.

It is Mind, Life and Matter.

மனம், உயிர், ஜடம் அவை.

This is the lower consciousness.

இது தாழ்ந்த ஜீவியம்.

It has an organisation.

இதற்கோர் அமைப்புண்டு.

Our mentality understands it.

நம் மனப்பான்மை அதையறியும்.

What is its origin?

அதன் ஆரம்பமென்ன?

There is the all-efficient supermind.

எல்லாம்வல்ல சத்தியஜீவியம் உண்டு.

It operates in the three original terms.

இது இந்த மூன்று அம்சங்களாகச் செயல்படும்.

They are Existence, Conscious-Force and Bliss.

அவை சத், சித், ஆனந்தம்.

All things proceed from its action.

அனைத்தும் அவற்றின் செயலினின்று வெளிப்படும்.

Nothing else exists.

வேறெதுவுமில்லை.

These higher terms are cast into lower terms.

இந்த உயர்ந்த அம்சங்கள் தாழ்ந்த அம்சங்களாக மாறுகின்றன.

The lower terms are our mentality.

தாழ்ந்தவை நம் மனப்போக்கு.

It is vitality and physical substance too.

உயிரும், உடலும் அதைச் சேர்ந்தவை.

It is done by a faculty.

இந்த மாற்றத்தைச் செய்வது மனத்தின் திறமை.

It must issue from the creative Truth-Consciousness.

 

இது சிருஷ்டிக்கும் சத்தியஜீவியத்திலிருந்து வெளி வரவேண்டும்.

What is that faculty?

 

இது  என்ன திறன்?

It is in a secondary power.

 

இது இரண்டாம்பட்ச சக்தி.

It is a power of projecting, confronting and apprehending.

வெளிப்பட்டு, மோதும், காண முயலும் சக்தியிது.

It is a consciousness.

இது ஜீவியம்.

Knowledge centralises in it.

 

ஞானம் இங்கு மையமாகச் சேர்கிறது.

It stands back from its works.

 

அது அதன் செயலினின்று பிரிந்து நிற்கிறது.

From there it observes them.

அங்கிருந்து அது பார்வையிடும்.

It is a power of creative knowledge.

இது சிருஷ்டிக்கும் ஞானத்தின் சக்தி.

We speak of centralisation.

நாம் மையத்தைப் பற்றிப் பேசுகிறோம்.

We know of equable concentration of consciousness.

ஜீவியம் சமமாகச் சேர்ந்துள்ளதை நாமறிவோம்.

We spoke of it hitherto.

இதுவரை நாம் அதைப்பற்றிப் பேசினோம்.

Now we speak of an unequal concentration.

இனிச் சமமில்லாத நிஷ்டையைப்பற்றிப் பேசுவோம்.

There is the beginning of self-division.

இங்கு ஜீவன் தன்னையே பிரிக்க ஆரம்பிக்கிறது.

Self-division is its phenomenal appearance.

தன்னைப் பிரிப்பது அதன் தோற்றம்.

Page No.140, Para No.16


 

The Knower holds himself concentrated.

அறிபவன் தன்னைச் சேர்த்துப் பிடிக்கிறான்.

He concentrates in knowledge as subject.

ஞானத்தில் அவன் அகமாகச் சேர்கிறான்.

He has a Force of consciousness.

அவனுக்கு ஜீவிய சக்தியுண்டு.

He regards the Force proceeding from him.

சக்தி தன்னிலிருந்து புறப்பட்டுப் போவதாகக் கருதுகிறான்.

It proceeds into the form of himself.

தன் ரூபத்துள் அது நுழைகிறது.

It proceeds continually thus.

அதேபோல் தொடர்ந்தும் செய்கிறது.

He continually draws back into himself.

தொடர்ந்து தன்னுள் அது தன்னை இழுத்துக்கொள்கிறது.

The Force continually issues forth again.

சக்தி தொடர்ந்து வெளிவருகிறது.

This is an act of self-modification.

இது தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் செயல்.

From this single act proceed all practical distinctions.

இந்த ஒரு செயலினின்று எல்லா நடைமுறை வேறுபாடுகளும் எழுகின்றன.

Our view of the universe is relative.

பிரபஞ்சத்தைப் பற்றிய நம் எண்ணம் நம்மைப்பொருத்தது.

Our action in the universe is relative.

பிரபஞ்சத்தில் நம் செயலும் நம்மைப்பொருத்தது

Both proceed from this single act.

இரண்டும் ஒரே செயலினின்று வருகின்றன.

There is a practical distinction.

இது நடைமுறை வேறுபாடு.

It is knower, known and knowledge.

அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற பிரிவுகள் அவை.

It is the Lord, His force and the children.

ஈஸ்வரன், அவன் சக்தி, அவனது குழந்தைகள்.

The children are the works of the Force.

அச்சக்தியின் செயல்கள் குழந்தைகளாகும்.

It is the Enjoyer, the Enjoyment and the Enjoyed.

அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கப்படுவது என்ற மூன்று நிலைகள் உண்டு.

It is Self, Maya and the becomings of the Self.

பிரம்மம், மாயை, பிரம்மசிருஷ்டி.

Page No.140, Para No.17


 

This is a conscious Soul.

தன்னையறியும் ஆத்மாவுண்டு.

It is concentrated in knowledge.

அதன் ஞானம் அதனுள் செறிந்துள்ளது.

This is the Purusha.

இது புருஷன்.

It observes and governs the Force.

சக்தியை கவனித்து ஆள்கிறது.

The Force has gone forth from him.

சக்தி அவனிடமிருந்து போயிற்று.

It is Shaki or Prakriti.

அது சக்தி அல்லது பிரகிருதி.

He repeats himself in every form of himself.

தன் பல ரூபங்களில் அவன் திரும்பத் திரும்ப வருகிறான்

There is this apprehending consciousness.

பிரக்ஞா இருக்கிறது

It is born in self-division.

இது தன்னைப் பகுப்பதால் ஏற்பட்டது.

He accompanies his Force.

அவனுடைய சக்தியை அவன் தொடர்கிறான்.

It is Force of consciousness.

அது ஜீவிய சக்தி.

He enters into its works.

அவன் அச்செயல்களுள் நுழைகிறான்.

He reproduces there the act of self-division.

அங்கு தன்னைப் பிரிக்கும் செயலை மீண்டும் செய்கிறான்.

This Soul dwells in each form.

ஆத்மா அந்த ரூபங்களில் உறைகிறது.

It dwells with his Nature.

அவனுடைய இயற்கையுடன் அது உறைகிறது.

He observes himself in other forms.

தன்னை மற்ற ரூபங்களில் அவன் கண்டுகொள்கிறான்.

He does so from its centre.

அவனுடைய மையத்திலிருந்து அவன் அப்படி நடக்கிறான்.

It is an artificial centre.

அது செயற்கை மையம்.

It is a practical centre of consciousness.

அது ஜீவியம் செயல்பட நடைமுறையில் ஏற்பட்ட மையம்.

In all it is the same Soul.

எல்லா ஜீவராசிகளில் காண்பது ஒரே ஆத்மா.

It is the same divine Being.

எங்கும் காண்பது ஒரே தெய்வீக ஜீவன்.

The centres multiply.

அம்மையங்கள் பெருகுகின்றன.

It is only a practical act of consciousness.

அது ஜீவியம் நடைமுறையில் செயல்படும் வகையாகும்.

It is intended to institute a play.

லீலையை ஸ்தாபிக்க ஏற்பட்ட ஏற்பாடு அது.

It is a play of difference, of mutuality.

ஒன்றோடொன்று பரஸ்பரம் உதவ ஏற்பட்டது அது.

It is a play of many things.

அது பலவற்றால் ஏற்பட்ட லீலை.

They are mutual knowledge, mutual shock of force, mutual enjoyment.

பரஸ்பர ஞானம், பரஸ்பர அதிர்ச்சி, பரஸ்பர அனுபவம்.

It is a difference.

அது ஒரு மாறுபாடு.

It is based on essential unity.

அடிப்படை ஐக்கியத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் அவை.

A unity realised out of difference.

வேறுபாட்டில் கண்ட ஐக்கியம்.

Its basis is practical.

நடைமுறை அதன் அடிப்படை.

Contd....

தொடரும்....

****

****


 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணம், உணர்வு, செயல் - மூன்றையும் சமர்ப்பணம் செய்தால் ஜீவனுடைய ஜீவியம் (the consciousness of the being) செயல்படும்.

ஜீவனுக்கும் ஜீவியம் உண்டு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னையின் அன்பு அலைகள் பரவுவது நிச்சயம். எதிர்ப்பு இல்லாத ஏற்புத்திறனுடையவரையே அவை விரும்புகின்றன.

அன்னையின் அன்பு தானே பரவும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

"கோபம், பயம், காமம் வெளியிலிருந்து நம்முள் வருகின்றன. நாம் அவற்றிலிருந்து விலகவேண்டும்'' என்கிறார் பகவான். அப்படியென்றால் எதுவுமே நம்முடையதில்லை. நமக்கே உரிமையானது எது? நமக்குரியது பிரகிருதி (இயற்கை) அல்ல; புருஷனே நமக்குரியவன். நாமே புருஷன்.

நமக்குரியது புருஷன்; பிரகிருதியன்று.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசையைத் திருவுருமாற்றம் செய்ய, ஆசை முதலில் தீவிரமானதாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அங்கு அதிக சக்தி வெளிப்படும். திருவுருமாற்றத்திற்கு அதிகபட்ச சக்தி தேவைப்படுவதால், அது வலிமையற்ற ஆசைக்கு இல்லாததால் அதை மாற்ற முடியாது.

வலிமையற்ற ஆசைக்குத் திருவுருமாற்றமில்லை.


 


 


 


 


 


 


 


 


 

 


 



book | by Dr. Radut