Skip to Content

07.பருவம்

பருவம்

கர்மயோகி

. எதற்கும் நேரம் வரவேண்டும் என்பது அனுபவம்.

. நேரத்தை வரவழைக்கலாம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. விஞ்ஞானம் விவசாயத்திற்கு வந்ததிலிருந்து ஆடிக்குத் தைப்பட்டம், ஆடிப்பட்டம் தேடி விதை, நெல் 6 மாதப் பயிர், மணிலா 6 மாதப் பயிர் என்பவை மாறி தண்ணீரிருந்தால் எந்த பயிரும் எந்த நேரமும்பயிரிடலாம் என மாறிவிட்டது.

. பருவம் ஆண்டவன் விதித்தது.

. விஞ்ஞானம் மனித முயற்சி.

. மனித முயற்சி ஆண்டவன் விதித்ததை மாற்றி அமைத்தது. விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுகிறது.

. தென்னைமரம் வருஷம் முழுவதும் காய்க்கும். மா, பலா, முந்திரி பருவத்தில் பழுக்கும்.

. பழத்திற்குப் பருவம் உள்ளதுபோல் பூவிற்கும் பருவம் உண்டு.

. பூமூலம் பிரச்சினை தீர ஒருவர் நம்பிக்கையோடு முயன்றால், பருவமே இல்லாவிட்டாலும் அம்மலர் கிடைக்கும்; பிரச்சினை தீரும்.

. நம்பிக்கையற்றவர் பிறருக்காக மலரைத் தேடினால், பருவமானாலும் அவருக்கு எளிதில் பூ கிடைக்காது. உடலில் தெம்பில்லை என்றவர் தினமும் அன்னையை 3 முறை தரிசனம் செய்பவர். அவர் இட்ட வேலையை செய்பவர்; அன்னைக்குரியவர். ஆனால் அன்னை மீது நம்பிக்கை இல்லாதவர். மற்றவர் பெறும் பலனைக் கண்டு தாமும் மலரால் பயன் பெறலாம் என சாமந்தியைத் தேடினார்; கிடைக்கவில்லை. 'இது பருவமேயில்லை; மலர் கிடைக்காது' என வாழ்வு அவர் காதில் அசரீரியாய் ஒலித்தது.

. அன்னை தரிசனம் தாராத பலனை மலர் தரப்போகிறதா?

. அவருக்கும், அவர் முயற்சிக்கு சில நாள்களில் உடலில் தெம்பு உயர்ந்தது.

. அன்னையை ஆங்கிலத்தில் iconoclast என்பர். தமிழில் அப்படி ஒரு சொல் இல்லை. விதி எதுவானாலும் அதை எதிர்ப்பவர், சட்டம் எதுவானாலும் அதை மறுப்பவர். சட்டம், ஒழுங்கு, முறை, விதி, மரபு ஆகியவற்றை இயல்பாக மறுத்து, எதிர்த்து, ஒதுக்குபவர் எனப் பொருள்படும்.

பருவத்திற்குட்பட்ட பயிர் என்ற சட்டம் அன்னைக்கில்லை.

. மழை ஐப்பசி, கார்த்திகையில் பெய்யும். பங்குனி, சித்திரையிலும் பெய்வது உண்டு. ஜனவரி முதல் ஜூன் வரை 12 அங்குலம் பெய்வது வழக்கம். மே மாதம் 20 அங்குலம் பெய்த சரித்திரம் உண்டா? Grace அருள் மலர் மழையைக் கொண்டுவருவது விவசாய அன்பர்கள் அறிந்தது.

. 1980இல் தமிழ் எழுத்தாளர் ஒருவரை தமிழ் பத்திரிகையொன்றில் ஆசிரமத்தைப் பற்றி எழுதக் கேட்டேன். திட்டவட்டமாக முடியாது என்றார். ஆனந்த விகடனில் 40 வருஷத்திற்கு முன் தமிழ்நாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் எழுதப்பட்டபொழுது ஆசிரமம் விலக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும் எதிர்த்து எழுத பலர் முன் வருவார் என்றார். அவரே அமுதசுரபியில் எழுத ஏற்பாடு செய்தார். இன்றைய நிலை வேறு. எதிர்ப்பு ஆதரவாக மாறுவது திருவுருமாற்றம்.

. சுமார் 3, 4 வருஷங்களாக நிலம் உள்ளவர் Grace அருள் செடியை நட வேண்டும். வீட்டில் தோட்டம் உள்ளவர் அச்செடியை நடலாம். முடிந்தவர் முடிந்த அளவுக்கு அச்செடியை நடவேண்டும்என நான் செய்த முயற்சியை எவரும் பொருட்படுத்தவில்லை. Primrose பள்ளியில் கொஞ்சம் செடிகளை நட முயன்றேன். ஓரிரு அன்பர்கள் தம் தம் வீட்டில் அதை நட்டனர். மலர்ந்தவுடன் எனக்குச் செய்தி அனுப்பினர். அம்மலரைக் கொண்டுவந்து எனக்குக் கொடுத்தனர்.

. ஹாலண்டிலிருந்து மதர் எஸ்டேட்டில் ஓர் இளைஞர் வந்து தங்க விருப்பப்பட்ட பொழுது தினமும் ஒரு Grace செடியை நட்டால், மலர் வருஷம் முழுவதும் கிடைக்கலாம் என்று விருப்பப்பட்டேன்.

. இந்த ஆண்டு பருவம் இனிதான் துவங்கும். டிசம்பர், ஜனவரியில் பருவம் முடியும். ஜனவரி முதல், இன்றுவரை (ஆகஸ்ட் 31) Grace அருள் மலர் குறுக்கே நெடுக்கே பலமுறை வந்தன. அப்படி வந்ததில் எந்த மாதமும் தவறவில்லை. மே மாதத்திலும் 2, 3 நாள் மலர் கிடைத்தது.

பருவமில்லாதபொழுதும் 'அருள்' மலராக சிறிதளவு வருவதற்கு என்ன முக்கியத்துவம்?

எந்தத் தகுதியும் இல்லாதவருக்கு எல்லாத் தகுதியுமுடையவர்குரியவை ஓரளவு கிடைக்கும் எனப் பொருள்.

மலரைக் கருதியவர் வாழ்வில், அச்செடியை நட்டவர் வாழ்வில் அப்பலன்களை நான் கண்டேன்.

சென்ற ஆண்டு பெருமழை பெய்தது அன்னை தமிழ்நாட்டிற்குச் செய்த அருட்பிரசாதம்.

Grace அருள் மலர் ஒரு நாள் தவறாமல் கிடைக்கப்பெறுவது அருளன்றோ!

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னையிடம் வந்தபின் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நாம் பழைய பழக்கத்தை நாடியதால் வந்ததுஎன்பதைக் காணலாம்.

அன்னை பிரச்சினையை வேரோடு விலக்குகிறார். . வேதனையைச் சாதனையாக்க நாம் விலகியதை வலிய நாடுகிறோம்.


 


 



book | by Dr. Radut