Skip to Content

08.சாவித்ரி

சாவித்ரி

P.74 This knowledge first he had of time-born men.

காலத்தில் பிறந்த ஜென்மம் கண்டெடுத்த ஞானமிது.

. மனம் எனும் பிரகாசமான திரையூடே வருவது இந்த ஞானம்.

. எண்ணத்திற்கும் எதையும் உட்கொண்ட திருஷ்டிக்கும் இடைப்பட்டது.

. சூட்சுமக் குகையும், புதிரான வாயிலும் அவன் கண்டான்.

. ஆத்ம திருஷ்டியின் ஊற்றருகே அமைந்தது.

. பெருமையின் சிறகு உரிமையுடன் உள்ள இடம்.

. சூரிய ஒளி ஜோதியாக உலகை வெளிப்படுத்துமிடம்.

. நம்பிக்கையில் நம்பிக்கையில்லை; ஐயம் எழவில்லை.

. அதிர்ச்சியின் அவலத்தை ஆர்வமாக நாடுதல்.

. மண்ணைப் பிணைக்கும் மனமெனும் வடத்தை வந்தெடுத்தான்.

. ஜடத்தின் சட்டத்தை ஆட்சியிலிருந்து விலக்கினான்.

. காயத்தின் சட்டம் கர்மத்தைக் கடந்த ஆத்மாவைக் கட்டுப்படுத்தாது.

. நாடி விழுந்தபின், மரணம் தீண்டவில்லை.

. எண்ணம் அசைவிழந்து, மூச்செழ மறுத்தபின் வாழும் தைரியம்.

. மந்திர மாளிகையுள் காலடி எடுத்து வைத்தான்.

. எவரும் எட்டிப்பார்க்கவும் முடியாத ஏற்றம் அது.

. உளைச்சலில் உழலும் மனத்தின் சாதனையை விலக்கி,

. பார்வையற்ற இயற்கையின் பரிதாபமான திருஷ்டி.

. தெய்வம் கற்ற பெருவித்தை அனைத்தும் சொந்த ஞானமான மூலம்.

. மறைபொருளான அறையை மூடி மறைத்த ஊமை உருவம்.

. பிரபஞ்ச ஞானம் பெற்ற பிரகஸ்பதியின் சாஸ்திரம்.

. புனித தர்மத்தின் புலப்படும் உருவங்கள்.

. ஜீவனின் சாஸ்த்திரம் ஜீவனைத் தொடும் பாணி.

. வேத வித்தையின் அக்ஷரம் க்ஷரமான சத்தியம்.

. நட்சத்திர கதி நம் விதியை நிர்ணயிக்கும் நளினம்.

. எண்ணமும் எழுத்தும் எடுத்துரைக்கும் எழுச்சி.

. உலக வரலாற்றின் உள்ளுறை இரகஸ்யம்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னால் முடிந்ததை எல்லாம் செய்பவன் தானுள்ள நிலையில் அதிகபட்சம் சாதிப்பான். அந்நிலையைக் கடக்க அந்நிலையில் முடிக்கக்கூடிய அத்தனையும் சாதிக்க வேண்டும்.

பொறுப்பை முடித்தவன் நிலையைக் கடப்பான்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம், உணர்வு, ஆன்மாவுக்கு ஆனந்தம், அன்பு, சந்தோஷம் அழகாகத் தெரிகின்றது.

மனம் உணரும் ஆனந்தம் அழகு.


 


 


 



book | by Dr. Radut