Skip to Content

13.மரமல்லிகை, நாகலிங்கப்பூ

 

     தானே நம்மைத் தேடிவரும் மலர்கள் நம் மனநிலையை, சூழ்நிலையை, நடந்தவற்றை, சற்று நேரத்தில் நடக்க இருப்பதைக் காட்டுவது, எங்கோ ஓர் ஸ்தாபனம் ஆயிரம் பேர் மூலமாகச் செயல்படுவதுபோல் தெரியும்.

     ‘‘ஜீவனுள்ள மலர்கள்’ எழுதி முடித்து முன்னுரை எழுதும்பொழுது வழக்கத்திற்கு மாறாக ஸ்ரீ அரவிந்தர் அறையிலிருந்து 2 சிவந்த ரோஜா மலர்களை என் கையில் கொடுத்தனர்.

     சமாதி புஷ்பங்களை விவரமே அறியாதவர் கூடையோடு கொண்டுவரும்பொழுது சந்தோஷம் பொங்க வந்து நின்றார். படிப்பில்லாதவர், அன்னையைப்பற்றிக் கேள்விப்படாதவர். கூடையைக் கொண்டுவந்தது மட்டுமே அவர் செய்தது. "இவ்வளவு சந்தோஷம் பொங்கினால், கூடையில் என்ன மலர்கள் இருக்கும்?"எனத் தேட நினைத்தேன். எனக்கு கிடைக்காத மலர் Joy, சந்தோஷம். அது ஒன்று தெரிந்தது. அவர் சந்தோஷத்திற்கு எனக்குக் காரணம் புரிந்தது. அடுத்த சந்தோஷ மலரும் கண்ணில் தென்பட்டது. அப்படிக் கிடைத்தவை 7,8 மலர்கள்.

     ‘மௌனம்’ என்ற மலர் சீசனில் கிடைக்கும். வீட்டிலேயே மலர்ந்தாலும், வீடு அமர்க்களமானால், மலர் உள்ளே வாராது. அது வீட்டிற்கு வரும் சமயம் தியானம்போல் மௌனம் குடி கொள்ளும்.

     நம் வீட்டு சூழ்நிலைக்கும், தானே வரும் மலர்கட்கும் உள்ள தொடர்பு அற்புதம்.

     நமக்குப் பிடித்தவை சில இறைவனுக்கு விலக்கு. இறைவனுக்குப் பவித்திரமான ஒரு சில செயல்களை சமூகம் தவறு, பாவம் எனவும் கூறும். அதுபோன்ற செயலை நெஞ்சு நிறைந்து செய்தவர் மனம் லேசான கேள்வியை எழுப்பியது. அடுத்த நிமிஷம் பெரிய தட்டு நிறைய ‘தூய்மை’ - மல்லிகை வந்தது. அன்று முழுவதும் அன்பர் போகுமிடமெல்லாம் Purity வரவேற்று, மனம் எழுப்பிய கேள்விக்குப் பதில் கூறியது.

  • என் மனதில் என்றும் உள்ள இலட்சியம், நாட்டில் வளம் அளவுகடந்து பெருகி வறுமை அழிய வேண்டும்.

  • அன்பர்கள் அன்னை குடிகொள்ளும் அளவுக்கு மனம் மாற வேண்டும்.

  • அன்னை என்னிடம் கடலூரிலிருந்து கொண்டுவரும்படி விரும்பிக் கேட்ட மலர்கள் இரண்டு

1) தன்னலமற்ற சுபிட்சம் (வெள்ளை நாகலிங்க மலர்)

2) திருவுருமாற்றம் (மரமல்லிகை).

 

....................

 

 

 



book | by Dr. Radut