Skip to Content

05.பழமொழியும் - அன்னை மொழியும்

பழமொழியும் - அன்னை மொழியும்

நாட்டுப் பழமொழிகள் வாழ்வு மனத்திற்கும், கர்மத்திற்கும் கட்டுப்பட்டதைக் குறிக்கும். அன்னை வாழ்வு, அன்பர் அனுபவம் வாழ்வு கர்மத்திற்கோ, காலத்திற்கோ கட்டுப்பட்டதில்லை. தவற இடமில்லாத வாழ்வு அன்னை வாழ்வு. நம் வாழ்வு சட்டத்திற்குக் கட்டுப்பட்டது. சட்டம் அன்னை வாழ்வுக்குக் கட்டுப்பட்டு புதியதாய் மாறும், என்ற அனுபவங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக்கொண்டு சில பழமொழிகளை அன்னை மொழியாக மாற்றி எழுதியிருக்கிறேன். விளக்கம் தேவையில்லை என்பதால் விளக்கம் எழுதவில்லை.

- உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்.

ஒரு முறை தரிசித்தவரையும் உயிருள்ளவரை காப்பாற்றும் அன்னை.

- தாயைப்போல் பெண், நூலைப்போல் சீலை.

நினைவைப்போல நிலை.

- முதற்கோணல், முற்றும் கோணல்

முதற்கண் வெற்றி, முடிவான முழுமையான வெற்றி.

- குறை குடம் கூத்தாடும்; நிறை குடம் ததும்பாது.

அன்னையை ஏற்றவர் குறை நிறைவாகும்.

- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

மூடிய வாய்க்கு முழு வெற்றியுண்டு.

- சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

நடப்பது கற்பனையைக் கடந்தது.

- ஜாண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளையன்றோ.

துளி சிறிதானாலும், அது அருளின் துளியன்றோ.

- கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.

உலகம் கைக்குள் அடக்கம்.

- ஏழைச் சொல் அம்பலம் ஏறாது.

ஏழை என்பதால் என் சொல்லை ஏற்றனர்.

- காசியில் கலம் விளைந்தால் எனக்கு என்ன?

யாருக்கு எந்த நல்லது நடந்தாலும், அது எனக்கும் நடக்கும்.

- கிணற்றுத் தவளை.

புறத்தை உட்கொண்ட அகம்.

- பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.

அன்பர் மனம் அருள், அடுத்தவர் மனம் இருள்.

- எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்.

அடுத்தவருக்கு ஒரு கண் வர, என் இரு கண்களையும்

தரும் அன்பு அன்னை அன்பு.

 

*******


 


 

Comments

Mother is great

Mother is great



book | by Dr. Radut