Skip to Content

10.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

The spiritual being in us which is of the Supreme Existence can know the Supreme Reality. It is self-evident to it.

மனம் ஆத்மாவை அறியவல்லதன்று. ஜீவன் சத்தைச்

சேர்ந்தது என்பதால் அது சத்தியத்தை அறியும்.

. சிருஷ்டியின் ஆதி பிரம்மம்.

. சிருஷ்டியின் முதற்படி "சத்" எனப்படும்.

. "சத்" ஏற்பட்டவுடன் "அசத்" ஏற்படுகிறது.

. "சத்" என்பது சத்புருஷனாகிறது.

. சத்தியம் சத்புருஷனின் புறவெளிப்பாடு.

. சச்சிதானந்தம் என்பதே முடிவு என்ற ரிஷிகள், அதை "சத்" எனவும், "சித்"எனவும், "ஆனந்த"மெனவும் கண்டனர்.

. "சத்" முதற்கட்டம். "சித்" இரண்டாம் கட்டம். "ஆனந்தம்" மூன்றாம் கட்டம்.

. சச்சிதானந்தம் அகம் எனவும், சத்தியஜீவியம் புறம் எனவும் கூறினர்.

. சத்தியஜீவியம் மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.

. அது அகம், புறம் எனப்படும். காலத்தைக்கடந்த நிலை, காலம் எனவும் பிரிகிறது.

. காலம் இரண்டாகப் பிரியுமிடத்தில் மனம் உற்பத்தியாகிறது.

. மனம் காலத்திற்குட்பட்டது.

. நாம் என நாம் அறிவது சத்புருஷனுடைய சத்தியம்.

. நம்மை நாம் மனம் எனத் தவறாக அறிகிறோம்.

. மனத்தால் நம்மை அறிய முயல்வது பகுதி முழுமையை அறிய முயல்வதாகும்.

. நாம் என்ற முழுமை பிரம்மம்.

. பிரம்மம் என்ற முழுமையை மனம் என்ற பகுதி அறிய முடியாது. சத்தியம் அறிய முடியும்.

. மாணவன் ஆசிரியரை அறிவின் உறைவிடமாகக் கருதலாம். அது உண்மையன்று.

. ஆசிரியர் மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம், போன்ற பாடங்களைப் போதிக்கிறார்.

. பாடம் என்பது ஞானத்தின் ஒரு பகுதி. மொழி, கணிதம், விஞ்ஞானம்,சரித்திரம் சேர்ந்தது பாடம்.

. பாடத்தைக் கண்டது பெரிய ஆத்மா.

. ஐன்ஸ்டீன், வால்மீகி, பாஸ்கராச்சாரியார், ஸ்மித் போன்றவர்கள் பாடங்களைக் கண்டுபிடித்தனர்.

. பாடத்தை அறிந்தவர்கள் பேராசிரியர்கள். அவர்கள் பாடத்தைக் கண்டுபிடித்தவரில்லை. பாடத்தை அறிந்து போதிப்பவர்கள். அவர்களில் சிலர் பாடபுத்தகத்தை எழுதுகின்றனர். புத்தகத்தை எழுதுபவர் பாடத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எப்படி பாடத்தைப் போதிப்பதுஎன அறிந்தவர்.

. பாடபுத்தக ஆசிரியர் எழுதியதை நமக்கு - மாணவனுக்கு - போதிப்பவர் வகுப்பு ஆசிரியர்.

. வகுப்பு ஆசிரியருக்கும், பாடத்தின் ஆதிக்கும் வெகுதூரம். ஐன்ஸ்டீன் போன்றவர் பாடத்தை அறிவர். வகுப்பு ஆசிரியர் பாடத்தை அறிய முடியாது.

. மனம் வகுப்பு ஆசிரியரைப் போன்றது. ஐன்ஸ்டீன் போன்றவர் சத்தியம் போன்றவர்.

. மாணவன் வகுப்பு ஆசிரியரை முடிவாகக் கருதி, அவரால் பாடத்தின் ஆதியைக் காண முனைவதுபோல் மனம் சத்தியத்தை - பிரம்மத்தை - அறிய முயல்கிறது. அதனால் முடியாது.

. நாம் மனத்தைக்கடந்து சத்தியத்தை அடைந்து அதன்மூலம் பிரம்மத்தை அறிய முனைந்தால், அது பலிக்கும். ஏனெனில் சத்தியம் பிரம்மத்தை தானென உணரவல்லது.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

அதிர்ஷ்டம் எல்லா நிலைகளுக்கும் உண்டு:

ஜடம், உணர்வு, மனம், ஆன்மீகம், சத்தியஜீவியம்.


 


 



book | by Dr. Radut