Skip to Content

12.கான்சர் கட்டிகள்

கான்சர் கட்டிகள்

அன்னையை அறிபவர்கள் அறிவால் அறிவது தெளிவைத் தரும். நெஞ்சால் அறிவது நிறைவைத் தரும். உடலால் ஆழ்ந்து அறிவது ஆரோக்கியம் தருவதுடன் உடல் செய்யும் காரியங்கள் - நாம் செய்பவை அனைத்தும் - குறையின்றி நிறைவேறும். மேல்நாட்டு மக்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் முக்கியக் காரியம் எழும்பொழுது தங்கள் திறமையையே முதலாகக் கருதுவார்கள். சுமார் 18 ஆண்டுகளாக அன்னையை அறிந்த அன்பர் ஒருவர், அவர் தாயாருக்கும், மைத்துனருக்கும் வந்த கான்சர் அன்னையால் பூரண குணமானதை நேரடியாக அறிவார். அவருக்குத் தொண்டையில் கான்சர் வந்தபொழுது, "எனக்கு டாக்டர்மீதுள்ள நம்பிக்கை அன்னைமீதில்லை. டாக்டர் சிகிச்சை பலிக்க அன்னை அருள் செய்யவேண்டும்'' எனக் கூறினார். நம் மனத்தைச் சோதனை செய்தால், இதே மனப்பான்மை நம்மிடம் பூரணமாக இருப்பதைக் காணலாம். சில சமயங்களில், நம்பிக்கையால் அருள் மின்னலெனப் பலிக்கிறது. மற்றவை கிணற்றில் கல் போட்டாற் போலிருப்பதைக் காணலாம்.

52 வயதான அமெரிக்கப்பெண். மார்பில் கான்சர் கட்டிகள் சிறியவை பல உள்ளனஎன டாக்டர் கூறியபொழுது "எனக்கு சிகிச்சை தேவையில்லை. Biopsyசெய்துகொள்ளமாட்டேன். அன்னையால் இதைக் குணம் செய்துகொள்வேன்''என முடிவுசெய்தார்.

மனம் அன்னையை நம்புவது அருள்.

நெஞ்சில் அன்னையின் ஒளியைக் கற்பனைசெய்து அங்கிருந்து அது புறப்பட்டு கட்டிகள்மீது பட்டு, கட்டிகள் கரைவதாகத் தினமும் 1 மாதம் கற்பனை செய்தார். வலிகுறைவதைக் கண்டு டாக்டரைப் பார்த்ததில் 2 கட்டிகள்வரை கரைந்ததாகவும், மீதி சிறு கட்டிகளிருப்பதாகவும் கூறினார். மேலும், ஒரு மாதம் இதையே செய்தார். கட்டிகள் தண்ணீரில் கரைவதாகக் கற்பனை செய்தார். முடிவாக டாக்டரைப் பார்த்தபொழுது வலியில்லை; கட்டிகளுமில்லை.

அவர் சில ஆண்டுகள் கழித்து புதுவை வந்து, ஆரோவில் சென்று மாத்ருமந்திரில் தியானத்திற்குப் போனார். அங்குக் கனத்த மௌனம் அழுத்தமாக இருப்பதை உணர்ந்தார். "மௌனம் முதிர்ந்து ரீங்காரம் செய்தது. குரல் கொடுத்தது''என்றார். அவர் சொற்கள், "I heard the SILENCE ringing and loud''.

- அன்னையை அறிவது வேறு; நம்புவது வேறு.

- அன்னையை மௌனமாகவும், ஒளியாகவும், அன்பாகவும், இனிமையாகவும், ஆன்மமலர்ச்சியாகவும், அபரிமிதமாகவும், அக்ஷயபாத்திரமாகவும் அன்பர்கள் காண்கிறார்கள்.

- சூட்சுமமானவர்க்கு நிதர்சனமாக, நேரடியாகப் பழகிப் பேசும்படிக்

காட்சியளிக்கிறார் அன்னை.

 

 

 

*******



book | by Dr. Radut