Skip to Content

02.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

உயர்திரு ஆசிரியர் ஐயா அவர்களுக்கு உங்கள் மகள் எழுதிக்கொள்வது,

என்னுடைய வீட்டுப்பிரச்சினையை (housing loan) லோன் கட்ட முடியாமல் வீடு ஏலத்திற்குப் போய்விடுமோ என்று எண்ணி இருந்தேன். அதைப் பற்றி உங்களுக்குப் பல கடிதங்கள் எழுதி உள்ளோம். என்னுடைய வீடு ஸ்ரீ அன்னையின் வீடு. என் வீட்டின் பெயரே ஸ்ரீ அன்னை இல்லம். என் இனிய அன்னையை வீட்டில் வைத்துப் பிரார்த்தனை செய்து,"இந்த வீட்டை உங்களிடமே ஒப்படைத்து விட்டேன். நீங்கள் ஒரு நல்ல வழியைக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு''என்று கூறி அன்னையிடமே பிரச்சினையை ஒப்படைத்துவிட்டு, நம்பிக்கையோடு இருந்தேன். அதுமாதிரி ஓர் அதிசயம் நடந்தது. என் வீட்டுக்காரர் தங்கை ஆசிரியை. அவள் ஒரு லோன் மூலம் சொசைட்டி கடன் முழுவதையும் 30.10.04 அன்று தீர்த்துவிட்டாள். இதை நான் நினைத்தே பார்க்கவில்லை. எல்லாம் என் இனிய அன்னையின் அருளால்தான் நன்றாக நடந்து முடிந்தது. அதற்காகக் கோடானு கோடி நன்றியினை என் இனிய அன்னைக்குக் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்கிறேன்.

மேலும் ஐயா அவர்களே! என்னுடைய இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் என் பையனை E.C.E. பாலிடெக்னிக் படிக்க வைத்து உள்ளேன். நடந்த எல்லா செமஸ்டரிலும் 70% மார்க் வாங்கி உள்ளான். கடந்தசெமஸ்டரிலும் 75% மார்க் வாங்கி பாஸாகி உள்ளான். எல்லாம் என் இனிய அன்னையின் அருளால்தான் என் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கிறது. இனி வருகிற செமஸ்டரிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஒரு நல்ல வேலை கிடைக்கவும், என் இனிய அன்னை என் மகன்கூடவே இருந்து அவனுக்கு ஒரு நல்ல வழியைக் காண்பித்துக் கொடுப்பார்கள்என்ற முழுநம்பிக்கை என் அன்னைமேல் உண்டு. என் பையனை என் அன்னையிடமே ஒப்படைத்துவிட்டேன். அன்னை, என் பையனை எப்படிக் கொண்டுவரணுமோ, அப்படிக் கொண்டு வரட்டும். அவன் கடந்த செமஸ்டரில் நல்ல மார்க் எடுக்க உதவி புரிந்த என் இனிய அன்னைக்கு என் மகன் சார்பிலும், என் சார்பிலும் கோடி கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேமாதிரி என்னுடைய அத்தைக்கு 2 வருடமாகக் குடும்பப் பென்ஷன் கிடைக்க பல வழிகளில் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. திடீரென ஒருவர், இப்போது நான் எல்லாம் முடித்துத் தருகிறேன் என்று பொறுப்பு ஏற்று இருக்கிறார். அந்த நபரையும் என் இனிய அன்னையே ஏற்பாடு செய்து தந்தபடி இருக்கிறது. இந்த நபர்மூலம் கூடியவிரைவில் என் அத்தையின் பென்ஷன் கிடைக்கவும் என் இனிய அன்னை துணை இருப்பார்கள்என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.

இவற்றையெல்லாம் உங்களுக்குக் கடிதம்மூலம் தெரிவிப்பது என் இனிய அன்னையிடம் நேரில் நான் கூறுவதுபோல் இருக்கிறது. எல்லாம், வாழ்க்கையில் வரும் இன்ப, துன்பங்கள் எல்லாம் என் இனிய அன்னையின்மூலம் இனிதாக நடந்துகொண்டு இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் சேர்த்து என் இனிய அன்னைக்கு மறுபடியும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் கோடானு கோடி நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தவறு, குறை, தீமை என்பவை பரிணாமத்தின் பல நிலைகள் என்கிறார். நீயே அதுவானால் அல்லது அதன் பகுதியானால்,அது வேதனையாகிறது. வெளியிலிருந்து பார்த்தால், அது மாறுதலில் ஒரு நிலை எனத் தெரிகிறது.

நீயே அதுவாயிருந்து ஜீவியம் உயர்ந்தால்,

அவை அற்புதங்களாக மாறுகின்றன.


 



book | by Dr. Radut