Skip to Content

04.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                                              (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கம்பனியில் ஒரு வேலையில் சமர்ப்பணத்தைப் பின்பற்றலாம்

(token act);

உதாரணம் தேவையில்லை. அன்னை சொல்வதை ஏற்கிறேன் -

பிரின்ஸ்பால்;

பல நிலைப் பலன்கள்:

. பிரின்ஸ்பால் தமக்குக் கிடைத்த இந்தப் பிரமோஷனைப் பார்த்தபிறகு அன்னையை நம்ப ஆரம்பித்தார்.

. ஒன்றைப் பார்த்தபின், எதையும் ஒருவர் நம்புகிறார் என்றால், அவருக்கு ஏற்கனவே நம்பிக்கைக்குரிய 100 அம்சங்கள் இருக்கிறது எனப் பொருள். அது தன்னையறியாத விழிப்புடைய ஆத்மா.

. Token act அது போன்றவர்க்கு உதவும், பலிக்கும். எத்தனை தரம் பலனைப் பார்த்தும் அடுத்த முறை நம்பிக்கையில்லாதவர் physical person உடலால் வாழ்பவர். உடலுக்கு நம்பிக்கையில்லை.

. உடலுக்கு நம்பிக்கை எளிதில் ஏற்படாது.

. ஏற்பட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அது மாறாது.

. ஜப்பான், சைனாக்காரர்கள் எளிதில் நம்பமாட்டார்கள்; நம்பினால் மாறமாட்டார்கள். அவர்கள் எத்தனை விஷயங்களில் உயர்ந்தவரெனினும், நாகரீகத்தைப் பொருத்தவரை உடலால் வாழ்பவர்களே.

. Token act என்பதன் தத்துவம்:

. ஓராண்டிலோ, ஓர் ஆயுள் காலத்திலோ, ஒருவர் பெறும் அனுபவம் முழுவதும் ஒரு செயலில் பெறலாம்.

. எந்த ஒரு செயலும் ஓர் உலகம்.

. பார்வை நுட்பமாக இருந்தால், பலன் அதிகம்.

. உதாரணமாக ஒரு பட்டமளிப்பு விழா நடத்துவது, ஒரு போர் (battle and not war) நடத்துவது, ஒரு திருமணம் நடத்துவது என்பனவற்றுள் நம் பர்சனாலிட்டிக்கு வேண்டிய அவ்வளவு அனுபவமும் தவறாது வரும்.

. நம் பர்சனாலிட்டி ஓர் உலகம். அது தனக்குரிய உலகைக் கவர்ந்து இழுக்கும்.

. நுட்பம், நுணுக்கம், சூட்சுமமுள்ளவர் கற்றுக்கொள்ளப் பிரியப்பட்டால், ஒரு செயலில் token actஇல் அவ்வளவையும் கற்கலாம்.

. சிறு விஷயத்தைக்கொண்டு பெரிய தத்துவங்களை அறிய முற்பட்டால்,

. அறிவிலி அசம்பாவிதமாகப் புரிந்துகொள்வான்.

. அறிவுடையவன் அதிகமாகப் புரிந்துகொள்வான்.

. அதிகமாகப் புரிவது, கூர்மையாகவுமிருக்கும்.

. பலன் பல நிலைகளில் வரும். எந்த நிலைப் பலன் வருகிறது என்பது நம் பர்சனாலிட்டி நிலையைக் குறிக்கும்.

. பார்ட்னர் போன்றவர்க்குப் பெரும்பலன் தரும் சோதனை இது.

. Token act புது dimensions அம்சங்களை வெளியிடும்.

. சிறியதில் பெரியதைக் காண்பது தவம், யோகம், உள்ளே உலகைக் காண்பது போலாகும்.

சேவைக்குள்ள பலனைவிட, சமர்ப்பணத்திற்குப் பலனுண்டா - வரலாற்று ஆசிரியை:

. சேவையில் இருவகை உண்டு:- மனிதனுக்குச் செய்யும் சேவை, அன்னைக்குச் செய்யும் சேவை.

. மனிதனுக்குச் செய்யும் சேவை கணக்கில் வாராது. அதனால் வந்தால் தொந்தரவு வரும், வேறெதுவும் வாராது.

. தெய்வத்துடன் தொடர்புகொள்ள காணிக்கை, சேவை, பிரார்த்தனை, சமர்ப்பணம் ஆகியவை பயன்படும்.

. மனிதனுக்கு 4 கரணங்களுண்டு. ஒவ்வொன்றிற்கும் பல - சுமார் 10 வகைகளான - பகுதிகள் உண்டு.

. அன்னையை எல்லாக் கரணங்களும், எல்லாப் பகுதிகள் மூலமாகவும், எல்லா நேரங்களிலும் தொடர்புகொள்வதே தொடர்பு.

. சேவை உடலுழைப்பால், உடலால் பெறும் தொடர்பு. அது பகுதியின் பகுதி.

. சமர்ப்பணம் முழுமையின் முழுமை.

. எந்தக் காரியமும் சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்பதால் எல்லாக் கரணங்களும், அவற்றின் பகுதிகளும் சமர்ப்பணத்துள் அடக்கம்.

. சமர்ப்பணத்தையும், சேவையையும் ஒப்பிட முடியாது.

. பிரம்மத்தின் முழுமையைச் சமர்ப்பணம் இலக்காகக் கொள்வதால் சமர்ப்பணம் பெரியது.

. சமர்ப்பணம் பலன் கருதாதது.

. விழித்தெழுந்த ஜீவன், சிருஷ்டியின்மூலம் தன் ஆதியை அடையும் செயல் சமர்ப்பணம்.

. சமர்ப்பணத்தை அன்னை ஏற்பதே சமர்ப்பணத்திற்குரிய பலன்.

. சேவையைச் சிறப்பாகச் செய்தால், காணிக்கை பவித்திரமானால், பிரார்த்தனை ஆழத்திலிருந்து முழுமையாக எழுந்தால், அவை சமர்ப்பணத்திற்கு நம்மைத் தயார் செய்யும்.

. சமர்ப்பணத்திற்குச் சேவை கருவியானால் சேவை சிறக்கும்.

. உழைப்பு - தெய்வ காரியத்தைச் செய்வது - உடலின் சேவை.

. பக்தி உயிரின் சேவை.

. தியானம் மனத்தின் சேவை.

. இவை ஒன்றுசேர தியான நிலையில் மனம் இலயித்து, உயிரில் பக்தி வெளிப்படும் உழைப்புச் சேவையாவது சிறப்பு.

. சமர்ப்பணம் இவற்றை ஒன்றுசேர்த்து உயர்த்தும்.

. உழைப்பைச் சமர்ப்பணம் செய்து, நினைவைச் சமர்ப்பணம் செய்து, தியானத்தையும் சமர்ப்பணம் செய்தால், உழைப்போ, நினைவோ,தியானமோ தேவைப்படாது.

. அவை தேவைப்படாத நிலையில் சமர்ப்பணத்திற்காக அவற்றை மேற்கொள்வது சமர்ப்பணம் பூர்த்தியாவதாகும்.

கம்பனியில் கணக்குச் சரியில்லை. நான் எடுத்துச் சரிசெய்கிறேன் என்றேன். எனக்குக் கணக்கு வாராது என்று தெரியுமாதலால் எல்லோரும் கேலி செய்கிறார்கள்;

பெண் தன் முடிவிற்கும், அண்ணன் முடிவிற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டினாள் (பெண் வகுப்பில் முதலாவதாக வர முடிவெடுத்தாள்):

. கணக்கு மனத்தைப் பிரதிபலிக்கும். கணக்குச் சரியில்லை என்றால் மனத்தில் தெளிவில்லை எனப் பொருள்.

. பெரியவனுக்குக் கணக்கு வாராது. அவன் எப்படி இதைச் சரி செய்வான்? அவனே முன்வந்து கணக்கைச் சரி செய்வதாகக் கூறுவது அவன் மனத்தெளிவை அன்னைமூலம் நாடுகிறான் எனப் பொருள்.

. பெண் பாஸ் செய்வாள். II class வாங்கமாட்டாள். அவள் I classஉம், முதல் ராங்க்கும் வாங்க நினைப்பதும், அந்த முடிவும் பெரிய விஷயம்.

. அவை சூழல் செழிப்பாக இருப்பதைக் காட்டுகின்றன.

. அப்படி எடுத்த முடிவுகளைச் சிறப்பாகத் தொடர்ந்தால் முழுப்பலனிருக்கும்.

. நாம் எதை முக்கியமாகக் கருதுகின்றோமோ, அந்த விஷயம் உள்ள நிலையில் நம் மனம் இருக்கிறது என்பது தத்துவம். உதாரணமாக நம்மை 10 ஆண்டுகட்குமுன் ஒருவர் குறைவாகப் பேசியது இன்று நம் மனத்திலிருந்தால், நாம் மனத்தளவில் அவனுக்குச் சமமாவோம்.அவன் டெய்லராக இருக்கிறான், நாம் IAS ஆபீசர் என்றாலும், மனம் அவனுக்குச் சமமாக இருப்பதால் IAS வேலையிலும் கடைசி போஸ்ட்டிங் கிடைக்கும். நமக்குரியது வர நாம் டெய்லரையும், அவன் குறைவாகப் பேசியதையும் மறக்கவேண்டும். பெண் முதல் ராங்க் வர முயல்வதும், பெரியவன் தனக்கு வாராத கணக்கை நேர் செய்ய முன்வருவதும் அந்த உயரத்திற்கு அவர்களை எடுத்துச்செல்லும்.

. பொதுவாக வாழ்வில் உயர்ந்த இடத்திலுள்ள சிலர், அந்த நிலையில் மிகத் தாழ்ந்து போயிருப்பார்கள். அவர்கள் மனம் ஏற்கனவே தாங்கள் பட்ட அவதிகளைப் பெரியதாக நினைக்கும்.

. மனத்தின் திறன், நிலை (level) எதை மனம் முக்கியமாகக் கருதுகின்றது என்பதைப் பொருத்தது. ஒரு கதையைப் படித்தால், பலரும் பல பாத்திரங்களை விரும்புவர். நம் மனம் எந்தப் பாத்திரத்தை விரும்புகிறதோ, அதே நிலையில் நாம் வாழ்விருப்பதைக் காணலாம்.

. விதண்டாவாதக்காரன் "உன்னால் என்ன முடியும்?"என சீண்டினால், அவன் கேட்பதைவிட அதிகமானதை நாம் ஏற்கனவே சாதித்திருந்தால், அதைச் சொல்ல மனம் துடிக்கும்.

. சொன்னால், அவனுடைய மனநிலைக்கு நாம் இறங்கி வந்துவிடுவோம்.

. சொல்லாமலிருப்பது கடினம்.

. சொல்லாமலிருந்தால், அவன் கூறிய நிலையைக் கடந்த நிலையை நாம் அடைவோம்.

. எவ்வளவு தெளிவு இருந்தாலும், பக்குவமில்லாவிட்டால், சொல்ல மனம் துடிக்கும், சொல்லிவிடும்.

. பக்குவம் சொல்லாது, சொல்ல நினைக்காது.

பாவ, புண்ணியத்திலிருந்து மீட்பது என்றால் என்ன?

. பாவம், புண்ணியம் என்பவை dualities இரட்டைகள். வாழ்வு முழுமையானது.

. வாழ்வு அந்த அளவில் முழுமையானதேதவிர முழுமையானதில்லை.

. ஆன்மாவுக்கே முழுமையில்லாத பொழுது வாழ்வுக்கு முழுமை ஏது?

. வளரும் ஆன்மாவுக்கு முழுமையுண்டு.

. உடல், வாழ்வு, மனம், ஆன்மா ஆகியவை ஜீவனின் பகுதிகள்.

. ஜீவன் முழுமையானது.

. ஜீவனின் ஆன்மா வளரும் ஆன்மா.

. பாவமும், புண்ணியமும் பகுதிக்குரியன; முழுமைக்கன்று.

. ரோடு ஜடம். அதன்மீது நல்ல காரியமும், கெட்ட காரியமும் நடக்கின்றன.

. ஜடமான ரோடு பாவ, புண்ணியத்தில் பங்குகொள்வதில்லை என்பதால், அந்த அளவில் ரோட்டிற்கு முழுமையுண்டு.

. வாழ்வு புலிக்கும், மானுக்கும் முழுமையானது; மனிதனுக்குப் பகுதியானது.

. மனம் மேதைகட்கு முழுமையானது. மேதைகள் கண்டதைப் பயன்படுத்தும் மனிதனுக்குப் பகுதியானது.

. ஆத்மா தவசிக்குப் பகுதியானது. உலகில் வெளிப்படும் ஆன்மா முழுமையானது.

. தன்னைத் திட்டும், வெறுக்கும் எலிசபெத்தை விரும்பும் டார்சி, அவள் அழகை விரும்பவில்லை. அவள் அழகியில்லை. அவ்விஷயத்தில் டார்சியின் ஆன்மா வளரும் ஆன்மா. அது முழுமையானது.

. திட்டுபவனை விரும்புவது முரண்பாட்டை உடன்பாடாகக் காண்கிறது.

. தவறாக அவன்மீது சாட்டும் குற்றத்திற்குப் பின்னும், தம் தவறுள்ளது என அறியும் டார்சி மனத்தாலோ, ஆன்மாவாலோ சிந்திக்கவில்லை. அதைக் காண்பது வளரும் ஆன்மா.

. அவன் நாடுவது திருவுருமாற்றம்.

. அவளுடைய குற்றச்சாட்டுகளை அவன் அறிவு ஏற்காது. அறிவைக் கடந்த ஜீவியம் ஏற்கும்.

. டார்சி அவளழகில் மயங்கி, தன்னை மறந்து, அவளுக்கு அடிமையானால், அது மனத்தின் செயல். தன் நிலையை விடாமல், அங்கிருந்து அவளுடைய சொல்லில் உண்மையை அறிய முயல்வதாகும். அவனால் அவன் நிலையையும், அவள் நிலையையும் கடந்த உயர்ந்த நிலைக்கு வரமுடிகிறது.

. விக்காம் செய்த பாவத்தை டார்சியின் செயல் புண்ணியமாக்கியது.

. பாவ, புண்ணியத்தைக் கடந்தது டார்சியின் காதல்.

மனத்தை விட்டு எப்படி அகல்வது?

.மனிதன் மனத்தை, மனத்தின் திறமைகளை எப்படிப் பயன்படுத்துவது என்று முயன்றதால் ஏற்பட்டதே நாம் வாழும் இவ்வுலகம்.

. தபஸ்வி ஆன்மாவைக் கண்டு, ஆன்மாவை எப்படி மனத்திலிருந்து பிரித்து பரமாத்மாவிடம் சேர்த்து, மோட்சம் பெறுவது என்பதைப் பயின்றார். அவர் மனத்தை அகற்றுவது, இனி மனம் அவருக்குப் பயன்படாது என்பது போன்றது. தவசி குடும்பத்தைவிட்டு அகன்றதைப்போல் மனத்தைவிட்டகல்கிறார்.

. நாம் இன்று மனத்தால் ஆளப்படுகிறோம். அதற்குப்பதிலாக, நாம் மனத்தை ஆள்வது எப்படி என்பதற்காக, மனத்தின் பிடியிலிருந்து விலகுவதை மனத்தைவிட்டு அகல்வது என்கிறோம்.

. பகுத்தறிவுடையவன் உடலைவிட்டு, உணர்வைவிட்டு விலகுவது போல், நாம் மனத்தைவிட்டு விலகவேண்டும்.

. உடலால் வாழ்பவன், சொல்வதை மறுத்தால் எழுந்து அடிப்பான். ஜெயித்தவன் சரி, தோற்றவன் தவறு.

. உணர்வால் வாழ்பவன், சொல்வதை ஏற்காவிட்டால் திட்டுவான், சண்டையிடுவான், புரிந்துகொள்ள முயலமாட்டான்.

. மனத்தால் வாழ்பவன், சொல்வதை மறுத்தால் அவன் நாம் சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்கிறதா என அறிய முயல்வான்.

. அப்படி முயல்பவன் மனத்தால் முயல்பவன். அது மனத்தின் சிறந்த முயற்சியாக இருக்கும். மனத்தைக்கடந்த ஆன்மாவின் முயற்சியாகவோ, மனத்துள் உள்ள வளரும் ஆன்மாவின் முயற்சியாகவோ இருக்காது.

. உடலைவிட்டு நகர அடிதடிக்குப் போகக்கூடாது.

. உணர்ச்சியைவிட்டு நகர வாய்ச்சண்டை போடக்கூடாது.

. மனத்தைவிட்டு அகல அதன் திறமைகளான ஞாபகம், சிந்தனை, கற்பனை, முடிவு ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது. மௌனம் சித்திக்கவேண்டும்.

. மனம் அகந்தை, காலம் ஆகியவற்றால் கட்டுண்டிருப்பதால் அவற்றிலிருந்தும் விலகவேண்டும்.

. சுயநலமான நினைவை பரநலமாக்கினால் அகந்தையைவிட்டு அகலலாம்.

. கடந்தது, வருவதைச் சிந்திக்காவிட்டால், காலத்தைவிட்டு அகலலாம்.

. இங்கு மனம் என்பது மேல்மனம்.

. அதேபோல் ஆழ்மனம், உள்மனத்தை விட்டும் அகலவேண்டும்.

. மனம் அகன்றால் ஞானம் செயல்படும்.

. நடைமுறையில் சமர்ப்பணம் இவைகளனைத்தையும் ஒரு செயலுக்கு உண்டான அளவில் செய்யும்.

. மனத்தை விட்டகன்றால் சத்தியஜீவியத்தை அடையலாம்.

பிரின்ஸ்பால் மகன் அன்னையை அடியோடு மறந்துவிட்டான்;

நீங்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தால் போதும் -

பிரின்ஸ்பால் மகன்;

பெண் அதிக மார்க் பெறுகிறாள். ஒரு பாடத்தில் முதலாக வந்தாள்.

முதல் வகுப்பும், முதல் ராங்க்கும் கண்ணுக்குத் தெரியவில்லை;

பார்ட்னருடைய மைத்துனர் முன்னேறுகிறார்;

தாத்தா, மாமா எதையும் சாதித்ததில்லை - பெண்:

. அளவுகடந்து பெற்றவன் அன்னையை அடியோடு மறந்துவிடுவது அருள். அதிகமாகச் சாப்பிட்டவனுக்கு அடுத்த வேளை பட்டினி இருப்பது நல்லது. அல்லது அருள் அதிகமாகி தொந்தரவாகும். .

. புத்தகம் படிக்கவும், பாட்டு சாதகம் செய்யவும், பயிரிடவும், சாப்பிடவும் நடுவில் இடைவெளி வேண்டும். சந்தர்ப்பம், இடைவெளி கொடுப்பது அருள். அல்லது மனிதன் தன்னை அதிகமாகச் சிரமப்படுத்திவிடுவான். அந்த இடைவெளியில்லாமல் அருளைப் பெறுவது பேரருள். அது யோகம்.

. "அம்மா, உங்கள் பிரார்த்தனை போதும்"என்பது என்னைப் பிரார்த்திக்கச் சொல்லாதீங்க என்பதாகும்.

. பிரின்ஸ்பால் அன்னையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது, மகனுக்கு அஸ்திவாரம் பலமாகும்.

. Receptivity பெறும் திறனுக்குமேல் பெறாமலிருப்பது புத்திசாலித்தனம்.

. பெண்ணின் ஆர்வம் படிப்பிலோ, தான் முன்னுக்கு வரவேண்டும் என்பதிலோ இல்லை. தாயார் செய்வது பலிப்பதால், தாயாரோடு உணர்வில் கலந்துகொள்ள வேண்டும். பலன் அந்த அளவுக்கு உள்ளது.

. முன் தலைமுறைச் சாதனை உதவும். ஆனால், அருள் அதனால் தடைபடாது. நாம் பெறத் தயாரானால் அருளுக்கு அளவு கிடையாது.

. எந்த நிமிஷமும் நினைவு குறையாதது.

. எந்தச் செயலிலும் சமர்ப்பணம் தவறாதது.

. சமர்ப்பணம் ஜடத்தினின்று சூட்சுமத்திற்கும், எண்ணத்தினின்று உந்துதலுக்கும், நினைவு எழுந்து அடங்குவதும், நினைவு வாராததும், பக்தி பக்குவமாவதையும் பொருத்தது தொடர்ந்த முன்னேற்றம்.

. பழைய தொடர்புகளைத் தயங்காமல் விடுவது.

. செய்த தவற்றை மீண்டும் செய்யாதது.

. புதியனவற்றைத் தவறாமல் கற்பது.

. மனம் மௌனமாவது.

. கேட்டுப் பெறுவது, கேட்காமல் வருவது.

. கேட்காமல் வருவதற்கும் பழைய உபயோகமில்லாமலிருப்பது.

. மனம், உணர்வு, உடலி ல் அதிகத் தெம்பு வருவது ஆகியவை.

. அடுத்த 10 ஜென்மப் பலனை இன்று தரும்.

. அடுத்த 100 தலைமுறைப் பயனை இத்தலைமுறையில் தரும்.

. பயன் மாறி மனம் பக்குவத்தைத் தேடவேண்டும்.

குறையிருக்கலாம், குறையை வலியுறுத்துபவனுக்கு வழியில்லை:

. குறை என்பது அஞ்ஞானம்.

. அஞ்ஞானம், ஞானமாவது பரிணாமம். குறையை வலியுறுத்தினால் பரிணாமத்திற்கு வழியில்லை.

. அன்பர் குறையை வற்புறுத்தினால், குறை அதிகமாகும், வளரும்.

. பிரின்ஸ்பால் ஓர் ஆபீசரை அழைத்துவந்து அவருடைய 10 இலட்சம் கடன் கரைய வழி கேட்கிறார். சம்பளம் 10,000 ரூபாயில் 10 இலட்சம் கடன் வாங்கியவர், தம்மால் முடிந்தவரை தவறாது கடன் வாங்கிவிட்டார். அவருடைய சுபாவம் அதிகபட்சத்தை நாடுகிறது. கடனில் அதிகபட்சம் பலித்துவிட்டது. இவர் அன்னையிடம் வந்தால், இவர் திறன் பெருகும். கடன் 20 இலட்சமாகும்.

. கருவான இடம் மனிதன் தனக்கே கட்டுப்படுமிடம். அது இல்லாதவன் கட்டுத்தறியிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட மாடு போன்றவன். மாட்டிற்குப் பயிர் தெரியாது; அது புல்லாகத் தெரியும்.

. குறை என்பது கொடுவாளின் பிடிபோன்றது. பிடிதான் கொடுவாள் வெட்ட உதவுவது.

. கத்தியின் பயனை நாம் நாடுவது பிடியை. பிடி குறை; கத்தி பயன்.

. பயனைப் பெறும் கருவி குறை.

. பிடி அழகாக இருப்பதால், கத்தியை சிறியதாக்கிப் பிடியைப் பெரியதாக்கினால் கொடுவாள் பேனாகத்தியாகும்.

. குறையில்லாமல் நிறை நிறைவு பெறாது.

. அறையைப் பலமாகப் பூட்டினாலும், திறக்கமுடியாவிட்டால் பயனில்லை.

. பிரம்மம் பிரம்மமாகவே இருந்தால் ஆனந்தமில்லை.

. சிருஷ்டி என்ற குறையை பிரம்மம் நாடியதால், பிரம்மானந்தம் எழுகிறது.

. துண்டு செய்வது மனத்தின் குறை.

. துண்டு செய்வதே மனத்தின் திறமை.

. அறியமுடியாதது ஜடத்தின் குறை. அதன் strength வலிமை அதன்மூலம் வருகிறது.

. சிந்திக்க முடியாதது உணர்வின் குறை.

. உணர்வுக்குப் பூரணமும், வலிமையும் வருவது சிந்தனையிலில்லை என்பதால்தான்.

. குறையை வலியுறுத்துவது, குறையை வளர்ப்பதாகும்.

. நிறைவு நிறைய குறையைப் பயன்படுத்துவது குறையின் நிறைவாகும்.

. பரமாத்மா ஜீவாத்மாவானது பரமாத்மா குறையை விரும்பி ஏற்றதால்.

. சிருஷ்டி அனைத்து எட்டு நிலைகளிலும் குறையை நாடுகிறது.

. குறைக்கு நல்ல பயனுண்டு.

. எதற்கும் இரு வேறு பயன்கள் உள்ளது போல் குறைக்கும் இரு பயன்களுண்டு.

. 10,000 ரூபாய் சம்பளத்தில் 10 இலட்சம் கடன் பெற்றவர் அன்னையிடம் வந்து சம்பளமும், கடனும் இரு மடங்கானால், அதன் வழியாகவும் அவர் முன்னேறுவாரே தவிர அழியமாட்டார்.

. அழிவும் அன்னை கையால் வருவது ஆக்கலாகும்; அருளாகும்.

. குறையைத் தத்துவரீதியாக, வேதம், உபநிஷதங்களைக் கடந்து ஸ்ரீ அரவிந்தம் கூறுவதை அறிவது உதவும்.

நாம் உள்ளதைச் சொல்லலாம். எவரையும் திருப்தி செய்ய முடியாது:

. எவரையும் சோதனை செய்யும் கட்டம் இது.

. பெற்றோர், நண்பர் முறையாக நடக்காத நேரம், நாம் அவர்களை அனுசரித்துப் போகிறோம்.

. நம் உரிமையை விட்டுக்கொடுப்பது தியாகம் என நாம் நினைக்கலாம்.

. அவர்கள் அதை ஒரு சௌகரியமாகவும், அவர்களுடைய உரிமையாகவும் கருதுவர்.

. அப்படி விட்டுக்கொடுக்க அதற்கு ஓர் அளவில்லை.

. நம் இலட்சியம் என்ன?

. சுயநலமாக இருக்கக்கூடாது என்பது நம் இலட்சியம்.

. நடைமுறையில் அவர்களுடைய சுயநலத்தை ஆதரிக்கிறோம்.

. பிறருடைய சுயநலத்தை ஆதரிப்பது தவறு, குறை, குற்றம்.

. குறை, குற்றம் என்பதை விட இது நடைமுறைக்கு ஒத்துவாராது.

. பெற்றோருக்கு விட்டுக்கொடுப்பவர் தாயாரும், தகப்பனாரும் எதிரெதிராகப் பேசினால் என்ன செய்வார்?

. நியாயத்தைச் செய்யலாம்; ஒருவரைத் திருப்தி செய்வது என்பது நடக்காது, தவறு.

. இதனுள் தத்துவம் என்பது ஏதாவதுண்டா?

. உலகில் எந்த நேரமும் சொல்லொணா வாய்ப்புகள் உள்ளன.

. இதை நாம் கவனிப்பதில்லை.

. முக்கியமான நேரங்களில் நாம் முடிந்ததைச் செய்கிறோம். யோசனை செய்வதில்லை.

. வேலைக்குப் போக விரும்பும் இளைஞனுக்கு எத்தனை வகையான வாய்ப்புகள் உள்ளன?

. எது சரி, எது தப்பு?

. வாய்ப்புகள் அளவிறந்தவை.

. It is a creative moment.. அது சிருஷ்டிக்குரிய நேரம்.

. அவற்றுள் பல பலிக்கும்; மற்றவை ஏராளம் பலிக்கா.

. நாலு பேரும் செய்வதை நாம் செய்கிறோம்.

. நாமே நமக்குரியதுஎன்று ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் தைரியம் நமக்கிருப்பதில்லை.

. பலிப்பதைப் பின்பற்றுகிறோம்; பலிக்காததைத் தொடுவதில்லை.

. பலிப்பவை சமூகம் அனுமதிப்பவை. பலிக்காதவை சிருஷ்டிக்குரிய பெரிய பரிணாம வாய்ப்புகள். உலகில் முன்னோடியானவர்கள் பின்பற்றும் பாதை. பெர்னார்ட்ஷா, தாகூர், ஐன்ஸ்டீன், வெல்ஸ்போன்றவர் பள்ளிக்குப் போகவில்லை. நம்மால் அதை நினைத்தும் பார்க்க முடியாது. அவை மேதைக்குரிய பாதை.

. மேதைக்குரிய பாதையைச் சாதாரண மனிதன் பின்பற்றினால் அவன் ஒன்றுமில்லாமல் போய்விடுவான்.

. லிடியா அதைச் செய்தாள். திருமணமாகாமலிருந்தால் அவள் சமூகத்தை விட்டு வெளியேபோய் தன்னையும், தன் குடும்பத்தையும் நாசம் செய்திருப்பாள். அவள் பாதையில் அவள் வென்றிருந்தால் லதா மங்கேஷ்கர்போலப் பிரசித்தி பெற்றிருப்பாள்.

. பிறரைத் திருப்தி செய்ய முயன்றால் தன்னை அழித்துக்கொள்ள வேண்டும். அது மேதைக்கும், அழிபவனுக்கும் உள்ள பாதை. காரைக்கால் அம்மையார் அப்பாதையில் நாயனாரானார். வேறொருவருக்கு அது அழிவைத் தந்திருக்கும்.

. தத்துவம் என்ன?

. ஒரு மரத்தில் 10,000 விதைகள் உற்பத்தியானால் 9,900 அழிந்துபோய் 100 விதைகளே முளைக்கின்றன.

. இது சிருஷ்டியின் முறை. 10,000 விதைகளும் முளைத்தால் ஊரிருக்காது. காடுதான் இருக்கும். காட்டிலும் எல்லா விதைகளும் முளைக்க இடமில்லை.

. மனிதர்கள் 2000 ஆண்டுகட்குமுன் 10, 20 பிள்ளைகள் பெற்றனர். 4, 5 உயிர் வாழ்ந்தன. ஒன்று, இரண்டு பேர் சொல்லின. இப்பொழுது பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் உயிர் வாழ்கின்றன. அத்தனையும் மனிதனாய் வாழ சமூகம் முயல்கிறது. எதிர்காலத்தில் அத்தனையும் சிறப்பாக வாழும். ஆனால் 10 அல்லது 20 பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டாய்விட்டன. 10 பிள்ளைகள் பிறந்து, அத்தனையும் வாழ உலகில் இடமில்லை. இது நடைமுறை.

. நம் மனத்தில் எழும் வாய்ப்புகள், சமூகம் தரும் வாய்ப்புகள் ஏராளம். அவற்றைப் பின்பற்ற நம்மை அனுமதிக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம். அத்தனையும் நம்மால் சமாளிக்க முடியாது; திருப்திபடுத்த முடியாது. சமூகம் தனக்குத் தேவையானதை அனுபவிக்கும். மனிதர்கள் தங்களுக்குத் தேவையானதை அனுமதிப்பார்கள். பிறரைத் திருப்தி செய்ய முடியாது. நம்மையே திருப்தி செய்ய முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால் ஆண்டவனை திருப்தி செய்யலாம். அது மிகக் கடினம். நடைமுறையில் நாம் நம் சுயநலத்தை, சௌகரியத்தைப் பின்பற்றுகிறோம். அது பலிப்பது நம் திறனைப் பொருத்தது. ஒரு சிறுவன் அதைச் செய்தால் அவன் தெருவுக்கு வருவான்; சீக்கிரம் அழிவான்.

. அழிவு ஏராளமாக உள்ள பாதை பரிணாமத்திற்குரிய பாதை. அதுவே அவதாரப் புருஷனுக்கும், விபூதிக்கும், மேதைக்கும் உரிய பாதை. ஆயிரம் பேர் முயன்றால் ஒருவர் வெல்லும் பாதையிது. சாதாரண மனிதனால் நினைத்தும் பார்க்க முடியாத பாதை. உலகில் தீமை வலுவாக உள்ளது. நாம் ஒருவர் தீமைக்குப் பலியாவோம்.

. சிருஷ்டிக்கு அழிவு சரி; அவசியம். தனி மனிதனுக்கு அழிவு முடிவு; அப்பாதை ஒத்து வாராது.

. அறிவும், திறமையுமில்லாதவர், தைரியமில்லாத நேரம், யாரோ ஒருவருக்குப் பணிய தம்மைத் தாமே சரியென நினைத்து, தம்மை ஏமாற்றிக்கொள்ள முயன்று, எவரைத் திருப்தி செய்ய முயல்கிறாரோ, அவர்களால் அழிக்கப்படும் பாதை பிறரைத் திருப்தி செய்ய முயல்வது.

. இம்முறையில் தர்மம், நேர்மையிருக்காது.

. கர்ணன் துரியோதனனுக்கு அப்படி சேவை செய்து தன்னை அழித்துக்கொண்டான்.

. எந்த இலட்சியமும் அதனால் பூர்த்தியாகாது.

. எந்த தர்ம, நியாயமும் பூர்த்தியாகாது.

. ஆற்றில் ஓடும் நீர் கடலில் சங்கமமாவதில் நாமும் ஒரு துளியாவோம்.

. இலட்சியத்திற்கு சிருஷ்டியில் இடமில்லை.

. அப்படியிருந்தால் அது சிருஷ்டியின் இலட்சியமாகும்.

. சிருஷ்டியின் இலட்சியம்என ஒன்றிருந்தால், அது மற்ற எல்லா இலட்சியங்களையும் அழிக்க முயலும்.

. அறிவைப் பின்பற்றலாம்.

. அதைவிட ஆன்மாவைப் பின்பற்றலாம்.

. முடிவாக வளரும் ஆன்மாவைப் பின்பற்றலாம்.

. பிறரைத் திருப்தி செய்ய முயன்றால், உடலால் வாழ்ந்து பிறருடலுக்கு உட்பட்டு முதற்கட்டத்தில் அழியலாம்.

10,000 ரூபாய் சம்பாதிப்பவர் பெற்ற 10 இலட்சம் கடன் பற்றிய பேச்சு:

. பிறரைத் திருப்தி செய்ய முடியாது; கூடாது என்பதைக் கண்டோம்.

. கடன் வாங்குபவர்கள் தங்களையே திருப்தி செய்ய அளவுகடந்து முயன்று அளவைக்கடந்த நிலையில் எதுவும் செய்யமுடியாமல் உள்ள நிலை இது.

. இவர் முடிந்தால் 20 இலட்சமும் கடன் வாங்குவார். மேலும் கடன் வாங்குவார்.

. தம்மை விரும்பி அழித்துக்கொள்பவர், இடத்தைக் காலி செய்து மற்றவர் வாழ வழிசெய்கிறார். எவருடைய அனுபவத்திலும் இதுபோன்றவர் ஓரிருவர் இருப்பார்.

. நடத்தை தவறான மனிதன் இதுபோல் நடந்து தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

. உலகில், பிரபஞ்சத்தில், சிருஷ்டியில் உள்ள இடம் தன்னை விரிவுபடுத்த, தன் ஆசையை விரிவுபடுத்தப் போதாது.

. ஷேக்ஸ்பியருடைய "லியர்" என்ற நாடகத்தில் அரசன் தன் இராஜ்ஜியத்தை இரு பெண்களுக்குத் தருகிறான். அடுத்த நிமிஷம் அவ்விருவரும் தகப்பனார் வசதிகளையும், மரியாதையையும் குறைத்து, அழித்துஒரு பிரபுவின் வைப்பாட்டி மகனைக் காதலித்து, தங்களை ஆபாசப்படுத்தி, தகப்பனாரையும், தங்களையும், தாம் விரும்பும் மனிதனையும், இராஜ்ஜியத்தையும் அழிக்கின்றனர். இது ஷேக்ஸ்பியரின் நான்கு உயர்ந்த tragedies சோகமான கதைகளில் ஒன்று. ஷேக்ஸ்பியரே எழுதாவிட்டால் எவரும் நம்பமாட்டார்கள்.

. நம் கண்முன் தினமும் நடப்பது இது.

. நமக்கு ஆயிரம் முறை இப்படி நடக்கத் தோன்றியுள்ளது.

. இந்த நேரமும் நம்முள் முனைப்பாக இருக்கும் உந்தல் இது.

. சிருஷ்டியில் ஏற்பட்டது "சத்".

. "அசத்" அதற்கு எதிரானது.

. புத்தர் "அசத்" "சத்"தைவிடப் பெரியது எனக் கண்டு ஆசியாவை ஆட்கொண்டார்.

. பேச்சுவழக்கில் "அசடு"என நாம் கூறுவது "அசத்"தாகும்.

. சத் சிருஷ்டி; அசத் பிரளயம்.

. சத்தும், அசத்தும் சேர்ந்தது பிரம்மம்.

. அசத்தின்றி சத்தில்லை.

. நாம் எதை நாடுவது என்பது நம் choice.

. அசத்தை நாடி அழிவது சிருஷ்டிக்குரிய திட்டம்.

. அதை சட்டமாக நாடும் ஜென்மங்களுண்டு.

. பொதுவாக இப்படித் தம்மை அழித்துக்கொள்பவர் ஏராளமான திறமையுடையவராக இருப்பார்.

. திறமை செயல்பட்டு பலன் தருவதும், தம்மையே அழிக்கத் திறமை உதவுவதும் சிருஷ்டியின் சட்டத்திற்கு ஒன்றேயாகும்.

கடன் என்பதற்கு ஆன்மீக அர்த்தம், தத்துவம் உண்டா?

. மனிதன் - ஜீவாத்மா - என்பது பரமாத்மா என்ற ஒன்று ஜீவாத்மா என்ற பலவானது.

. ஒன்று, பல ஆனபோதிலும் ஒரு ஜீவாத்மா அடுத்த ஜீவாத்மாவினின்று முற்றிலும் வேறுபட்டதன்று.

. 10 நாற்காலிகளிருந்தால், ஒவ்வொன்றும் தனித்தனியானது.

. 10 கருத்துகளிருந்தால் ஒவ்வொன்றும் தனித்துத் தோன்றினாலும், ஒவ்வொருவர் கருத்தும் மற்றவர்கள் கருத்தாலானவை. அவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

. நாம் விடும் மூச்சில் அனைவருடைய மூச்சும் கலந்திருப்பதைப்போல் ஒவ்வொரு ஜீவாத்மாவுள்ளும் மற்ற அனைத்து ஜீவாத்மாக்களும் உள்ளன. இது மேல் உலகில்.

. பூவுலகில் ஜீவாத்மா என்பதை நாம் அகந்தையில் மறந்துவிடுகிறோம்.

. அகந்தை தனித்தனியானது. அடுத்த அகந்தைக்கு எதிரானது.

. பரிணாமத்தில் அகந்தை கரைந்து ஜீவாத்மாவாகி மனிதகுலம் ஒன்றாக வேண்டும்.

. வாழ்வின் பாதைகள் அகந்தை கரையும் பாதைகள். அவற்றுள் ஒன்று கடன்.

. சமூகத்தில் ஒருவர் வருமானம் கெட்டுப்போனால், அவர் அழிவதே வழக்கம்.

. ஒருவருக்கு ஜூரம் வந்து அதிகமானால், அவர் இறந்து போவதை சமூகம் தடுக்கமுடியாது என்பதுபோல் ஒருவர் பயிர் நாசமாகிவிட்டால், அடுத்த பயிர் விளையும்வரை அவர் குடும்பம் உயிரோடு இருக்க முடியாது; அழியும்.

. ஒரு மனிதன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிறரால் அவனைக் காப்பாற்ற முடியாது என்பது ஒரு காலத்திற்குரிய நிலை.

. கடன் ஏற்பட்டபின், ஒருவர் குடும்பம் அழிவதைச் சமூகத்தில் மற்றொருவர் பிரியப்பட்டால் தடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. அகந்தையின் கடுமை ஓரளவு குறைகிறது.

. சுயநலம், அகந்தை மட்டும் உண்மை என்பது மாறி, பரநலம் உலகில் உற்பத்தியாகி ஏற்பட்ட மாறுதல்களில் கடன் ஒன்று; முக்கியமானது.

. சமூகம் இனி தனிமனிதன் அழிவதைத் தடுக்கப் பிரியப்பட்டால், அதற்குரிய கருவியாக கடன் ஏற்பட்டுவிட்டது.

. அதன்பின் கடனுடைய உருவங்கள் பல. அதன் கடுமை குறைந்து வருகிறது.

. ஆன்மீகத் தத்துவரீதியாகச் சுயநலத்தின் - அகந்தையின் - கடுமை குறைந்து, பரநலத்தின் ஆட்சி எழுந்து, அகந்தையினின்று ஜீவாத்மா விடுதலை பெறும் கருவிகளுள் கடன் ஒன்று.

. எதையும் நாம் இருவகைகளாகப் பயன்படுத்தலாம் (Positive, Negative).

.கஷ்டம் வந்த காலத்து, பிறர் உதவியைப் பெற்று, நம் கஷ்டத்தைப் போக்குவது நல்ல உபயோகம் (positive use).

. கடன் என்பது ஏற்பட்டுவிட்டதால், கடன் வாங்க முடியும், ஆனந்தமாக நமக்குரிமையற்றவற்றை அளவுகடந்து அனுபவிக்கமுடியும் என்பது (negative use) சரியில்லை.

. சரியோ, சரியில்லையோ கடன் ஏற்பட்டபின் அப்படிக் கடனைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது.

. சிருஷ்டியில் அழிவில்லை, நஷ்டமில்லை (conservation of energy) என்பது தத்துவம்.

. திருடு போனால் ஒருவருக்கு நஷ்டம். சமூகத்திற்கு நஷ்டமில்லை.

. ஒருவர் இழந்தது அடுத்தவருக்குக் கிடைப்பதால் சமூகம் நஷ்டப்படுவது இல்லை.

. சிருஷ்டி என்பது "சத்" என்பதினின்று எழுந்த சக்தி, ரூபமானது. நாம் காணும் அத்தனை ரூபங்களும் "சத்" என்பதன் சக்தி. ஒரு ரூபம் அழிந்தால் அந்த சக்தி அழியாது. அது வேறொரு ரூபமாகும். சிருஷ்டியைப்பொருத்தவரை நஷ்டம் என்பது எப்பொழுதுமேயில்லை. ரூபத்தை அழிப்பதுபோல் சக்தியையும் அழிக்கலாம். சக்தி அப்படி அழிந்தால் அது "சத்"தினின்று "அசத்"தாக மாறிவிடும் (from being to non-being). அப்படி மாறினாலும் "அசத்"தும் சிருஷ்டிக்குட்பட்டதே என்பதால் சிருஷ்டிக்கு நஷ்டம் என்பதில்லை.

. ரூபங்களை உற்பத்தி செய்வது சாதனை, மனித முன்னேற்றம். அது அனைவரும் விரும்புவது.

. ரூபங்களை அழிப்பதும், வேறு ஒரு வகையான சாதனை. மனிதன் தன்னை அழித்துக்கொள்வது. தன்னை அழித்துக்கொள்ளும் மனிதன் அந்த அழிவை ஆனந்தமாக அனுபவிக்கிறான்.

. ஆனந்தம் என்பது சக்தி, ரூபம் பெருகுவது. பெருகுவது ஆனந்தம். சொத்து, பதவி, பணம் பெருகுவதை மனிதன் பெரிதும் விரும்புகிறான்.

. புகை, குடி, drug மனிதனுக்குப் போதை தருகிறது. போதை ஆனந்தம். அவனது உணர்ச்சி பெருகுகிறது (intoxication is an expansion). இது அழிவின் ஆனந்தம்.

. ரூபத்தை அழிப்பவன் சமூகத்தைவிட்டு வெளியில் போகிறான். சக்தியை அழிப்பவன் "சத்"தைவிட்டு "அசத்"திற்குப் போகிறான்.

. நிலத்தை விற்று நகை வாங்கினால் சொத்து அழியவில்லை. நிலத்தை உடையவர் அதைச் செய்யமாட்டார். செய்தால் உயிர் போனது போலிருக்கும். சொத்து அழியவில்லை. வேறு ரூபம் மாறியுள்ளது.

. நிலத்தை விற்று வியாபாரத்தில் போட்டால் இலாபம் வந்து பெருகினாலும், நிலத்தை வாங்கியவருக்குப் பொறுக்காது. வியாபாரம் அழிந்து நஷ்டமானால் அனுபவம் அறிவாக வருகிறது. நஷ்டம் என்பது எங்கும் இல்லை என்பதை எவரும் ஏற்கமாட்டார்கள்.

. கடன்பட்டு சொத்தை இழந்தவர், மானம், மரியாதையை இழந்தவர், ஜெயிலுக்குப் போனவரும் நஷ்டப்படுவதில்லை. அறிவு, அனுபவம் பெறுகிறார். அது அடுத்த ஜன்மத்தில் பயன்படும்.

. இழந்ததை இப்பொழுதே பெற வழியில்லாத உலகில், அன்னை வழிகாட்டுகிறார். பொருளை இழந்ததால் பெறவேண்டிய ஞானத்தை இப்பொழுது பெற்றால், இழந்த பொருள் வந்துவிடும் என்பது அன்பர் அனுபவம்.

. இக்கதையில் 10,000 ரூபாய் வருமானமுள்ளவர் 10 இலட்சம் கடன்பட்டார். காரணம் மனைவி. மனைவி தன் செய்கையை அறிந்து மனம் மாறியபின் 10 இலட்சம் கடனும் அடைபடும் வழி ஏற்படுகிறது.

. தவணை முறை, இன்ஷூரன்ஸ் என்பது வரப்பிரசாதம். "தவணை"கட்டாத முறையுண்டா, பிரீமியம் கட்டவேண்டாம் என்ற இன்ஷூரன்ஸ் உண்டா எனக் கேட்பவரும் உண்டு.

. 4 வயதில் Readers' Digestஐ குழந்தை படிக்கும். 14 வயதில் 40 வயது அறிவு பெறும் முறை உண்டு என்றால் அதற்குரிய முயற்சியை, உழைப்பை எடுக்கும் தாயார் உண்டா என்பது கேள்வி.

. கர்மத்தை அழிக்கும் சக்தி உலகில் வந்துள்ளது. அதற்குரிய பிரீமியம் நம்பிக்கை. "என் சார்பில் ஏன் நீங்களே அதைச் செய்யக்கூடாது" எனக் கேட்காதவர், எழுதாதவரில்லை.

. அன்னை ஆன்மீகத் தவணை முறை, ஆன்மீக இன்ஷூரன்ஸ், ஆன்மீகக் கிளன்டோமான். தவணை கட்டுபவருக்கு, பிரீமியம் கட்டுபவருக்கு, முயல்பவருக்கு, நம்பிக்கையுள்ளவர்க்குப் பலன் உண்டு.

அடக்கம் அளவுகடந்திருந்தால் பலிக்கும்;

4 சகோதரர்களைப் பற்றிச் சொன்னேன்;

என் மகனையும் சேர்த்துச் சமர்ப்பணம் செய்யவேண்டும் -

பிரின்ஸ்பால்:

. அகந்தை அழிந்து எழுவதே அடக்கம்.

. பயத்தாலும் அடக்கம் வரும்.

. நம் குறை வெளிப்படக்கூடாது (inferiority complex) என்பதாலும் அடக்கம் வரும்.

. புதிய சூழ்நிலை என்பதாலும் அடக்கம் வரும்.

. அடக்கத்திற்குப் பலன் பல அளவுகளில் உண்டு.

. எக்காரணத்தை முன்னிட்டு அடக்கம் வந்தாலும், அதற்குரிய குறைந்தபட்சப் பலன் physical result பாதிக்குமேல் முக்கால்வாசி வரும்.

. அடுத்த நிலை பரம்பரையால், சுபாவத்தால், பண்பால் வரும் அடக்கம்.

. இதற்குப் பலனைக் கொண்டு நாம் காரணம் காட்டக்கூடாது. பலன் பதின்மடங்கு வரும் என்றாலும், இதற்குப் வரும் பலன் அந்தஸ்தாக வரும்.

. அடக்கம் என்பதன் ஆதி என்ன?

. நம் வாழ்வில் புறம், அகம் உண்டு.

. புறம் ஆர்ப்பாட்டமாக இருக்கும்.

. அகம் ஆர்ப்பாட்டமாக இருக்காது.

. புறத்தைத் தன்னுள்ளே கொண்ட அகமும் உண்டு.

. அகமும் ஆர்ப்பாட்டம் செய்யும். அது கர்வமாக இருக்கும்.

. புறம் அகத்திற்குக் கட்டுப்பட்டு, அகம் ஆர்ப்பாட்டம் செய்யாதது அடக்கம்.

. அடக்கம் என்பது அகவாழ்வு.

. இந்த அகவாழ்வு ஆன்மாவுக்குரியதாகவுமிருக்கலாம், மனத்திற்கு உரியதாகவும் இருக்கலாம்.

. முடிவான நிலையில் சைத்தியப்புருஷனுக்கு - வளரும் ஆன்மாவுக்கு உரிய வாழ்வாகவுமிருக்கலாம்.

. வளரும் ஆன்மாவுக்குரிய அடக்கம் ஸ்ரீ அரவிந்தம் நாடுவது.

. முதல் நிலை அடக்கத்திற்குப் பொருள் மூலம் பலனும்;

. அடுத்த நிலை அடக்கத்திற்கு அந்தஸ்து, பதவி, பல மடங்காகவும் வரும்;

. அதற்கு மேலுள்ள அடக்கம் பலன் கருதாதது.

. முடிவான அடக்கம் அன்னையின் கருவியாவது.

. சகோதரர்களில் ஒருவர் பெரிய இடத்து சம்பந்தம் செய்து, செய்தபின் அங்குள்ள சூழ்நிலை அவருக்கு அடக்கம் தருவதாகயிருந்ததால் பெருந்திறன் பெற்றார்.

. Rose is rose by any name. அடக்கம் எப்படி வந்தாலும் அளவிறந்த திறனுடையது.

பெரிய வாய்ப்பு சிறிய குடும்பத்திற்கு வந்தபின் எப்படிக் காப்பாற்றுவது?

. வாய்ப்பு என்பது என்ன?

.சிறியது சிறியதுடனிருக்கும்; பெரியது பெரியதுடனிருக்கும்.

. சிறியது பெரியதுடனிருந்தால் ஏற்படும் சந்தர்ப்பம் வாய்ப்பாகும்.

. தத்துவம்:

. ஆன்மா மனத்திலோ, வாழ்விலோ, உடலிலோ வெளிப்பட்டால் நிகழ்பவை வாய்ப்பாக மாறும்.

. திறமையான கணக்குப்பிள்ளை பெரிய இடத்திலிருந்தால் பெறும் அனுபவம் வாய்ப்பு.

. மேல்நாட்டுக் கருத்துகளை படிக்கும் இந்தியருக்கு mental opportunities வாய்ப்புண்டு.

. மோனியர்ஸ் வில்லியம் இந்தியாவில் இருந்ததால் அவர் சமஸ்கிருத டிக்ஷனரி எழுதினார்.

. வேறுபட்ட நிலையிலுள்ள இருவர் தொடர்புகொண்டால் தாழ்ந்தவருக்கு சமூகத்தில் உயரும் வாய்ப்புண்டு.

. உயர்ந்தவர்க்குத் தாழ்ந்த சுபாவத்தைப் பயிலும் வாய்ப்புண்டு.

. நிலை ஒன்றானாலும் வேறுபட்டவர் தொடர்பு வாய்ப்பு.

. பார்வை மாறினால் நாமுள்ள நிலையில் பல வாய்ப்புகள் தென்படும்.

. வாய்ப்பு என்று வந்தால், முழுமுயற்சி செய்தால் முழுமையாகப் பலிக்கும்.

. வாய்ப்பு பலிக்கவே வருகிறது என்பதால் பலிக்குமா என்ற கேள்வியில்லை.

. வாய்ப்பு என்பதே பெரியது என்பதால் சிறுகுடும்பத்திற்கு வருவது பெரிய வாய்ப்பாக இருக்கும். இங்கு நாம் கூறுவது மிகப்பெரிய வாய்ப்பு.

. நமக்காக வாய்ப்பு வருகிறது என்பதால் நம்மிடம் அத்திறன் (potential) வித்தாக இருக்கும்.

. வித்து முளைத்து இலை விட ஆரம்பித்தால் வாய்ப்பு பலிக்கும் - தேவையானது முயற்சி.

. முயற்சி எடுக்க அறிவும், தெளிவும் தேவை.

. முதல் தெளிவு வந்தது வாய்ப்பு என்று தெரியவேண்டும்.

. எப்படிக் காப்பாற்றுவது என்றால் - முழுமுயற்சி காப்பாற்றும்.

. முழுமுயற்சி என்றால்,

. நம் நிலை, நமக்குள்ள திறமை, அதுள்ள நிலைமை தெரிந்து,

. அது மலர உற்சாகம் கொண்டு,

. வாய்ப்பிற்கு ஈடான அளவு அம்முயற்சி நம் நிலையை உயர்த்தி,

. அதைச் செய்யும்பொழுது சந்திக்கும் முனைகளைத் தவறாது முடிச்சுப்போட்டு,

. நம்மை வாய்ப்பு கிரகிக்கும் வரை பொறுமையாக இருந்தால், சிறு குடும்பம் பெரிய வாய்ப்பைப் பெற்றுக் காப்பாற்றும்.

. காப்பாற்றுவதற்கு அடையாளம், வாய்ப்பு வந்தபடியிருப்பது.

பலன் வந்தபிறகு அன்னையை மறந்த மகனை எப்படிப் புரிவது?

. பலன், அன்னை, மறதி, மகன் என்பனவற்றை ஆதியிலிருந்து புரிவது உதவும்.

. காரியம் முடியும் பொழுதுள்ள நிலையைப் பலன் என்கிறோம்.

. வீடு கட்டி முடிந்தால், பலன் வீடு.

. பரிட்சை எழுதினால், பட்டம் பலன்.

. மேடையில் பேசினால், கைதட்டல் பலன்.

. எந்தக் காரியத்திற்கும் பலனுண்டு.

. பலன் என்பது செய்பவருக்கு.

. செய்யும் முறைக்குப் பலன் எனலாம்.

. களிமண் பானையானால் பலன் களிமண்ணுக்கு எனலாம்.

. ஆரம்ப நிலை, செய்முறை, செய்பவர், முடிவான நிலைகளில் முடிவை முன்சொல்லிய எதற்கும் பலன் என்று கூறலாம். மூன்றுக்கும் உரிய பலன் எனவும் சொல்லலாம்.

. பலன் தொழிலால் வருகிறது. இங்கு அன்னையால் வருகிறது.

. நாம் அன்னையை அறிவது நாம் தேடும் பலனளவில் அறிகிறோம்.

. அன்னையை இந்த 4 கோணங்களிலிருந்தாவது அறியவேண்டும். முழுமையாக அறிவதானால் பலனையும், மறதியையும், மகனையும் முழுமையாக அறியவேண்டும்.

. வேலைக்கு அன்னை வாய்ப்பு. இதுவரை அந்த வேலைக்கில்லாத வாய்ப்புகளை அன்னை தந்ததை இச்செயலில் காணலாம்.

. முறைக்கு அன்னை புதுத்தெம்பையும், திறனையும் தருகிறார்; தந்துள்ளார் என இச்செயலில் காணவேண்டும்.

. மறதி என்பது அஞ்ஞானம்; ஞானத்தின் எதிரி. அன்னை மறதியை நினைவாக்குவார். அல்லது நினைவை மறதியாக்குவார். மகன் மறந்து விட்டான் என்றால், மறதி அவனுக்கு நல்லது என அன்னை முடிவு செய்துவிட்டார்.

முடிவு நம்மைப் - மகனை - பொருத்தது.

அன்னை நம்மைப் பொருத்துச் செயல்படுவார்.

முடிவை தாயார் கோணத்தில் காண்கிறோம்.

மகன் அன்னையை மறக்கக்கூடாது எனத் தாயார் நினைத்தால் அவன் அன்னையை மறந்துவிடுவான்.

. மகன் என்பது பாத்திரம். மகன் பலனைப் பெற்றபின் அன்னையை மறந்தான் என்பதைப் புரிந்துகொள்ள இந்த 4 அம்சங்கட்கும் மேலே அது எப்படிப்பட்ட தருணம் - context - எனப் பார்க்க வேண்டும்.

.  Context நம்மை நிர்ணயிக்கப் போகிறதா, நாம் contextஐ நிர்ணயிக்க வேண்டுமா, அல்லது contextஐச் சமர்ப்பணம் செய்யலாமா என அறிய வேண்டும்.

. எதையும் நாம் - மகன் - நிர்ணயிக்க முடியும் என்று தெரிந்தபின் பிரின்ஸ்பால் தாம் எந்த அளவு மகன் வாழ்வில் தலையிடலாம் எனக் கணிக்கவேண்டும்.

சூழ்நிலையின் தன்மையைக் கணிப்பது எங்ஙனம்?

. நாம் வீட்டுச் சூழ்நிலையில், ஆபீஸ் சூழ்நிலையில், சமூகத்தின் சூழ்நிலையில் வாழ்கிறோம்.

. மீன் தண்ணீரில் வாழ்வதுபோல், சொந்த ஊரில் உறவினரிடையே வாழ்வதுபோல், சூழ்நிலை என ஒன்றுளது என நினைக்க முடியாமல் நாம் வாழ்கிறோம். அப்படி வாழும்பொழுது,

. யோசனைக்கு வழியில்லை.

. முன்னேற்றம் என்பது அச்சூழ்நிலைக்குரிய முன்னேற்றமே.

. அதாவது, எந்த முன்னேற்றமும் கிடையாது.

. அவரவர், அவரவர் நிலையில் பிறந்து, வளர்ந்து, இறப்பது மாறாத சூழ்நிலைக்குள்ளது.

. நாம் கூறுவது பெரிய வாய்ப்பு சிறிய குடும்பத்திற்கு வந்த சூழ்நிலை.

. வாய்ப்பு சூழ்நிலைக்கேயுரிய வாய்ப்பு என்றால் மருமகள் மாமியாராவாள், ஜூனியர் கணக்குப்பிள்ளை ஆயுள் முடியும் நேரம் சீனியர் கணக்குப்பிள்ளையாவான், தொண்டர் படைத்தலைவனாவான்.

. வாய்ப்புகளைப் பிரித்துணர்ந்து, நாம் கூறும் வாய்ப்பை அறிவது மேல்.

. உள்ள வாய்ப்பு, சீனியாரிட்டியால் வருவது.

. காலம் மாறுவதால் சமூகம் தரும் புதிய வாய்ப்பு.

. புதிய டெக்னாலஜியால் வரும் பெரிய வாய்ப்பு.

. படிப்பால் வரும் வாய்ப்பு.

. பணத்தால் வரும் வாய்ப்பு.

. அன்னை இதில் எந்த வாய்ப்பை அளித்தாலும் நாம் அதை வாய்ப்பாகப் பெற்று, அத்துடன் நிற்கலாம். அல்லது அன்னை கொடுப்பவை என அறிந்து அன்னையை ஏற்றுத் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறலாம்.

. அப்படிப் பெற நம் சூழ்நிலை, நாம் மாறக்கூடிய சூழ்நிலை, மாறும் சட்டங்களை அறியவேண்டும்.

. இந்த மாறும் சூழலைக் கணிப்பது எப்படி?

. தாயார் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குப் போனால் சூழ்நிலை மாறுகிறது. ஒரு டிபார்ட்மெண்டிலுள்ளவர் வேறு டிபார்ட்மெண்டிற்குப் போனால் சூழ்நிலை மாறுகிறது. அரசியல்வாதி மந்திரியானால் சூழ்நிலை மாறுகிறது.

. இவற்றைப் பயில நேரமிருக்காது. வெகுசீக்கிரம் மனம் மாறிப் பிடித்துக் கொள்ளாவிட்டால் பிரச்சினை வரும்; வந்தது போகும்.

. நாம் கூறும் மாறுதலை எந்தக் கணிப்பும் முழுவதும் அறிய முடியாது. இருக்கும் சூழலில் அன்னையை அறிந்தால், வரும் சூழலில் அன்னையை அறியமுடியும். அன்னை என்ன என்பதை அறிவால் அறியமுடியாது. உணர்வால் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். பக்தியால், நம்பிக்கையால், சமர்ப்பணத்தால் எங்கிருந்தாலும் பூரணமாக அறியலாம். அதுவே சூழலை, சூழலின் தன்மையைக் கணிக்கும் பாங்காகும்.

இவ்விஷயங்களில் பிறர் கோணத்தில் எப்படி தெளிவுபடுவது?

. 10 இலட்சம் கடன் வாங்கி அழிச்சாட்டம் செய்தவனுடைய கோணம் எது? அது நமக்கு என்ன தெளிவு தரும்?

. அவன் எப்படியாவது இக்கடனை அடைக்க முயல்கிறான். கடன் வாங்கியாவது அடைக்க முயல்கிறான். முடிந்தால் கடன் வாங்குவான். அது அவனுடைய கோணமில்லை.

. பள்ளிக்குப் போகமாட்டேன் என்ற குழந்தை, விளையாடப் போனால், "எனக்குப் படிப்பை விளையாட்டாக மாற்றிக்கொடுங்கள்" என்று கேட்கிறது. அதுவே குழந்தையின் கோணம்.

. "நான் அளவுகடந்து வாழ்வை அனுபவிக்க முயல்கிறேன்" என்பது கடன்காரனின் கோணம். அவன் அப்படிப் போனால் "அசத்"தில் முடிவான். "அசத்"தும், நாம் போக முயலும் "சத்"தும் ஒன்று என்பது ஞானம். அவனுடைய கோணத்தில் பார்த்தால் நமக்கும், அவனுக்கும் வித்தியாசமில்லைஎனத் தெரியும். அந்தத் தெளிவுக்கு அவனை அவனுடைய கடனிலிருந்து மீட்டு வரும்படிச் செய்யும் சக்தியுண்டு. இக்கதையில் அன்னை அதைச் செய்துவிட்டார். நமக்கு அத்தெளிவு வந்தால் நமக்கே அந்த சக்தி வரும்.. பிறர் கோணம் என்பது கடனில் மட்டுமன்று, எந்த இடத்திலும் இந்த சக்தியை நமக்குத் தரவல்லது.

. விஷயம் சிறியதானால் - வேலைக்காரன் போஸ்ட்டாபீஸ் போக மறுத்தால் - அவனுடைய கோணத்தில் பிரச்சினையைப் பார்த்தால், அவனுள் அன்னை நமக்குப் புரியும். அது அவனது இயலாமையைப் போக்கும்.

. 'பிறர் கோணத்தை' நாம் தொடர்ந்தால், மௌனமும், சப்தமும் ஒன்று என்று தெரியும். "சத்'தும், "அசத்'தும் ஒன்று என்று தெரியும். அது பிரம்ம சித்தி தரும்.

. போஸ்டாபீஸூக்குப் போக மறுக்கும் பியூன், ஏன் மறுக்கிறான் என்று அறிய முற்பட்டால், அவன் மனைவியோடு சண்டை போட்டான், வயிற்றுவலி என்பவை வெளிவரும். நாம் அதை அறிய முற்பட்டது அவனுக்குத் தெம்பு தரும். பிரச்சினை விலகும்.

.குரு, பணத்தின்மீது ஆசைப்படுவது தவறு என நினைக்காமல், அந்த ஆசையைப் பூர்த்திசெய்ய முயன்றால், சிஷ்யனுக்குத் தன்னால் எவ்வளவு பணம் வசூல் செய்ய முடியும், தனக்கு அதைவிட எத்தனை மடங்கு பணம் வர இது வழிஎன முடிவு காட்டும்.

. மடையனின் போக்கில் மகிமையைக் காண முயன்றால், மேதாவிலாசம் பிறக்கும்.

. இலஞ்சம் தவறு, சாராயம் சரியில்லை என்பதைவிட, அவன் ஏன் இலஞ்சம் வாங்குகிறான், ஏன் சாராயம் குடிக்கிறான் என்ற யோசனையை மேற்கொண்டால், இலஞ்சத்தை ஒழிக்கும் திறனும், சாராயத்தை அழிக்கும் திறனும் நமக்கு வரும்.

. தவற்றைத் தவறு எனக் காணாமல், தவறு நமக்கு செய்பவனுக்குச் சரி என்று நாம் ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவுடன் மனம் பரந்து விசாலப்படுகிறது. அவனுடைய தவற்றைவிட அதிக வலிமை நம் யோசனைக்கு வரும். தவற்றையே - அவனுடைய தவறன்று - அழிக்கும் திறன் நமக்கு வரும்; பொறுமை வேண்டும்.

. திருடனுடைய திருவடியும், விபசாரியின் கற்பும் அது போன்றதே. பிறர் கோணம் முடிவடைகின்ற இடத்தில் அன்னை தரிசனம் கிடைக்கும். திருடனே அடுத்த கட்டத்தில் ஸ்ரீ அரவிந்தராக மாறுவான். உலகில் திருடனில்லை, தவறில்லை. பேய், ஸ்ரீ அரவிந்தரிடம் வந்து ஆசை காட்டியதை அவர் மறுத்தபின் பேய் திரும்பிப் போகும் பொழுது அதன் குரல் இனிமையானதெனக் கண்டு உற்றுப் பார்த்தார்; அவர் கண்டது கிருஷ்ணன்.

மேற்சொன்ன விஷயங்களில் Life Responseஐ ஏற்படுத்த என்ன செய்யலாம்?

. யூனியன் தலைவர் கம்பனியைவிட்டுப் போக, Life Response வந்தது பார்ட்னர் பதட்டப்படாமலிருந்தது. தாயார் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டது. பார்ட்னருக்கு அனுபவமுண்டு. பெரிய அனுபவமில்லை. அதிக அனுபவமுள்ளவரானால், யூனியன் தலைவர் பெயர் தெரிந்திருக்கும். அல்லது எவர் வேலைக்கு வந்தாலும், அவன் ஏற்கனவே வேலை செய்த இடத்தில் விசாரிக்கத் தோன்றும். பார்த்தவுடன் புரியும் திறமையிருந்திருக்கும். அவருக்கு இவை எதுவுமில்லை.

. தாயாரை நம்பும் மனப்பான்மையுண்டு.

. வழியிருக்கிறது என அன்னை கூறுவதை அப்படியே எடுத்துக்கொள்ள முடிகிறது.

. பதட்டப்படாமலிருக்க முடிகிறது.

. வழியிருக்கிறது என்றவுடன் வந்த செய்தியை "வழி"யாகக் காணும் பக்குவமிருக்கிறது.

. இவை Life Response மூலம் தலைவரை விலக்குகிறது.

. பெரியவன் "நான் ஜாதிப் புத்தியைப் பற்றிப் பேசவில்லை. வக்கீல் பொய் சொல்லியிருக்கிறான்"என்றபொழுது கணவர் "நான் அறைந்திருப்பேன்"என்கிறார். தாயார் "பேசாவிட்டால், மனம் நினைத்தாலும் ஆபத்து வரும்" என்று புரிந்துகொண்டது Life Responseஐக் கொண்டுவந்தது.

. Life Response இக்கதையில் ஏற்பட்ட வகைகள்:

1) தாயார் அன்னையை ஏற்றபொழுது குடும்பம் 3-ஆம் நிலையிலிருந்து 15-ஆம் நிலைக்கு வந்தது - பக்தி, நம்பிக்கை.

2) கணவர் மனைவியின் பக்தி வழிபாட்டை எதிர்க்காததால் அவருக்குப் பார்ட்னர் வந்தார் - சுமுகம், ஒத்துழைப்பு.

3) சிறியவன் அண்ணன் கேலி செய்தபொழுது மனம் உடையாமல் மாடிக்குப் போய் முகமலர்ந்து வரும் பாங்குடையவன் என்பதால் அவனுக்கு Life Response கேப்டன் பதவி - சிரித்த முகம்.

4) பெண் தோழிமீதுள்ள பாசம் உண்மையானதால், அக்கா பிரச்சினை தீர்கிறது - பரநலமான பிரியம், self-giving..

5) ஆபீசருடைய மனைவி past consecration கடந்ததை நினைத்து வருந்தி மனம் மாறியதால் கடன் தீருகிறது - reversal of consciousness.

6) யூனியன் தலைவர் - பார்ட்னருடைய நிதானம்.

. Life Response என்பது பிரச்சினை தெம்பு energy குறைவால் ஏற்பட்டது என்பதால் energyயை அதிகப்படுத்தி சமநிலையைக் equilibrium கொண்டுவந்தால் ஏற்படுவது.

♦‘‘பிரச்சினைக்குரிய தெம்பை அதிகரிப்பது Life Responseஐக் கொண்டுவரும்.

தமக்குள்ள தொடர்பை correspondence எப்படி நிர்ணயிப்பது?

. Correspondence தொடர்பு precise சரியாகத் தெரிந்தால் பலன் உடனே வரும்.

. பொதுவாகப் பிரார்த்தனை செய்தால், மனத்தில் பாரம் இறங்கும். விஷயம் மாறாது. பிரார்த்தனையால் எழுந்த சக்தி நம் சூழலில் வந்து சூழலுக்கேற்பச் செயல்பட்டு முடிவாகத் தொடர்புள்ள இடத்தைத் தொட சில நாட்களாகும்; சில சமயங்களில் அதிக நாட்களாகும்.

. சிறியவனைக் கேலி செய்து அழவைப்பது பெரியவன். பெரியவன் அதைச் செய்வது தவறு என உணரவேண்டும்.

.  Uncultured குடும்பமாதலால், கேலிசெய்து அழவைப்பது தவறு என்று தெரியவில்லை. சிறியவன் பலியாவது குடும்பம் மட்டமானது என்பதால். Life Response வர குடும்பம் அங்கு மாறவேண்டும். அதில்லை என்பதால் அவனுக்குப் பலன் வர நாளாகிறது.

நாளானால் பலன் பெரியதாக வரும் என்ற சட்டம் அவன்

விஷயத்தில் பலிக்கிறது.

. சொத்தையான கணவருக்கு நேர்த்தொடர்பு correspondence பொறுப்பான யூனியன் தலைவர். யூனியன் தலைவர் வந்தவுடன் சொத்தையான கணவர் பொறுப்பாக மாற இயலாது என்பதால் வேறு வழியாக Life Response வருகிறது. யூனியன் தலைவருக்குப் பெரிய கம்பனியில் பெரிய வேலை வருவது கவனிக்கத்தக்கது.

. நேரடியான தொடர்பு நாமே வம்பை விலைகொடுத்து வாங்குவது. அதைச் செய்பவர் அதை அறிந்து மாறவேண்டும். புது டிரஸ் வேண்டும் என்றால் ஆபீசில் சண்டை வரும்.

. தொடர்பு செயலில் நேரடியாக இல்லாவிட்டால், குணத்திலிருக்கும்; மறைமுகமாக இருக்கும். அதையும் பெரியவன் விஷயத்தில் பார்த்தோம்.

. தம்பி மனைவி கான்சர் என்பதற்கு நேரடியான தொடர்பு "நம்புவது". நம்பினால் கான்சர். நம்பாவிட்டால் இல்லை என்ற அனுபவம் வேண்டும்.

. சிறியவனை அழ வைப்பதால், அவனுக்குத் தெம்பில்லை என்பதால், நன்றாக விளையாடினாலும், டீமில் எடுக்கவில்லை.

. அவன் பாட்மிண்டன் டீமுக்காக இடைவிடாது செய்யும் பிரார்த்தனை அவனுக்குத் தெம்பு தருகிறது.

. பெண்ணுக்கு டிகிரி வேண்டும், படிப்பு வேண்டாம். அது குறையாக இருப்பதால், தாயார்போல அன்னையை ஏற்க முடிவதில்லை. அடக்கம், பணிவு இருப்பதால் தோழிப் பிரச்சினை தீருகிறது.

. பிரின்ஸ்பால் நெடுநாளாக அன்னையை லேசாக அறிவதால் பையன் சேவை செய்தவுடன் கம்பனி பெருகுகிறது.

. தொடர்பு, Life Response, பிரார்த்தனை, சேவை, பண்பு, பொறுமை எல்லாம் ஒன்றே. பலனைக் கருதினால் எளிமையாக முடியும். Life Response தத்துவம் சுமுகம், சத்தியஜீவிய சுமுகம். அதை அறிவது அனைத்தையும் அறிவதாகும்.

Life Responseஇன் தத்துவம் என்ன:

. சுருக்கமாகச் சொன்னால் சுமுகம harmony, விவரமாகச் சொன்னால் சமநிலை equilibrium.

. சுமுகம், சமநிலை இருந்தால் பிரச்சினை வாராது.

. பிரச்சினை வந்தால், அவை கலைந்துபோயிருக்கும்.

. இழந்த சுமுகம், சமநிலை மீட்கப்பட்டால், பிரச்சினை தீரும்.

. சுமுகம் என்பது ஆயிரம் வகைகளானது:

. வரவுக்கும், செலவுக்கும் சமநிலையில்லாவிட்டால் கடன் எழும்.

. வேலைக்கும், ஓய்வுக்கும் சுமுகமில்லாவிட்டால் சோர்வு எழும்.

. இவை ஒரே நிலையிலுள்ள நிகழ்ச்சிகளுக்குள்ள சுமுகம்.

. வாழ்வுக்கும், மனத்திற்கும் இடையேயுள்ள சுமுகம் (between manas and life).

. ஊருக்கும், நமக்கும் உள்ள சுமுகம் (Collective and Individual).

. ஆத்மாவுக்கும், கரணங்கட்கும் உள்ள சுமுகம்.

. ஆபீசுக்கும், வீட்டிற்கும் உள்ள சமநிலை.

. ஆசைக்கும், திறமைக்கும் இடையேயுள்ள உறவு.

. சிருஷ்டிக்கு முக்கியமானது ரூபம், பாவம்.

. இரு ரூபம், இரு பாவங்களிடையே சுமுகம் தேவை.

. ரூபத்திற்கும், பாவத்திற்கும் சுமுகம் தேவை.

. அந்தஸ்து என்பது ரூபம்; பழக்கம் என்பது பாவம். அந்தஸ்திற்குரிய பழக்கம் வேண்டும்.

அடுத்த கட்டத்தில் அதற்குரிய நினைவு, பண்பு தேவை.

. வீடு நிம்மதியாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக என்றால்,

. வீட்டிலுள்ள 100 அம்சங்கள் சுமுகமாக,சமநிலையிலிருக்கின்றன எனப் பொருள்.

. வீட்டில் Life Response என்றால், நல்ல வரன் வருவது.

பெரிய வரன் வர, பெரிய மனம் வேண்டும்.

பெரிய மனம் பெண்ணைப் பெருந்தன்மையாக நடத்துவது.

பெற்றோருடைய பெருந்தன்மை பெண்ணிற்குப் பெரிய வரன்.

. அதிர்ஷ்டம் Life Response ஆக வர, நல்லெண்ணம் பெருக்கெடுத்து ஓடுவது.

. எந்த Life Response வேண்டுமோ அதற்குரிய மனநிலை தெரிய, இதுவரை வந்த Life Responseஐப் பார்த்தால் தெரியும்.

தொடரும்.....

 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆர்வம் ஒரு பகுதியிலிருந்தாலும், அடுத்த பகுதிக்கு அதைக் கொண்டுபோக முயன்றால், அது பாதியில் தீர்ந்துவிடும். மனத்தின் ஆர்வத்தை உடலின் ஆர்வமாக முனைந்தால், முதலிலேயே தீர்ந்துவிடும்.

உடல் பெரியது; மனம் சிறியது.


 


 


 


 



book | by Dr. Radut