Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)       கர்மயோகி
 

XIII. The Divine Maya

Page No.118, Para No.14

13. தெய்வீக மாயை

We can suppose an infinite mind.

அனந்தமான மனத்தை நாம் கற்பனை செய்யலாம்.

It would be free from our limitations.

அதற்கு அளவில்லை.

Maybe it can create the universe.

அதனால் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க முடியலாம்.

Such a Mind would be quite a different thing.

அம்மனம் வேறுபட்டது.

It would be different from the Mind that we know.

அது நாமறிந்த மனமில்லை.

It would be beyond mentality.

அது மனத்தைக் கடந்ததாக இருக்கும்.

It would be supramental Truth.

அது சத்தியஜீவிய உண்மையாகும்.

We know what Mind is.

நாம் மனத்தை அறிவோம்.

An infinite Mind as we know could create chaos.

அனந்தமான மனம் குழப்பத்தை உண்டு பண்ணும்.

It will be infinite chaos.

அது அனந்தமான குழப்பமாக இருக்கும்.

It will be a clash of chance and accident.

சந்தர்ப்பம் மோதுவதால் ஏற்படுவது அது.

It will wander towards and indeterminate end.

நிலையற்ற முடிவை நோக்கி அது செல்லும்.

It will be full of vicissitudes.

அது ஏற்றத்தாழ்வுடையது.

The Mind will be groping and aspiring.

மனம் தடுமாறும்.

Even that will be tentative.

தடுமாற்றமும் தற்காலிகமானது.

Mind can be omniscient and omnipotent.

மனம் எல்லாம் வல்லதாகவோ, எல்லாம் அறிந்ததாகவோ இருக்கலாம்.

It can be infinite.

மனம் அனந்தமாக இருக்கலாம்.

It will not really be Mind.

அப்படியானால் அது மனமாக இருக்காது.

It will be supramental knowledge.

அது சத்தியஜீவிய ஞானமாக இருக்கும்.

Page No.118, Para No.15


 

These are pre-existent Truths or Facts.

ஏற்கனவே ஏற்பட்ட சத்தியம், நிகழ்ச்சிகள் உண்டு.

They may be external to Mind.

அது மனத்திற்குப் புறம்பானதாக இருக்கலாம்.

Or, at least they may be vaster than Mind.

அல்லது மனத்தைவிடப் பெரியதாக இருக்கலாம்.

Our Mind reflects them.

நம் மனம் அவற்றைப் பிரதிபலிக்கும்.

It images them.

மனம் அவற்றைச் சித்தரிக்கும்.

They are the presentation of the above Truths.

மேற்சொன்ன சத்தியத்தின் பிரதிபலிப்பு அது.

Phenomenon exists.

தோற்றம் உண்டு.

It exists from moment to moment.

நிமிடத்திற்கு நிமிடம் தோற்றம் எழும்.

Mind represents them to itself.

மனம் அவற்றைப் பிரதிபலிக்கும்.

There is an actual fact.

உள்ளது என்பதுண்டு.

It is presented to Mind.

அதை மனத்தின் முன் வைக்கிறோம்.

Mind can construct images.

மனத்தால் படம்பிடிக்க முடியும்.

They are possibilities.

அவை நடக்கக்கூடியவை.

Mind has the faculty of construction.

உற்பத்தித் திறனுடையது மனம்.

It can construct all images except the actual fact.

உள்ளது தவிர மற்றதை உற்பத்தி செய்யும்.

It can do so about the past.

கடந்ததை அப்படி உற்பத்தி செய்யும்.

It can also do so about the future.

எதிர்காலத்தையும் உற்பத்தி செய்யும்.

It cannot represent what will assuredly be.

நிச்சயமாக நடக்கும்என மனத்தால் கூற முடியாது.

It can repeat its previous experience.

கடந்தகால அனுபவத்தை அது திரும்பத் திரும்பச் செய்யும்.

This has to be taken note of.

இது நாம் கவனிக்க வேண்டியது.

It has one more faculty.

அதற்கு மேலும் ஒரு திறனுண்டு.

It is the faculty of forecasting new modification.

எதிர்கால மாற்றங்களை அது கூற முடியும்.

Mind seeks to construct them out of the past.

எதிர்காலத்தை மனம் கடந்தகாலத்தால் நிர்ணயிக்கும்.

It can do so even out of the future.

அப்படியே எதிர்காலத்தையும் நிர்ணயிக்க முடியும்.

It may be out of the fulfilled possibility

அது நடந்ததாக இருக்கலாம்.

The possibility may be unfulfilled.

அது அரைகுறையான எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

It succeeds sometimes.

சில சமயங்களில் அது வெல்லும்.

It constructs more or less exactly.

பொதுவாக அவை சரியானவையாக இருக்கும்.

Sometimes it fails to realise.

சில சமயங்களில் அது பலிக்காது.

Usually they are cast into other forms.

எதிர்பார்த்ததைத்தவிர வேறு ரூபம் எடுக்கும்.

They are other than it forecasted.

எதிர்மாறாகவுமிருக்கும்.

It may turn to other ends.

அது வேறு இலட்சியத்தை நாடலாம்.

It may be something other than desired or intended.

நாம் போட்ட கணக்கிலிருந்து அவை மாறுபட்டவையாக இருக்கலாம்.

Contd...

தொடரும்.....

*******

*******



 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை சத்தியஜீவிய ஞானத்தைத் தருகின்றன. அதைப் பெற மனம் சிந்தனையை நிறுத்த வேண்டும், காட்சிகளைக் காணும் திறனையும் இழக்க வேண்டும். எண்ணம், காட்சி உதவியின்றி நேரடியாக ஞானத்தைப் பெற முடியவேண்டும். அகத்திலுள்ளதே புறத்திலிருந்து வருகிறது எனத் தெரியும் நேரம், அந்த ஞானம் பூர்த்தி பெறுகிறது.

புறத்தை அகத்தில் காண்பவருக்கு ஸ்ரீ அரவிந்தம் தன்னை

வெளிப்படுத்தும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் நாடகத்தில் தன் பங்கை நிறைவேற்றுகிறான். அதைத் தன்னையறியாமல் செய்கிறான். இறைவன் தன் நாடகத்தை, தன்னையுணர்ந்து நடிக்கிறான். மனிதனைப் பொருத்தவரை மனிதனும், வாழ்வும் கண்மூடியுள்ளன. இறைவன் விஷயத்தில் மனிதன் தன்னையறியவில்லை என்றால் இறைவன் தன்னை அறிவான். இருவரும் தன்னை அறிந்தால், நாடகம் முடியும்.

மனிதனும், இறைவனும் வாழ்வு எனும் நாடகத்தை அறிந்தால்

நாடகம் முடியும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜபத்திற்குப் பலனிருப்பதற்கு முக்கியக் காரணம் அது உடலின் ஜீவியத்தை, திரும்பத் திரும்பச் சொல்வதால், செறிந்த நிறைவு செய்வதாலாகும்.

உடலின் செறிந்த நிறைவு ஜபத்திற்கு பலன் தரும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணம், உணர்வு, அசைவு நின்றால் மனம் ஸ்தம்பிக்கும். உடல் அசைவிழக்கும்.

உள்ளுணர்வுகள் அசைவை இழந்தால் ஜீவன் ஸ்தம்பிக்கும்.  


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut