Skip to Content

08.அஜெண்டா

"Agenda"

Non-material suffering is childish to the body.

நாம் படும் வேதனை உடலுக்குச் சிறுபிள்ளைத்தனமாகத்

தெரிகிறது.

. பாம்பைக் கண்டு பயப்படுவது பயம். ரப்பர் பாம்பைக் கண்டு பயப்படுவது பழக்கம். ரப்பர் எனத் தெரிந்த பின்னும் பயப்படுவது சிறுபிள்ளைத்தனம்; அர்த்தமற்றது.

. ஆப்பரேஷனுக்கு மயக்க மருந்து கொடுத்தால் நமக்கு வலியிருப்பதில்லை. அதாவது நமக்கு வலி தெரிவதில்லை.

. வலி என்பது மேல்மனத்திற்கு.

. மயக்கமருந்து மேல்மனத்தை மரத்துவிடச் செய்வதால், அதற்கு வலியில்லை.

. உலகில் வலியை ஆண்டவன் படைக்கவில்லை.

. வலியை உணர்வது அகந்தை.

. வலி என்பது இல்லை. அகந்தை வலியிருப்பதாக உணர்கிறது.

. உடலுக்கு அகந்தையைக்கடந்த நிலையுண்டு.

. அது வலியை இருவகையாகப் பார்க்கும்.

. அது அகந்தை படும் வலி. அகந்தையைக் கடந்த நிலையில் அதற்கு வலி தெரியாது. ஏனெனில், அங்கு வலியில்லை.

. வலியில்லாத நிலையில் உடல் இருக்கும்பொழுது, நாம் வலிபடுவது உடலுக்குச் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது.

. பாம்பு விஷ ஜந்து எனப் பயப்படுகிறோம்.

. ரப்பர் பாம்பு பாம்பில்லை.

. அதைக் கண்டு பயப்படுவது அர்த்தமற்றது.

. தண்ணீர்ப் பாம்புக்கு விஷமில்லை.

. விஷமில்லாத பாம்பைக் கண்டும் நாம் பயப்படுகிறோம்.

. பாம்பு பற்றிய விஷயம் தெரிந்தவர்க்கு நாம் தண்ணீர்ப்பாம்பைக் கண்டு பயப்படுவது சிறுபிள்ளைத்தனமாகத் தெரியும்.

. அன்னையை ஏற்றபின் நல்லபாம்பை அன்னைத் தண்ணீர்பாம்பாக மாற்றுகிறார்.

. கோர்ட் அரெஸ்ட் வாரண்டு பயங்கரமானது.

. அன்பர்க்கு அது வந்தால், அன்னையை அழைத்தால், அந்த வாரெண்ட்டைச் செல்லாத வாரண்ட்டாக்குவார்.

. அவர் சட்டத்தை மாற்றியோ, சந்தர்ப்பத்தை மாற்றியோ, நம் மனத்தை மாற்றியோ இதை முடிப்பார்.

. உடல் அகந்தையைக்கடந்த நிலைக்குப் பகவானுக்கும், அன்னைக்கும் போயிற்று.

. அதனால் அன்னையின் உடல் வலியை சிறுபிள்ளைத்தனமாகக் கருதுகிறது.

. பாம்பு வலி போன்றது, ரப்பர் பாம்பு non-material suffering அர்த்தமற்ற வலிபோன்றது.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உள்ளெழுந்து வரும் ஆர்வத்தாலோ, புறச்சந்தர்ப்பத்தின் நிர்ப்பந்தத்தாலோ மனிதன் கடவுளை நாடுகிறான். ஏதோ ஒரு சமயம் தெய்வம் மனிதனை நேராகவோ, மறைமுகமாகவோ தன்னை நாடும்படி வற்புறுத்துகிறது.

ஆர்வத்தால் ஆண்டவனை நாடும் மனிதனை ஆண்டவனும் தன்னை

நாடும்படி வற்புறுத்துவதுண்டு.


 



book | by Dr. Radut