Skip to Content

10. சாவித்ரி

சாவித்ரி

P.8.His mind no more cast into Matter's mould.

அவன் மனம் ஜடத்தின் அச்சில் வார்க்கப்படவில்லை.

. அற்புத வலிமை எல்லையைக் கட்டுமீறி உடைத்துக்கொண்டு வருகிறது.

. அவள் மந்திரவாதியின் தந்திர யுக்திகளை ஏற்று வருகிறாள்.

. பிரமாதமான அவள் சொற்பெருக்கின் சூத்திரம்,

. சொர்க்கமும், நரகமும் பூமிக்கு வாயிலாகும் வரை,

. பிரபஞ்சம் அழியும் மனிதனின் அடிமையாகும்.

. திரையிட்ட ஊர், பேரறியாத தெய்வத் திருக்கூட்டம்.

. மாறுபட்ட மனம் மனித வாழ்வைத் தொடுகிறது.

. உலகைச் சிருஷ்டித்த மந்திரவாதியாக அவர்கள்,

. சுயகட்டுப்பாட்டின் சுதந்திரப் பாதைகள்.

. மந்திரக் கீறலுக்குக் கட்டுப்பட்ட இலட்சியத்தின் போ.லி

. தன் செயலுக்கு உலகைக் கூட்டாளியாக்கி,

. தன் பயங்கரவாதத்தின் கருவியாக அவர்களை மாற்றுகிறாள்.

. முடியாத சூழலுள் மூழ்கி எழுந்து,

. எல்லா முறைகளுக்கும் சூட்சும வழி கண்டு,

. பல லோகங்களைத் திருமணத்தாலிணைக்கக் கற்பை விலக்குகிறாள்.

. சிருஷ்டியின் சிறப்பான செயலின் அம்சங்கள்,

. கற்பனைக்கெட்டாத ஞானக்குவியலின் சித்ரகூடம்.

. இறைவனின் லீலைக்குரிய சிறப்பு கலைக்களஞ்சியமாயிற்று.

. மாயையை மகிமையாக்க அவளெழுப்பிய ஸ்தாபனம்.

. புதைந்து கிடக்கும் புதுமைக்கு அளிக்கும் விடுதலை.

. வரம்பில்லாத் தெய்வத்தின் திருநடச் சாலை.

. அடித்து மோதிச் செல்லும் அலங்கோலத்தின் கட்டுப்பாடு.

. அனந்த லோகத்தை அர்த்தபுஷ்டியாக்கும் அடிச்சுவடுகள்.

. அடிமன ஆர்ப்பாட்டம் எழுப்பிய ஊற்றுகள்.

. இருண்ட லோகத்தின் இஷ்டத்தின் இரு முனைகள்.

. சட்டத்தை மீறும் சொர்க்க லோக சத்திய சுதந்திரம்.

. அழிவற்ற லோகத்தின் ஆழ்ந்த எண்ணங்கள்.

. கோவிலின் பின்னாலெழும் கோபுரத்தின் அசரீரி.

. தெய்வம் உள்ளெழுந்து ஆகாச பியாக அறைகூவும் எச்சரிக்கை.

. மின்னலென எழும் தீர்க்க தரிசனம் எட்டிப் பார்க்கிறது.

. தெய்வக் குரல் எழுதும் ஓலைகள்.

. திடுக்கென எழும் விளக்கமான பிரம்மம்.

. பரமாத்மாவின் சுவடறியாத செயல்கள்.

. அற்புத முடிச்சின் ஆத்மீக உயர்வு.

. பிரம்மாண்டமான காரியத்தின் விளங்காத யுக்திகள்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

       அளவுகடந்த ஆசையாலோ, பதட்டத்தாலோ ஆட்கொள்ளப்-

       பட்டபோது, அதைச் சமர்ப்பணம் செய்ய முனைவது நல்லது.

       சமர்ப்பணம் நிலையை நிதானமாக்கும். அந்தப்

       பதட்டத்தையே சமர்ப்பணம் செய்தால், அதைவிடப் பெரிய

       நல்லதில்லை.

சமர்ப்பணமான பதட்டம் பெரிய நல்லது.


 


 



book | by Dr. Radut