Skip to Content

12. Agenda

 "Agenda"

ஒரு புது முறையைக் கற்க வேண்டும் என உடல் உணர்கிறது.

  • வெளிநாட்டிற்குப் போனால் புதிய சாப்பாடு பழக வேண்டும்ஸ்பூனால் சாப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும். புதிய உடை பழக வேண்டும்.
  • இராணுவத்தில் சேர்ந்தால் புதிய நடை (marching) பழக வேண்டும்.
  • இங்கிலாந்து போனால் நாம் இது வரை பேசிய ஆங்கிலத்தை அவர்கள் போலப் பேசப் பழகிக்கொள்ள வேண்டும்.
  • அன்னை வாழ்வை மனம் ஏற்றால், பிறர் கோணத்தில் புரிய முயல வேண்டும்.
  • அன்னை வாழ்வை உடல் ஏற்றால், நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் புதியதாகச் செய்யக் கற்க வேண்டும்.
  • புத்தகத்தை மேஜை மேல் வீசுபவர், குழந்தையை உட்கார வைப்பது போல் புத்தகத்தை மென்மையாகக் கையாளப் பழக வேண்டும்.

மழை பெய்த பின் நிலத்திற்குப் போகும் விவசாயி, பயிர் செழிப்பாக வளர மழை உதவும் என நினைக்கிறான்;

அன்பன் மழையால் பயிர் சந்தோஷப்படுகிறது என உணருகிறான்.

காலையில் எழுந்து குளிப்பது பழக்கம்;

அழுக்குப் போகக் குளிக்கிறோம்;

அன்பன் குளிக்கப் போகும்பொழுது, "என் ஆத்மா தங்க, உடல் தூய்மையாக இருக்க வேண்டும்' என அறிகிறான்.


எந்தச் செயலையும் பல கோணங்களில் எடுத்துக்கொள்ளலாம்.
எந்தச் செயலையும் அன்னை நோக்கில், ஆத்மாவின் கோணத்தில் எடுத்துக்கொள்வது புதுமை.

புது உலக வாழ்வு தேடும் புதுமை அது

  • உடல் சாப்பிட, எழுந்து நடக்க, தூங்கப் பயின்றது.

அன்பனானபின் புதிய சாப்பிடும் முறையை அறிந்து, உடல் பயில வேண்டும்.

எழுந்தால், உடல் இனிக்கும்படி எழுவது அன்னைக்கு அவசியம்.

தூக்கம் தூக்கமாக இல்லாமல்conscious rest  ஆத்மா விழிப்புடன் பெறும் ஓய்வாக இருக்க வேண்டும்.

தூங்கி எழுந்தால் தியானம் முடிந்தது போருக்கும்.

ஆத்ம விழிப்புள்ளவர் தூங்கினால், தாம் தூங்குகிறோம் என அறிவார்.

எழுதும்பொழுது spelling புதியதாகக் கற்பது போன்ற உணர்வு ஏற்படும்.

பல மாதம் படுக்கையானவர் நடக்கும்பொழுது புதியதாக நடக்கும்
உணர்வு எழுவதும் உண்டு.

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

நெடுநாளாகத் தடையான காரியத்தைப் பிரார்த்தனையும் பூர்த்தி செய்யாவிட்டால், அதை ஆராய்வது நல்லது. திறமை, விழிப்பு, நோக்கம், பண்பு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் பூர்த்தியான ஒரு காரியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால்,எது தடையென விளங்கும்.
 

திறமை, விழிப்பு, நோக்கம், பண்பு சிக்கலை அவிழ்க்கும்.
 


 


 


 



book | by Dr. Radut