Skip to Content

15."Life Divine" - கருத்து

"Life Divine" - கருத்து

Evolutionary theory unproved

டார்வின் கொள்கையை நிரூபிக்கவில்லை.

. உலகப் பிரசித்தி பெற்ற சரித்திர ஆசிரியர் A.J. டாயின்பீ, "டார்வின் கொள்கையை நிரூபிக்கவில்லை' என்கிறார். பகவான் ஸ்ரீ அரவிந்தரும் அதையே கூறுகிறார்.

. டார்வின் கொள்கையைப் பகவான் ஏற்கிறார். "ஒரு speciesலிருந்து அடுத்த speciesக்கு வரும்பொழுது ஜீவியம் தலைகீழ் மாறுகிறது. அதை டார்வின் கொள்கை கூறவில்லை; கூற முடியாது. ஏனெனில், அது சூட்சும உலகைச் சேர்ந்தது' என்கிறார். பேரம் பேசும்பொழுது அடுத்தவர் சொல்வது சொல், நினைப்பது சூட்சும உணர்வு. முடிவு சூட்சுமத்திலுள்ளது. அதைக் கூற விஞ்ஞானியால் முடியாது.

. "ஏன் முடியாது?' என்ற கேள்வியை எழுப்பலாம்.

கிருஷ்ண பரமாத்மா தெய்வம். அவர் கூறுவதை துரியோதனன் ஏற்றிருந்தால் அங்கு வியப்பில்லை. அவன் ஏற்கவில்லை. அது வியப்புக்கு உரியது. அத்துடன் பரமாத்மா போர்க்களம் சென்றிருக்க வேண்டாம்;சென்றார்; வென்றார்.

வென்றாலும், தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தைக் கையாண்டு வென்றார். அது அவசியம்.

பரமாத்மா தெய்வீக மனத்தைச் சார்ந்த தெய்வம். அதுவும் மனம் என்பதால், அதற்கு இரு புறங்கள் உள. அதனால் தர்மம் அதர்மத்துடன் இருக்கும்.

தெய்வீக மனம் வரை பகலுடன், இரவு வரும்.

இரவில்லாத பகல் தெய்வீக மனத்தில் இல்லை.

அது சத்தியஜீவியத்தில் உள்ளது.

அங்கு தோல்வியற்ற வெற்றியுண்டு.

டார்வின் மனத்திலிருந்து செயல்படுவதால், இங்கு சூட்சுமம் எழுந்து கொள்கையைப் பூரணப்படுத்தாது. அது சத்தியஜீவியத்திற்கேயுண்டு.

சத்தியஜீவியம் அன்னை ஜீவியம்.

அங்கு இரவில்லாத பகலுண்டு.

தோல்வியற்ற வெற்றியுண்டு.

டார்வின் கொள்கையைச் சத்தியஜீவியத்திலிருந்து விளக்கினால், சூட்சுமமும் கலந்து இன்று விடுபட்டதைப் பூர்த்தி செய்யும்.

டார்வின் உலகுக்குத் தராத ஜீவியத்தை அன்னை,

பக்தர்கட்குப் பிரார்த்தனை மூலம் தருகிறார்.

பக்தர் ஒருவர் டார்வின் கொள்கையைச் சத்தியஜீவியத்திலிருந்து விளக்கினால், கொள்கை பூர்த்தியாகும்.

பகவான் அதை The Life Divine இல் செய்துள்ளார். "டார்வின் சொல்வது ரூபத்திற்குரிய பரிணாமம். பரிணாமம் ஜீவியத்திற்குரியது" என விளக்கம் தருகிறார்.

****


 


 


 


 



book | by Dr. Radut