Skip to Content

4. லைப் டிவைன்

 "ஸ்ரீ அரவிந்தம்"
 

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

கர்மயோகி

 

Sachchidananda has two terms of existence.

சச்சிதானந்தத்திற்கு இரு வாழ்வு நிலைகள் உண்டு.

A divine soul would live simultaneously in the two terms. .

தெய்வீக ஆன்மா ஒரே சமயத்தில் இரண்டிலும் இருக்கும்.

They are two inseparable poles.

அவை பிரிக்க முடியாத இரு துருவங்கள்.

The Absolute unfolds itself in those two poles.

பிரம்மம் அத்துருவங்களிலும் தன்னை வெளிப்படுத்தி மலர்கிறது.

We call them the One and the Many.

நாம் அதைப் பரமாத்மா, ஜீவாத்மா என்கிறோம்.

All being does really so live.

எல்லா ஜீவன்களும் உண்மையில் அப்படியே வாழ்கின்றன.

Ours is a divided self-awareness.

நம் வாழ்வு பகுதிகளாகப் பிரிந்த சுயானுபவம்.

To it this is incompatible.

அதற்கு இது ஒத்து வாராது.

There is a gulf between the two.

இவற்றிடையே கடல் போன்ற பெருவெளியுண்டு.

It drives us towards a choice.

அதனால் நாம் ஒன்றை ஏற்க வேண்டும்.

On one side is the multiplicity.

ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான ஜீவன்கள் உள்ளன.

It is exiled from the direct and entire consciousness of the One.

நேரடியாக, முழுமையாகப் பரமாத்மாவை அறியும் நிலை அதற்கில்லை.

Another is the unity.

அடுத்தது ஐக்கியம்.

To it the consciousness of the Many is repellent.

ஐக்கியம் பகுக்கப்பட்ட நிலையை வெறுக்கும்.

This is a divorce and duality.

இது இரட்டை நிலை, உள்ளதினின்று பிரிந்த நிலை.

The divine soul would not be enslaved to them.

தெய்வீக ஆன்மா இதற்கடிமையாகாது.

It would be aware in itself of the reality.

சத்தியத்தை அது தன்னில் காணும்.

The reality is at once two opposite things.

சத்தியம் ஒரே சமயத்தில் இரு எதிரான உண்மைகளாகும்.

There is the infinite self-concentration.

அனந்தம் தன்னுள் தானே நிறைந்துள்ளது.

On the other side, there is the infinite self-extension and diffusion.

மறுபுறம் தான் வெளிப்பட்டு, முடிவின்றிப் பரவியுள்ளது.

The divine soul is aware of both at once.

தெய்வீக ஆன்மா இரண்டையும் ஒரே சமயத்தில் அறியும்.

The One is in the unitarian consciousness.

பரமாத்மா ஐக்கியத்தில் உள்ளது.

The One is also in the extended consciousness.

பரமாத்மா உலகிலும் பரவியுள்ளது.

The One holds the innumerable multiplicity in itself as if potential, unexpressed.

ஏராளமான ஜீவன்களைப் பரமாத்மா தன்னுள் வெளிப்படுத்தாமல் வித்தாகப் பெற்றுள்ளது.

Therefore it is non-existent to our mental experience.

அதனால் நமக்கு - நம் மனத்தின் அனுபவத்திற்கு - அது இல்லை எனத் தோன்றுகிறது.

In the other the multiplicity is thrown out.

மற்றதில் ஜீவாத்மாக்கள் வெளிப்படுகின்றன.

It is active as the play of its own conscious being, will and delight.

தன் ஜீவன், உறுதி, ஆனந்தம் லீலையாகப் பரவுகிறது.

There is one more pair of statuses.

மேலும் ஒரு இரட்டை நிலையுண்டு.

The Many ever draw down to themselves the One.

ஜீவாத்மாக்கள் எப்பொழுதும் பரமாத்மாவைத் தங்களை நோக்கி இழுக்கின்றன.

The One is the source and reality of their existence eternally.

பரமாத்மா அவர்களது சத்தியம்; அதுவே அவர்களுடைய நிலையான வாழ்வு.

The Many ever mount up attracted to the One.

ஜீவாத்மாக்கள் எப்பொழுதும் பரமாத்மாவை நோக்கி ஆர்வமாக எழுகின்றன.

The One is the eternal culmination and blissful justification of all the play of difference.

ஜீவாத்மா லீலைக்கு முடிவு பரமாத்மா பிரம்மம்.

This vast view of things is the mould of the Truth consciousness.

இப்பரந்த நோக்கம் சத்தியஜீவிய அச்சு வார்ப்பு.

It is the foundation of the large Truth and Right hymned by the Vedic seers.

வேதரிஷிகள் பாடிய பெருநெறியின் அடிப்படை அது.

This unity of all these terms of opposition is the real Adwaita.

எல்லா நிலைகளின் இவ்வொற்றுமையே உண்மையான அத்துவைதம்.

The Adwaita is the Supreme comprehending word of the knowledge of the Unknowable.

அறிய முடியாத பிரம்மத்தை அறியும் அறிவுக்கு அத்துவைதம் என்ற சொல் சிகரமானது.

The being, consciousness, will and delight are the outflowing, the extension the diffusion of Unity.

ஜீவன், ஜீவியம், உறுதி, ஆனந்தம் ஆகியவை ஐக்கியம் பிரிந்து, பரவி, நீட்டித்து, வெளியே மலர்வதாகும்.

It is a self-concentrated Unity developing itself not into difference and division, but into another extended form of oneness.

இது சுயமான, செறிவான ஐக்கியம். இது பகுதிகளாகவும், வேறுபாடுள்ளதாகவும் மாறும்பொழுது ஒருமை, பன்மையில் வெளிப்படும்.

The divine soul will be aware of such variation.

தெய்வீக ஆன்மாவுக்கு அப்படிப்பட்ட மாறுபாடுகள் தெரியும்.

It will itself be concentrated in oneness.

அது ஒருமையில் செறிவாக இருக்கும்.

It is so in the essence of its being.

அதன் ஜீவனின் சாரத்துள் அப்படியிருக்கும்.

It has always manifested in variation in the extension of its being.

தன்னை வெளிப்படுத்தும்பொழுது இம்மாறுதல்கள் மூலமாகவே வெளிப்படுத்துகிறது.

All that takes form in itself will be the manifested potentialities of the One.

அதனுள் உருவாகும் அத்தனையும் பரமாத்மாவில் இருந்த வித்துக்களே வெளிப்படுகின்றன.

The One is the Word or Name vibrating out of the nameless Silence.

பரமாத்மாவே பீஜாட்சரம்; மௌனத்தினின்று எழுந்த நாமம்.

It is the Form realising the formless Essence.

அரூபியின் சாரத்திலெழுந்த ரூபம் அது.

It is the active Will or Power proceeding out of the tranquil Force.

சலனமற்ற அமைதியினின்று உருவான செயல் உறுதி, சக்தி.

It is the ray of self-cognition gleaming out from the sum of timeless self-awareness.

காலத்தைக் கடந்த சுயானுபவத்தில் எழுந்த சுய ஞானம்.

It is the wave of becoming rising up into shape of self-conscious existence.

தன்னையறியும் வாழ்விலிருந்து எழுந்த உருவம், அலை.

It is out of the eternally self-conscious Being.

அனாதிகாலத்து ஜீவன் தன்னையறிவதால் அவை புறப்படுகின்றன.

It is joy and love welling for ever out of the eternal, still Delight.

காலம் கடந்த, நிலையான அனந்தத்திலிருந்து சந்தோஷமும், அன்பும் ஊற்றெழுவது.

It will be the Absolute biune in its self-unfolding.

பிரம்மம் தன் சிருஷ்டியின் வெளிப்பாட்டில் மலரும்பொழுது இரு நிலைகளை உட்கொண்ட ஒரு நிலையை ஏற்பது.

Each relativity in it will be absolute to itself because aware of itself as the Absolute manifested.

சிருஷ்டி தன்னைப் பிரம்மமாக அறியும். பிரம்மம் சிருஷ்டியில் தன்னையறிவதால், அதனால் உணர முடிகிறது.

But it will be without that ignorance which excludes other relativities.

சிருஷ்டி மற்ற அம்சங்களை வேறாகக் கருதும் அஞ்ஞானம் பெற்றிருக்காது.

To it they are alien to its being or less complete than itself.

அதன் ஜீவனுக்கு அது புறம்பானது. தன் முழுமைக்குக் குந்தகமானது.

There are three grades in the extension.

நீட்சி எனும் வெளிப்பாட்டில் மூன்று அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன.

They are grades of the supramental existence.

அவை சத்தியஜீவியக் கட்டங்கள்.

The divine soul will be aware of them.

தெய்வீக ஆன்மா அவற்றையறியும்.

They are really not grades.

அவை பிரிந்து நிற்கும் பிரிவினையல்ல.

They are a triune fact of self-manifestation of Sachchidananda.

அவை சச்சிதானந்தத்தின் சுய வெளிப்பாட்டில் மூன்று நிலைகள் ஒன்றாய் இருப்பதாகும்.

It will be able to embrace them.

தெய்வீக ஆன்மா அவற்றைத் தழுவும்.

It will do so in one and the same comprehensive self-realisation.

ஒரே முழுமையான சுய-சித்தியில் அதைச் செய்யும்.

(A vast comprehensiveness is the foundation of the truth conscious Supermind).

(சத்தியம்-ஜீவியமான சத்தியஜீவியத்தின் பரந்த ஞான அடிப்படை அது).

It will be able to conceive, perceive, sense divinely all things as the Self.

தெய்வீக ஆன்மா தெய்வமாகச் சிந்தித்து, உணர்ந்து, அனைத்தையும் பிரம்மமாக அறியும்.

It is its own self, one self of all, one Self-being, and Self-becoming.

தன் சொந்த ஆத்மாவாக, எல்லா ஜீவனிலிருக்கும் பிரம்மமாக, ஒரே பிரம்ம புருஷனும், ஒரே பிரம்ம பிரகிருதியுமாக அனைத்தையும் அறியும்.

But not divided in its becoming which has no existence apart from its own self-consciousness.

அவை சிருஷ்டியில் பிரிந்தவையல்ல. தன் சொந்த ஜீவியத்தைக் கடந்து அதற்கு வாழ்வில்லை.

It will be able divinely to conceive, perceive, and sense all existence as soul-forms of the One.

பரமாத்மாவின் எல்லா ஆத்மரூபங்களையும் அதனால் கருத்திலும், உள்ளத்திலும், உணர்விலும் கொண்டு வந்து, அனைத்தும் ஒன்று என அறிய முடியும்.

It has its own being in the One.

தெய்வீக ஆத்மாவிற்குப் பரமாத்மாவில் சொந்த ஜீவன் உண்டு.

It has its own standpoint in the One.

பரமாத்மாவில் அதற்குரிய கருத்துண்டு.

It has its own relationship with all the other existences.

எல்லா ஜீவராசிகளுடன் அதற்கென சொந்த உறவுண்டு.

They people the infinite unity.

அவை அனந்தமான ஐக்கியத்துள் வசிக்கின்றன.

But all are dependent on the One.

அனைத்தும் பரமாத்மாவை நம்பியவை.

It is the conscious form of Him in His own infinity.

இறைவனின் அனந்தத்தில் தெய்வீக ஆன்மா தன்னையறியும் ரூபம்.

It will be able divinely to conceive, perceive and sense all these existences in their individuality.

எல்லா ஜீவராசிகளின் தனித்தன்மையாய் தெய்வீக ஆன்மா கருத்து, உள்ளம், உணர்வால் தெய்வீகமாகக் கருத முடியும்.

That individuality is their separate standpoint living as the individual Divine.

ஜீவாத்மாவின் தனிப்பட்ட நோக்கம் அதன் தனித்தன்மை.

Each lives with the One and Supreme dwelling in it.

அனைத்தும் பரமாத்மாவுடன் வாழ்கின்றன. சத்புருஷன் அவற்றுள் உறைகிறது.

Each therefore is not altogether a form or eidolon.

எனவே ஒவ்வொன்றும் ஒரு ரூபமில்லை; ஒரு ரூபமான மாயையில்லை.

It is not an illusory part of a real whole.

அது சத்திய முழுமையின் மாயையான பகுதியில்லை.

It is not a mere foaming wave on the surface of an immobile Ocean.

ஆழ்ந்து, அமைதியான கடன் நுரைக்கும் அலையல்ல.

(These are after all inadequate mental images).

(இவை மனம் எழுப்பும் ரூபங்கள்).

They are a whole in the whole.

அவை முழுமையுள் முழுமை.

It is a truth that repeats the infinite Truth.

அனந்த சத்தியத்தைத் தாங்கி எழும் சத்தியம்.

It is a wave that is all the sea.

கடலை முழுமையாகக் கொண்ட கடலலையது.

It is a relative that proves to be the Absolute itself.

பிரம்மமான சிருஷ்டியது.

It is seen when we look behind form and see it in its completeness.

ரூபத்தின் பின்னால் அது முழுமையைத் தேடும்பொழுது அது நமக்குப் புலப்படும்.

 

 

Contd....


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு.

அவர்களுடைய நல்ல குணங்களைத் தெரிந்துகொள்ளுதல் தன்னை அறிவதாகும். அவர்களுடைய குறைகளைத் தெரிந்துகொள்ளுதல் தன்னை உயர்ந்த முறையில் அறிவது ஆகும்.

நம்மை நமக்கு உணர்த்தும் பிள்ளைகள்.


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனிமனிதனுடைய திறமைகள் சமூகத்தின் திறமைகளுடன் இணைந்திழையும்பொழுது பண்புகள் செயல்பட்டுக் காரியம் பூர்த்தியாகிறது. தனிமனிதனுடைய பண்புகள், சமூகத்தின் பண்புகளுடன் இணையும் இடம் எல்லாம் (reversal) ஜீவியம் புரட்சிகரமான  மாறுதலையடைகிறது.


 

பண்பின் செயல்திறன் மனிதனையும்,

சமூகத்தையும் ஒத்துழைக்க உதவும்.
 


 


 



book | by Dr. Radut