Skip to Content

5. அன்பர் கடிதம்

 அன்பர் கடிதம்


 

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!


 


 

எனது மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள்.தொடர்ந்து தியான மையப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள வருகிறாள். அதுவும் தற்சமயம் பரீட்சை நடந்துகொண்டிருப்பதால் தவறாமல் தியான மையத்திற்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நானும் எனது மகளும் புடவை எடுப்பதற்காகப் புரசைவாக்கம் சென்றிருந்தோம். புடவைக்குப் பணம் settle செய்துவிட்டு, தியான மையத்திற்கு நேரமாகிவிட்டதால் அவசரமாக ஆட்டோ பிடித்துப் பெரம்பூர் அருகே வந்துகொண்டு இருந்தோம். பெரம்பூர் அருகே வந்தவுடன்தான் புடவையைக் கடையில் மறந்து வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. உடனே மீண்டும் பஸ்ஸில் கடைக்குச் சென்றோம். மறந்த புடவை அங்கே கடையில் இருக்க வேண்டும் என்ற டென்ஷன் இருந்தது. எங்களைப் பார்த்த உடனே கடைக்காரர் புடவையைக் கையில் கொடுத்துவிட்டார். சரியாகத் தியானம் ஆரம்பிப்பதற்குள் வந்துவிட்டோம். அன்னை எங்களுக்குப் புடவையையும் கொடுத்தார். தியான நேரத்திற்குச் சரியாக வரும்படியும் அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் "அன்னை காலத்தைக் கடந்தவர்'' என்று புரிந்துகொண்டோம். ஏனெனில் இவ்வளவும் 1/2மணி நேரத்தில் முடிந்துவிட்டது. அன்னைக்கு நன்றியைத் தெரிவித்து விட்டோம்.


 



book | by Dr. Radut