Skip to Content

6. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

 தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


கர்மயோகி


 

36. கல் தேயும், தேயாது சொல்.

  • ஞாபகம் பொய்க்கும்; சமர்ப்பணமான செயலை மனதால் மறக்க முடியாது.

37. பிறருக்கு முற்பகல் கேடு செய்தால்,

    பிற்பகல் தனக்குக் கேடு வரும்.

  • திருவுருமாற்றம் முற்பகல் கேட்டை, பிற்பகல் நன்மையாக்கும்.

38. ஈனுமோ வாழை இரு கால் குலை.

  • கருமியும் அன்பரிடம் தாராளமாக நடந்துகொள்வான்.

39. புலி சித்தாலும் புல்லைத் தின்னாது.

  • தேவை பெரியதாயினும் கறுப்புப் பணம் சேவைக்குதவாது.

40. கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?

  • அன்பருக்கு உதவும் ஆத்மா உலகிலுண்டோ?

        அன்பரல்லாதவரால் அன்பருக்கு உதவ முடியாது.

தொடரும்....


 


 



book | by Dr. Radut